ஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இஸ்லாமிய சிந்தனை முறைகளில் ஜனநாயகத்தன்மை உருவாக மரபுவழி சிந்தனைக்கும் வாழும் காலத்தோடு இணைத்துக் கொள்ள முயலும் உயிர்ப்புமிக்க சிந்தனைக்குமிடையே இடையறாத உரையாடல் நிகழ்ந்து வருகிறது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டவியல் ஆன்மீகம் அறவியல் மற்றும் சமூக அரசியல் பகுதிகளை விவாதிக்க முன்வருகிறது. அல்அகாயித் – அடிப்படை நம்பிக்கைகள், இபாதத் / ‘வணக்க வழிபாட்டு சடங்குகள் அஹ்தாஹ் – அறவியல் ஒழுக்கநெறிகள் முஆமலாத் – வணிக நடைமுறை ஒப்பந்தங்கள் உகுபத் – தண்டனைமுறைகள் என கூட்டு சிந்தனை முறைகளின் தொகுப்பாக உள்ளது. இதில் இடம்பெறும் இஸ்லாமிய தண்டனை முறைகள் சிறு குற்ற தண்டனைகள் தஸீர் (Tazeer) பழிக்குப் பழி உள்ளது. இதில் இடம்பெறும் இஸ்லாமிய தண்டனை முறைகள் சிறு குற்ற தண்டனைகள் தஸீர் பழிக்குப்பழி வகையிலான கொலைக்கு கொலை கிஸாஸ் (gizas), குடி, திருட்டு பாலியல் குற்றங்கள், அல்லாஹ் மற்றும் தூதரை விமர்சிக்கும் புனித நிபந்தனை (blasphemy) சார்ந்த குற்றங்கள் ஹுதூத் (hudood) எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இக்குற்றங்களுக்கான தண்டனை முறைகளாகவே கசையடி (Lashing) உடல் உறுப்பு துண்டிப்பு (multilating) கல்லெறிந்து கொலை செய்தல் (stonning) பேணப்படுகிறது.

இஸ்லாமிய குற்றவியல் சட்ட தண்டனை முறைகளுக்கு நியாயம் கற்பிக்கும் இஸ்லாமிய அறிஞர் சிலரின் எழுத்துக்கள் அவர்கள் சொல்லவரும் நியாயத்திற்கு எதிராகவே செயல்படுகின்றன.

பெரும்பாலும் அன்றைய சமூகத்தினரை முன்னிறுத்தியே குர்ஆன் சட்டங்கள் வசனங்கள் இறக்கப்ட்டன.

மிகச்சில வழக்குகளில்தான் தலை துண்டிப்பு கைதுண்டிப்பு என்பது போன்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருக்கும். மண்டியிட்டு உட்காரவைக்கப்படுகிறார். பிறகு பளபளவென்ற நீண்ட வாள் வைத்திருக்கும் ஒருவர் அதை அவரது பின் கழுத்தில் லேசாக வைக்கிறார். பின் கழுத்தில் உள்ள ஒரு உயிர் நரம்பு அந்தக் கூரியவாளால் துண்டிக்கப்படும். மரணம் உடனே நடந்து விடும். சவம் பிறகு உறவினர்களின் கையில் ஒப்படைக்கப்படும். சவூதி அரேபியாவில் நடைபெறும் தலை துண்டிப்பு தண்டனை குறித்த இத்தகைய சித்தரிப்பை முன்வைக்கிறார்கள்.

