ரொமீலா தாப்பர் கூறும் கோவில் வரலாறை முன் வைத்து சில குறிப்புகள்

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

கற்பக விநாயகம்


மன்னன் என்றாலே மக்களின் உழைப்பைச் சுரண்டுபவன்தானே. எல்லோரையும் வரி போட்டுக் கசக்கிப் பிழிந்தவன் தானே.

உடனே ஒளரங்க சீப் இந்துக்கள் மீது கூடுதல் வரி போட்டான் எனச்செப்ப வந்து விடுவார்கள். அ.மார்க்ஸ் இவர்களுக்கு பதில் தந்திருக்கிறார் தமது ‘இந்துத்துவத்தின் பன்முகத்தன்மையில் ‘. ஒளரங்க சீப் இந்துக்கள் மீது ஜிசியா விதித்தபோது முசுலீம்கள் மீதும் ‘சக்காத் ‘ எனும் வரி போட்டுள்ளான். ஜிசியா கூட பெண்கள், குழந்தைகள், பிராமணருக்கு விதிக்கப்படவில்லை.

மன்னனின் வரிக்கொடுமை தாளாமல் ஆங்காங்கே எதிர்ப்புக்கலகங்கள் நடந்துள்ளன. இதனை ஆ.சிவசுப்பிரமணியனின் ‘சோழர் காலம் பொற்காலமா ? ‘ எனும் குறுநூல் விவரித்துள்ளது.

மன்னனின் ஆதரவு சக்திகளான வெள்ளாளர்,பார்ப்பனர் சாதிகளுக்கெதிராக வலங்கையும் இடங்கையும் இணைந்த கூட்டணி சண்டையை நிகழ்த்தி உள்ளதை நொபுரு கரோசிமா தனது கல்வெட்டு ஆய்வு மூலம் நிறுவி இருக்கிறார்.

மன்னன் நிகழ்த்திய கோவில் கொள்ளைகள் அவ்வம்மத மக்களின் வாக்கெடுப்பில் மெஜாரிட்டி வாங்கி நடத்தப்படவில்லை. இப்படி தன்னிச்சையாய் இந்து மன்னனும், முசுலீம் மன்னனும் கொள்ளை அடித்ததற்கு அம்மதங்களும் அம்மத மக்களும் ஏன் பழிசுமக்க வேண்டும்.

கஜினியோ, ராஜ ராஜனோ ஏன் கோவிலைக் கொள்ளையடித்தனர் ? மக்களை ஏற்கெனவே அம்மக்களின் மன்னன் கொள்ளை அடித்துச் சேர்த்தவை கோவிலிலே சேர்ந்து கிடந்தன. இப்போது கொள்ளையர்கள் ஒவ்வொரு வீடாகப் புகுந்து கொள்ளையிடுவதுக்குப் பதிலாக வங்கிகளைப் பதம் பார்ப்பது மாதிரி அன்று கோவிலின் பண்டாரம் கைப்பற்றப்பட்டது. சோம நாதபுரத்தின் குடியானவர்கள் வீடோ, அடிமைக் கூலிகளின் வீடோ கொள்ளையிடப்பட்டதா ?

எங்களின் முன்னோர்களை உள்ளே நுழைய விடாத, எங்களை விபச்சாரிகளின் மக்கள் என்றும், அடிமைகள் என்றும் இழிவுபடுத்திய வைதீகத்தின் மையமாய் இருந்த, எம் முன்னோரின் ரத்தத்தைச் சுரண்டிய கூட்டத்தின் பொன்னும் பொருளும் குவிந்து கிடந்த அந்தக் கோவில்கள் கொள்ளை போனது பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் ?

மாறாக மன்னனை அண்டிப்பிழைத்த கூட்டம் வேண்டுமானால் கவலைப்படலாம்.

காந்தியைக் கொன்ற கோட்சே பார்ப்பனர் என்பதற்காக அனைத்துப் பார்ப்பனரையும் கொல்லத் துணிவோம், என ஒருவர் சொன்னால் அதை ஏற்க முடியுமா ?

