மணிமேகலை பிரசுரம் – தமிழ் சேவையா ? வியாபார தந்திரமா ?

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

முருகபூபதி


இலங்கையில் யாழ்ப்பாணம் குருநகாில் வசிக்கும் எழுத்தாளர் யேசுராசாவின் ‘அலை ‘ சஞ்சிகை பற்றியும், ‘அலை ‘ வெளியீடுகள் பற்றியும் பலரும் அறிவர். ‘அலை ‘ வெளியீடு 1981 ஆம் ஆண்டு அக்டோபாில் லண்டனில் வசிக்கும் ராஜேஸ்வாி பாலசுப்பிரமணியத்தின் ‘ஒரு கோடை விடுமுறை ‘ – என்ற நாவலை வெளியிட்டது. இது அன்று கவனிப்புக்குள்ளான நாவல். அலை வெளியீட்டின் – வெளியீடாக வெளிவந்த (முதற்பதிப்பு) இந்த நாவல் – 1998 ஆம் ஆண்டில் அதாவது சுமார் 17 ஆண்டுகளின் பின்பு – தமிழ்நாட்டில் மணிமேகலைப் பிரசுரத்தினால் மறுபிரசுரம் செய்யப்பட்டது. அவ்வாறு பிரசுரிக்கும் போது – இரண்டாவது பதிப்பு என்று நூல்விபரத்தில் குறிப்பிடவேண்டும். ஆனால் – பதிப்பு ஆண்டு 1998 – பதிப்பு விபரம் :- முதல் பதிப்பு என்று நூல்விபரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்பதிப்பு குறித்த தகவல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

இப்படிச் செய்வதன் மூலம் – தமிழ்நாட்டில் இந்த நூல் பிரசுரம்- புத்தம் புதிய நூல் என்ற அறிமுகத்தை கொடுத்து சென்னை நூலகப்பிாிவுக்குள்ளே விநியோகத்தையும் அதன்மூலம் வியாபாரத்தையும் தந்திரமாக மேற்கொள்கின்றது.

இதன்மூலம் – மணிமேகலைப் பிரசுரம் நிகரலாபத்தைப்பெற்றுக் கொள்கிறது. நூலை எழுதியவருக்கோ 300 பிரதிகளை கொடுத்து சமரசம் செய்து கொள்கிறது. நூலாசிாியர் டொலாில் – பவுண்ஸில் பெருந்தொகைப் பணத்தை கொடுக்கிறார். நூல் அச்சிடும் செலவுக்கு அதிகமாகவே (1000 பிரதிகளா அதற்கும் மேலா என்பது மணிமேகலை பிரசுரத்திற்கும் கடவுளுக்கும் தான் வெளிச்சம்) பணத்தையும் நூலாசிாியாிடம் இருந்து வசூலித்துக் கொள்கிறது.

ஏற்கனவே இலங்கை வாசகர்களிடம் அறிமுகமான நூலின் இரண்டாவது பதிப்பை (பிரசுரகர்த்தாவிடம் பெற்றுக்கொண்ட 300 பிரதிகளை) என்ன செய்வது என்று தொியாமல் இலவசமாக விநியோகித்துக் கொண்டிருக்கும் நூலாசிாியாின் பாிதாபகரமான நிலை குறித்து மணிமேகலை பிரசுரத்திற்கு அக்கறை இல்லை.

சோலியான் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். இப்படியொரு நிலமை எமது தமிழ் எழுத்தாளர்களுக்கு நேரும் என்பதையும் நன்கு தொிந்து வைத்துள்ள இப்பிரசுரகர்த்தர் “எழுத்தாளர் பதிப்பாளர் முதலீட்டுத்திட்டம் – என்ற தலைப்பில் 16 பக்கத்தில் வெளியிட்டுள்ள சிறு பிரசுரம் ஒன்றில் – “தங்களுக்குத் தேவைப்படும் பிரதிகள்” என்ற சிறு தலைப்பில் தொிவிப்பதை கவனியுங்கள்.

“1000 பிரதிகள் அச்சிட்டு தங்களுக்கு 300 பிரதிகள் கொடுக்கிறோம்” என்பதை முன் பக்கத்தில் பார்த்தோம். ஒருவேளை இவ்வளவு பிரதிகள் தேவைப்படாது எனில் தங்களுக்குத் தேவையான குறைவான பிரதிகளை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.