கை துண்டிப்பு, தலைத் துண்டிப்பை மிக எளிமைப்படுத்தி சித்தரிக்க முயல்பவாகள் மணிக்கெட்டு வரை துண்டிக்கப்படுதல், கரண்டை வரை பாதங்கள் வெட்டப்படுதல், உள்ளிட்ட பலப்பல சம்பவங்கள் சவூதி, சூடான், நைஜீரியாவில் நிகழ்ந்துள்ளதை கவனிக்க தவறி விடுகின்றனர். இஸ்லாமிய புனிதங்களை விமர்சித்தற்காகவும் பிற சமய பிரச்சாரம் செய்தமைக்கும் தலிபான் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், சூடானிலும் சிலுவையில் அறைந்து கொல்லுதல், தூக்கிலிடுதல், உள்ளிட்ட தண்டனைகள் பல வழங்கப்பட்டுள்ளன. பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளில் அவமானம் ஏற்பட்டு விட்டதாக கூறி பெண்ணின் தலையை துண்டிக்கும் மரியாதை நிமித்த கொலைகளும் (Honor Hillings) நிகழ்கின்றன.

இஸ்லாமிய தண்டனை முறைகளில் கல்லெறிந்து கொலை செய்தல் தடை செய்யப்படவேண்டிய ஒன்றாகும் ஹஜ் சடங்குகளில் ஒன்றான ஷைத்தானின் மீதான கல்லெறிதல் நடைமுறையில் பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட இஸ்லாமிய பெண்ணின் மீதான கல்லெறிதலாக இஙகே உருமாறியுள்ளது. இது சடங்கின் புனைவுக்கும் வாழ்வின் பிரதிக்கும் இடையிலான உறவு கொண்டுள்ளது. இத்தண்டனை முறை பத்வாக்களை வழ ங்கும் உலமாக்கள்கூட ஆண்சார்ந்த அதிகாரப் பகுதியாக இருப்பதை கவனிக்க வேண்டும்.

இஸ்லாமிய பெண்ணை மணல் குழியில் நிற்க வைத்து தலை மற்றும் தோள்கள் மட்டும் வெளியே தொய மீதி உடலை புதைத்து விட்டு சுற்றி நிற்போர் கூடி நின்று ரத்தம் சொட்டச் சொட்ட கல்லெறிந்து கொலை செய்யும் தண்டனை முறை குறித்து பலர் மெளனமாகப் பேசாமல் விட்டு விடுவதன் காரணமென்ன ? சூடானில் பதினெட்டு வயது கிறிஸ்தவ பெண் பாலியல் குற்றம் சாட்டப்பட்டு கல்லெறிந்து கொரூ 6லப்பட்ட சம்பவம் இதற்கு விதிவிலக்கல்ல. சவூதி அரேபியா, நைஜிரியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் ஷரீஅத்தின் பெயரால் நிகழும் தண்டனை முறைகள் தொடர்கின்றன. தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கலாம். ஆனால் இத்தண்டனை முறையை ஏற்று அதற்காக பரிந்து பேசி, புனிதமாக கருதும் மனோபாவம் மிகவும் அபாயகரமானதல்லவா ?

இஸ்லாமிய தண்டனை முறை பூர்வீக இஸ்லாத்தின் மக்காமாநகர் சூழலில் திருக்குர்ஆன் வசனங்கள் அவ்வப்போது இறக்கப்பட்ட காலத்தில் கசையடிகள், உடல்உறுப்பு துண்டிப்பு என ‘உடல் சிதைப்பையே ‘ அதிகமும் பேசின. இஸ்லாமிய ஆட்சி விஸ்தாப்பும் நான்கு கலீபாக்கள் ஆட்சிகாலமும் அபாசித்கள், உமய்யாக்களின் பேரரசு உருவாக்கமும் நிகழ்ந்த மன்னராட்சி காலத்தில் உயிர் சிதைப்பை முன்வைத்து வாளால் தலையை வெட்டுதல், கைகள், பாதங்களை துண்டித்தல், கல்லெறிந்து கொலை செய்தல் மிக முக்கியமான தண்டனை முறைகளாக மாறின. வரலாற்றுத் தன்மை கொண்ட இந்நிகழ்வுகளில் தள்ளிப்போடப்பட்ட மரணம் உடனடி மரணமாக மாறுகிறது.

