கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

செய்தி


இந்தியாவின் அதிகார வர்க்கம் கடல் கொந்தளிப்புப் பற்றிய எச்சரிக்கை பற்றிய அலட்சியம் காட்டியதால், பெரும் மனித இழப்புகள் நிகழ்ந்தன. கார் நிகோபார் தீவுகளில் ஞாயிறு காலையில் பெரும் அலைகள் புகுந்த செய்தி, விமானப் படைத் தலைமைக்குத் தெரியும்.அந்தமான் நிகோபாரில் பெரும் பூகம்பம் நிகழ்ந்ததும் விமானப் படைத் தலைமைக்குத் தெரியும். தகவல் தொடர்பு சாதனங்கள் செயல் இழந்தன. இதை விமானப் படைத் தலைவர் எஸ் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

‘கார் நிகோபார் தீவுகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது தான் கிடைத்த கடைசி செய்தி. ‘ என்றார் அவர்.

8:15 க்கு ராணுவ அமைச்சகத்திற்கு செய்தி அனுப்புமாறு தன் உதவியாளரைக் கேட்டுக் கொண்டார்.

இந்திய வானியல் துறையும் 8:54க்கு ஒரு அச்சு நகல் செய்தியை அனுப்பியது. ஆனால் இப்போதைய அறிவியல் துறை அமைச்சரான கபில் சிபாலுக்கு அனுப்பாமல், பழைய மந்திரி முரளி மனோகர் ஜோஷிக்கு இந்தத்தகவல் அனுப்பப் பட்டது.

இந்தத் தவறை அறியாமல், 9:41க்கு மீண்டும் உள்துறை அமைச்சகத்திற்கு அச்சுநகல் அனுப்பப்பட்டது.

10:30 க்கு அமைச்சரவைச் செயலகத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. ஆனால் இதற்குள் அழிவு அலைகள் ஆயிரக் கணக்கான மக்களைக் காவு கொண்டுவிட்டது.

மதியம் 1 மணிக்குத் தான் சிக்கல் நிர்வாகக் குழு கூடியது.

சுமத்ராவில் காலை 6:29க்கு ஏற்பட்ட கடலடி பூகம்பம் பேரலைகளை இந்தியப் பெருங்கடலில் ஏற்படுத்தியிருந்தது.

இந்த பூகம்பம் பற்றிய செய்தி இந்திய விஞ்ஞானிகளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அது இந்தியாவில் நிகழவில்லை என அவர்கள் அலட்சியமாய் இருந்தனர். துறைத் தலைவர் ராமமூர்த்தி ‘ அதுதான் முதல் தவறு ‘ என்றார்.

27 மில்லியன் டாலர் செலவில் சுனாமி கண்காணிப்பு மையம் இனிமேல் அமைக்கவிருப்பதாகலமைச்சர் கபில் சிபால் தெரிவித்தார்.

உலக நிபுணர், இந்தியாவிற்கு விடப்பட்ட எச்சரிக்கை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய் ஆயிற்று என்று தெரிவித்தார். பேரலை எச்சரிக்கை மையத்தில் இணைய செலவினங்கள் தடையாய்இருந்தது.

**

Series Navigation

செய்தி

செய்தி