கஜினி கோவிலைக் கொள்ளை அடித்தால் அதற்காக இன்றைய இசுலாமிய உழைப்பாளர்கள் ஏன் குற்றப்பழி சுமக்க வேண்டும் ?

இவர்களின் நோக்கமே, வெறுமனே இந்த மன்னன் இன்னது செய்தான், அவன் இன்ன மதம் எனக் கற்பித்து அம்மதத்தினர் மீது வெறுப்பை வளர்ப்பதுதான்.

(இது வரலாற்றைப் பள்ளி மாணவர்களுக்கு சொல்லித் தரும்போதே ஆரம்பமாகி விடுகின்றது. ‘ஆரியர்கள் வருகை ‘ எனத் தொடங்கும் வரலாறு இஸ்லாமியர் வருகையை ‘இஸ்லாமியப் படையெடுப்பு ‘ என்று இளம்பிஞ்சின் மனத்தில் துவேச விதையைத் தூவுகிறது)

கஜினியின் சோமநாதபுரக் கொள்ளை காலத்தில் மக்களின் நிலை என்னவாறு இருந்தது அங்கே என்பதைப் பற்றி ஏதாவது பாரசீக ஆணையை வெளியிட நீலகண்டன் முன்வர வேண்டும்.

கோவில்களை மிளிரச்செய்த சோழர்களின் ஆட்சியில்தான் அடிமை முறை நிலவி இருக்கின்றது. வேலை அடிமைகள் பொது இடத்தில் ‘கொள்வாருண்டோ ‘ எனக் கூவி விற்கப்பட்டனர். பார்ப்பனர்களுக்கு மங்கலங்களை எழுதி வைத்த சோழ ‘இந்து ‘ மன்னர்கள் மற்றவர்களை ரத்தம் உறிஞ்சி அரசினை நடத்தினர். பிற்காலச் சோழர்களால் வலங்கை இடங்கை மோதல்கள் ஊக்குவிக்கப்பட்டன. சாதி வெறுப்பும் இவர்களுக்குப் பின்னர்தான் வளர்ந்தன. இவர்கள் தெலுங்கு மன்னர்களோடு மணமுறை உறவு பூண்டு அங்கிருந்த வழக்கமான தேவதாசி முறையை இங்கும் புகுத்தினர். சோழ இந்து மன்னர்களால்தான் சம்ஸ்கிருதம் தூக்கிப் பிடிக்கப்பட்டு, தமிழ் நீச பாசை எனப் புறக்கணிக்கப்படும் சூழல் உருவானது.

இம்மன்னர்களை இந்து மன்னர்கள் என்று கருதுவதால் இந்துக்களாகிய நமக்கு என்ன பெருமை ?

நீங்கள் வேண்டுமானால் மங்கலங்களை எழுதி வைத்த மன்னனின் ஆட்சி பொற்காலம் என்றும், பிராமணர்களை ஆதரிக்காத ஆட்சியை ‘இருண்ட காலம் ‘ என்றும் நீலகண்ட சாஸ்திரி காலத்திலிருந்து சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

இந்த வஞ்சனையான வரலாற்றுப் பார்வையை ஏற்கெனவே அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அம்பலப்படுத்தி இருக்கின்றார்.

****

ரொமீலா தாப்பர் சாட்சியம்:

****

வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் ‘விகாஸ் அத்யாயன் கேந்திராவால் ‘ காந்தாலாவில் நடத்தப்பட்ட பட்டறையில் ஆற்றிய உரையின் சில பகுதிகள் இவ்விசயத்தில் நமக்கோர் தெளிவைத் தருகின்றன. அடைப்புக்குறிக்குள் கட்டுரையாளரின் கருத்துக்கள் உள்ளன.

