இந்திய அமெரிக்க உறவு – இந்திரா காந்தியின் வார்த்தைகளில்

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

இந்திரா காந்தி


(அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. பங்களா தேசம் விடுதலைக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் இந்திரா காந்தி பேசியது பற்றி அமெரிக்க அலுவலர்கள் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி இது. )

மிக ரகசியமான முறையில் இந்திரா காந்தி பத்திரிகையாளர்களிடம் டிசம்பர் 22ம் தேதி பேசியதன் சாராம்சம் இது.

1. அமெரிக்க விரும்பினால் இன்றே இந்திய- அமெரிக்க உறவு சீரடையலாம். என்னைப் பொறுத்தவரையில் உறவு சுமுகமாகத்தான் இருக்கிறது. எனக்கு அமெரிக்காவிற்கு எதிரான எந்த எண்ணமும் இல்லை. அமெரிக்க மக்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவள். அமெரிக்காவிலிருந்து பல துறையில் உள்ள புகழ்பெற்ற நபர்கள் எனக்கு நூற்றுக் கணக்கில் கடிதம் எழுதியிருக்கிறார்கள். சிறு குழந்தைகள் கூட , மூன்றாவது, நான்காவது வகுப்பில் உள்ள குழந்தைகள் கூட எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகள் என் மனதைத் தொடுவதாய் உள்ளது.

2. நிக்ஸன் இந்தியா பற்றிக் கொண்டுள்ள தவறான அபிப்பிரயம் பற்றி : இந்தத் தவறான அபிப்பிராயம் வங்க தேசத்தைப் பொறுத்தது மட்டுமல்ல. இந்தியா என்பது என்னவகையான நாடு, எந்தக் கொள்கைகளுக்காக இந்தியா முன்னிற்கிறது, என்பதை அங்கீகரிப்பது பற்றிய அபிப்பிராயம் அது. தேசங்களின் பலத்தை சமன்படுத்துவது (bealance of power) என்ற கோட்பாட்டை நாங்கள் எப்போதுமே ஒப்புக் கொண்டதில்லை, இப்போதும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை.

3. சோவியத் யூனியன் ( அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படைக்கு எதிராகவும், சீனாவிற்கு எதிராகவும் களமிறங்கும் என்று ) எங்களுக்கு வாக்குறுதி அளித்தது எனப்பல அர்த்தமில்லா உளறல்கள் பேசப்படுகின்றன. அப்படி எதுவும் சோவியத் யூனியனுடன் பேசப்படவில்லை என்று என்னால் உறுதியாய்ச் சொல்லமுடியும். இதற்குப் பின்பும் அமெரிக்கா நான் எப்படிப்பட்டவள் என்பதையோ, இந்தியா எப்படிப்பட்ட நாடு என்பதையோ புரிந்து கொள்ள மறுத்தால் , இதன் பின்விளைவு என்னவென்றும், அமெரிக்காவுடன் என்னவிதமான உறவு பூணுவோம் என்பதும் என்னால் சொல்லமுடியாது. ஒரு நபர் எப்படிப்பட்டவர் என்று நீங்கள் புரிந்து கொள்ளும் திறமை கொண்டிருக்கவேண்டும்.

4. போரின் பொருளாதாரப் பின்விளைவுகள் மேலும் சிரமமாய் இருக்குமென்றால், நாங்கள் அதைச் சகித்துக் கொள்வோம். கஷ்டங்கள் எங்களுக்குப் புதிதல்ல. எல்லா வெளிநாட்டு உதவிகளையும், இயன்றவரையில், நாங்கள் தவிர்க்கவே விரும்புகிறோம்.

****

Series Navigation

இந்திரா காந்தி

இந்திரா காந்தி