கடிதங்கள் – ஜனவரி 8,2004

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

கார்த்திக் – கணேஷ் சந்திரா – பித்தன்- பரிமளம் – விஸ்வாமித்திரா – தாரா குமார் – மணி வேலுப்பிள்ளை – சங்கரபாண்டி – ரோஸா வசந்த்



ஒரு சின்ன அறிமுகத்துடன் இக்கடிதத்தை தொடங்குகிறேன்.

ஜெயமோகன் எழுதிய ஆன்மிகம் சம்பந்தப்பட்ட கட்டுரைக்கு பதில் எழுதிய என்னை ஜெயமோகன் ‘மூர்க்கத்தனமாய் எழுதுபன் ‘ என்ற பட்டத்தை தந்தார். பிறகு அக்கடிதங்களை திண்ணை வெளியிட்ட பின், அவற்றை படித்த ரோசாவசந்து என்னை ‘ஜெயமோகனின் பஜனை கோஷ்டியில் ‘ இருப்பதாக ஒரு பதவியை தந்தார். இப்போது அரவிந்தன் நீலகண்டனோ, அவ்ரது கட்டுரையில், அபத்த எதிர்வினை வைத்த திரு.கார்த்திகேயன் என்றார், திடாரென்று பேர்விழி என்றார், திடாரென்று அறிவொளி என்றார், பிறகு ரோசவசந்தின் விசிறிகுழாத்தில் ஒரு பதவியை தருகிறார்.(ஆனாலும் என் விவாதங்களை தேடி படிக்கிறார்)

அரவிந்தன் இப்பொழுதே வெகு நாளாய் நினைத்திருந்த மாதிரி உங்களை பாரட்டிவிடுகிறேன்.உங்களுடைய நிறைய கட்டுரைகளை நான் படித்துள்ளேன். உங்கள் ஆக்க பூர்வமான முயற்சிக்கு தடையாய் எழுதும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை. குறிப்பாக உங்கள் ‘சாண எரிவாயு ‘ கட்டுரை எனக்கு உங்கள் மூலமாகதான் அறிமுகம்.

சரி, இனி நான் என் அறிவொளியை உங்கள் மேல் பாய்ச்சி , திட்ட ஆரம்பிக்க்றேன். ( ‘ ‘ ‘ ‘ மேற்கோளுக்கு இடையில் அரவிந்தனின் வரிகள்)

அரவிந்தன் ஒத்துகொண்டதுபோலவே, அல்லது ரோசாவின் விசிறி குழாத்தில் உள்ள நானும் எதிர்பார்த்தது, ‘ ‘ ‘கணினிக்கு மிகவும் உகந்த மொழி சமஸ்கிருதம் ‘ என மிகைப்படுத்தி கூறுவதற்கு எள்ளளவும் வேறுபாடற்ற ஒரு விஷயம் ‘ ‘

கணினிக்கு உகந்த மொழி சமஸ்கிருதம் என்று போகிற போக்கில் மிகைப்படுத்தி சொல்லிவிடுகிறாறா என்பதுதான்.. இது போன்ற மிகைகள்தான் பின் பொய்கள் ஆகின்றன என்பதை அ. நீ மறுக்க மாட்டார் என நினைக்கிறேன்.

முதலில் அரவிந்தன் ‘ ‘எந்த ஒரு மொழியின் இலக்கணமும் அந்த மொழிக்கு ஒரு செயற்கைத்தன்மை அளிக்கும் முயற்சியே ஆகும். ‘ ‘ என்று ஒத்துகொள்கிறார். அப்படியெனில் தமிழிலோ அல்லது பிறமொழிகளிலோ உள்ள செயற்கைத்ன்மைக்கும், சமஸ்கிருததில் உள்ள செயற்கை தன்மைக்கும் உள்ள வேறுபாடு எத்தகையது. இது பற்றி எதாவது comparison அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதா ? அவ்வாறு இருக்கிறாதா என்று எனக்கு தெரியாது… இப்படி ஒரு ஆய்வோ, ஆய்வின் முடிவோ இல்லாதபட்சத்தில்

‘ ‘ ‘சம்ஸ்கிருதம் ஒரு செயற்கை மொழி எனும் அடிப்படையில் ‘ என கூறியிருந்தேன். ‘ ‘ என்று சொன்னால் அது அபத்தமாகாதா ?

‘ இன்னமும் கறாராக ‘சமஸ்கிருதத்தின் செயற்கைத்தன்மையின் அடிப்படையில் ‘ என்று சொன்னால் கூட அது அபத்தமாகத்தான் என் மேதாவிலாச , அறிவொளி வீசும் கண்களுக்கு படுகிறது.

பாணிணி சொன்னார் என்பதால் அது அப்படியே ஏற்றுகொள்ளபடவேண்டும் என்று என்ன கட்டாயம் (இதை ‘ ‘பரவலாக ஒத்து கொள்ளப்பட்டவிஷ்யம் ‘ ‘ என ‘குண்ட்ஸாக ‘ எழுதுகிறீரோ என்று நினைக்கிறேன்) . தமிழையோ அல்லது பிறமொழியையோ செயற்க்கைத்த்ன்மைக்கு எடுத்து செல்ல என்ன தடை ? அல்லது அந்த திசையில் என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது ? இது போன்ற அடிப்படை கேள்விகளை எழுப்பவது எப்படி தவறாகும். இன்னும் தமிழும் , சமஸ்கிருதமும் கலந்து இயங்கும் இடங்களை(பதங்களை, வார்த்தைகளை முடிந்தால் கணித உபயோகங்களை) என்னால், நீங்கள் விருபினால் , எடுத்து காட்ட முடியும். ஆனால் அது ‘google ‘ ல் கிடைக்காது. திருமூலர்,அருணகிரியார் எனப் படிக்கவேண்டியிருக்கும். அதையெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது, அப்படியெனில் அந்த செயற்கை தன்மை தமிழுக்கு இல்லையோ அல்லது கொண்டுவரமுடியாதோ.

