கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (பாகம்:2)

This entry is part of 46 in the series 20050311_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


‘war es nicht ,Kriege zu fuehren,sondern einen neuen Sozialstaat von Hoester Kultur auf zubauen.Jedes Jahr dieses Krieges beraubt mich dieser Arbeit ‘-19Juli1940 A.Hitler.vom Klassenkampf seite29.

‘யுத்தஞ் செய்வது,அதுவல்ல நோக்கம்,மாறாகவொரு உயர்ந்த பண்பாடுடைய சமூக அக்கறையுள்ள புதிய நாடுருவாக்குவதே.யுத்தம் என்னிடமிருந்து இந்த வேலையைத் திருடிக்கொள்கிறது. ‘-அடோல்ப் கிட்லர்,19.07.1940இல் மிக முக்கிமான பொதுக்கூட்டமோன்றின் உரையில்.

‘Die Geschichte aller bisherigen Gesellschaft ist die Geschichte von Klassenkaempfen ‘-K.Marx ‘

‘இன்றுவரையுள்ள அனைத்துச் சமுதாயங்கள்தம் வரலாறும் வர்க்கப்போரினது வரலாறே! ‘-மார்க்ஸ்.இதேயேதாம் நாம் கொம்யூனிச அறிக்கையில். ‘வரலாறு கண்ட யுத்தங்களெல்லாம் வர்க்கங்களுக்கிடையிலானது. ‘ என்று படிப்பது.

கிட்லர்தம் புதியநாடு|பண்பாடு என்பதெல்லாம் என்ன ?

இனத்தூய்மை,தாமே உலகம்பூராகவும் ஆள்வதும்-பிரித்தானியாவுக்கு மாற்றீடாக மாறுவதுமே கிட்லரின் கனவு.இது அவருக்கு வழங்கப்பட்ட விதம் கனவல்ல,அது ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் தேவையாக விரிந்து கிட்லரூடாய் அரசிலரங்குக்கு வருகிறது.

ஒருமொழியைப் பேசும் மக்கட்டொகுதியே சகல வகைகளிலும் ஆதிக்க சக்தியாக உருவெடுக்கும்போது குவிக்கப் படும் செல்வங்கள் குலையாத பாதுகாப்பை மொழிக்கூடாக் கோடிட முடியுமென்பது உடமை வர்க்கத்தினது கண்டு பிடிப்பே.இங்கேயும் பொருட்குவிப்பும்|வலிமையும்தாம் முன்னிலை வகிக்கிறது.காலம் பூராகவும் இந்த வலிமை தாம் பண்பாடுகளை உருவாக்கியதும்-அழித்ததும்.வலிமையே வாழும்! வலிமையென்றவுடன் உடற்பலத்தைக் கற்பனை பண்ணிவிட்டால் அது சரியாகா.வலிமையானது மக்களது ஆத்மீக|அறிவியல் வளர்ச்சியோடு அவர்தம் ஒருமித்த பொருளியற் பலத்தைக் குறித்து நிற்பதே!

இதில் அவரது (கிட்லர்) கனவைக் குலைக்கும் யுத்தமானது இங்கிலாந்தின் வழியே உருவாகியதாக எழுதுகிற போக்கில் இன்றைய வரலாற்றாளர்கள் உள்ளார்கள்,இந்த வகையில் கிட்லரின் சாதகமான பக்கங்களைச் சொல்வதாகக் கூறும் திருவாளர்.மக்ஸ் குலூவர் Max Kluever தனது ‘மக்கள் கூட்டமைப்புக்கான வர்க்கப்போர் ‘ ‘vom Klassenkampf zur Volksgemeinschaft-ISBN:380611059x ‘ எனும் நூலில் இப்படியெழுதுகிறார்:

