கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (தொடர்:3)

This entry is part of 59 in the series 20050318_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


‘ மூலதனத்தின் கருப்பையில் சமாதனம் கருக்கொள்வதென்பது மொட்டைத் தலைக்கும்

முழங்காலுக்கும் முடிச்சிடுவதாகும். ‘

அமெரிக்காவை ஏன் பயங்கரவாத நாடென்கிறோமென்றால் அது வரலாறுபூராகவும் யுத்தங்கள்மூலமாகவே தன் வருமானத்தையேற்படுத்தியதாலவா ? மூலதனத் திரட்சியின் அதிகூடியவேட்கையின் வாயிலாக தனது தொழிலகங்களுக்குத் தேவையான மூலவளங்களைத் தேடி உலகைக் கொள்ளையிடுவதாலவா ? அது முதலாளிய நலன்களைக் காத்துக்கொள்ளும் தலைமையைக் கொண்டியங்குகிறதன் வாயிலாக -அந்த நலனோடு பின்னப்பட்ட ஒரு சிறுபான்மைச் செல்வந்தர்களுக்காக உலகின் அனைத்து இயற்கை வளங்களையும்(உயிரினம் முதற்கொண்டு)கொள்ளையிடுகிறதற்கான அடியாட் படையை உலகம் பூராகவும் நிறுத்தி ,உலக்திலுள்ள மக்கள் தத்தம் விருப்பப்படி வாழ முடியாத நிலையைத் தோற்றியுள்ள அமெரிக்கா ஒருபடி மேலே போய் அனைத்து உற்பத்திப் பொருட்களுக்கும், இயற்கை வளங்களுக்கும் உரிமம் கூறி-உற்பத்திச் செய்கைமுறைமைக்குக்;கூட உரிமம் வைத்துள்ளதே,அதற்காகவா ? இவையெல்லாமேதாம் உலகின் முதற்தரப் பயங்கரவாதம்.இந்த விஷயங்கள் வெறும் பொருளியல் சம்பந்தப்பட்டவொரு சட்ட நடவடிக்கையில்லை. உயிராதாரப் பிரச்சனை,வாழ்வாதார முக்கிய பொதுச்சொத்தை -உயிர் காக்கும் உற்பத்திப் பொருட்களை சில முதலாளிகளின் ஆதாயத்திற்காக உரிமமும் கூறி உலகை ஏப்பமிடும் அமெரிக்க அரசைப் பயங்கரவாதத்தின் மூலவூற்றாய் இனம் காணுவதும்,அதை எதிர்ப்பதற்கான தேவையை வலியுறுத்துவதும் அவசியமான காியமாக இருக்கிறது.

இன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ச் டபிள்யு புஷ் தனது தந்தை வழி அரசியலேயேதாம் முன்னெடுக்கிறார்.இருவருமே இராட்சத எண்ணை கொம்பனிகளோடு இறுகப்பிணைந்த பங்காளிகள்.இவர்களது நோக்கம் எண்ணையாலைகளின் தமது பங்குகளையும்,தமது உறுவுகளின் பங்குகளையும் பல மடங்காகப் பெருக்குவதும்,உலகின் அனைத்து வளங்களையும்-மூளையுளைப்பையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுமே.இதில் அமெரிக்கா மாபெரும் வெற்றியீட்டியுள்ளது.

உயிராதாரப் பிரச்சனை:

