இறைநம்பிக்கையும் ஆன்மீகமும்

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

என் எஸ் நடேசன்


இலங்கையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவிகாரையில் ஒன்றான களனி புத்தவிகாரைக்குச் (ராஜ மஹாவிகாரை) சென்றிருந்தேன். பெளர்ணமி நாளாக இருந்தும் மக்கள் தொகை அதிகமாக இருக்கவில்லை. மேலும் வந்திருந்தோரில் பெரும்பாலானவர்கள் வயோதிபர்களாக இருந்தனர். இதே விகாரைக்கு 20 வருடங்களுக்கு முன் சென்றபோது நடக்க முடியாமல் மக்கள் அலைமோதினார்கள். மேற்கு நாடுகளின் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு ஏற்பட்ட நிலையை இங்கும் வந்துவிட்டதோ என நினைத்துக் கொண்டேன்.

இறைநம்பிக்கை குறைந்து வரும் காலகட்டத்தில் அமெரிக்க மருத்துக் கல்லூரிகள் மருத்துவ மாணவர்களுக்கு ஆன்மீகவிடயங்களில் பயிற்சி கொடுக்கிறார்கள். மருத்துவ பாடத்திட்டங்களில் ஆன்மீகம் சம்பந்தமான விடயங்களும், சேர்க்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.

வைத்தியசாலைகளில் இருக்கும் உள் நோயாளர்களில் (In Patients) 80 வீதமானவர்கள் அமெரிக்காவிலும் ,75 வீதமானவர்கள் அவுஸ்திரேலியாவிலும் இறைநம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். இதேவேளையில் இறைநம்பிக்கை அற்றவர்களிலும் பலர் ஆன்மீக தேடல உடையவர்களாக இருக்கிறார்கள்.

இந்தவகையில் பார்க்கும் போது வைத்தியர்கள் ஆன்மீக விடயங்களில் குறைந்த பட்ச அறிவு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இறை உணர்வு Belief in God

ஆன்மீகம் – Spirituality

Spirituality has been defined as an experimental process whose feature includes quest for meaning and purpose, transcendence (a sense that being human is more than material existence), connectedness (e.g with others, nature or the divine) and values (e.g Justice)

1948 ல் ஆஸ்திரேலியர்களில் 95 வீதமானவர்கள் இறைநம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். ஆயினும் 1998ல் இது 74 வீதமாகிவிட்டது. முதியவர்களிடமும் நோய் கொண்டவர்களிடமும் இறைநம்பிக்கை அதிகமாகவுள்ளது என ஆஸ்திரேலிய மருத்துவ சஞ்சிகை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் Broken Hill மனநோய் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களிடம் செய்த ஆராய்ச்சியின்படி 79வீதமானவர்கள் ஆன்மீக உணர்வின் தேவையை வலியுறுத்தினார்கள். 82வீதமானவர்கள் ஆன்மீக உணர்வு மனநோயால் தற்காலிக தெளிவை ஏற்படுத்துவதாக கூறினார்கள்.

இறை உணர்வு உள்ளவர்களிடம் மதுப்பழக்கம், போதை வஷ்து பாவித்தல் குறைவாகவும் திருமண உறவில் நீண்டநாள் நீடிப்பவர்களாகவும், இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், பால்வினை நோய்கள் (STD) போன்ற நோய்கள் குறைந்த அளவில் கொண்டவர்களாக இருப்பதும் அவதானிக்கப்பட்டது.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஒரே ரீதியான சமூக சூழ்நிலையில் அபிவிருத்தி அடைந்த மேற்கு நாடுகளை சேர்ந்த யூத. கிறிஸ்தவ சமூகங்களில் செய்யப்பட்டது என்பது கவனிக்கப்பட வேண்டும்.

அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் ஆன்மீக உணர்வும் அதன் பிரதிபலிப்பான அவர்களின் கனவுகள் ஓவியங்களாக தீட்டப்படுகிறது. இவர்களது உடல் ஆரோக்கிய நிலைக்கும் ஆன்மீக தேடலுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. இவர்கள் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஒப்பான தேக ஆரோக்கியம், ஆயுட் காலமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

மனநோயாளர் மத்தியில் இறைஉணர்வும் ஆன்மீகமும் அதிகமாக இருப்பது மிகவும் கவனிக்கப்படவேண்டியது. மனநோயாளிகள், குறிப்பாக Schizophrenia நோயாளிகள் தாங்கள், இறைவனுடன் பேசியதாகவும், நேரில் வந்து இறைவன் சந்தித்ததாகவும் கூறுவார்கள்.

கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள் தேவாலயங்களுக்கு போய் இறைவனைக் கண்டதாக குருமாரிடமும் புனித சகோதரிகளிடமும் கூறி அவர்களை தங்களின் தந்தை. தாயாக காண்பார்கள்.

இந்து சமயத்தவர்களின் பக்தி வெளிப்பாட்டில் கடவுளை காண்பதும், கலை, உருக்கொண்டு ஆடுவதும் நடக்கும் சம்பவங்களாகும்.

மனநல மருத்துவம் கிடைக்காத இடங்களில் மதகுருமார்களால் பேய் விரட்டுவது ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பல நூற்றாண்டுகளாக நடக்கின்றது. நமது நாடுகளிலும் பேய் விரட்டல், சூனியம் எடுத்தல் கிராமங்கள் தோறும் இன்னும் நடக்கின்றது.

ஆதாரம் Journal of Australian Medical Association

—-

uthayam@optusnet.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்