உலகமயமாக்கலும் வளரும் நாடுகளில் உள்ள பெண்களின் மீது தாக்கமும்

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

செந்தில்


பொருளாதார வளர்ச்சியும், உலக மயமாதலும் வளரும் நாடுகளில் உள்ள பெண்களிடம் இருவித தாக்கங்களை ஏர்ப்படுத்தியுள்ளது. ஒரு பக்கம், வளரும் நாடுகளில்,சாதி, இனம், வகுப்பு ஆகியவற்றால் பின்னடைந்துள்ள பெண்கள் இந்த பொருளாதார மாற்றங்களால் மிகப்பெரிய அளவில் அரசியல், பொருளாதார, மற்றும் சமூக விடுதலை அடைவதற்கான சாத்தியங்கள் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாய் வழி சமூகங்களில் பெண்களுக்கிருந்த உரிமைகளையும், மதிப்பையும் பெண்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பெண்கள் உயர் கல்வி அடைவதிற்கும், பொருள் வளர்ச்சியில் பங்கு பெறவும், மேலாண்மை துறையிலும், விஞ்ஞான தொழில் நுட்ப துறைகளில் ஆண்களுக்கு நிகராக சமபங்கு ஆற்றவும் இந்த மாற்றத்தினால்

நிகழலாம்தான்.

ஆனால் உலகமயமாக்கலின் வேகம், மிகப்பெரிய அளவில் எதிர்வினைகளையும் பெண்களின் மீது ஏற்படுத்தும் என தோண்றுகிறது. பொருள் ஈட்டுவதற்கான பேராசையும், நிருவணங்களின் தூண்டுதலினாலோ, பல நூற்றாண்டு ஆணாதிக்க சுமையிலிரிந்து விடுபட வேண்டும் என்ற வேகத்தினாலும், அந்நிய

கலாச்ச்சாரங்களின் மீதுள்ள மோகத்தினாலும், விடுதலை என்ற பெயரில் பெண்கள், மிகப்பெரிய வலையில் சிக்கிகொள்ள வாய்ப்பிருக்கிறது.

விளம்பரம் (Advertising), கேளிக்கை (entertainment) ஆகிய துறைகள் என்ற போர்வையில் பெண்கள் வெறும் வியாபாரப் பொருள்களாக சந்தைகளில்

விற்கப்படவும் நேரிடலாம். இப்பொழுது பரவலாகிக்கொண்டிருக்கிற மின்வலை பொருளாதாரம் (Internet Commerce) பெண்களுக்கு விடுதலை என்ற பெயரில் மிகப்பெரிய வலையை பின்னிவிடக்கூடும். மின்வலை இனையங்களை திறந்தாலே கூசும் அளவுக்கு உள்ள ஆபாச மற்றும் கேளிக்கை (porno entertainment) பொருளாக பெண்கள் அதுவும் வளரும் நாடுகளில் பின் தங்கிய நிலைகளில் உள்ள பெண்கள் ஆகிவிடக்கூடும். உதாரணமாகா,

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய அளவில், அதுவும் இந்தியப் பெண்களை வைத்து, ஆபாச சினிமாக்களும், படங்களும், புத்தகங்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பெண்களை, ஏன் ஆண்களையும்தான், இந்த வலையில் சிக்க வைக்க, புதிது புதிதாக தளங்களும்,

மன்றங்களும், குழுமங்களும் (clubs, associations, communities) நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. இத்தகைய பொருளாதாரம், ஆணுக்கு எதிரான, ஒரு பின்னவீனத்துவ (Post-modern agencies against oppression) போர்க்களமாகக்கூட இந்த நவீன உலகில்

சித்தரிக்கப்படலாம்தான். விபச்சாரம் கூட நியாயப்படுத்தபடலாம்தான். படித்த நடுத்தர வர்க்க பெண்கள் இந்த மாதிரி வலைகளில் மாட்டிக்கொள்ள

வாய்ப்பு அதிகம்தான். நம் சமூகங்களில் சாதீயம் என்ற பெயரில் அடக்குமுறையாக ஒரு குழுமத்தையே விபசாரத்திற்கு உள்ளாக்க நேரிட்டது

அந்த காலத்தில். இந்த காலத்தில், பொருளாதாரம், தனித்துவம், தனிமனித விடுதலை என்ற பெயரில் பெண்கள் தானாகவே விபச்சாரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம்.

பெண்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்.

‘தனி மனித சுதந்திரம் வேறு. தன்னை காட்சிப் பொருளாக, வியாபாரச்சரக்காக மாற்றிக்கொள்வது வேறு ‘. இது என் கருத்து.

பெண்கள் கருத்தென்ன ?

——————————

Series Navigation

செந்தில்

செந்தில்