நவீனத்துவம்,பின்நவீனத்துவம்: உரையாடல் தொடர்கிறது

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


தமிழில் எம்.ஜி.சுரேஷின் பின்நவீனத்துவம் என்றால் என்ன? என்ற நூல் தான் எனக்கு தெரிந்தவரை எளிமையான முறையில் பின்நவீனத்துவத்தை சரியான முறையில் சொல்லியிருக்கிறது என்று ஆணித்தரமாக சொல்லமுடியும்.எளிமையாக சொல்லியிருக்கிறார் என்பதற்க்காக பின்நவீனத்துவம் எளிமையான கோட்பாடு என்று சொல்லமுடியாது.ஒரு கோட்பாட்டை எப்படிச் சொன்னால் எளிமையாக புரியும் என்பதை சுரேஷ் புரிந்து கொண்டதால் தான் இப்படி எளிமையாக அதேசமயம் பிசிறில்லாமல் சொல்லமுடிந்திருக்கிறது.191 பக்கங்களில் 19 அத்தியாயங்களாக ஆங்கிலத்திலுள்ள நூல்களுக்கு இணையாக தமிழிலில் வந்திருப்பது ஆச்சரியமான விஷயமாகவே படுகிறது. தமிழ் சூழலில் மெத்தபடித்தவர்கள் கூட இந்தமாதிரி இறக்குமதிகளுக்கு என்ன தேவை என்று கேள்வி எழுப்புவது பொதுஜன உளவியலில் இலக்கியவாதிகள் எந்த அளவுக்கு புரிந்து விவாதித்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமான தாக்கமாகவே தெரிகிறது.இதற்கு சான்று தான் அஸ்வகோஸ் என்கிற இராசேந்திர சோழன் எழுதிய பின்நவீனத்துவம் பித்தும் தெளிவும் நூலாகும்.துய இலக்கியவாதியிலிருந்து,மார்சிய, வெகுஜன இலக்கிய
வாதிவரை பின்நவீனத்துவம் பற்றி பேசுகிறார்கள்,ஆனால் ஆனையை பார்த்த குருடர்களின் கதையாகவே இருக்கிறது.ஆனால் இந்நூல் வந்தபிறகு பலரும் வெளிப்படையாக இனி எதார்த்தவாதம் தான் சரியானதாக இருக்கமுடியும் என்று வரலாற்றின் முதுகுபுறம் ஒழிந்துகொண்டார்கள். பலர் தமிழ்வகைப்பட்ட பின்
நவீனத்துவம் சரியானது என்று சொல்லிசாரியும்,வேட்டியும் கட்டிப் பார்த்தனர்.
பலர் இது தலித்தியத்திற்கு எதிரானது,பெண்ணியத்திற்கு எதிரானது என்று சொல்லி பின்நவீனத்துவத்தை எதிரியாக பாவித்தனர்.எது எப்படியானலும் இந்நூல் வந்த பிறகே தெரிந்தது பின்நவீனத்துக்கு ஆதரவானவர்கள் ரொம்பவும் குறைவு என்று. என்றாலும் சமூக,பண்பாட்டு,பொருளாதார,அரசியல்,கலை,இலக்கிய,தத்துவ கோட்பாடான பின்நவீனத்துவம் ஒரு சமூக நிகழ்வாக,நிலையாக இருப்பதை யாரும் தடுத்து விட முடியாது.இன்று நாம் பின்நவீனகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நம்பியாகவேண்டும். இந்தியச்சூழலில் பெங்காலி,கன்னடம்,மலையாளம்,
உர்தூ என்று எல்லாமொழிகளிலும் அதிகதாக்கம் ஏற்படுத்தியிருக்கும் இக்கோட்பாடு சுரேஷின் உழைப்பில் புதியதிசைவழிகளை காட்டிதருகிறது. பின்நவீனத்துவத்தைப் பொறுத்தவரைஇரண்டுவகைபிரதானமாயிருக்கிறது. ஒன்றுஉடன்பாடுபின்நவீனத்துவம்,மற்றதுஎதிர்மறைபின்நவீனத்துவம்என்பதாகும்.அடிக்கட்டுமானவாதம்(foundationalism ),நேர்காட்சிவாதம்(positivism )போன்றவைகளைசர்ச்சைக்குட்படுத்திக்கொண்டு பின் அமைப்பியல் வழியாக பின்நவீனத்துவம் உருக்கொள்கிறது. பின்நவீனத்துவம் குறித்த விரிவான புரிதல் என்பது வாசிப்பு,அறிதல்,முறை ஆகியவற்றுடன் தொடர்புடையது.இது குறித்த ஆழ்ந்த வாசிப்பு முறை மாத்திரமே சரியான விளக்கங்களை அளிக்க முடியும்.பின் நவீனத்துவத்தை புரிந்து கொள்ளவேண்டுமெனில் நவீனத்துவதை புரிந்து கொள்வது அவசியமாகிறது.பின்நவீனத்துவத்தை பொறுத்தவரையில் அதற்கு வலுவான இடது சாரி நோக்கு இருக்கிறது.அது நிறுவனபடுத்தப்பட்ட மார்சியத்தை அங்கீகரிக்கவில்லையே தவிர மார்சியத்துக்கு எதிரானதன்று.பின்நவீன சிந்தனையாளர்களான பூக்கோ,லையோர்டு,பார்த்,ஜேம்சன்,லக்கான்,பூதிலார்டு,டெர்ரி ஈகிள்டன்,பால் டி மர்,எட்வர்டு செய்யத் போன்றோர்கள் மாற்று சிந்தனைகளை வலியுறுத்தினர்.கலை,இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் பெரிதும் பாதிப்பு செலுத்திவரும் பின்நவீனத்துவம் பின்னமைப்பியலுக்கு பின் உருவான கோட்பாடாகும்.