‘Er habe grosse und schoene Plaene fuer sein Volk.Er habe den Ehrgeiz,das deutsche Volk reich und das deutsche Land schoen zu machen. Der Lebensstandard des einzelnen solle gehoben werden, und Deutschland solle die schoenste und beste Kulturbekommen.Die Theater sollten fuer alle da sein und nicht nur fuer ‘die oberen Zehntausend wie in England ‘. Fuer die Ausfuehrung dieser ungeheuren Plaene wuerde er die ganze Arbeitskraft gebraucht haben,aber die von ihn nicht gewollte Ruestung, fuer deren Begrenzung er Vorschlaege gemacht habe, nehme ihm die Arbeit weg.und fuer seine Vorschlaege sei er nur ausgelacht worden von denselben Leuten ‘die bereits vor den Kriege die Hetze betrieben haben,naemlich Churchill und Chamberlain. ‘

பெரியதும்,அழகானதுமான திட்டங்கள் அவரது மக்களுக்காக அவர்வசம் இருந்தது. டொச் மக்களை செல்வர்களாக்கவும் ,டொச்சு நாட்டைச் சிறப்பாக்கவும் பெரும் இலட்சியத்தை அவர் கொண்டிருந்தார்.ஒவ்வொருவரினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும்,டொச்சுநாட்டிற்கு மிகமிக அழகானதும் சிறப்பானதுமான பண்பாடும் பெறப்படவும்,இந்த நாடகம் ‘இலண்டனைப்போன்று உயர்வர்க்க -அந்த பத்தாயிரம் பேருக்காக மட்டுமல்லாது ‘அனைவருக்குமானதாகும்.இந்த அசாதாரணத்திட்டத்திற்காக ,அதைச் செயற்படுத்துவதற்காக தனது முழுச்சக்தியையும் பயன் படுத்தினார்.அவரே விரும்பாத ஆயுததளபாடமும் அதனது மட்டுப்படுத்தல்களும்,அவரது செயற்பாட்டை நாசமாக்கியது.அவரது முன்பிரேரணைகள்|ஆலோசனைகள் அந்த மனிதர்களால் நகைப்புக்குள்ளானது,அவர்கள் அவமானப்படுததும்;தொழிலை யுத்தத்திற்கு முன்பே கொண்டிருந்தார்கள்,சரியாகச் சொல்னால் அவர்கள்: சேர்ச்சிலும்Churchill சாம்பெர்லயனும் தாம். ‘-Chamberlain. ‘-vom Klassenkampf seite:29.

யுத்தமென்பது தவிர்க்க முடியாத வொரு சூழலை முலதனத்திற்கு ஏற்படுத்துகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலும்,இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஆங்கில ஏகாதிபத்யத்தின் சந்தை வாய்பு தவிர்க்கமுடியாது மூல வள மட்டுப்படுத்தலை இங்கிலாந்துக்கு வெளியேயுள்ள பெருமுதலாளிகளுக்கு ஏற்படுத்திய போது அது பெரும் நெருக்குவாராத்தை ஜேர்மனிய ஆளும் வர்க்கத்துக்கு கொணர்கிறது .இதன் தாக்கம் இன்றுள்ள மாதிரியேதாம் உற்பத்தித் தேக்கம்,வேலையில்லாத்திண்டாட்டம்(1933 இல் 6.013612 பேர்களுக்கு ஜேர்மனியில் வேலையிருக்கவில்லை) பணவீக்கம் -அறா வட்டி,மூலவளப்பற்றாக்குறை-மிகவிலை க் காரணிகளால் கிட்லர் தேசத்து பொருளாதாரம் பிரித்தானிய ஏகாதிபத்யத்தோடு முரண்பாட்டை வளர்த்தது,இந்த முரண்பாட்டை வென்றெடுக்க ஜேர்மனிய ஆளும் வர்க்கம் கையிலெடுத்த முதல் ஆயுதம் யூத எதிர்ப்பு,இதனூடாக மக்களை அணிதிரட்டுவதும்-காயடித்து உலகத்தைக் கொள்ளையிட படைதிரட்டிடவும் இதனூடாய் அடிமைத் தொழிலையேற்படுத்தி கூலியின்றி உற்பத்தி செய்யவும்(உழைப்பைத்திருடுதல்)பலமான உளவியற்றளம் உருவாக்கப்படுகிறது.