‘முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் இந்துக்கோயில்களை அழித்ததாகக் கூறப்படுகிறது. சிலர் 3008 இந்துக் கோயில்களைத் தகர்த்து அங்கே மசூதிகளை முஸ்லீம்கள் கட்டியதாகக் கூறுகின்றனர். நிறையக் கோயில்கள் இடிக்கப்பட்டன; சிலைகள் நொறுக்கப்பட்டன; ரூபங்கள் அழிக்கப்பட்டன என்பது உண்மைதான். ஆனால் கோயில்களை அழித்ததற்கான காரணம் என்ன ? இதற்கான காரணங்களை இரண்டு கோணங்களில் ஆராயலாம். கோயில்கள் ஏன் தகர்க்கப்பட்டன ? அவை மத வேறுபாடுகள், மத எதிர்ப்பு காரணமாக இடிக்கப்பட்டனவா அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா ? கோயில்கள் செல்வம் சேர்க்கப்படும் மையங்களாக இருக்கின்றன. இன்று கூட நாட்டிலுள்ள, செல்வம் பெருகிய நிறுவனங்களில் கோயில்கள் முன்னணியில் உள்ளன. திருப்பதியிலும், பண்டார்பூரிலும் உள்ள செல்வமும் பொருளும் ஏராளம். பொன்னும், நிலமும், காணிக்கைகளும் கணக்கில் அடங்காதவை.

(இந்து அற நிலையத் துறையை இந்துத்துவ சக்திகள் இந்து மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனக் கருதுவதன் நோக்கமே, மேல் தட்டு மட்டுமே சார்ந்த பொருளாதார நலன்களாகும். தற்போது இடை நிலை, கீழ் நிலை இந்துக்களும் அனுபவித்து வரும் கோவில் சார் சொத்துக்களை தாம் மட்டும் நுகரத் துடிக்கும் ‘பிறப்பால் மட்டும் உயர்ந்த மக்களின் ‘ தந்திரமே இது)

இதைத்தவிர ஒரு அரசனால் கோவில் கட்டப்படும்போது, அவனுடைய அரசியல் அதிகாரத்தைப் பறை சாற்றுவதாக அது விளங்குகிறது.

(உற்சவரை ஊர்வலமாய் எடுத்து செல்வதன் பின்னணியில் அச்சாமியினை உரிமை கொண்டாடும் குழுக்களின் ஆட்சி அதிகார எல்லையைப் பறைசாற்றும் தன்மை இருக்கின்றது இங்கு நோக்கத்தக்கது. அதாவது மேல, கீழ, தெற்கு, வடக்கு வெளி வீதிகள் உள்ளிட்ட இடமெல்லாம் மூலவர் சுற்றிட அந்நிலப் பரப்பு எம் ஆளுகைக்கு உட்பட்டது எனும் அதிகார அறைகூவலே உற்சவரின் ஊர்வலம். சேரிக்குள் உற்சவர் நுழைவதில்லை. இதன் பொருள் யாதெனில் சேரி மக்களுக்கு இச்சாமி சொந்தமில்லை. அம்மக்களின் மீது மத ஆதிக்கம் செலுத்தும் உரிமையும் இச்சாமிக்கு சொந்தக்காரராகிய எமக்கில்லை என்பதே. இதெல்லாம் தலித்கள் இந்துக்களல்லர் என்பதற்கான அடையாளச் சான்றாம்)

மதச் சின்னங்கள் வெறும் மதச்சின்னங்களாக மட்டுமல்லாமல், பொருளாதார அதிகாரம், அரசியல் அதிகாரம், சமூக அந்தஸ்து ஆகியவற்றிற்கும் சின்னங்களாயுள்ளன. இது பழங்கால மதச்சின்னங்களுக்கு மட்டுமில்லை, இன்றைய காலத்திற்கும் பொருந்தும். ஒரு புதுக்கோவில் எழும்பும்போது யார் அதைக் கட்டினார் ? யாருடைய பணத்தினால் கட்டப்பட்டது ? எந்த சாதி அல்லது பிரிவினருக்கு அது சொந்தம் ? போன்ற கேள்விகள் பல காரணங்களை உங்களுக்குத் தரக்கூடும். இது மசூதிகளுக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் கூடப் பொருந்துகிறது.

