கஜினி திரைப்படம்- எழுத்தாளர்களுக்குச் சொல்வது….

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

கோவிந்த்


கஜினி ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்குப் படம்.

மிகப் பெரிய வெற்றியும் பெற்றுள்ளது.

ஆனால், அது தொடர்பாக சில விஷயங்கள் நாம் சிந்திக்க வேண்டியது அவசியம்.

அந்தக்காலத்தில் ஸ்ரீதர், பாலசந்தர் பின் மணிரத்னம், சரண் என்று பல இயக்குனர்கள் பிறமொழி படங்களின் கதைகளைச் சுட்டு , கதை திரைக்கதை, வசனம் எனும் அடைமொழியுடன் படம் எடுத்துள்ளார்கள்.

திருட்டு விசிடிக்கு கோட்டை போய் காவல்துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்திய தமிழ்நாட்டில், எழுத்தாளர்களுக்கு அங்கீகாரமும் அவனின் உழைப்புக்கு ஊதியமும் தராமல் ஏமாற்றும் நிலை தொடர்வதற்கு ‘கஜினி ‘ திரைப்படம் ஒரு சான்று.

என் நண்பன் சொன்னான் ‘கஜினி ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் எப்படியிருக்கும் ‘ என்று.

மேலும், ‘ Noway out, Die hard II பட்ங்களைப் பார்த்த போது இது மாதிரி முதல் காட்சியிலிருந்து கடைசி வரை உச்சக்கட்ட காட்சி போல் தமிழ்ப் படமே வந்ததில்லை எனும் குறையை நீக்கும் படம்.

இது ஒரு வணிகரீதியான கற்பனைக் கதை. கதையின் சம்பவங்கள் சுவாரசியத்திற்கும் ,விறுவிறுப்பிற்காகவுமே வைக்கப்பட்டுள்ளதால் லாஜிக் பார்க்க வேண்டும்,

மத்தபடி லாஜிக்கும் சேர்த்து எடுத்திருந்தால் நிச்சயம் உலக தர வரிசைக்கு சென்றிருக்கும். ‘ என்று தொடர்ந்து பேசினான்…

____

நான் கேட்டது, ‘Memento ‘ படம் பார். கஜினியின் மூலம் தெரியும் என்று.

2000 த்தில் வந்த ‘Memento ‘ படம் அப்படியே காப்பியடிக்கப் பட்டு திரைப்படமாக வந்துள்ளது.

இந்தியாவில் ஒரு மொழியில் வரும் படத்தை பிறிதொரு மொழியில் எடுத்தால் வழக்குப் போடுபவர்கள் இந்தத் திருட்டு பற்றி இன்னும் வாய்திறக்கக் காணோம்.

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் மூலக்கதை என்று மலையாள எழுத்தாளர் பெயர் போட்டு விட்டு பின் கதை என்று தங்கர்பச்சான் என்று போடுகிறார்கள்.

ஆனால் கஜினியில் மூலக்கதை என்று, Memento படக் கதாசிரியர், ‘ஜொனதான் நொலன் ‘ பெயரை நாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனமே.

ஒவ்வொரு சினிமா ஆர்வலரும் பார்க்க வேண்டிய படம், Memento, அற்புத திரைக்கதை வடிவத்திற்கும் , Short term memory loss பிரச்சனையை திரைக்கதை அமைப்பில் வைத்திருக்கும் முறைக்கும் , உலக அங்கிலத் தரம் என்றால் நமக்குப் புரியும்.

பொதுவாக இந்தியாவில் திரைக்கதை உரிமை பிற மொழியில் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அதில் 33 1/3 கதாசிரியருக்குப் போகும். அது படி பார்த்தால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று கஜினியில் கிடைக்கப்போகும் உரிமம் வருவாய் குறைந்த பட்சம் 3 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைக்கும். இது Momento படத்தயாரிப்பாளருக்கும் அதில் 33 1/3 அதன் கதாசிரியருக்கும் போக வேண்டிய வருவாய்.

அப்படத்தின் நடிகருக்கு 2 கோடியும் , இயக்குனருக்கு 50 லட்சமும் மற்றும் அனைத்து ஊழியருக்கும் பணம் லாபமாகக் கிடைக்கும் போது , அதன் கதாசிரியருக்கு நாமம் என்பது எழுத்தாளர்கள் போராடவேண்டிய விஷயம். Memento திரைப்படத் தயாரிப்பாளருக்கு இரண்டு மில்லியன் டாலருக்கு மேல் நாமம்…

திருட்டு விசிடிக்கு என்ன ஜெயில் தண்டனையோ அதே தான் a.r. murugadoos ற்கு கொடுக்க வேண்டும்.

இப்படி எழுத்தாளர்கள் ஏமாற்றப்படுவது சகஜமாகிக் கொண்டே வருகிறது.

மணிசித்ர தாழ் படத்தின் கதையை மூன்றாந்தரமாக திருடிக் கொண்டு, பல கோடி சம்பாதித்து தான் என்றும் சூப்பர் ஸ்டார் என்று மார்தட்டும் ரஜினி கூட எழுத்தாளன் வயிற்றில் , உரிமையில் அடித்து நெஞ்சு நிமிர்த்தி மார்தட்டுவது வெட்கக் கேடான விஷயமாக இருக்கிறது.

ஆனால் இதற்கெல்லாம் இவர்கள் அசருவது மாதிரி இல்லை.

இந்தியாவில் காப்பி ரைட் ஆக்ட் 1957 , மற்றும் MPAA பற்றி எழுத்தாளர்கள் அக்கறை எடுத்துக் கொண்டால் தான் இந்நிலை மாறும் , எழுத்தாளர்களுக்கும் ஒரு மரியாதையான வருவாய் கிடைக்கும்.

கமல் மற்றும் அனைவரும் ஒத்துக் கொள்வது, ஒரு நல்ல கதையன்றி திரைப்படம் அமையாது என்பது தான்.

ஆனால், இன்றைய சூழலில் எழுத்தாளர்களுக்கு மரியாதையான அங்கீகாரகோ அவர்களின் எழுத்துக்களுக்கு நல்ல ஊதியமோ கேள்விக்குறியாக இருப்பதன் காரணம், காப்பி ரைட் ஆக்ட கேலிக்குறியதாக இந்தியாவில் இருப்பது தான்.

இன்ஸ்பிரஷேன் என்பது வேறு. ஒரு அளாவிற்கு God Father பாதிப்பில் வந்த நாயகன் பற்றிச் சொல்லலாம்.

ஆனால், அப்பட்ட காப்பி என்பது தண்டனைக்குறிய குற்றமே….

இது தடுக்கப்பட வேண்டிய துரோகச் செயல்.

எழுத்தாளர்கள் யோசித்துப் போராட வேண்டிய விஷயம் இது…

கோவிந்த்

gocha2004@yahoo.com

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்