பின் நவீனத்துவத்துக்கும் நவீனத்துவத்துக்குமான வேறுபாடுகளை மாத்திரம் பார்ப்போம்.

நவீனத்துவம் பின்நவீனத்துவம்
பெருங்கதையாடல்களாக வரலாறு,பண்பாடு,தேசிய அடையாளம் இருந்தன.பண்பாடு மற்றும் இனதோற்றம் பற்றிய கதைகள் அமைந்தன. பெருங்கதையாடல் பற்றிய சந்தேகமும்,மறுதலிப்பும் இருந்தன.உள்ளூர் கதையாடல்களின் செல்வாக்கு,பெருங்கத்தையாடல் பற்றிய முரண்நகை கட்டுடைப்பு.தோற்றம் பற்றிய எதிர்கதை உருவாக்கம்.
வரலாறு,அறிவியல்,பண்பாடு போன்ற பெரும் கோட்பாடுகள் எல்லாவற்றையும் விளக்கின. பெருங்கோட்பாடுகளை மறுதலிப்பதும் உள்ளூர் கோட்பாடுகளுக்கு மதிப்பளிப்பதும்.
சமூக,பண்பாட்டு ஒற்றுமை குறித்த நம்பிக்கையும்,கதைகளும் இருந்தன.சமூக,வர்க்க படித்தரங்கள்.தேசிய,இன அடிப்படையில் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது. சமூக,பண்பாட்டு பன்மியம்,ஒற்றுமையின்மை,தேச,சமூக,இன அடிப்படையில் வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம்.
அறிவியல்,தொழிநுட்பம் சார்ந்து பெருங்கதையாடல்கள் முன்னேற்றத்தை பேசியது. முன்னேற்றம் பற்றிய அய்யம்.தொழில்நுட்பத்துக்கு எதிர்ப்பு,புதுகால மதங்களுக்கு மதிப்பு.
ஒருங்கிணைந்த புத்தி,மையபடுத்தப்பட்ட அகம்,தனிநபர்வாதம்,அடையாள ஒற்றுமை. துண்டாடப்பட்ட புத்தி,நானுக்கு முக்கியமின்மை,பல,சிதறுண்ட அடையாளம்.
குடும்பம் சமூக வரிசையில் மையமாக இருந்தது.மத்தியதர,தனிகுடும்பம். மாற்று குடும்ப அலகுகள்,மத்தியதரத்தில் மாற்று திருமணம்.தம்பதியினரும்,குழந்தைகளும் பல அடையாளங்களுடனிருக்கும்.
படித்தரம்,வரிசை,மையபடுத்தப்பட்ட கட்டுப்பாடு. அகநோக்கு வரிசை,மையகட்டுப்பாடு இழப்பு,துண்டாடப்படுதல்.
தனிப்பட்டவகையில் நம்பிக்கையுடன் பெரிய அரசியல்(தேசம்,கட்சிகள்) நுணரசியல் மீது நம்பிக்கை,அடையாள அரசியல்,உள்ளூர் அரசியல்,நிறுவன அதிகார போராட்டங்கள்.
பேச்சில் வேர்/ஆழம் முக்கியம்.ஆழத்தில் நம்பிக்கை(அர்த்தம்,மதிப்பு,உள்ளடக்கம்,குறிப்பான)மேல்தளத்துக்கு மாற்றாக(தோற்றம்,உருவாக்கப்பட்ட,குறிப்பீடு). சொல்லணி/மேற்தள பேச்சு/மேற்தள,படிம,குறிப்பனைகவனபடுத்தி ஆழத்துக்கு முக்கியமின்மை.