(தலித்கள் தமது சாமியைக் களிமண்ணால் மட்டுமே செய்து கொள்ள வேண்டும் என்று சாதி இந்துக்கள் கட்டுப்பாடு வைத்திருந்தனர். 1980களின் இறுதியில் சங்கரன்கோவில் அருகில் உள்ள குறிஞ்சாங்குளம் ஊரில் தலித் மக்கள் இதை மீறிக் கருங்கல்லில் சிலை வைக்க முயன்றபோது சாதி இந்துக்கள் கலவரம் செய்து 4 பேர்களை வெட்டிக் கொன்றிருக்கின்றனர் என்பதும் இக்கூற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது.)

கோவில்கள் தகர்ப்பு இந்தியாவில் முஸ்லிம்களால் தொடங்கப்படவில்லை. அதற்குப் பல காலம் முன்னரே இது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முதலில் கி பி 5 ஆம் நூற்றாண்டில் இந்துக் கோவில்கள் கட்டப்பட்டன. கோவில்கள் தகர்ப்பு சுமார் 10, 11ஆம் நூற்றாண்டுகளில் ஆரம்பித்தது. இதற்கான வரலாற்று ஆதாரங்களுண்டு.

காஷ்மீரத்தில் எப்போதெல்லாம் அரசருக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதோ அப்போதெல்லாம் அதிகாரிகளை அனுப்பிக் கோவில்களைக் கொள்ளையிடச்செய்வர். தேவை என்றால் இடிக்கவும் செய்வர். 11வது நூற்றாண்டைச் சேர்ந்த ஹர்ஷதேவா என்ற மன்னன் ‘தேவ-உத்பதனா-நாயகா ‘க்களை (கோவில்களைக் களைவதற்கான அதிகாரி) நியமித்திருந்தாகக் கூறப்படுகிறது. காஷ்மீர் – ராஜதரங்கிணி வரலாற்றை எழுதிய புகழ் பெற்ற கல்ஹணர் இதை மன்னிக்க முடியாத ஒரு குற்றமாகக் கருதினார்.

மேற்கு இந்தியாவிலுள்ள மாளவப்பகுதியை ஆண்ட பார்மர்கள், குஜராத்தை ஆண்ட சாளுக்கியர்களை எதிர்த்துப் போரிட்டபோது, மாளவ அரசர்களில் பிரபலமான ஒருவன் இந்தப் போரின்போது செளராஷ்டிரத்தில் இருந்த ஜெயின் கோவில்களை இடித்ததாகக் கூறப்படுகிறது. அவன் காம்பேக்கும் சென்று அங்கிருந்த அரேபிய வணிகர்களுக்காக சாளுக்கியர்களால் கட்டப்பட்ட மசூதியையும் அழித்தான். சாளுக்கியர்களின் பொருளாதாரம், வாணிபத்தையே சார்ந்திருந்தது. எனவே ஜெயின்களும், அரேபியர்களும் அவர்களின் பொருளாதாரத்திற்கு முக்கியமானவர்கள் என்ற காரணத்தால் அவர்களுடைய ஆலயங்களை இடிப்பதன் மூலம் குஜராத் பொருளாதாரத்தின் முதுகெலும்பைத் தன்னால் முறிக்க முடியுமென்று நிரூபிக்கவே அவ்வாறு செய்தான். எனவே இது மதச்சின்னங்களை அழிப்பதற்கும் மேலாக தனிக்காரணம் கொண்டது.

பிரதிகாரருக்கு எதிராகப் போர் தொடுத்த ராஷ்டிரகூட அரசன், அவன் வெற்றியைக் கொண்டாட யானைகளை அனுப்பிக் கோவில்களைச் சிதிலப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கர்நாடக வரலாற்றில் கூட சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயின் கோவில்களைத் தாக்கியதற்கு ஆதாரங்கள் உள்ளன.