உதாரணமாக 25 பிரதிகளோ 50 பிரதிகளோ போதுமெனில் எங்கள் கைவசம் உள்ள நூல்கள் விற்றுத்தீர்ந்த பிறகு தங்களின் மீதிப்பிரதிகளை விற்பனை செய்து அதற்குாிய தொகையைத்தர முயற்சிகள் மேற்கொள்வோம்.

கவனியுங்கள் – “தருவோம்” அல்ல! தரமுயற்சிகள் மேற்கொள்வோம். நூல் அச்சிடும் பணத்தையும் நூல் ஆசிாியாிடம் வசூலித்து விட்டு விற்பனையாகும் பணத்தையும் சுருட்டிக்கொண்டு நூலாசிாியருக்கு கொடுக்கும் 300 பிரதிகளையும் நூலாசிாியரால் விற்க முடியாதுபோனால் அதிலும் கைவைத்து “தரமுயற்சிப்பார்களாம்”.

6-03-2005 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் மணிமேகலை பிரசுரத்தின் 26 நூல்களின் வெளியீட்டு விழா நடந்தது. அங்கு வெளியிடப்பட்ட ஞானம் ஆசிாியர் தி. ஞான சேகரனின் இரண்டு நூல்களைக் கவனியுங்கள். அவை புதிய சுவடுகள் (நாவல்), குருதி மலை (நாவல்).

‘குருதி மலை ‘ ஏற்கனவே வீரகேசாி பிரசுரமாக பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்தது. இதே நாவல் மீண்டும் – ‘முதல் பதிப்பு ‘ என்ற விவரத்துடன் மணிமேகலைப் பிரசுரமாக வெளிவருகிறது. புதியசுவடுகளும் அப்படித்தான்.

ஞானசேகரனின் மனைவி திருமதி ஞானம் ஞானசேகர ஐயர் எழுதிய “இந்துமதம் என்ன சொல்கிறது ?” என்ற நூல் ‘ஞானம் ‘ வெளியீடாக 1999 கார்த்திகை வெளிவந்தது. இந்த நூல் அவுஸ்திரேலியாவிலும் அக்காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதே நூல் முகப்பு அட்டையில் மாற்றத்துடன் மணிமேகலைப் பிரசுரத்தினால் மீண்டும் 2005 ஆம் ஆண்டு ‘முதல் பதிப்பு ‘ என்ற நூல்விபரத்துடன் வெளியாகியுள்ளது.

இவ்வாறு வியாபாரத்தந்திரத்துடன் எமது தமிழ் எழுத்தாளர்களின் உழைப்பையும் பணத்தையும் சுரண்டிக்கொண்டிருக்கும் மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவிதமிழ்வாணன் உலகெங்கும் சென்று கண்காட்சிகள் நடத்தி சால்வைபோர்த்தி எம்மவரை தமது வியாபார வலையில் சிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இத்தகைய வியாபாரத் தந்திரத்தைத்தான் தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களும் சேவை செய்கிறார் என்று சில “ காவடி தூக்கிகள்” புகழ் பாடி முகம் துடைக்கும் சால்வைகளை பெற்றுக்கொள்கின்றன.

கணினியுகம் வந்தபின்பு புத்தகவெளியீட்டுத்துறை அபாிமிதமாக முன்னேறியிருக்கிறது. பணமுள்ள எவரும் புத்தகம் வெளியிடலாம் என்ற யுகம் தோன்றியதனால் – தமிழ்நாட்டின் மணிமேகலை பிரசுரகர்த்தர் உலகம் பூராவும் வலம் வந்து ‘தமிழ்ச்சேவை ‘ பூிவதாக சொல்லிக்கொண்டு, எமது புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர்களை வலை வீசிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

இவரது நடவடிக்கைகளை அண்மைக்காலமாக உற்றுப்பார்த்தபொழுதுதான் – அவருக்கேயூித்தான வியாபார தந்திரம் வெளிச்சத்திற்கு தெரிகிறது. புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடம் மட்டுமல்ல, இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்கள் மத்தியிலும் அந்நிறுவனம் கச்சிதமாக காாியமாற்றுகிறது.