இன்றுள்ள மிகப்பெரும் உயிராதாரப் பிரச்சனை உயிர் வாழும் சுதந்திரத்தை தீர்மானிப்பது யார் என்பதே!இன்றைய அமெரிக்காவானது வெறும் பொருளியல் நலனை மையப்படுத்திய குவிப்புறுதியூக்கச் சமுதாயமில்லை.அது பிரபஞ்ச இயக்கத்தையே முடிந்தளவுக்கு தன் கட்டுப்பாட்டுக்குள் நிலவக்கூடிய சமாச்சாரமாகப் பார்க்கிறது.தோற்றம் அழிவு போன்ற அனைத்து பெளதிக இயக்கத்தையும் தனது சக்திக்கேற்றளவு கட்டுப்டுத்த முயற்சிக்கிறது.இதன் முதற்படி விவசாயப் பயிர்களிலிருந்து ஆரம்பித்து விட்டது.எனினும் உயிர்கள் மீதான அதனது அத்து மீறிய அதிகாரத்துவம் உயிர்களைத் தனது விருப்புக்கேற்ற வாறு தயாரிக்கும் பொறிமுறைக்குள் திணிக்கிறது.இது மிருகங்களிலீருந்து ஆரம்பித்து கொலோன் முறையிலான மானுடவுற்பத்தி என்று விரியக்காத்திருக்கிறது.இனிவரும் காலங்களில் குறிப்பிட்டவொரு இனத்தினது இரத்தலே பூமியிற் சாத்தியப்படப்போகிறத.அது இயற்கையோடு இசைவாக்கங் காக்கக்கூடிய ஆற்றலைநோக்கிச் சிந்திகத் தொடங்கிவிட்டது. இயற்கையில் நிலவக்கூடிய அனைத்து வளம்களையும் அமெரிக்க ஆளும் வர்க்கம் தனகேற்றவாறு உபயோகிக்க-மறுசீரமைக்கக் கூடிய ஆற்றலைப்பெற்றுள்ளது.அதன் இராட்சத யுத்தஜந்திரம் அனைத்து வளங்களையும் கையகப்படுத்தி இராணுப் பொருளாதாரம் நோக்கி நகர்கிறது.இந்தப் படிமுறை வளர்ச்சியானது சந்தைப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத தேக்க நிலையீன் இன்னோரு வடிவமாக நாம் காணுகிறோம்!இதன் மிகைப் பணவீக்கமானது செயற்கைத்தனமான பற்றாக்குறைகளால்(உணவுவகைகளைக் கடலில் கொட்டியழித்தல்) ஈடு செய்யமுடியாமற் போவதனால் பெரு முலதன வங்கிகளுக்குக் கொடுக்கப்படவேண்டிய வட்டிக்கு வட்டி முதலாளியமைப்பையே சிதறடிக்கும் நிலையைத் தோற்றுகிறது.இதனால் யுத்தங்களே இறுதிச் சிகிச்சையாகவுள்ளது.அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கொத்தடிமை முறைக்காகவேனும் இந்த அமைப்புத் திரும்பியாகவேண்டும். இதை அமெரிக்கா இரண்டாவது மகாயுத்த்தில் கண்டுகொண்டது.இந்த முறைமையை ஓரளவு ஜனநாயகப் பண்புடைய வளர்ச்சியடைந்த தமது நாடுகளில் அவ்வளவு இலகுவாக ஏற்படுத்த முடியாத ஏகாதிபத்திய பெரு முதலாளியம் தமது நாடுகளுக்கு வெளியே இவற்றைச் சாதிப்பதில் வெற்றியீட்டிவருகிறது.இந்த வியூகத்திற்கு மூன்றாமுலக நாடுகளே பலியாகிவருகின்றன.யுத்தம் என்பது தவிர்க்க முடியாதவொரு அங்கமாக இருப்பதால் இந்த முதலாளியமைப்பில் நிலவுகின்ற பணச்சுற்றோட்ட முறை வட்டி முறைமையால் தாக்குப் பிடிக்க முடியாது உடைந்து போகிறது.இந்த இயங்கியல் விதி பொருளியல் பொறிமுறையையே அதாவது முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையையே இறுதியில் காவுகொள்ளும் நிலையிலும் போர் வெடிக்கும் அபாயம் வந்து விடுகிறது.இந்த அபாய நிலைதாம் இப்போதுள்ள நிலையாகும்.இதுதாம் உலகத்தின் முதற்தரமான பயங்கரவாதமாகும். இந்தப் பயங்கர வாதம் பலவர்ணங்கொண்ட சமாதானப் பாய்களையிப்போ உலகெங்கும் விரிக்கிறது.இந்த பாயிற் படுக்க முனையும் அபிவிருத்தியடையமுனையும் நாடுகளின் அரசும்,அவற்றுக்குள் நிலவும் சிறுபான்மையரசுகளும் இறுதியில் இவர்களது தந்திரங்களால் அழிக்கப்பட்டு புதிய கூட்டு-புதிய தலைமைகள் உருவாவதும் பின் சிதறடிக்கப் படுவதுமாகக் காலம் நகர்த்தப் பட்டாலும் பாரிய யுத்தங்கள் தவிர்க்க முடியாது நடைபெறவே செய்யும்.

இந்தப் பரிதாபகரமான பொருளாதாரப் பொறிமுறையை இதுவரை முன்றாமுலக நாடுகள் சரிவரப் புரிந்ததுமில்லை,அதற்கெதிரான மாற்று அமைப்பைத் தோற்றுவித்து உயிர் கொடுக்கவுமில்லை.இந்த நிலையிற் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடும் தேசிய எழிச்சிகள் குறிப்பிட்ட சூழலினாற் பரிதாபகரமாக உதிர்ந்து காணாமற்போய் வெறும் அற்ப சலுகைக்களுக்குள் போய் முடங்கிவிடுவதொன்றும் எமக்குப் புதுமையாத் தெரியாது!

எண்ணை நிறுவனங்களும்,புஷ் தேர்தல்2:

எம்.ஜீ.ஆர்.பாணி இலவசப் பொருள்களும் புஷ்சும் , தேர்தலில் வெற்றிபெற ஆடிய நாடகத்திற்காக எண்ணை நிறுவனங்கள் கொடுத்த பணம் பல கோடிகளைத்தாண்டும்.இத்தொகை இலவசப்பொருட்களுக்கானது மட்டுமே.தேர்தல் நடவடிக்கைகளுக்கு வேறோரு வகைத் தொகை கைமாற்றப்பட்டது.திவாலாகிப்போன எண்ணைக் கொம்பனியான என்றோன்:2.387 848 டொலர்களும்,எக்ஸ்சோன்:1.374 200 மற்றும் சேவ்றோன்:1.082 827.டொலர்களும் இலவசப் பொருளகள் வழங்கும் திட்டத்திற்காக எண்ணை நிறுவனங்கள் கொடுத்தன.இவற்றை வைத்து புஷ் பெட்டிபெட்டியாய் உணவுகளை மக்களின் கார்களில் தன் கைப்படவே ஏற்றி விட்ட நன்றிக்குரிய அதிபராக மாறினார். அவரது தேர்தல் பிரச்சாரக: குழுவில் நேரடியாக இருபது எண்ணை நிறுவனங்களீன் மனேஜ்சர்கள் பங்குகொண்டு புயலாகப் பிரச்சாரமிட்டு அவரை இரண்டாவது முறையாகவும் வெற்றி வாகை சூட வைத்தனர்.

தொடரும்…

—-

srirangan@T-Online.de

Series Navigation