சாம்பர்லையன் பிரத்தானியப் பிரதமராக இருந்த போது போரை ஐரோப்பாவுக்குள் திவிர்க்கும் படியேதாம் சமாதனத்தூது விட்டார்,1939 இல் பதவிதுறந்தபோது அவரது பிழைகளே பதவிக்கு வேட்டுவைத்தாதக ஒரு கணிப்புண்டு.பின்பு அவர் படத்துக்குப் பக்கத்தில்1869-1940 என்று போடும் நிலை வந்ததது. ஆனால் ‘சண்டைகளும் சமாதானக்கூச்சல்களும் ‘மூலதனக் காப்புக்கும்|நகர்வுக்குமான சீட்டாட்டமாக பண்டுதொட்டு நடக்கின்ற சமாச்சாரமாக இருக்கிறது.இது யுத்தத்தை தெரிவுசெய்த படியே சமாதானஞ் செய்ய முற்படுதல் உலகவள|சந்தைப் பங்கீட்டிற்கானவொரு முயற்சிதாம்!இதில் காலைவாரப்படும் மக்களினம் ஏதோவொருவடிவில் வரலாறு .தொட்டு அழிந்து போகிறார்கள்.சிந்துநதிப் பள்ளத்தாக்கு நாகரங்கள்|கலாச்சாரம் வெறும் நாடோடி மக்களிடம் தோற்றுப் போக முடியாது.ஏனெில் ‘Die Staedte waren stark befestigt und von 4-10m bereiten Strassen durchzogen.Die in einfachen Bauformen erstellten Haeuser waren in einer fortgeschrittenen Technik eingerichtet. ‘ என்றிருந்த மக்கள் கூட்டம் எப்படி நாடோடி நிலை மக்களால் அழிக்கப் படும் ?வடிவாகக் கவனியுங்கள், ‘நகரங்களெல்லாம் பலமான தடுப்புக் காவலரண் கள் கொண்டமைக்கப்பட்ட ‘ சிந்து நதிக் கலாச்சாரமக்கள் ஆரிய நாடோடி மக்களுடன் போரிட முடியாத பலவீனமான மக்களாக இருந்திருப்பார்களா ? இன்றைய நிலையில் இதை நம்பமுடியாது. இந்தியாவை நோக்கிப் படையெடுத்த மக்கள் கூட்டம் ஒழுங்கமைந்த பொருளியற் கலாச்சார வாழ்வோடு- தமது ஆதிக்கத்தை விஸ்த்தாிக்கும் ஒரு வரலாற்று நிகழ்வே நம் முன் விரிகிறது,

மீளவும் நாம் கிட்லரிடம் வருவோம் ‘Das deutsche Volk wird nach diesem Krieg einem wesentlich groesseren Raum beherrschen als vordem.Das ist nicht nur ein politisches und machtpolitische Problem,sondern weitgehend ein wirtschaftliches und soziales.Wirtschaftlich liegt die Problematik darin,dass es jedem einzelnen Deutschen gelingen muss,die Produktivitaet seiner Arbeit in dem Grad zu steigen,… Hand in Hand mit Arbeitseinsatz und Leistungssteigerung geht die Pflege der Leistungskraft. ‘-Dokument Nr.15:Denkschrift der Deutschen Arbeitsfront ueber die Sozialen Aufgaben nach dem Kriege.Versuch eines systematischen Ueberblicks ueber ein sozialpolitisches Program. ‘