அண்மையில் இங்கு வந்த இப்பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவிதமிழ்வாணன் – சிட்னியில் ஒரு பெண் எழுத்தாளாிடம், 300 அவுஸ்திரேலியன் வெள்ளி தாருங்கள், உங்கள் கதைத் தொகுதியை வெளியிடுவேன். 300 பிரதிகள் அச்சிட்டு, 100 பிரதிகள் தருவேன் என்கிறார். மெல்பனுக்கு வந்து மற்றுமொரு பெண் எழுத்தாளாிடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான உங்கள் கதை தொகுதியை வேறு ஒரு பெயாில் வெளியிடுவோம். 300 டாலர்கள் தாருங்கள். 1000 பிரதி அச்சிட்டு அதில் 300 பிரதி தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஏற்கனவே இந்த மனிதாின் செயல்பாடுகள் அறிந்து பல கண்டன விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 15 வருடங்களின் முன்பு தமிழக பதிப்பகம் ஒன்று மெல்பனில் வதியும் ஒரு பெண் எழுத்தாளாின் கதைத் தொகுதியை வெளியிட்டது. அதே தொகுதியை மீண்டும் வேறு ஒரு பெயாில் வெளியிடுவதற்காக இந்த வியாபாாி குறிப்பிட்ட பெண் எழுத்தாளரை அணுகியுள்ளார்.

தனது சிறுகதையொன்றை தழுவியே கமலஹாசன் ‘நளதமயந்தி ‘ படத்தை எடுத்துள்ளார் என்று இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் இவர்,( நளதமயந்தி Green card என்ற ஆங்கிலப்படம் என்ற தகவல் அனைவரும் அறிந்ததே) மணிமேகலை பிரசுரத்துடன் சமரசம் செய்யும் பட்சத்தில் 15 வருடத்துக்கு முன்பு வந்த ( தமிழகத்தில் வெளியாகி அவுஸ்திரேலியாவில் அறிமுகமானது) விரைவில் வெளிவந்தாலும் ஆச்சாியம் இல்லை. புலம் பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் தமது முதுகுகளை இந்த பிரசுரகர்த்தாவிடம் சவாாி செய்வதற்கு தாராளமாக விட்டுக் கொடுக்கும் வரையில் இந்த வியாபாாியின் வியாபார தந்திரம் கச்சிதமாக வெற்றியடைந்து கொண்டுதானிருக்கும். தரமற்ற புத்தகங்ளை வெளியிடுவதிலும் முன்னணி வகிக்கும் அப்பிரசுராலயம் நூலின் உள்ளடக்கத்தை கவனியாது – வருவாயைத்தான் கவனிக்கிறது.

இவற்றை படித்தறியாத கேட்டறியாத பல எழுத்தாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் பின்னணிகளை விளக்க வேண்டியுள்ளது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வந்த தமிழ்நாடு ‘கங்கை ‘ இதழ் ஆசிாியர் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் 10 ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறார்கள் என்று சொன்னார். பின்னாளில் கலைமகள் ஆசிாியர் கி.வா.ஜகன்னாதன் இலங்கைத்தமிழ்; எழுத்தாளர்களின் மொழிபூியவில்லை, எனவே அடிக்குறிப்பு தேவைப்படுகிறது என்றார்.

எனினும் இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் இந்தியாவின் தமிழ்நாட்டு மெட்ராஸ் தமிழையும், தஞ்சாவூர் தமிழையும், கொங்குநாட்டுத் தமிழையும், காிசல்காட்டுத் தமிழையும், தலித்துகளின் தமிழையும், அக்ரகாரத்து பிராமணத் தமிழையும், நன்கு படித்து பூிந்து கொண்டு தமிழக படைப்புகளையும் தமிழக எழுத்தாளர்களையும் வரவேற்றனர்.

மணிக்கொடியும் சரஸ்வதியும் தாமரையும்தான் ( இவை சிற்றிதழ்கள் ) இலங்கை எழுத்தாளர்களைக் கனம் பண்ணி அவர்களின் படைப்புகளை வெளியிட்டதுடன் இலங்கை எழுத்தாளர்கள் சிலாின் புகைப்படங்களை அட்டையில் பிரசூித்து கெளரவி;த்தும் இருந்தன.

சரஸ்வதி விஜயபாஸ்கரனும் – NCPH புத்தக வெளியீட்டு நிறுவனத்தினரும் இலங்கை எழுத்தாளர்கள் சிலரது புத்தகங்களை வெளியிட்டனர். வணிகப்பத்திாிகைகளான குமுதமோ ஆனந்தவிகடனோ இலங்கை படைப்புகளை ஏறெடுத்தும் பார்க்கவில்;லை.

50 வருடகாலம் பிரசுரபணியில் அனுபவமுள்ள தமிழ்நாட்டின் மணிமேகலைப் பிரசுரம் கூட ஒரு காலத்தில் இலங்கைப்படைப்பாளிகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தமிழ்வாணனின் மர்மநாவல்களைத்தான் அது வெளியிட்டு வந்தது.