எனினும், நான் என்கடிதத்தில் சொல்லவந்தது, குறைந்த பட்சம் கறாராகவாவது எழுதுங்கள் என்பதைத்தான். சமஸ்கிருத்ததை யார் உயர்த்தி பேசினாலும் கோபம் வருகிறது. அதுவும் இந்துத்துவ சூத்திரனாகிய அ. நீ எழுதினால் கொஞ்சம் அதிகமாக கோபம் வருவது இயற்கைதான் என சொல்ல தோன்றுகிறது.

பிறகு இதையும் சொல்கிறார்(அல்லது ஒத்துகொள்கிறார்), ‘

It is often said that words can kill. But they can also create. Mathematics offers an excellent example of how this creative process works. Consider, for example, the common phrase, ‘Beauty is in the eye of the beholder ‘. The utility of this phrase for everyday life resides in the ambiguous term ‘beauty ‘. What does it really mean ? Well, no one can say objectively, as the term is used in daily speech to mean a plethora of often contradictory things; ‘beauty ‘ is an informal notion, and therein lies its beauty (if you ‘ll pardon the pun). But mathematicians hate the informal; it is hard to prove theorems without having a clear-cut notion of what the objects of your theory actually mean. So a lot of mathematics has been developed around just this idea: formalization of the informal. ‘

formalization என்பது ஒரு process ஆகிவிடுகிறது,காஸ்டின் கூற்றுப்படி. இந்த formalization க்கு மொழி என்பது ஒரு கருவியாக தான் செயல்படுகிறது. இந்த formalization என்கிற ambiguity-ஐ களையும் அல்லது மட்டுபடுத்தும் வேலையில் இதுவரை மிகவும் சிறப்பாக செயலாற்றும் மொழி என சொல்ல முற்ப்ட்டோம் எனில், கணிதமே(மொழியின் வரையறைகளை கணிதத்துக்கு பொருத்தி பார்க்கையில்) முன்னணியில் உள்ளது எனலாம். இதுவும் காஸ்டின் கூற்றுபடியே புலனாகிறது. அதாவது சமஸ்கிருத்தைவிட கணிதம் ‘மேல்குறுக்க இயலாதது ‘ அல்லது ambiguity குறைந்தது எனக் கொள்ளலாம்.

கணிணியில்,ஒரு மொழியில் செய்ய கூடிய ஒன்றை இன்னொரு மொழியில் செய்ய தடைகள் இருக்கலாம். ஆனால் அதானாலெயே இரண்டாமாவது குறைந்தது ஆகிவிடாது. (இதை ஒத்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்)..

இன்னும் ஒற்றை வரியில் சொல்வதெனின், கணினியின், செயல்பாட்டு உருவமைப்புக்கு மாற்றும் தருணம் வரையிலேயே(mechine language க்கு எப்படி புரியும்பப்டி தமிழில் சொல்வது ? ?),ஒரு மொழியின் தடைகள் , தடைகளாகின்றன. பிறகு அத்தடைகளுக்கு வேலையில்லை என்பதை நான் சொன்னால் ஒத்து கொள்வீர்களோ மாட்டார்களோ.

இன்னும் இந்த விவாதத்தை நீட்டியபடியே போகலாம். உங்கள் பாணியில் சொல்வதெனில் நீங்கள் அரவிந்தனா அல்லது ‘அறு ‘ விந்தனா என்று சில சமயஙளில் தோன்றுகிறது.

…இன்னும் இந்த விவாதத்தை நீட்டியபடியே போகலாம், சமஸ்கிருதமும் தமிழ் போல ஒரு மொழிதான் என்று நீங்கள் ஒத்துகொள்ளும் வரை. ஆனால் எனக்கு ரோசாவின் விசிறிகுழுவிலும்,ஜெயமோகனின் பஜனை கோஷ்டியிலும் நிறைய வேலைகள் உள்ளன.

எங்கே , இன்னும் கொஞ்சம் கறாராக, சமஸ்கிருதமும் , தமிழ் போல ஒரு மொழி மட்டுமே என்று தில்லிருந்தால் ஒரு வரி எழுதிவிட்டு போங்களேன். கொஞ்சம் நாளில் உங்கள் ‘சமஸ்கிருத சபா ‘வில் உறுப்பினன் என்று என்னை யாரவது அழைத்தாலும் அழைக்க்லாம்.

முடிவாக, ‘கறாரக எழுதிருப்பேன் ‘ என்று சொன்ன நேர்மைக்கும் (அப்ப கூட என்க்கு ஏனோ அது அபத்தமாகத்தான் படுகிறது), என் விவாதங்களை (பதிவுகள் உட்பட )ஒரு இடம் விடாமல் தேடி படிப்பதற்கும் மிக்க நன்றி அரவிந்தன். நல்ல வேளை திருமூலருக்கு ஹாரிசனையோ,காஸ்டை பற்றியோ தெரியாது எனவே அவர் சொல்வதை எல்லாம் எடித்து கொள்ள முடியாது என்று சொல்லாமல் விட்டார்களே.

