மனநிம்மதிக்கான மாற்றுத்தளம்

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

சரவணன்1978


குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களுக்கான இடம் சுருங்கிக்கொண்டே வரும் இச் சூழலில், பெண்களுக்காக குரல்கொடுக்க வேண்டிய பெண்கள் அமைப்புகள் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும் பிரச்சனைகளில் மட்டும் அக்கறைகாட்டி வருகின்றன. சராசரிப் பெண்ணின் இருத்தலுக்கான மற்றும் சமூகத்தில் தனித்தியங்குவதற்கான தடைகளைக் களைவது பற்றி அவை சிந்திப்பதே இல்லை. இந் நிலையில் அரசும் பெண்களைக் கைவிட்டுவிட்டதா என்றால் ‘ ‘இல்லை ‘ ‘ என்பதுதான் அதற்குப்பதில்.

பெண்களுக்குப் பெற்றோர்கள் தரத்தவறிய மன நிறைவையும், உற்றார் உறவினர் பறித்துக்கொண்ட மன மகிழ்வையும் குறைவின்றிக் கொடுப்பதும், மீட்டுத்தருவதுமான கடினப்பணியினைச் சில மனிதநேயமிக்க சமூக ர்வலர்கள் மூலமாக அரசு செய்துவருகின்றது.

தத்தமது வீட்டுச் சூழல் காரணமாக மனஅழுத்தத்திற்குள்ளாகி வீட்டை விட்டு வெளியேறி நடப்புச் சமூகத்தில் நிலவும் பயங்கரச் சூழலை எதிர்கொள்ள முடியாமல் பரிதவிக்கும் பெண்களை அரவணைத்து, அவர்களுக்கு மன நிறைவைத் தரத்தக்க ஒரு கனவு இல்லத்தில் தங்கவைத்து, அவர்களது பிரச்சனையைப் பலகோணத்தில் ராய்ந்து அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து நல்லதொரு தீர்வினைக்கண்டு மீண்டும் அவர்களை அவர்களது வீட்டிலேயே வாழச்செய்யும் ஒரு மகத்தான பணியினை அரசு செய்துவருகின்றது.

இத்தகையப் பெண்களுக்குத் தகுந்த ஒரு மாற்றுத்தரப்பினை அரசு நல்கி வருகின்றது என்பதனைக் கூடப் பெரும்பாலான பெண்களுக்கும், பெண்கள் அமைப்புகளுக்கும், பெண்ணியவாதிகளுக்கும் தெரிவதில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.

இந்தியச் சமூகநலக் கழகம் ASHI [Association For Social Health In India] புதுதில்லியில் 1928 ம் ண்டு முதல் பெண்களுக்காகப் பல்வேறு சேவைகளைச் செய்துவருகின்றது. இதன் ஒரு கிளை மதுரையில் 1979 ம் ண்டு முதல் செயல்படத் தொடங்கியது. பல்வேறு காரணங்களால் தத்தமது வீட்டைப் புறக்கணித்து வெளியே வரும் பெண்களுக்கு இலவசமாக குறுகிய காலத்திற்கு உணவு-உடை-உறைவிட வசதியையும் 2000 ம் ண்டுமுதல்நல்கிவருகிறது. பெண்களுக்கு இலவச லோசனைகள் வழங்குவதற்காக 2004 ஜூலை முதல் தொலைபேசி [0452 – 2587848] முலமாக 24 மணிநேர சேவையைச் செய்துவருகின்றது. இதுவரை மொத்தம் 1992 நபர்களிடமிருந்து மனுக்களைப்பெற்று அவரவரது பிரச்சனைகளுக்குத் தக்கவாறு சுமூகத்தீர்வினைக் கண்டுள்ளது. இதுதவிர சட்ட உதவி, காவல்துறை உதவி, சமூகநலத்துறை உதவி, மறுவாழ்வுத்துறை உதவி, தொழில் மைய உதவி போன்றவைகளை இலவசமாகச் செய்துவருகின்றது.

மதுரை மையத்தில் இதுவரை வரதட்சனை கொடுமை தொடர்பாக 400 நபர்களும், கணவன் மனைவியரிடையே கருத்துவேறுபாடு தொடர்பாக 364 நபர்களும், தகாத பாலியல் உறவு தொடர்பாக 213 நபர்களும், திருமணத்திற்கு முந்தைய பிரச்சனைகள் தொடர்பாக 152 நபர்களும், பொருளாதாரப் பிரச்சனை தொடர்பாக 94 நபர்களும், பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்குள்ளா131 நபர்களும், மாமியார்-நாத்தனார் கொடுமைகள் தொடர்பாக 400 நபர்களும் புகார்கொடுத்து தீர்வுகண்டுள்ளனர்.

குறுகிய காலத்திற்கு உணவு-உடை-உறைவிட வசதியினை இதுவரை 239 பெண்களுக்கு வழங்கியுள்ளது. கல்வித்தகுதியுடைய பெண்களுக்குத் தகுந்த பணிவாய்ப்புகளையும் பெற்றுத்தந்துள்ளது. இந்த மையத்தின் மூலமாக

பல்வேறு விதமான கைத்தொழில்களை அவர்களுக்குக் கற்றுத்தருகிறார்கள். அவர்கள் தயாரித்த பொருள்களை விற்பனை செய்து அதன்மூலமாக வரும் வருவாயை அவர்களிடமே தருகிறார்கள். அவர்களாகவே தனித்து வாழ்வதற்குரிய அனைத்து வகையான பாதுகாப்புகளையும் வழங்குகிறார்கள். இங்கு தங்கியிருந்து தங்களது பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுச்சென்ற 212 பெண்களுடனும் இந்த பெண்கள் உதவிக்கரம் மையம் தொடர்ந்து தனது தொடர்பினை வைத்துள்ளது. இந்த மையத்தில் உறுப்பினர்களாக வெவ்வேறு துறையைச் சார்ந்த 12 நபர்களும், சமூகசேவகர்களாக 7 நபர்களும் உள்ளனர்.

‘ ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவிபோல ‘ ‘என்ற பாரதியாரின் கவிதைவரிகள் தேசம் மற்றும் தனிமனித விடுதலையையும் வலியுறுத்துவதோடு தற்காலப் பெண்களின் சுயமரியாதைக்கும் தரவாக இருக்கின்றன. பாரதியாரின் சிட்டுக்குருவிகளாகிய இப்பெண்களுக்கு நல்லதொரு கூடாக இக் காப்பகம் திகழ்கிறது.

இந்திய சமூக நன்னெறிக் கழகம்,பெண்கள் உதவிக் கரம்,739,கோமதிபுரம்,சிவகங்கை மெயின் ரோடு,மதுரை – 625 020,தமிழ்நாடு,இந்தியா, +91-0452-2587848.

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்