இந்த யுத்தத்திற்குப் பின் டொச்சுமக்கள் முன்பை விட பாரிய நிலப்பகுதியை ஆள்வார்கள்.இதுவொரு அரசியல் அன்றிஅரசியல் வல்லமை பற்றிய பிரச்சனையல்ல,மாறாக விஸ்தீராமானவொரு பொருளாதார,சமூகப்பிரச்சனை.பொருளாதார ரீதியாகவுள்ள பிரச்சனை என்னவென்றால் ஒவ்வொரு டொச்சு மக்களும் கட்டாயமாக செய்யவேண்டியது தனது வேலையில் மிகுதியான உற்பத்தியைப் பெருக்குவதே.கைக்கு கை வேலையில் ஈடுபடுவதும் கூடவே மிகை உற்பத்திப் பெருக்கம் உற்பத்திப் பலத்தைப் பராமரிக்கும். ‘ -ஆவணம்:இல.15.

கிட்லர், தனது மக்களுக்காகத்தாம் நாடு பிடிக்க வெளிக்கிட்டதாகவும் ,அது கைகூடாதுபோனதாகக் கற்பனையிலுள்ள இன்றைய ஜேர்மனியர்களுக்கு இந்த அவரது திட்டம் மக்கள் நலனின் பொருட்டாகவே கற்பிக்கப் படுகிறது.அதீத பொருட்குவிப்பினது ஆசை|தேவையாக -அவசியமாக ஆளும் வர்க்கத்தால் உணரப்படுகிறது.எந்த விதத்திலும் மிகையுற்பத்தியை அதிகரிப்பதென்பது பெரு வங்கிகளுக்குக் கட்டப்படும் அறா வட்டியை ஈடுசெய்வதற்கான பொறிமுறையைக் கொண்டுள்ளது!

இந்த நிதி மூலதன முறைமையானது தனது சுற்றோட்டத்தில் மீளவும் தேக்கமுற்று பண வீக்கமாக மாறுகிறது.ஆனால் கிட்லர் தம் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவுக்கு மாற்றாகச் செயற்பட்ட மாற்றுப்பொருளாதாரவாதிகள்(இவர்கள் சோஷலிசப் பொருளியலாளரன்று ,மாறாகச் சுதந்திமான மனித முகத்தோடு கூடிய பொருளாதாரம் குறிதுச் சிந்திப்பவர்கள்.இதுவும் ஒரு புருடாதாம்!) சொல்வதைப் பாருங்கள்:

‘ After the Nazi Party ‘s seizure of power by the in 1933 many Free Economy supporters suppressed their misgivings about the true character of the Nazi ideology and succumbed to the illusory hope, that Hitler might in fact act on the earlier rhetoric of Gottfried Feder concerning ‘the smashing of interest-slavery ‘. They tried to exert influence A Free Economy party on leading functionaries of the Nazi Party hierarchy in the hope of bringing about a change of course on economic matters. Despite rather dubious tactical efforts to conform to the requirements of the new order, in the spring of 1934 the various Free Economy organisations and publications which had not already voluntarily disbanded were finally outlawed. ‘ -Werner Onken | Published in: American Journal of Economics and Sociology Vol. 59,

தவிர்க்க முடியாத இந்த முதலாளித்துவ விதி தன்னைத்தான் காத்துக்கொள்ள இறுதியில் போரிட்டு தனது தேவையைப் பூர்த்திசெய்யும்,கூடவே அடிமைச் சமூகத்தை உருவாக்கியே தீரும்!இதை விட வேறு மார்க்கம் ஏகாதிபத்யத்திற்குக் கிடைக்கப் போவதில்லை.