கோவில்களைத் தாக்குவதும், சிலைகளை அகற்றுவதும், சைவ சமய உருவங்களை மீண்டும் வைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

எனவே கடந்த கால வரலாற்றில் இந்துக்காலம் என்றழைக்கப்பட்ட கால கட்டத்தில் கலவரங்களே இல்லை, கோவில் தகர்ப்பும் இல்லை என்பது தவறானது. புத்தர் கோவில்கள் இந்துக்களால் அழிக்கப்பட்டதும், இந்துக்களுடைய கோவில்கள் மற்ற இந்துக்களால் அழிக்கப்பட்டதும் நடந்து வந்துள்ளது.

நாம் ஒத்துக்கொள்ளும் காலகட்டத்திற்கும் முன்பிருந்தே வெகு காலமாகக் கோவில் அழிப்புகள் தொடர்ந்து வந்துள்ளன. துருக்கிய பாரசீக ஏடுகளில் இந்த அழிப்புகள் பற்றி விவரங்கள் மேலும் தெளிவாக இருப்பது உண்மை. ஏனெனில் அவர்கள் இதைக் குறித்துப் பெருமை கொண்டிருந்தனர். அதனால்தான் முஸ்லீம்கள் கோவில்களை அழித்ததாக நாம் கூறி வருகின்றோம்.

(ராஜ ராஜனின் இலங்கை கோவில் அழிப்பு பற்றிய பட்டயம் தேடுபவர்கள் கவனிக்க. தேடுபவரின் வாதம் என்ன என்றால் விகாரங்களோ சேதப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அவை ஆணையாக எழுதப்பட்டு சேதப்படுத்தப்பட்டதா ? என்பதுதான் கேள்வி. சிங்களப் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஆணையின்பேரில் அது நடத்தப்பட்டதா என்பதுதான் கேள்வி. சிங்கள அடிமைகள் கைதாகி இருக்கலாம். ஆனால் அவை பட்டயம் எழுதி நடத்தப்பட்டதா என்பதே கேள்வி!)

மொகலாயர் காலத்தில் கோவில் தகர்ப்பில் இருந்த அரசியல் வெளிப்படையாகத் தெரிகின்றது. அரசாங்க ஏடுகளில் இருந்து ஒளரங்கசீப் போன்ற மன்னர்கள் பிராமணர்களுக்கும், கோவில்களைக் கட்டுவதற்கும் மானியங்கள் அளித்து வந்த அதே வேளையில் மறுபக்கம் கோவில்களை இடிப்பதையும் தொடர்ந்து வந்தது தெரிய வருகிறது. அந்த மன்னன், கோவில்களைக் கட்டுவதா அல்லது இடிப்பதா என்று முடிவு பண்ணத் தெரியாத பைத்தியமல்ல. அது ஓர் அரசியல் தந்திரமாகும். கோவில்கள் அமைந்துள்ள சூழல் எதைக் குறிக்கின்றது ? அது ஏன் இடிக்கப்படுகின்றது ? வேறொரு கோவில் ஏன் அதே அரசால் பாதுகாக்கப்படுகின்றது ? இங்கு அரசிய

தான் முடிவு செய்கிறது. ‘

****

ராமலிங்கரை இந்து மதத்தை சேர்ந்தவர் எனச் சரடு விடும் இந்துத்துவ சக்திகளின் சூழ்ச்சி குறித்து:-

அவரின் ஆரம்ப காலம் சைவ மதத்தில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது. அன்றிலிருந்து அவர் பாடிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அவரின் மனப்போக்கில் பின்னாளில் நிறைய மாற்றங்கள் வந்தன. ஒரு கட்டத்தில் அவர் இந்த மதத்தில் சீர்திருத்தம் வேண்டி நிறைய விசயங்களை வலியுறுத்துகின்றார். இறுதியில் ‘மதம், கோவில், சாமி, புராணம் ‘ எல்லாமே சிறுபிள்ளை விளையாட்டு எனக் கண்டிப்புடன் இவற்றை நிராகரிக்கிறார். இவரும் இந்துதான் என்றால், ஆறுமுக நாவலருக்கும் இவருக்கும் நடந்த நீதி மன்றம் வரை சென்ற ‘அருட்பா மருட்பா ‘வினால் வந்த சண்டை எதன்பொருட்டு ?