திண்ணை ஆசிரியரையெல்லாம் திட்டாதீர்கள், அதுகள் எல்லாம் ‘மண்டு ‘ எலக்ட் ரான்கள். அதாவது அக்றிணைகள். இனிமேலும் திண்ணை குஸ்தியில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை, எனெனில் எனக்கே சில சமயஙளில் என்ன மடத்தனமான காரியங்களை செய்கிறோம் என் தோன்றுகிறது. திண்ணையை படிக்கமலும் இருக்கமுடியாது(சொறிகிறவன் கை போல) என்வே பார்வையாளனாக இருக்கிறேன்.

கார்த்திக்.

KARTHIKRAMAS@YAHOO.CO


அனைவருக்கும் வணக்கம்,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இவன் கணேஷ் சந்திரா, தமிழோவியம்.காம்

அனைவரும் நலம்தானே ? இங்கும் அப்படியே.

தமிழோவியத்தில் புதிய சேனலான தமிழ் ஈபுக் பற்றி தங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். சமீபத்தில் எழுத்தாளர் பா.ராகவனின் புதிய நாவலான ‘அலகிலா விளையாட்டை ‘ மின் நூலாக வெளியிட்டுள்ளோம். இது ‘தமிழின் முதல் நேரடி ஈ-நாவல் ‘ ஆகும்.

இந்த நாவலை வாங்கி, படித்து விட்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

http://www.tamiloviam.com/ebook/html/main.asp

அன்புடன்

கணேஷ் சந்திரா


முன்னேற்றமா! சீரழிவா!! – பித்தனின் வேறுபாடுகள்.

‘முன்னேற்றமா! சீரழிவா!! ‘ என்ற முஹம்மது இஸ்மாயில் அவர்களின் கட்டுரைக்கு எதிர்வினையாக இந்தக் கட்டுரையைக் கொள்ளலாம். இஸ்லாமிய மதத்தின் பெயரால் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், பெண்களை கொடுமைகள் செய்வதாகவும், பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் நிலவும் கருத்தைச் சில முஸ்லிம்களே எழுப்புவதைக்கண்டு கோபமோ, கவலையோப் படாமல் சிந்திக்க விழைந்திருப்பது வரவேற்கத்தக்கது. என்றாலும் உங்கள் சிந்தனைகள் அந்தக்கருத்துக்கள் தவறானவை என்று மறுத்துக்கூறப் போதுமானதாயில்லை என்றுக் கருதுகிறேன்.

‘பெண்களில் ஏன் நபி இல்லை ? ‘ என்றக் கேள்விக்கான உங்கள் பதிலே அந்தக் கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதுபோல இருப்பது முரண்பாடான விந்தை. பெண்களுக்குத் தாய்மையென்னும் உயரியப் பட்டத்தைக்கொடுப்பது சிறந்ததுதான். நபி, விவேகானந்தர் போன்றவர்களைப் பெற்றதனால் மட்டுமல்ல, சாதாரண மக்களைப் பெற்றிருந்தாலும் கூட தாய்மை உன்னதமானதுதான். சந்தேகமில்லை. ஆனால் பெண்மை தாய்மையோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. தாய்மையடைய முடியாத துர்பாக்கியசாலிகளோ, திருமணமே செய்துகொள்ளாத ‘ஒளவையார் ‘ போன்றவர்களோ உயர்ந்தவர்களல்லர் என்பது போன்ற மறைமுகக் கருத்து உங்கள் வாதத்திலிருப்பதை மறுக்க முடியாது. மேலும், தாய்மை என்னும் உயரியப் பட்டம் கிடைக்கப்போவதால் பெண்களை சந்ததி விருத்திக்காக மட்டும் என்று ஒதுக்கி வைப்பது எந்தவிதமான சுதந்திரம் ? ஒரு பெண் 25 வயதில் திருமணம் செய்து கொள்கிறாள் என்று வையுங்கள், அதற்குப்பிறகே அவர் தாய்மையடைய முடியும். அது வரை அந்தப் பெண்ணின் நிலை என்ன ? ஒரு நல்ல மகவைப் பெற்று, பல காலம் கழித்தும் அவர் நிலையென்ன ?