அமெரிக்காவும், பயங்கரவாதமும்:

இன்றைய நாளில் அமெரிக்கா குறித்த எந்த நல்ல அபிப்பிராயம் எவராலும் குறித்துரைக்கமுடியாமலுள்ளதே ,இது ஏன் ?அமெரிக்கா உலக அளவில் ஜனநாயக நாடுடெனில் ஏனிந்த நிலை ?அமெரிக்கா திறந்த சுதந்திரச் சமூக மெனில் ஏனிவ்வளவு அணுக்குண்டுகள், போர்த்தளபாடங்கள் ?உலகெலாம் இராணுவக் காவலரண்களையும்|இராட்சதத்தளங்களையும் எதன் பொருட்டு நிறுவியுள்ளார்கள் ?வரலாறு முதற்கொண்டு மானுடர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலை எதனால் ஏற்பட்டது ? கேள்விகள் இன்னும் விரியும் இத்துடன் நிறுத்துவோம் .கேள்விகள் மட்டும் கேட்பதல்ல இந்தக் கட்டுரையினது நோக்கம். பயங்கரவாதத்தின் மூலப் பிறப்பிடமே அதை வேறெங்கோ தேடுவதுபோல் பாசாங்கு பண்ணி தனது பயங்கர வாதத்தைக் கவர்ச்சிகரமாக ‘பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் ‘என்று காதில பூச்சுத்துகிறது.அழிவுகளேயின்றி ஒரு அமைதியான வாழ்வை உலக மக்கள் சுசிக்க முடியுமா ? ஆம்மென்கிறது முதலாளியம்!ஆனால் வரலாறு பூராகவும் இதே முதலாளியம் மானுட|சூழலழிப்பைக் கொண்டுதாம் தன் வருவாயைக் குவிக்கின்றது. ‘கடந்த வரலாறும், கண்முன் விரியும் வரலாறும் ‘ இப்படித்தாம் நகருகிறது! அமெரிக்காதாம் முதலாளிகளுக்குத் தலைமை தாங்குகிறகாரியத்திலிருப்பதால் அமெரிக்கா பற்றி ப் புரியாமல் நாம் வாழ்ந்தால் நம் தலைமீது விழும் குண்டை யார் போடுவதென்தெரியாமற் மரித்திடுவோம்.அமெரிக்க|ஐரோப்பிய பெருமுதலாளிகளை எதிர்த்து போராட நம்மால் முடியாதுபோகினும் நாம் யாரால் கொல்லப் படுகிறோமென்றாவது தெரிந்து கொள்வோமே!

ஈராக்கின் வைத்தியர் திரு.ஹசான் கூறுகிறார்: ‘முன்பெல்லாம்(1991 முன்) கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை பற்றிக் கேட்கும் போது அது ஆணா அல்லது பெண்ணா என்றே விசாரிப்பார்கள்.இப்போ கேட்கப் படும் கேள்வியோ அது ஆரோக்கியமானதா இல்லையா என்பதே! ‘காரணம்: இந்த அமெரிக்காவின் யுத்தம் இதுவரை மூன்று இலட்சம் தொன் நிறையுள்ள ரு-838 யு-838 இரகக்குண்டுகளை நம்மீது கொட்டியுள்ளது,கொட்டுகிறது.இது யுரேனிய-ரேடியக் கதிரியக்கம் வாய்ந்த குண்டுகள், கிட்டத்தட்ட 45 வீதமான ,ராக்கியகர்களை இந்தக் கதிரியக்கம் பாதித்துள்ளது.அவர்கள் மரணத்தை ஏங்கி வரவேற்காவிட்டாலும் மரணம் மிக விரைவாக அவர்களை வந்தடைந்து விடும்! ‘இதை ஆமோதிக்கிறார் திரு.யாவாட் அலி எனும் இன்னொரு மருத்துவ நிபுணர்.கூடவே கூறுகிறார் இப்படி: ‘ நானும் பாஷ்ரா மாவட்த்தில் இருந்து வருகிறேன் என்னையும் இந்தக் கதிரியக்கம் பாதித்துள்ளது.எனினும் இந்த அநியாயத்தை அறியாமல் அப்பாவி மக்கள் சாகவில்லை.அவர்கள் அறிந்தேயுள்ளார்கள்,எம்மிடம் நூறு வீத ஆதாரங்களுண்டு இந்த அணுக் குண்டுகள் பற்றி.ஆனால் உலக்தின் கண்களுக்கு எப்படியெட்டும் ? ‘- றுநளவ னுநரவளஉாந சுரனெகரமெ 5 எனும் வனொலியின் இன்றைய (06.03.2005) சர்வதேச விவரணம். அமெரிக்கா இது வரை 124கோடி மக்களை உலகெல்லாம் கொன்று தள்ளியுள்ளது.கடந்த ஐந்து- நூறாண்டுகளில் மட்டும் இத்தொகை யென்றால் இனிவரும் காலங்களில் பூமியில் மானுடம் வாழ்வதென்பதைத் தீர்மானிப்பது அமெரிக்க அணுக்குண்டாகத்தாமிருக்கும்.புதியரக அணு|உயிரியல் ஆயுதங்கள் தற்போது பரிசீலிக்கப் படுகிறது,மிக விரைவில் இவை யுத்தங்களுக்கு அமெரிக்காவால் பயன்படுத்தப்படும்.