உண்மை பற்றிய நம்பிக்கை ஊடகத்துக்கும் மேலாக,அசல் மீது நம்பகதன்மை. அதிஎதார்தம்,படிம நம்பிக்கை,நகலியம் உண்மையை விட சக்திமிக்கது.படிமங்களும்,பிரதிகளும் அசலைவிட சிறப்பு “As seen on TV”, “as seen on MTV” போன்றவைக்கு மதிப்பு.
உயர்ந்த,தாழ்ந்த பண்பாடுகள் எதிர்வு நிலையில்.உயர்ந்தவற்றுக்கு மதிப்பு. வெகுஜனபண்பாடு உயர்பண்பாடைவிட சிறப்பு,இரண்டும் கலக்கிறது.கலவைபண்பாடூஉருவாக்கம்,உயர்ந்தது,தாழ்ந்தது பாகுபாடு மறைவு.
மக்கள்திரள்பண்பாடு,மக்கள்திரள்நுகர்வு,மக்கள்திரள்சந்தை மக்கள்திரளற்றபண்பாடு,சிறிய குழுக்களின் அடையாளங்கள்,நெட்மார்கெட்டிங்
கலை என்பது பொதுவான பொருள், முடிக்கப்பட்ட வேலை கலைஞனின் நம்பகத்துடன் மதிப்புமிக்க தரத்தை கொண்டிருக்கும். கலை செயல்பாடுகளுடனும்,நிகழ்த்துதலுடன்,ஊடிழைபிரதியாக இருக்கும்.கலையில் பார்வையாளர்களின் நம்பகம் வாய்ந்த பண்பாடும்,உபபண்பாடுகளின் அடையாளங்களும் காணப்படும்.
அறிவு புலமை என்பது மொத்தத்தை தழுவியிருக்கும்.(எடு)கலைக்களஞ்சியம் துழாவுதல்,தகவல் மேலாண்மை,தேவைக்கு அறிவு(எடு)இணையம்
ஊடக ஒலிபரப்பு.ஒன்றிலிருந்து பல தொடர்பு ஊடாடுவது,கிளைண்ட் சர்வர்,பகிர்,பலதில் இருந்து பல ஊடகம்(நெட்,வெப்)
மையபடுத்தப்பட்ட/மையமான மைய அறிவு. பரந்துபட்ட,விரிந்த,இணைக்கப்பட்டபகிர்ந்தளிக்கப்பட்ட அறிவு.
நெருக்கம் நெருக்கமின்மை,தனிமை
சீரியஸாக மத்தியதர உருவாக்கத்தை நோக்கமாக கொண்டு செயல்படுவது விளையாட்டு,முரண்நகை,அலுவல சீரியஸ¤க்கு சவால்
தெளிவான வகைமை எல்லைகளையும்,மொத்தத்துவத்தையும் நோக்கியது(கலை,இலக்கியம்,இசை) ஒட்டிணைப்பு,பல்வேறு வகைமைகள்,வினோத பண்பாடு,ஊடிழைபிரதி.வெட்டிஒட்டுதல்.
வடிவமும்,வடிவமைப்பும் நியூயார்க்கை முன்னிறுத்தி லாஸ் வேகாஸ் வகைப்பட்ட வடிவமும்,வடிவமைப்பும்
தெளிவான எதிர்வுகளாக மனிதனும்,இயந்திரமும் பிரிக்கப்பட்டிருந்தது சைபொர்க் வகைப்பட்ட கலவை
பாலியல் வித்தியாசம் ஆண் வரிசையிலிருந்தது.போர்னோகிராபி வெளித்தள்ளப்பட்டிருந்தது பலவகைப்பட்ட பாலியல்,போர்னோகிராபி முக்கிய சந்தைப்பொருள்
புத்தகமும்,நூலகமும் அச்சுவடிவிலிருந்தது அச்சு ஊடகம் ஹைபர்மீடியாவாக மாறியது