‘கிறிஸ்தவ நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார், உங்கள் இஸ்லாத்தில் ஏன் தலை துண்டு அணிய வேண்டுமென்று பெண்களைக் கட்டாயப் படுத்துகிறீர்கள், இது பெண்களை அடிமைப்படுத்துவதாக ஆகாதா ? என்றார். நான் சொன்னேன், உங்கள் மதத்தில்கூட கன்னியாஸ்திரிகள் என்பவர்கள் தலை துண்டு அணிகிறார்களே- அவர்களை என்ன நீங்கள் அடிமையா படுத்திவிட்டார்கள் ? இல்லையே – மாறாக சிஸ்டர் என்றல்லாவா மரியாதையாக அழைக்கிறீர்கள் அது போலவே நாங்கள் இஸ்லாத்தில் எல்லா பெண்களையுமே மரியாதையாக நடத்த வேண்டும் என எண்ணி தான் தலை துண்டு அணிய சொல்கிறோமே தவிர அடிமைப் படுத்த அல்ல என்று விளக்கினேன் ‘ என்று எழுதியிருக்கிறீர்கள். உங்கள் நண்பருக்கான உங்கள் பதிலில் மிக முக்கியமான விசயத்தை சாமர்த்தியமாக- தெரிந்தோ தெரியாமலோ- மழுப்பியிருக்கிறீர்கள். அவர் கேள்வியின் முக்கியப்பகுதி ‘கட்டாயப்படுத்துகிறீர்கள் ‘ என்பது தான். கிறிஸ்தவப் பெண்களில் கன்னியாஸ்திரிகளை வேறுபடுத்திக் காட்டவே அவர்கள் அணிகிறார்கள். அவர்களை யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. அணியாவிட்டால் முகத்தில் ஆஸிட் ஊத்திவிடுவோம், சுட்டுவிடுவோம் என்று யாரும் யாரையும் மிரட்டுவதில்லை. அவர்கள் தங்கள் உறவினர்களைப் பார்க்கப் போகும்போது சாதாரண உடையிலே கூட போகிறார்கள். கன்னியாஸ்திரியாகவே தொடர விருப்பப்படாவிட்டால் மீண்டும் குடும்பவாழ்க்கைக்கே திரும்பிவிடலாம் என்பது போன்ற சுதந்திரம் கூட இப்பொதெல்லாம் இருக்கிறது. நீங்கள் ஏன் ‘கட்டாயப்படுத்துகிறீர்கள் ‘ ? என்பது தான் கேள்வியே. கட்டாயம் எனும்போதுதான் அடிமைப் படுத்துகிறீர்கள் என்ற வாதமே வருகிறது. இந்தக் கேள்விக்கு உண்மையான, நேர்மையான பதில் சொல்லுங்கள். அறிந்து கொள்ள யாவருமே ஆவலாயிருக்கிறோம். (மதக்கோட்பாடு – கட்டாயப்படுத்துகிறோம் என்று யாருக்குமே சரியென்று படாத பதிலை அளிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.)

‘ஒரு பள்ளிக்கூட வாத்தியார் தன்னிடம் படிக்கும் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற தலைப்பு செய்தியினால் பிறகு பெண்கள் யாருமே பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லையா ? ஒரு சில கீழ்த்தரமான ஜந்துக்கள் ஆசிரியரானதன் விளைவே அப்படிப்பட்ட செய்திகள். அப்படிப்பட்ட நபர்களை கண்டுபிடித்து தண்டிக்கலாம். (இந்தியாவில் அதுபோன்றவர்களுக்கு தண்டனை கடுமையாக இல்லை என்பது வருத்தத்திற்குரிய வேறு விஷயம்.) அதைவிடுத்து பெண்கள் பள்ளிக்கு செல்வதனால் தான் இப்படி ஏற்படுகிறது, அதனால் இனி பெண்கள் பள்ளிக்கே செல்லக் கூடாதென்பது என்ன நியாயமய்யா ? மோசமானவர்களைக் கண்டுபிடித்து தண்டிப்பதே சரியாக இருக்கும். இந்துக்களில் ஒரு கதை உண்டு. ‘ஒர் கோவில் குருக்கள் கோவிலிலேயே தன் மனைவியிடம் கூடியிருந்தாராம். கடவுள் அவர்முன் தோன்றி ‘நானிருக்கும் இடத்திலேயே இப்படி நடந்துகொள்கிறாயே ? ‘ என்று கேட்டாராம். அதற்கு அந்த குருக்கள் சொன்னாராம், ‘இறைவா, நீ இல்லாத இடம் எதுவென்று காட்டு, நாங்கள் அங்கே போகிறோம் ‘ என்று. இறைவன் எங்குமிருப்பவன் என்றுக் காட்ட கூறப்பட்டக் கதை. இறைவன் இல்லாத இடத்தில் தான் தவறாகவோ சரியாகவோ நடக்கமுடியும் என்று நினைப்பதே தவறு. இறை இல்லமானாலும், கடற்கரையானாலும், இல்லமானாலும் அவன் எங்குமிருப்பவன். யாரோ ஒரு கீழ்த்தரமானவன், முட்டாள், இறை இல்லத்தில் பெண்களுடன் தவறாக இருந்து விடுவானென்பதால் பெண்கள் பள்ளிவாசலுக்கே போககூடாதென்பது ‘மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவது ‘ போன்ற மடமை. மக்கள்மீது-குறிப்பாக (உங்கள்)பெண்கள் மீது- இன்னும் நம்பிக்கை வைக்கலாம். இந்த இந்த இடத்தில் (இறையில்லத்தில்) இப்படி நடக்கவேண்டும் என்று கூறி வளர்த்தால் போதும்.

‘விதி ‘ படத்தைப்பற்றிய உங்கள் விளக்கம் உங்களுக்கே எதிராக இருக்கிறது. அந்தப்படத்தில் அந்தப்பெண்ணிடம் தகாத கேள்விகளை நீதிமன்றத்தில் கேட்பதோடு உங்கள் பார்வை நின்றுவிட்டது. அந்தப் படத்தின் வெற்றியே, அதுபோன்ற சவால்களை, கஷ்டங்களை மீறி போராடி அந்தப் பெண்ணும், நீதியும் வெற்றி பெற்றதில்தான் இருந்தது. ஆபாசமான கேள்விகள் கேட்பார்கள் என்று பெண்களை ஓடி ஒளிந்து தப்பிக்க சொல்வது உங்கள் வாதம். அது தவறு. எப்படிப் பட்ட பிரச்சனை வந்தாலும் எதிர்த்துப் போராடி வெற்றிப் பெற்று வாழ நம் பெண்களை தைரியமாக வளர்க்கவேண்டும். எத்தனையோ விவாகரத்து கேஸ்கள் நடக்கின்றன. எல்லா ஆண்களுமே ‘பெண் நடத்தைக் கெட்டவள் ‘ என்று கூறி விவாகரத்துக் கேட்பதில்லை. ஒருசிலரே அவ்வாறு கேட்கக்கூடும். ஒரு சிலர் அவ்வாறு கேட்ககூடும் என்பதற்காக, கேள்வி முறைமையில்லாமல், பெண்களுக்கு விவாகரத்து வழுங்கிவிடுவது அவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி. ஒரு சிலர் அவ்வாறு கேட்டாலும் அதையும் மீறி அப்பெண்களை தைரியமாக வாழவைக்கக்கூடிய சூழலை ஒருவாக்கிக் கொடுப்பதே நாம் அப்பெண்களுக்கு செய்யும் நீதியாக இருக்கமுடியும். எவ்வளவு மணக்கொடை கொடுத்தாலும் அதை அந்தப் பெண்களே கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் என்ன பயன். எளிதாக விவாகரத்துக் கொடுத்துவிட்டால் அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய. அவர்கள் வாழ்க்கைக்காக மணம் முடிக்கிறார்களைய்யா, மணக்கொடைக்காக அல்ல.