; ‘Die USA wollen sich weitere Forschungen erlauben.In den naechsten zwei Jahren will Praesident Bush 11 Milliarden Dollar in die Biowaffenforschung stecken lassen.Fuer das anstehende Haushaltsjahr soll die Summe der Gelder um das Vierfache steigen. ‘-16 Luegen zum Krieg gegen den Terror seite:2 ‘

‘தொடர்ந்து ஆயுதப் பரிசோதனையை அனுமதித்தல் அமெரிக்காவுக்கு விருப்பமாகவுள்ளது.அடுத்த இரண்டாண்டுகளில் உயிரியல் ஆயுதப் பரிசோதனைக்காக 1100 கோடி அமெரிக்க டொலர்களை அதற்குள் திணிப்பதற்கு அமெரிக்க அதிபர் புஸ் ஆர்வமாகயிருக்கிறார்.வரிசையாக வரும் அடுத்த அரையாண்டு வரவு செலவுத் திட்டம் இந்தமூலதனத் தொகை யால் நான்கு மடங்கு அதிகரிக்கும் ’16 பொய்கள்,பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்திற்கு பக்கம்:2

இந்தப் பரிசோதனைக்கதிராக் குரல் கொடுகின்றவர்கள் என்ன செய்கிறார்களெனப் பார்ப்போம்:

‘Amerikanische Mediziner fற்rchten um die Gesundheit der US-Bற்rger, wenn Forschungsgelder weiterhin so verteilt werden wie in den vergangenen Jahren. die Erreger von Volksseuchen wie Tuberkulose und Syphilis aus den Augen zu verlieren. ‘-Spiegel 4 maerz 2005.

பரிசோதனைக் கென்று பணத்தை இப்படிப்க் கடந்த ஆண்டுகளைப்போல் பங்கீடுசெய்தால் அமெரிக்க மக்கள் கொள்ளை நோய்களினால் பாதிக்கப்படுவார்களென அமெரிக்க மருத்துவர்கள் அச்சப்படுகிறார்கள்,உதாரணமாக:காச நோய் மற்றும் கொடிய மேக நோய் கண்களிலிருந்து படர்ந்து அதனைப் பறிக்கம். ‘-ஸ்பீகல் பத்திரிகை 4.03.005ஆக சொந்த நாட்டுமக்களே தம் உயிருக்காகத் தங்கள் நாட்டோடு போராடவேண்டிய நியைில் உலக மக்களின் நிலை எப்படியிருக்கும் ?

இப்போ யாரிங்கே பயங்கரவாதிகள் ?

ஈரான்,ஈராக், வடகொரியா-சூடான்,பாலஸ்தீனம் அல்லது பின்லாடன் ? ?

அமெரிக்கா சொல்வது இவர்களை, நாம் சொல்வது அமெரிக்காவை!

தொடரும்…

—-

srirangan@t-online.de

Series Navigation