பின்நவீன நிலை எல்லோராலும் பேச படுகிறது.அது என்னவென்பது ஓரளவுக்கு புரிகிற விதம் பட்டியலாக உருவாக்கப்பட்டுள்ளது.பின் நவீன சமூக நிலையை பார்க்கும் போது பின்நவீன நிலையை ஆழமாக புரியலாம்.

நவீன காலம் முன் மற்றும் பின்நவீன காலங்கள்
வீட்டுக்கும்,வேலைபார்க்குமிடத்துக்கும் தூரம் உண்டு வீடும் வேலைபார்க்குமிடமும் ஒரேயிடம்
ரொமாண்டிக் காதல் பொது இசைவு காதல்
தாய் சட்டபூர்வ கவனிப்பாளர் பகுந்த பெற்றோர்தன்மை,தாய் வேலைபார்கிறாள்
முதிர்ச்சிக்குபின்னும் குழந்தையை கவனிப்பது சமூக முதிர்ச்சி நடவடிக்கைகளை கவனிப்பது
குழந்தையை மையமாக கொண்டு பெற்றோர் இயங்குதல் சமூக நலன்,குறிக்கோள் ஆகியவற்றை பெற்றொரே தீர்மானிகின்றனர்
தனி அடையாளம் மதிப்புகள் அடிப்படையில் உருவாகிறது அடையாளம் சமூக சூழலிருந்து உருவாகிறது
பெற்றோரிலிருந்து விலகி தனித்த அடையாளத்தை மேற்கொள்ளுதல் தனிகுடித்தனதை விட பெற்றோரை சார்ந்திருப்பது