இத்தோடு ஆணுக்கு இரு பங்கு பெண்ணுக்கு ஒரு பங்கென வகுக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய வாரிசுரிமை சட்ட விதிகளை விவாதத்திற்கு உட்படுத்தியமைக்காக எகிப்தின் பெண்ணியச் சிந்தனையாளா டாக்டர். நவ்வல் எல் சாதவியின் மீது வழக்கு தொடுத்து அவரது கணவனை விவாரத்து செய்ய சட்ட ரீதியாக வற்புறுத்தப்பட்டதை ஞாபகப்படுத்தலாம். இதுபோன்றதொரு முந்தைய நிகழ்வில் பேராசிரியர். ந ஸீா அபுசெய்து மீதான நடவடிக்கையின் விளைவாக உயிருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மனைவியோடு புலம் பெயர்ந்த சம்பவமும் நிகழ்ந்தது.

பாகிஸ்தானின் மருத்துவக் கல்லூரி பேராசிரியர். டாக்டர். யூனூஸ் ஸெய்குக்கு மரணச்சிறை வாசமே மிஞ்சியது. நபிகள் நாயகத்தின் நபித்துவத்திற்கு முன்பான வாழ்வைப் பற்றி பேசியதற்காக இத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. கருத்தியல் சுதந்திரம் மறுக்கப்பட்டு பாகிஸ்தானில் அகமதியாக்கள் உள்ளிட்ட பிற சமயத்தார் நூற்றுக்கணக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இஸ்லாம் குறித்த விவாதங்களை இஸ்லாமியரே நிகழ்த்துவதற்கும், கருத்தியல் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையிலே உள்ளது. டென்மார்க் பத்திாக்கையின் கார்ட்டூன் சித்திர உருவாக்கத்தின் மீதான இஸ்லாமியர்களின் எதிர்வினையை இத்தோடு இணைத்துப் பார்க்கலாம்.

சமூக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட அதிகாரத்தை கட்டியமைக்கும் கொள்கை வடிவமாகவும், அதிகார அறவியலுக்கு துணைபோகும் இத்தண்டனைகள் குறித்து மீள் வாசிப்பை இஸ்லாமியர்களிடையே உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதைச் சொல்வதென்பது இந்திய ஏகபோக முதலாளித்துவ ஜனநாயகத்தின் அரசு எந்திர ஆதிக்கம் சார்வடிவங்களான ராணுவம், காவல்துறை, பாம cாளுமன்றம், சட்டங்கள், நீதித்துறை, சிறைகள், அரசு நிர்வாகம் அனைத்தும் நிகழ்த்தும் வன்முறை பயங்கரவாதத்தை ஏற்றுக் கொள்வதாகாது. மும்பையிலும், குஜராத்திலும் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இந்துத்துவத்தின் வன்முறைக்கு வக்காலத்து வாங்குவதும் ஆகாது. உலகமயச் சூழலில் பாலஸ்தீன், ஆப்கன், ஈராக் போஸ்னியா என முஸ்லிம் மக்களின் மீதான அமெரிக்கமயப்படுத்தப்பட்ட சர்வாதிக ote ர ஒடுக்குமுறையை ஆதரிப்பதும் ஆகாது. அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்க பாசிசம் தாக்குதலை தொடுக்க எத்தனிப்பதை ஏற்றுக் கொள்வதும் ஆகாது. உலகமய, அமெரிக்க சமயநிலைப்பாடுகளை பின்நவீன ஜிகாத் கருத்தாக்க அடிப்படையில் எதிர்கொள்வதும், இஸ்லாமியத்திற்கும் மேற்கத்திய மார்க்ஸீயம், மற்றும் மாவோயிசத்திற்குமிடையேயான உறவுநிலைகள் குறித்தும் அரசியல் இஸ்லாம் (Political Islam) தளத்தில் நடைபெறும் இணைவாக்கங்கள் முற்றிலும் வேறுவிதமானது.