வள்ளலார் இயற்றிய அருட்பா, அருட்பா அல்ல என்றும் அது மருட்பா என்றும் மாற்றி மாற்றி துண்டுப்பிரசுரச் சண்டை போட்டு,

எதிராளியை ‘எனக்குப் பிறந்தவனே ‘ (அதாவது எதிராளியின் அம்மாவின் கற்பை செந்தமிழில் சைவர்கள் வசவுகிறார்களாம்) என்றெல்லாம் அச்சிட்டவை எல்லாம் என்ன ?

சிதம்பரம் கோவில் அருகே ராமலிங்கரின் ஆதரவாளர்களுக்கும் சைவப் புலி ஆறுமுக நாவலருக்கும் நடந்த புகழ் பெற்ற சண்டை எதன் பொருட்டு ?

****

அய்யா வைகுண்டரும் இந்துதான் எனச் சாதிக்கின்ற அன்பருக்கு:

அய்யா வழிக்காரர்கள் ஏன் பிற மதக்கோவில்களான இந்துக்கோவில்களுக்கு செல்வதில்லை ?

என்பதற்கு பதில் சொல்ல முடியுமா ?

அய்யா மதத்தை ஏன் மிசினரிகள் ஆதரிக்கவில்லை ? என்று கேள்விக்கு, எனது பதில்:

ஓர் உறையிலே ரெண்டு கத்தி இருக்க முடியாது. மிசினரிகளின் நோக்கம் இன விடுதலை மட்டுமே அன்று. அத்துடன் தேவனின் மோட்சத்தையும் வியாபாரம் செய்ய வேண்டி இருந்தது. இதற்கு இடைஞ்சலாய் இன்னொரு மதம் இருந்தது. அதுதான் அய்யா மார்க்கம். ரின் சோப்பை சந்தையில் விற்கும் வியாபாரியிடம் போய் நீ ஏன் 501 சோப்புக்கு ஆதரவு தரவில்லை என்று கேட்பது என்ன நியாயம் ?

பிர்சா முண்டாவை மிசினரிகள் எதிர்த்ததும் இதன் பொருட்டே. பிர்சா பகவான் உருவாக்கியதும் தனி மார்க்கம்தான். இல்லை அவரும் இந்துதான் என்று சாதிப்பவர்கள் விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பிர்சா முண்டா ‘ வையும், மகாஸ்வேதா தேவி எழுதிய ‘காட்டில் உரிமை ‘ எனும் நாவலையும் படித்துத் தெளிவுறட்டும்.

அய்யாவின் மார்க்கத்திலும் புரோட்டஸ்டண்டிலும் மக்கள் சேர முடியும். ஏனெனில் அவை பரவக்கூடிய மிசனரி மதங்கள்.

நான் அறிந்த வரையில் சாமித்தோப்பில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் வரை அம்மார்க்கம் சென்றடைந்திருக்கின்றது.

ஆனால் நமது இந்து மதத்தைப் பரப்ப முடியுமா மற்றைய மக்களிடம். என் மதத்துக்கு வாருங்கள் உங்களைத் வேசியின் மகனாக்குகிறோம் (அதாவது சூத்திரன்) என்றோ, செத்த மாடு தூக்க வைக்கிறோம் (பஞ்சமன்), திண்டுக்கல்லில் மூத்திரமும், திண்ணியத்தில் மலமும் திண்ண வைக்கிறோம் என்று சொல்லி பிரச்சாரம் செய்து பார்க்கட்டுமே. எவன் வருகிறான் நம் மதத்துக்கு என்று பார்ப்போம்.

கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் அய்யா மார்க்கத்தில் உள்ளனர். எனக்குத் தெரிந்து இம்மாவட்டத்தில் நிகழும் கோவில் கொடைக்கு கூட அம்மக்களை நீங்கள் அழைத்து விட முடியாது. ஏற்கெனவே கோழி அறுத்துப் பலியிட்ட நாட்டார் வழிபாட்டில் இருந்துகூட அம்மக்களை மடை திருப்பி இருக்கிறார் அய்யா. அவர் சாமித்தோப்புக் கோவிலை பார்ப்பன மயமாக்கவில்லை. அவ்வழிபாட்டில் மக்கள் மொழியான தமிழ்தானுண்டு. அன்னிய மொழியான சமஸ்கிருதம் கிடையாது.

