சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலன். – பதிவுகள்

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

பாவண்ணன்


07.08.04 அன்று பெங்களூர் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமரர் சரஸ்வதி ராம்னாத் அறக்கட்டளையும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலனுக்குக் கொடுக்கப்பட்டது. கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் உழைத்து வருபவர் குறிஞ்சிவேலன். மலையாளத்துக்கும் தமிழுக்கும் இடையே நல்ல இலக்கியப்பாலமாக விளங்குபவர். ஏற்புரையின்போது குறிஞ்சிவேலன் மொழிபெயர்ப்பினால் உருவாகக்கூடிய அகத்துாண்டலைப்பற்றிப் பேசினார்.

தீபத்தில் தொடர்ச்சியாக மொழிபெயர்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தில்லியிலிருந்து நேஷனல் புக் டிரஸ்டு சார்பாக எழுத்தாளர் ஆதவன் ‘விஷக்கன்னி ‘ என்னும் மலையாள நாவலை மொழிபெயர்த்துத்தர இயலுமா என்று கடிதம் எழுதியதாகவும் அக்கடித உறவின் தொடர்ச்சியே விஷக்கன்னியின் மொழிபெயர்ப்பாக முடிந்தது என்றும் அந்த மொழிபெயர்ப்பு வெளிவருவதற்கு முன்னர் அவர் இந்த மண்ணுலகைவிட்டு மறைந்துவிட்டார் என்றும் நெகிழ்ச்சியோடு சொன்னார்.

பிறகு 1995 ல் இந்த மொழிபெயர்ப்பு முயற்சிக்குக் கெளரவம் சேர்க்கும் வகையில் சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பாளர் விருதைப் பெற்றபோது வந்த முதல் வாழ்த்துக்கடிதம் சரஸ்வதி ராம்னாத்தின் கடிதமே என்று சொல்லி அக்கடிதத்தைப் படித்துக்காட்டினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பெயராலேயே நிறுவப்பட்ட விருதுக்குரியவராகத் தன்னைத் தேர்ந்தெடுத்திருப்பதையும் விழா நிகழ்ச்சிக்கு ஆதவன் குடும்பத்தார் வந்திருப்பதையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில படங்கள் கீழே உள்ளன

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்