5. ஊடக வெளிகளில் வகாபிசார் சில குழுமங்களின் உலமாக்கள் தர்கா பண்பாடு, சூபிய கருத்தாக்கங்கள், நாட்டார் மரபுகள் குறித்து காரசாரமாக விவாதித்து, பிளவுகளையும், ஒற்றுமை சிதைப்பையும், உருவாக்குவது குறித்தும் அடித்தள இஸ்லாமியாகளை ஷிர்க் / இணைவைக்கும் காபிர்களாகவும், இவாகளுக்கு மறுமையில் சொர்க்கத்தில் இடமில்லை என்னும் மசாயில்கள் பேசி கருத்தியல் வன்முறை நிகழ்த்தி வருவோர் மீதும் இஸ்லாமிய அறிவு ஜீவிகளாய் தங்களை பாவித்துக் கொள்பவர்கள் எந்தவித சுட்டுவிரலையும் நீட்டுவதில்லை. மாறாக ஜனநாயகம், சமத்துவம், விடுதலை, பெண்ணியம், விளிம்பு நிலை இஸ்லாம் சார்ந்த அறவியல் சிந்தனைகளை மையப்படுத்தி இஸ்லாமிய உள்கட்டுமானங்கள் குறித்த குரல்களைப் பேசும் போது மட்டும் அவற்றை எல்லாம் இந்துத்துவ சார்புடையதாகவும், மேற்கத்திய அறிவுஜ uote விகளின் வெளிப்பாடனெவும் குற்றப்படுத்துவது வினோதமாக இருக்கிறது.

இந்தியா ஒரு இஸ்லாமியக் குடியரசல்ல. இறைவன் நாடினால் அப்படி ஒரு நிலை எதிர்காலத்தில் ஏற்படுமானால் இஸ்லாமிய கிரிமினல் சட்டங்களும், இங்கு ஏற்படுத்தப்படும். முஸ்லிம்களும் அதை விரும்பி ஏற்பார்கள் என்ற கருத்தும் இச்சூழலில் முன்வைக்கப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சிக்கான வரலாற்று ரீதியான முன்மாதிரியை என்னவென்று கூறுவது ?

நபிகள் நாயகத்தின் காலத்திற்கு பிறகான மக்கா, மதிநா சார்ந்த நான்கு கலீபாக்களின் ஆட்சி முறை இந்றைய அரபு நாடுகளைப் போல வாரிசுாமை ஆட்சியாக இருந்ததில்லை. ஐரோப்பிய அல்லது கீழைய தேசங்களைப்போல காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட தேர்தல் ஜனநாயக ஆட்சி முறையாகவும் இல்லை.

நபிகள் நாயகத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்த கலீபா அபூபக்கா துவக்க காலத்தில் நபிகளாருக்கு உற்றத் தோழராக இருந்து பிற்காலத்தில் தனது மகள் ஆயிஷா நாயகியை நபிகளாருக்கு மணம் செய்வித்து கொடுத்த நிலையில் மாமனார் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார். அதுபோல் கலீபா உமர் அவாகளும் தனது மகள் ஹபீஸாவை நபிகளாருக்கு மணம் செய்வித்து கொடுத்தே உள்ளாா. மூன்றாவது, நான்காவது கலீபாக்களான உஸ்மான் மற்றும் அலி ஆகியோா நபிகளாான் மகள்களை திருமணம் செய்த வகையில் நபிகளாரின் மருமகன்களாகி விடுகிறார்கள். எனவே இந்த குடும்ப வகை ஆட்சிமுறையைத் தாண்டி வரலாற்றின் அடிப்படையில் எதனை இஸ்லாமிய ஆட்சியாக கருதுவது. கிலாபத் எனப்பெயரிடப்பட்ட இஸ்லாமியப் பேரரசு, மன்னராட்சி முறையாகவே இருந்துள்ளது. எனவே பழைமையை நோக்கிய மீட்டுருவாக்க பயணத்தை தவிர்த்து நவீன இஜ்திகாத்தின் (அறிவுரீதியான விளக்கம்) திசைநோக்கி இஸ்லாமிய சிந்தனை உலகை நகர்த்துதலே இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.

—-

mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்