எமது இலங்கை தமிழ்மகள் தேசிய இனப்பிரச்சினையின் தாக்கத்தால் – நெருக்கடிக்குள்ளாகி இனவிடுதலைப்போர் வெடித்து ஆயிரக்கணக்கில் அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் – பலகோடி பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் – பல இலட்சம் மக்கள் காயமுற்றும் – பல்லாயிரம் பேர் விதவைகளாகியும் – பிள்ளைகள் அனாதைகளாகியும் – இருப்பிடம் இன்றி இடம் யெர்ந்தும் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றும் – அந்நிய நாடுகளுக்குப் புகலிடம் தேடி ஓடியபின்பும் – சர்வதேசமே விழியுயர்த்திப் பார்த்தவேளையில் தமிழக பத்திாிகைகளுக்கும் பதிப்பகங்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் இலங்கையின் இனவிடுதலைப் போராட்டமும் தேசிய இனப்பிரச்சினையும் எமது மக்களின் போர்க்கால இலக்கியமும், புலம்பெயர்ந்தவர்களின் புகலிட இலக்கியமும் வியாபாரக் கண்ணோட்டம் கொண்ட பார்வையை அளித்துள்ளன.

இந்த வியாபார புத்தியை மிகவும் கச்சிதமாகப் பயன்படுத்துகிறது தமிழ்நாட்டின் மணிமேகலைப்பிரசுரம். ஒருவர் வியாபாாியாக இருப்பதும் அதன் மூலம் பணம் தேடுவதும் சின்ன மீனைப்போட்டு பொியமீனைப் பிடிப்பதும் பணம் படைத்த அப்பாவிகளை பொண் முட்டையிடும் வாத்துகளாக நினைத்துக் கொள்வதும் சாதாரணமானதுதான். ஒரு காலத்தில் தமிழ்வாணனையும் அவரது வியாபாரங்களையும் மணிமேகலைப் பிரசுர வெளியீடுகளையும் நன்கு பூிந்து கொண்ட தமிழக முன்னனி படைப்பாளி ஒருவர் சொன்ன கருத்து இப்போது ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியாதது.

“பற்பொடியும் – பத்திாிக்கையும் விற்பனை செய்வதில் வல்லவர் தமிழ்வாணன்” என்ற அவரது கருத்து நூற்றுக்கு நூறு சாியெனக்கொண்டால் இன்று உலகெங்கும் சென்று தமிழ் வளர்ப்பதாகவும் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தளர்களுக்கு புத்தக வெளியீட்டில் பொிதும் உதவுவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கும் தமிழ்வாணனின் புதல்வன் ரவிதமிழ்வாணன் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருப்பது போன்று தமது வியாபாரத் தந்திரத்தை மிகவும் கச்சிதமாக மேற்கொண்டு வருகிறார் என்பதையும் அக்கருத்துடன் ஒப்புநோக்க முடியும்.

ஈழத்தமிழனத்தின் போரட்டமோ அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களோ புலம் பெயர்ந்த நாட்டில் இயந்திரமயமான வாழ்வோ – இந்த மணிமேகலைப் பிரசுரத்திற்கு ஒரு பொருட்டல்ல. அந்நியசெலாவாணி குறித்து இந்திய மத்திய அரசின் கடும்போக்கினால் இன்றும் இலங்கையில் அச்சிடும் நூல்களை இந்தியாவிற்கு அனுப்பி விற்பனை செய்ய முடியாத சூழல்தான் நீடிக்கிறது. ஆனால் அங்கு அச்சிடப்படும் நூல்கள், சஞ்சிகைகள் தாராளமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்த ஒருதலைபட்சமான போக்கு நீடித்துக்கொண்டிருக்கும் வேளையில் மணிமேகலைப் பிரசுரம் இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை எழுத்தாளர்களிடமும் தமது வியாபாரத்தை மிகவும் சாதூியமாக நடத்திவருகிறது. அத்துடன் மணிமேகலைப் பிரசுரத்தின் வர்த்தக தந்திரத்தையும் நாம் இனம் காண வேண்டியுள்ளது.

எழுத்தாளர்கள் விழிப்புடனிருந்தால் – அது தமிழுக்கும் தமிழ்ப்படைப்பிலக்கியத்திற்கும் நன்மைகளைப் பெற்றுத்தரும்.

1999 கார்த்திகையில்

வெளியான முதல்பதிப்பு

2005 இல் வெளியான

( ?) முதல்பதிப்பு

நன்றி – உதயம் ஏடு ஆஸ்திரேலியா

Series Navigation

முருகபூபதி

முருகபூபதி