சாமித்தோப்பின் துவையல் பந்தியில் பார்ப்பனரின் சமையல் கிடையாது. மாறாக பெருந்தெய்வக் கோவில்களில் சமைக்கும் மடைப்பள்ளி அனைத்தும் இன்னமும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றன.

****

‘ஹிந்து தேசியவாதிகள் ஆரம்பம் முதலே ‘ஆரிய ‘ என்பது இனப்பதம் அல்ல என்று சொல்லிவருவது ‘ சரி என்றால் ஆதி சங்கரர், திருஞான சம்பந்தரை ‘திராவிட சிசு ‘ என விளித்தது எதனால் ?

‘திராவிட ‘ என்று சங்கரர் சொன்னது நிலப்பரப்பை என்றெல்லாம் சொல்ல முடியாது. அது நிலப்பரப்பைத்தான் குறிக்கிறது என்றால், சங்கரரும் மலையாளக்கரையில் பிறந்த திராவிட நாட்டுக்காரர்தானே ? அவர் ஏன் சம்பந்தனை ‘திராவிட சிசு ‘ எனல் வேண்டும் ?

தெலுங்கு பிராமணாளில் ‘பஞ்ச திராவிடா ‘ எனும் உள் பிரிவு ஒன்று உள்ளது தெரியுமா ? (இவர்களில் சிலர் தம்மை தமிழர் எனவும் சொல்கின்றனர்.) அதில் குறிப்பிட்ட ‘திராவிட ‘ என்பது இனம்தான் என்றால் ‘ஆரிய ‘ என்பதும் இனமே.

நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்வீர்கள். அதனை ஆதாரம் கொண்டு நிரூபிக்க வேண்டாமா ? கேட்டால் அதெல்லாம் ஒவ்வொரு ஹிந்துவின் நம்பிக்கைக்கு உட்பட்டது என்று ஜல்லியடி அடிப்பீர்கள் என்பதும் எமக்குத்தெரியும்.

****

ஹிந்துக்கள் வணங்கும் இடங்களுக்கு அருகில் சர்ச் கட்டுவது ‘சில்லறைத் தனமென்றால் ‘ வீம்புக்கென மசூதி முன்பாக சென்று மேளம் அடித்து விநாகர் சதுர்த்தி ஊர்வலம் விடுவதற்கு என்ன பெயர் ?

****

‘வெள்ளைத்தோல் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அடிமைகளாக வாழுங்கள் என்றும் போதித்த அவர்களின் தேவன் என நம்பும் ஏசு ‘ -இது நீலகண்டனின் மேற்கோள்.

இதற்கு எமது பதில்:- ஏசு கிறிஸ்து ஆசியக்கண்டத்திலே பிறந்தவர். அவரின் காலத்தில் அவர் ரோமப்பேரரசின் பிரதி நிதியால் தண்டிக்கப்பட்டவர். அவர் ரோமானியப் பேரரசுக்கு மக்களை அடிமைகளாய் என்றும் இருக்கச் சொன்னதில்லை. விசமத்தனமாய் கண்டதையும் கழிந்ததையும் எழுதிச் செல்லுவதென்றால் எல்லோராலும் முடியும்தான். உண்மையின் பக்கம் இருப்பதுதான் நேர்மையான மனிதனுக்கு அழகு. ஏசு வின் சில போதனைகளை எம்மதத்தவரும் பின்பற்றலாம். உதாரணமாக ‘உன்னைப் போல் உன் அயலானையும் நேசி ‘.

ஆனால் நம் மதமோ மற்றவர்களை வெறுக்கவும், துவேசம் காட்டவுமே கற்றுக் கொடுக்கிறது.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்