மற்றபடி, பெண்கள் அழகிப்போட்டி என்று கூறிக்கொண்டு அறைகுறை உடையில் நடப்பதும் அதை ஆண்கள் ரசிப்பதும், தொப்புளில் பம்பரம் விடுவதும், மேற்கத்திய நாட்டுப் பெண்கள் போல கிழிந்த உடையில் வருவதே சுதந்திரம் என்று எண்ணிக்கொண்டு பெண்கள் திரிவதிலும் எனக்கும் உடன்பாடில்லை.

மக்களுக்குப் பொறுமையும் சகிப்புத்தன்மையும் சுத்தமாக அற்றுப் போய்விட்டது. பெருந்தன்மையாக நடப்பது அரிதாகிவிட்டது. மன்னிப்பது மறந்தே போய்விட்டது! பலவகையான மக்கள் இருக்கிறார்கள். அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்கே தெரிவதில்லை. அதைவிட அதிசயம் அடுத்தவர்களின் கருத்து நமக்கு மிக முக்கியமாகப் போய்விட்டதுதான்!! இலக்கியவாதிகளுக்கு, சமயவாதிகளுக்கு, அரசியல் வாதிகளுக்கு விமர்சனம் -நேர்மையாக இருந்தாலும்- சகிப்பதில்லை. உங்களுக்கு ஒருவர் தெய்வம். இன்னொருவருக்கு இன்னொரு தெய்வம். கடவுளே இல்லை என்போரும் கூட இருக்கிறார்கள். என் தெய்வம் எனக்குப் பெரிது. அடுத்தவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை என்று யாரும் இருப்பதில்லை. அடுத்தவர்களின் தெய்வத்தை, நம்பிக்கைகளை தாக்குவது அதனால் எதையோ சாதித்துவிட்டது போலவும், அதனாலேயே அவர்கள் தெய்வம் உயர்ந்துவிடுவது போலவும் எண்ணிக்கொள்கிறார்கள். அவர்கள்தான் அப்படிக் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்கள் என்றால் மற்றவர்கள் அதற்குமேல். அது அவன் கருத்து, அவ்வளவுதான் என்று பெருந்தன்மையாக விட்டுவிடுவதில்லை. ஒன்று அவன் அறியாமையால் சொல்லியிருக்கலாம். அல்லது அறிந்தே சொல்லியிருந்தாலும் அது அவனுடைய குறுகிய கண்ணோட்டம் (உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது தெரியாமல்), அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான், என்று மன்னித்து விடுவதில்லை. அவனுடையக் கருத்து அவ்வளவு முக்கியமாக போய்விட்டது!! அவனுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் அல்லது அது அவன் கருத்து. அவ்வளவுதான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதிக முக்கியத்துவம் கொடுத்தால் அவனைப் பெரிய ஆளாக ஆக்கிவிடுவது மட்டுமல்லாமல், அவன் வெற்றிப்பெற்றது போல ஒரு தோற்றமும் உருவாகிவிடும்.

மதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான். எத்தனையோ வருடங்கள் அவற்றைப் பின்பற்றி வந்திருந்தாலும் யாரும் அதைப்பற்றிக் கருத்து/விமர்சனம் சொல்லக்கூடாது என்பது சரியல்ல. நடைமுறையில் சாத்தியமுமில்லை. [ இந்து மதம் பழமையான மதம். அதையும் அதன் நம்பிக்கைகளையும் விமர்சிக்கக்கூடாது என்று யாரும் பெரியாரைத் தடுத்திருந்தால், சமயத்திலிருந்த மூட நம்பிக்கைகளும், சமுதாயத்தில் இருந்த அநீதிகளும் -ஒரு சிலர் மட்டும் சமயத்தின் பெயரால், சாதிகளை ஆயுதமாகக்கொண்டு பல மக்களை ஏமாற்றி சுலப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது – உலகிற்கு தெரியாமலேயே போயிருக்கும்.] விமர்சனம் வரும்போது எல்லாமே நமக்குப் பிடித்ததுபோல இருக்கும் என்று எதிர்பார்ப்பதும் முறையல்ல. உங்கள் புனித அன்னையை தவறாக விமர்சித்தது கீழ்த்தரமான செய்கைதான் என்றாலும் அவனுக்கு மரண தண்டனை விதித்தால், பிறகு என்ன வித்தியாசம் ? ஒரு மோசத்தை இன்னொரு மோசத்தால் சரி செய்துவிட முடியாது. அவன் அறியாமையால் செய்கிறான் என்று மன்னிப்பது தான் உயர்ந்த பண்பாகும். அப்படி செய்யத் தூண்டும் மதம் தான் உண்மையான மதமாக இருக்கமுடியும். ஏனெனில் மதமே மனிதனை மனிதனாகச் செய்வதற்கு தோன்றியதுதான். அப்படிச் செய்யாவிட்டால் எந்த மதமும் தேவையில்லை. மனிதம் மட்டுமிருந்தால் போதும். பெரியாரே இராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்து வந்தார். (அவர் செய்கையும் போராட்டமும் வேறு தளத்தில் இருந்தது வேறு விஷயம்.). ஒரு கடவுளை அப்படி நடத்தியதற்கே அவருக்கு யாரும் மரண தண்டனை விதிக்கவில்லை. பெரியார் என்றே போற்றினார்கள். ஏனென்றால் மூட நம்பிக்கைகள் பற்றிய அவர் கருத்துக்கள் சரியாக இருந்ததே. எனவே கருத்து கூறுவதோ, ஆராய்வதோ தவறென்று சொல்லமுடியாது. நியாயமான கருத்துக்களையும் சிலர் சொல்லக்கூடும். எதற்கெடுத்தாலும் மனம் புண்படும்படி பேசிவிட்டார்கள் என்று சொல்வது வேடிக்கையானது. இப்போதுகூட சிலர் இந்து மதத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத ‘இந்துத்துவா ‘ என்ற கோஷத்தை எழுப்பி அரசியல் பண்ணிக்கொண்டு, யார் எதை சொன்னாலும், இந்துக்கள் மனம் புண்படும்படி பேசிவிட்டார்கள் என்று அரசியல் லாபம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் எந்த இந்துவும் மனம் புண்பட்டதாகவோ, அதானல் சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டதாகவோ சொல்லி நான் கேட்டதில்லை!! இந்து மதத்தைப் பற்றி யார் என்ன சொன்னாலும் நான் கவலைப்படுவதுமில்லை. அவர்கள் எதாவது சொல்வதினால் இந்து மதம் ஒன்றும் குறைந்து போய்விடாதென்பதில் தெளிவாயிருக்கிறேன்.

‘உலகில் பல அநியாயங்கள் பெண்களை முன் நிறுத்திதான் நடக்கிறது ‘ என்று காரணம் காட்டி பெண்களை பர்தாவுக்குள் ஒளிந்துகொள்ள நீங்கள் அழைப்பது முற்போக்கானக் கருத்தோ, அவர்களுக்கான முன்னேற்றப் பாதையோ, அல்லது அவர்களுக்கான சுதந்திரமோ அல்ல. எத்தனை அநியாயங்கள் நடந்தாலும், ‘நாங்கள் திருந்தவே மாட்டோம், எங்களுக்கு சுயக்கட்டுப்பாடு விதித்துக்கொண்டு, மரியாதையாக நடத்த மாட்டோம்; நீங்கள் வெளிவந்து தைரியமாக வாழ்வதற்குண்டான சூழலை ஏற்படுத்தி தர முயலமாட்டோம். வேண்டுமானால் நீங்கள் ஓடி ஒளிந்துகொள்ளுங்கள் ‘ என்று சொல்வதுபோன்ற ஆணாதிக்கக் கருத்துக்கள் முதல் பத்தியில் சொல்லப்பட்டக் கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதாகவே இருக்கிறது. உங்கள் சமய முகமூடிகளைக் கழட்டி வைத்துவிட்டு வெளிவந்து, ஒரு சக மனிதனாக இருந்து, உங்கள் பெண்களைப் பற்றி, அவர்களின் சுதந்திரம் பற்றி, அவர்களின் வாழ்க்கை/விவாகரத்து பற்றி, முன்னேற்றத்தைப் பற்றி தெளிவாக சிந்திப்பீர்கள் என்று நம்புகிறேன்.

வணக்கங்களுடன்,

பித்தன்.

piththaa@yahoo.com

(நீக்கங்கள் உண்டு.)


பாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில் – சில எதிர்வினைகள்

{ ‘ஐரோப்பியர்களும் பாதிரியார்களும் வரும் முன்னால், நமது நாட்டில், கல்வி என்பது மேல் ஜாதி மக்களுக்கேக் கிட்டியது. கீழ் ஜாதி மக்களும், ஹரிஜன மக்களும் பள்ளிக்கூடங்களில் அனுமதிக்கப்படவில்லை. ஐரோப்பியர்களின் ஆட்சியிலே, பாதிரியார்கள் கல்விக்கூடங்கள் கட்டிய பின்னரே, கீழ் ஜாதி மக்களுக்கும், ஹரிஜன மக்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ‘} இது ஒரு பொய் என்பதற்காகக் கலவை வெங்கட் அவர்கள் தரம்பால் மூலம் (அவரது நூல் பெயரில் 18 ம் நூற்றாண்டு என இருப்பது கவனக்குறைவால் ஏற்பட்ட பிழையா ?) எடுத்துக்காட்டும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஐரோப்பியர்களும் பாதிரியார்களும் நம் நாட்டுக்கு வருவதற்கு முன் உள்ள நிலையைப் பற்றிக் கூறாமல் அவர்கள் வந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆன பிறகு உள்ள நிலையைக் காட்டுகின்றன! வெங்கட் சொந்த வலைக்குள் பந்தைப் புகுத்துவதாகத் தெரிகிறது. (வேதங்களும், தத்துவமும் மட்டுமே சொல்லித்தரப்பட்ட கடிகைகளில் பயின்ற மாணவர்களின் விகிதாசாரம் பற்றித் தரம்பால் ஏதேனும் கூறியிருக்கிறாரா ?) ***

