மாறிவரும் ராஷ்டிரபதி பவன்

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

கே கோவிந்தராஜன்


பொதுவாக கடந்த பல ஜனாதிபதிகள், வெறும் பொம்மைகளாக, அதுவும் நீண்ட அங்கியுடன் ஊதிப்போன பொம்மைகளாகத் தான் பார்த்திருக்கிறோம்.

கொட்டாவி விடக் கூட வாய்திறக்காத ஜடங்களும் அதில் உண்டு.

மெடல் குத்துதல், அந்த 300 அறை கொண்ட மாளிகையில் அரசர் போல் வாழ்ந்த அந்த ஜந்துக்களிடையே, அப்துல் கலாம் வித்தியாசப்படுகிறார்.

தனது வரைமுறைகளுக்குட்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு கிடந்தாலும் வெற்றிகரமாக நல்ல விதமாகப் பணியாற்றுகிறார்.

நாளைய சாதனை விருட்சங்களுக்கான கனவு விதைகளை விதைக்கிறார்.

அதுவும், ஜனாதிபதி மாளிகையில், விஞ்ஞானத்திற்கென்று ஆலோசகர்களுடன் ஒரு பிரிவும் வைத்திருக்கிறார்.

கடந்த வாரம், பஞ்சாப் தொழில் நுட்ப பல்கலை கழகத்தின் டிஜிடல் ஆன் லைன் பல்கலை கழகத்தை திறந்து வைத்தார்.

அதுவும் எப்படி.. ?

தனது ராஷ்டிரபதி பவனிலிருந்து, சுறுசுறுப்பாக கம்ப்யூட்டரை தானே இயக்கி, வீடியோ கான்பரஸ் மூலம்.

இந்திய ஜனாதிபதி இந்தியாவின் ‘EGovernance ‘ பங்களிப்புத் தேவைப் பற்றி அருமையாக ஒரு உரையாற்றினார்.

அதன் முழுவடிவம், இந்திய தேசத்தின் மேல் அக்கறையுள்ளவர்கள் படிக்க வேண்டியது.

அதை,

http://www.presidentofindia.nic.in/scripts/eventslatest1.jsp ?id=653

என்ற தொடர்பில் காணலாம், முழுதாக.

இந்தச் சாதனைக்கு காரணம் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர். அண்ணா பல்கலை கழகத்தின் முன்னாள் மாணவர் திரு.சுரேஷ் இளங்கோவன். (1979 – 1984 Mech ).

இந்தவகைப் பாடத்திட்டம், கிராமங்களையும் சென்று அடைய வேண்டும் என்று அப்துல் கலாம் அந்த நிகழ்ச்சியில் கூறினார்.

அதற்காக கிராமப் பஞ்சாயத்து தோறும், சாட்டிலைட் கிராம பஞ்சாயத்து அறிவு மையங்கள் வரவேண்டும் என்ற கனவு விதையும் அவர் விதைத்தார்.

அதன் விவரம் உள்ள அவர் பேச்சின் பகுதி,

—-

Establishing Village Panchayat Knowledge Centers

India has approximately 2.3 lakhs Village Panchayats. I visualize establishment of village knowledge centers in these Panchayats to empower the villagers with the knowledge and to act as a nodal center for knowledge connectivity for the villagers.

This Center will be equipped with 1000 books of different subjects. In addition it will have a computer terminal, telephone connections, Modem, Printer, Photocopier, camera, Scanner, Internet connection and other support facilities for functioning as a digital library. The knowledge center will provide hard copies of relevant pages to the members of the village, if required. Also the center can have facility for reading the text with an audio output so that people who are unable to read, can benefit from the library. The knowledge center can also be used for collection, digital storage and dissemination of village specific information pertaining to agriculture, craftsmanship, arts, artisan techniques, informal judicial system practiced in village based on values, local remedies for simple ailments, village stories with moral values, village history, village folk songs, village cultural traditions, traditional medicinal practices followed in villages and village marketing information and methods. Such information presently is being transmitted through word of mouth and with changing generation, it is being lost.

It is essential to preserve and carry forward this knowledge base for the benefit of future generations. This village panchayat knowledge centers will become a helpdesk and confidence builder for the villagers. In course of time, there could be inter panchayat information transfer leading to assured information flow to the needy. This Village Panchayat knowledge center will also act as an e-governance nodal point for the villagers.

—-

மேலும் , திரு.சுரேஷ் இளங்கோவன், இதற்கான தொழில் நுட்ப பங்களிப்பைத் தன்னால் மிகக் குறைந்த செலவில் தரமுடியும் என்று உறுதி கூறினார்.

தாய் மண்ணில் மாற்றத்தை கொண்டுவரத் துடிக்கும் சேவை மனம் கொண்டோர்கள், தங்கள் கருத்தை அல்லது அவர்கள் ஏதாவது கிராமத்தை இத்தகைய ‘கிராம பஞ்சாயத்து அறிவு மையங்கள் ‘ அமையவதற்காகத் தத்து எடுக்க விரும்பினால் அதற்கான விபரத்தை

suresh@mindlogicx.com அல்லது govind@mindlogicx.com முகவரிக்கு மின் அஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.

மேலும், மக்களின் அறியாமையும், கோழைத்தனமும் அகன்றால் தான் அவர்களுக்கு ஒரு நல்ல தலைமையும் வாழ்க்கையும் கிடைக்கும். அதற்கு கிராமமக்களும் நல்ல கல்வி கற்பதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

அதை ‘ ‘கிராம பஞ்சாயத்து அறிவு மையங்கள் ‘ நிச்சயம் நனவாக்கும்.

—- kgovindarajan@gmail.com —-

Series Navigation

கே கோவிந்தராஜன்

கே கோவிந்தராஜன்