திண்ணை அட்டவணை : 1984 சீக்கியர் மீதான படுகொலைகள்- 20 வருடங்கள்

This entry is part [part not set] of 25 in the series 20050812_Issue

திண்ணை


(நானாவதி கமிஷன் அறிக்கை மத்திய அமைச்சர் ஜகதீஷ் டைட்லர், எம் பி சஜ்ஜன் குமார் மீது குற்றம் சாட்டியுள்ளது. அமைச்சர் ஜகதீஷ் டைட்லர் பதவியைத் துறந்திருக்கிறார்.)

சீக்கியர் மீது 1984-ல் நிகழ்ந்த தில்லிப் படுகொலைகள் பற்றி விசாரணை செய்ய அமைக்கப்பட்ட கமிஷன்கள் : 9

1987-ல் இந்தப் படுகொலைகளைப் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிஷன்கள் – 3

இந்த மூன்று கமிஷன்களுக்குத் தரப்பட்ட பணி – ஜெயின்- பானர்ஜி கமிஷன் வழக்குப் பதிவு செய்வதற்காக, கபூர்-மித்தல் கமிஷன் காவல்துறையினரின் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய , அகூஜா கமிட்டி எத்தனை பேர் மரணமடைந்தார்கள் என்று ஆய்வு செய்ய

இந்த மூன்று கமிஷன்களில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாதபடி அதிருப்திக்கு ஆளானதால், வழக்குத் தொடரமுடியாமல் தடுக்கப்பட்ட கமிஷன்கள் – 2.

1984-ல் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை – போலிஸ் அறிக்கையின் படி : 1419

1984-ல் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை – தில்லி அரசு தெரிவித்ததன் படி – 2300

1984-ல் கொல்லப்பட்டவர்கள் – அகூஜா கமிட்டியின் படி – 2733

ரங்கநாத் மிஸ்ரா கமிட்டிக்கு பொதுமக்கள் குழு சமர்ப்பித்த எண்ணிக்கை – காணாமல் போனவர்களையும் சேர்த்து – 3870

வி பி சிங் பிரதமராய் இருந்தபோது அமைக்கப்பட்ட சிறப்பு நீதி மன்றங்கள் – 3

1990 வரையில் இந்தக் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் – 1

இந்த நீதிமன்றங்களினால் இது வரையில் தண்டனை பெற்றவர்கள் – 10

இது வரையில் இந்தக் குற்றத்திற்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் – 10

1990-ல் வி பி சிங் அமைத்த பொட்டி-ரோஷா கமிஷனுக்குத் தரப்பட்ட வேலை – ஜெயின் பானர்ஜி கமிஷனால் விளைந்த சட்டச் சிக்கல்களை சரி செய்வது.

பொட்டி-ரோஷா கமிஷனின் ஆயுட்காலம் – 6 மாதங்கள்

பொட்டி ரோஷா கமிஷனின் பணியால் விளைந்த பலன் – 0

எச் கே எல் பகத், குமார் இருவர் மீதும் வழக்குத் தொடராததற்குக் கண்டனம் தெரிவித்த கமிஷன் – ஜெயின் அகர்வால் கமிஷன்

எச் கே எல் பகத், குமார் இருவர் மீதும் வழக்குத் தொடராததற்குக் கண்டனம் தெரிவித்த வருடம் – 1994

—-

Series Navigation