{நமது பாரம்பரியக் கல்விக் கூடங்களில் ஹரிஜன மக்கள் உட்பட எல்லா ஜாதியினரும் ஒன்றாகவே பயின்றனர் எனவும், அத்தகைய பாரம்பரியக் கல்வித் திட்டம் அழிந்திடக் காரணமே ஐரோப்பியர்களின் அராஜக ஆட்சிதான் எனவும் நிரூபித்தவர் தரம்பால் என்னும் அறிஞர்.} அதாவது, ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு தலித்துகள் உட்பட அனைவரும் ஒன்றாகப் பயின்றனர். ஆங்கிலேயர்களின் அராஜக ஆட்சிக்குப் பிறகுதான் அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. கோயபல்ஸ் யார் என்பது தெளிவாகவே தெரிகிறது. ***

{பாரம்பரியக் கல்வி மன்னர்கள், செல்வந்தர்கள் ஆகியோர் எழுதி வைத்த மான்ய நிதி கொண்டே நடத்தப்பட்டது. இவர்கள் நிலமும், பணமும் மான்யமாக எழுதி வைத்தனர். முஸ்லீம்கள் தென் நாட்டின் மேல் படை கொண்ட போது, பல அரசுகள் வீழ்ந்தன. செல்வங்களும் சூறையாடப்பட்ட நிலை. இதன் விளைவாக, கல்விக்கூடங்களைப் பராமரிக்கத் தேவையான வருவாய் குறைந்தது. இது நமது பாரம்பரியக் கல்விக்கு விழுந்த முதல் அடியாகும். இருப்பினும், திண்ணைகளையே பள்ளித்தலமாக்கி நமது முன்னோர்கள் பாடம் பயிற்றுவித்தனர்.} அதாவது, இப்போதுள்ள பள்ளிக்கூடம் என்னும் அமைப்பு ஆங்கிலேயர்களால் நமக்கு அளிக்கப்பட்டதல்ல; இது நம்மிடம் ஏற்கனவே இருந்தது; முஸ்லீம்களின் படையெடுப்பால் இது அழிந்தது. பிறகே திண்ணப்பள்ளிகள் ஏற்பட்டன. நம் பாரம்பரியக் கல்வியைப் பின்னர் முற்றிலும் அழித்த ஆங்கிலேயர்கள் பழங்காலத்தில் நம் நாட்டில் இல்லை என்பதால் மூவேந்தர்கள் ஆண்டபோது இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையையும் மாதச் சம்பளத்துக்குப் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் அவற்றில் பயின்ற பல்வேறு வர்ண மாணவர்களின் விகிதாசாரத்தையும் பற்றி நம்மால் அறியமுடியவில்லை. ***

பரிமளம்


எனது முந்தைய கடிததிற்கு ஒருவர் எதிர்வினையாற்றியிருக்கிறார். இனிமேல் இவர்களுக்குப் பதில் எழுதுபவர்கள் எல்லாம் பக்கத்தில் ஒரு வக்கீலை வைத்துக் கொண்டு எழுதுவதோ அல்லது எதைய்மே எழுதாமல் இருப்பதோ உத்தமம். நல்ல வேளையாக எனக்கு ஏதும் ஃபட்வா கொடுக்காமல் விட்டு விட்டார்கள். தனது மதம் குறித்தான சிறு விமர்சனத்தைக் கூட சகித்துக் கொள்ள முடியாதவருக்கு, சக படைப்பாளி கொல்லப்படவேண்டுமென விரும்பும் மத அடிப்படைவாதிக்கு, மற்ற மதங்களைக் குறித்து கேலி செய்ய எவ்விதமான தார்மீக அருகதையும் கிடையாது என்பதே என் கடிதத்தின் அடிப்படைச் சாரம். எனது கேள்வியின் ஆதார சுருதியைக் கூட புரிந்து கொள்ளாத அல்லது புரிந்தும் புரியாதது போல் திசை திருப்பும் பதிலைக் கண்டு சிரிப்பதா, அழுவதா, இல்லை அச்சப்படுவதா எனத் தெரியவில்லை. எதற்கும் மூன்றையும் செய்து தொலைக்கிறேன்.

நரேந்திரனின் ‘வலுக்கும் எதிர்ப்பு ‘ கட்டுரை, பணியேற்றம் குறித்தான பல்வேறு நிகழ்வுகளையும், அதன் விளைவுகளையும் உன்னிப்பாக அலசியுள்ளது.

பத்தாண்டுகளுகு முன்பு பொருள் உற்பத்தி வேலைகள் சீனாவிற்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப் பட்ட போது, மாற்று வேலைவாய்ப்பாக கணனித் துறைகளில் அதிக அளவு வேலைகள் உருவாக்கப் பட்டு, தொழிற்சாலை சார்ந்த தொழில்களில் வேலை இழந்த பெருவாரியான அமெரிக்கர்களை உறிஞ்சிக் கொண்டன. ஆனால், இப்பொழுது அத்தகைய கணணிசார் தொழில்களிலின் ஏற்றுமதியினால், வேலையிழந்து வரும், இழக்கப் போகும் லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு எங்கிருந்து உருவாகப் போகிறது என்பதை இதுவரை எவரும் தெளிவாக்கவில்லை. அத்தகைய குழப்பம் நீடிக்கும் வரை இதற்கான எதிர்ப்பு வலுவடையவே செய்யும், இது வரவிருக்கும் அதிபர் தேர்தலில் ஒரு முக்கியமான பிரச்சினையாக உருவெடுக்கவும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