சில வித்தியாசங்கள்
நவீனத்துவம் பின்நவீனத்துவம்
ரொமாண்டிசம்/சிம்பாசிசம் இணைபெளதிகம்/டாடயிசம்
நோக்கம் விளையாட்டு
வடிவமைத்தல் வாய்ப்பு
விதியொழுங்கு விதிமீறல்
பொருள்,சின்னங்கள் காலியாகுதல்,மௌனம்
கலைப்பொருள்,முடிந்த வார்த்தை செயலாக்கம்,நிகழ்த்துதல்
தொலைவு பங்கெடுத்தல்
ஆக்கம்,மொத்தத்துவம் கட்டவிழ்த்தல்
ஒருங்கிணைத்தல் எதிர்த்தல்
இருப்பது இல்லாமலிருப்பது
மையப்படுத்தல் பரவியிருத்தல்
வகைமை,எல்லை பிரதி,ஊடிழைபிரதி
பொருள் குழப்பம்
சட்டகம் கோளம்
துணை உறுப்பு பல உறுப்புகள்
உருவகம் ஆகுபெயர்
தேர்வு இணைப்பு
ஆழம் மேல்தளம்
விளக்கம் விளக்கத்துக்கெதிர்
வாசிப்பு வாசிப்பின்மை
குறிப்பீடு குறிப்பான்
விபரணம் நாடகீயம்
விளக்குதல் விளக்கமின்மை
பெருங்கதை நுண்கதை
பெரும் வழக்கு தனிவழக்கு
அறிகுறி விருப்பம்
வகை ஒத்திருத்தல்
உருவம் உருவமாற்றம்
உளப்பிறழ்வு பிளவுண்டமனம்
தோற்றம்,காரணம் வித்தியாசம்
பரம பிதா பரிசுத்த ஆவி
அபௌதிகம் முரண்நகை
வரம்புக்குட்பட்டது வரம்புமீறியது
கடப்பது ஒன்றியிருப்பது

நவீன,பின்நவீன சிந்தனைகளின் எதிர்வுகள்
நவீனம் பின்நவீனம்
காரணம் அடிப்படையிலிருந்து மேலே காரணத்தின் பல தளங்களும் பல காரணிகளும்,வலைபின்னலானது.
அறிவியல் பொது நம்பிக்கை வரம்புகளின் எதார்த்தம்
பகுதி/முழுமை பகுதிகளால் ஆன முழுமை பகுதியை விட முழுமை முக்கியம்
கடவுள் இயற்கை,சட்டம் ஆகியவற்றை மீறுதல் ஆதி அந்த காரணம்
Language ஒப்புநோக்குதல் சமூக சூழல் அடிபடையிலான அர்த்தம்

நவீன,பின்நவீன சமூகங்களின் எதிர்வுகள்
நவீனம் பின்நவீனம்
உற்பத்திமுறை நிலம், மூலதனம்,தொழிலாளர் என்ற மாற்றம் மூலதனத்திலிருந்து,அறிவு,சமூக பிரிவுகளை நோக்கி
தொழிற்சாலை வேலையாட்கள் மத்திய தரமாக மாறியது திறமையற்ற தொழிலாளிகளை விட அறிவை வளர்த்தெடுக்கும் மிகத்திறமைமிக்கவருக்கு முன்னுரிமை
சமூக மதிப்புகள் மதத்திலிருந்து மதசார்பின்மைக்கு மாறியது சமூகங்களையும்,சமூக நிறுவனங்களையும் பொறுத்து சமூக மதிப்பு
குடும்பம்-இரண்டு பெற்றோர்,தனிக்குடும்பம் கலப்பு,ஒரு பெற்றோர்,குழந்தை மையமாகிறது
அரசு-தேச,மாநில முன்னுரிமை பிராந்தியம்,இன தேசியம்,ஆதிகுடி எழுச்சி
பொருளாதாரம்-தேசிய சந்தையும்,நிறுவனங்களும் சர்வ தேச சந்தையும்,நிறுவனங்களும்
மதம் நிலைகொண்ட முக்கிய மதங்களின் ஆதிக்கம் மாற்று ஆன்மீக இயக்கங்கள்
அறிவின் விளக்கம் அறிவு அறிவியல் அடிப்படையில் உண்மைகளை உருவாக்கிறது அறிவென்பது சமூக கட்டமைப்பே.உண்மை சாப்பு நிலைக்கொண்டது
அரசியல் கருத்துருவங்கள் அரசு மையப்படுத்தப்பட்ட கருத்துருவங்கள் பிரச்சனை அடிப்படையிலான கருத்துருவம்,குழுக்களை மையபடுத்தும் வகையிலானது

———————————

mujeebu2000@yahoo.co.in

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்