பெண்சிசுக்கொலைகளும் பிரிட்டிஷ் அரசாங்கமும்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

மோகன் டிக்கு


அரசியலில் குற்றவாளிகள் பற்றிய விவாதங்கள் நடைபெறும் இந்நாளில் ,சமூகத்தில் பரவலாய் நடக்கும் இன்னொரு குற்றம் பற்றி யாரும் பேசுவதில்லை. பெண்மகவுக் கொலைகள் எப்படி சகித்துக் கொள்ளப்படுகின்றன என்பதுதான் அது. சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (சீக்கிய குருத்வார்களின் ஒருங்கிணைந்த அமைப்பு) தன் புது தலைவியைத் தேர்ந்தெடுத்தபோது, அவருடைய எதிரிகள் சிலர் அவரை ‘குரி மார் ‘ (மகள்களைக் கொலை செய்தவர்) என்று அழைத்தனர். சீக்கியர்களின் சில பிரிவினரிடையே இந்தச் சொற்றொடர் வெகு சாதாரணமாக பயன்படுத்தப் படுகிறது.

2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மீண்டும் பெண்மகவுக் கொலை எப்படி பரந்த அளவில் செய்யப் படுகிறது என்று காட்டியது. மருத்துவத் தொழில் நுட்பம் இதன் காரணம் என்பவர்கள் , இந்த நடைமுறைப் பழக்கத்தில் உள்ள குற்றத்தை மறைத்து விடுகிறார்கள். மத்தியகாலத்திலிருந்து தொடரும் இந்த வழக்கம் பெண்களுக்கு எதிராக உள்ள மனநிலையின் வெளிப்பாடே. பழங்காலத்திலிருந்தே பெண்மகவுக் கொலைக்காக பயன்படுத்திய உத்திகள் அருவருக்கத்தக்கனவாக உள்ளன. பிறந்த குழந்தையைப் பட்டினி போடுதல், அவள் வாயை அடைத்தல், மூழ்கடித்தல் என்று பல முறைகள் இருந்துள்ளன.

பிரிட்டிஷ் நிர்வாகக் காலகட்டத்தில் இந்தப் பிரசினையை எதிர்கொண்ட அளவு கூட , சுதந்திரத்திற்குப் பின்பு நாம் எதிர்கொள்ளவில்லை. அவத் பகுதியில் 1789-வாக்கில் ராஜ்குமார் ராஜபுத் என்ற பிரிவினரிடையே முதன் முதலில் இந்தப் பழக்கம் காணப்பட்டது. இந்தப் பிரசினை பற்றி ஜொனாதன் டன்கன் என்பவர் அறிக்கை அனுப்பினார். இந்தப் பழக்கத்தின் உண்மை நிலவரம் பிரிட்டிஷாருக்குப் பிடிபடவே சற்று அவகாசம் தேவைப்பட்டது. பிறகு சில வருடங்களில் வட இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து இது பற்றிய அறிக்கைகள் வந்தவண்ணமாய் இருக்க, நிர்வாகிகள் இது பற்றி சிந்திக்கத் தொடங்கினர். 1805-ல் கர்னல் அலெக்ஸாண்ட வாக்கர் , குஜராத் கத்தியவார் பகுதிக்கு, ஒரு உள்ளூர் பிரசினையைத் தீர்க்கச் சென்ற போது பெண்கள் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விடக் குறைவாய் இருப்பதை, ஜரேஜா ராஜ்புத் என்ற பிரிவினரிடம் கண்டார். ஜரேஜா வகுப்பினரிடையே பெண்சிசுக்கொலை பரவலாய் இருந்ததை விசாரணைகள் தெளிவுபடுத்தின. முஸ்லிம் படையெடுப்பாளர்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை எடுத்ததாய் அவர்கள் சொன்னார்கள். பெண்களை ஒளித்துவைக்கச் செய்ய முயற்சிகள் தோல்வியுற்றன என்றும் தெரிவித்தார்கள். 1841-ல் ஒருஇ சர்வேயின் படி 5760 ஆண்களும் 1370 பெண்களும் இருந்ததைக் கத்தியவாரில் கண்டார்கள். அதாவது 420 ஆண்களுக்கு 100 பெண்கள். அருகிலிருந்த கட்ச் பகுதியில் 100 பெண்களுக்கு 784 ஆண்கள் இருந்தார்கள். மத்திய பிரதேசத்தில் சில செளகான் இனத்தினரிடயே, பெண்சிசுக்களே இல்லாத நிலையும் கண்டார்கள்.

பெண் மகவை தம்முடைய கெளரவத்திற்கு இழுக்கு அளிக்க கூடியவளாகப் பார்த்த ஒரு பார்வையும் இருந்தது. வசதியாய் இருந்த பேடி இஇனத்தினரிடையே, தாழ்ந்த இனத்தவருடன் பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் நிலை ஏற்படும்போது கொலையைக் கையாண்டார்கள். பேடி இனத்தவரைப்பார்த்து சோதி இனத்தவரும் இது போல் செய்யத் தொடங்கினர் என்பது அதிர வைக்கும் செய்தி. நகர்மயமாக்கல், அன்னியமாதல், மற்றும் வரதட்சணைப் பழக்கம் இந்தச் சிசுக் கொலைகளுக்கு 20-ம் நூற்றாண்டில் காரணமாய் இருக்கிறது. மைசூர் , மதராஸ் போன்ற பகுதிகளில் முன்பு இல்லாத இந்தப் பழக்கம், மெதுவாகத் தொடங்கியது.

பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் மாவட்ட கலெக்டர்கள் குதிரையில் பயணம் செய்து வந்தனர். சுற்றுமுற்றும் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் அம்பாஸடர் காரில் வெளியே பார்க்க முடியாத கண்ணாடிக்குப் பின்னாலிருந்து கலெக்டர்கள் பயணம் செய்கின்றனர். சுற்றுப் புறத்தில் நடப்பதைக் காண்பதில்லை. இந்தப் பிரசினையில் பிரிட்டிஷ் அரசின் நிர்வாக வெற்றிக்கு வடமேற்குப் பிரதேசம் ஒரு நல்ல உதாரணம். 1874-ல் 231 ஆண்கள், 100 பெண்கள் இருந்தனர். 1870-ல் இயற்றப்பட்ட பெண்சிசுக்கொஅலைத் தடுட்ப்புத் திட்டத்தில், கிராம அளவில் கூட்டு தண்டனை வழங்க வழி செய்யப் பட்டது. 1890-ல் விகிதாசாரம் சரிப்படத் தொடங்கியது. ஆனால் காலப்போக்கில் இது மாறிப்போய், பாகிஸ்தானில் மிக மோசமான பெண்சிசுக்கொலை நடக்கும் பகுதியாக பழைய வழக்கங்களுக்கே திரும்பிவிட்டது.

பிரிட்டிஷ் அனுபவம் கற்றுத் தருவது என்னவென்றால், உள்ளூரளவில் மாற்றங்களையும் கண்காணிப்பையும் ஏற்படுத்துவது முக்கியம் என்பதாகும். சட்டம் தன்னளவில் செயல்படும் என்பது உண்மையல்ல். காலங்காலமாக ஊறிப்போன பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கு சட்டத்தினால் மட்டும் ஆகாது.

—-

Series Navigation

மோகன் டிக்கு

மோகன் டிக்கு