அமெரிக்க நிறுவனங்கள் தங்களது உற்பத்திச் செலவை குறைப்பதற்காக பெரும் அளவில் செய்துவரும் இந்தப் பணிப் பெயர்வு நடவடிக்கை இரு புறமும் கூர்மையான ஆயுதம் போன்றது. அமெரிக்காவில் மற்ற எந்த துறையையும் விட மென் பொருள் மற்றும் நிதித் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மிக அதிக சம்பளம் வழங்கப் படுகிறது. அத்தகைய பல லட்சம் அமெரிக்கர்களின் வாங்கும் சக்தி மிக அதிகம். அவ்வாறான அதிக ஊதியம் பெறும், அதிக வாங்கும் திறம் கொண்டவர்களின் வேலைகள் ஏற்றுமதி செய்யப்படும் பொழுது, அமெரிக்க நிறுவனங்கள் ஒரு மிகப் பெரிய சந்தையையே இழக்கிறது. இது நாள்வரை ஆறு இலக்க சம்பளம் வாங்கியவர்களின் வேலைகள் பறிபோகும் போது அவர்களின் பாதுகாப்பற்ற ஒரு சூழலுக்குத் தள்ளப் பட்டு இருக்கும் பணத்தை சேமிக்கத் தொடங்குவார்கள். புதிதாக வாங்கத் திட்டமிட்ட கார், வீடு, மிண்ணணு சாதனங்கள் மற்றும் பிற விலையுயர்ந்த சாதனங்களையும் கொள்முதல் செய்வதைத் தவிர்த்து விடுவார்கள். அது சிக்கனத்திற்காக வேலைகளை ஏற்றுமதி செய்த நிறுவனங்களுக்கு எதிர்மறையாக பெரும் அளவில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும். அவ்வாறு ஏற்கனேவே உருவாக்கப் பட்ட நிரந்தரமான, நம்பகரமான சந்தையை இழக்கும் போது, புதிய சந்தையை, தான் வேலைகளை ஏற்றுமதி செய்த நாடுகளில் தேடத் தொடங்குவார்கள், அதில் சுணக்கம் காணும்போது இதுகாறும் ஏற்றுமதி செய்த வேலைகளை, உள்நாட்டிற்கு மீண்டும் இறக்குமதி செய்யத் தயங்க மாட்டார்கள். அவ்வாறு செய்ய முற்படும் பொழுது அவர்களுக்கு முன் எப்போதும் விட பன்மடங்கு குறைந்த ஊதியத்தில் வேலைக்கு ஆள் கிடைப்பார்கள். இந்தக் காரணம் தவிர்த்து, இருக்கும் வேலைகளை முழுவதும் இழப்பதற்குப் பதிலாக, தங்களது ஊதியங்களைத் தாங்களாகவே குறைப்பதற்கும் எண்ணற்ற ஊழியர்கள் தாயாராகி விடுவார்கள். ஏற்கனேவே அத்தகைய முயற்சிகள் ஒரு சில நிறுவனங்களில் தொடங்கி விட்டதாக அறிகிறேன். இது போன்ற பல்வேறு காரணங்களால், இப்பொழுது ஏற்றுமதியாகும் பல வேலைகள் மீண்டும் திரும்பிப் பெறப்பட பிற்காலத்தில் சொற்ப சாத்தியங்கள் உள்ளன. அவ்வாறான எதிர்பாராத சூழ்நிலைகளுக்கும், வேலை இழப்புகளுக்கும் இந்தியா தன்னை தயார் செய்து கொள்வதும் அவசியமாகும். இவையாவும் அனுமானங்களே, இன்னும் ஒரு சில வருடங்களில் இதன் உண்மையான பின் விளைவுகள் தெளிவாகும்.

பின்கட்டுப் பணிகள், அழைப்பு மையங்கள் மற்றும் தகவல் வழங்கு சேவைகள் போன்ற பணிகள் இப்பொழுது இந்தியா போன்ற நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு உள்ள அனுகூலங்கள் குறைய ஆரம்பித்து, பிலிப்பைன்ஸ் போன்ற ஆங்கிலம் பேசக்கூடிய பிற நாடுகள் கடுமையான போட்டிக்கு வரும் பொழுது, பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சேவை மைய கூடாரங்களை எளிதாகப் பிற நாடுகளுக்கு மாற்றம் செய்யக் கூடிய சாத்தியங்களும் உள்ளன. அவர்களுக்கு லாப நோக்கம் ஒன்றே குறி. இன்றைய நிலையில், இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் காற்றுள்ள பொழுது தூற்றிக் கொண்டாலும் கூட, அதில் வரும் லாபங்களை, புதிய நிரந்தர வருமானம் தரக்கூடிய துறைகளிலும், ஆராய்சிகளிலும் முதலீடு செய்ய முயன்றால் அவ்வாறான முதலீடுகள், சேவை சார்ந்த வேலைகள் வெளியேற்றப் பட்டாலும் கூட, நிரந்தர வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடும். சேவைகள் வழங்குவதின் மூலம் வந்துள்ள அபரிதமான வளத்தையும், வாய்ப்பையும், நிரந்தர வருமானம் ஈட்டும் துறைகளில் மூலதனமாகப் பயன்படுத்த வேண்யது எதிர்காலத்தை முன்னிட்டான ஒரு அவசியமாகிறது.

கோபாலபுரத்துக்கு போக வேண்டிய கடிதங்கள் எல்லாம் இப்பொழுது திண்ணைக்கு வந்து விடுகின்றன போலும். திண்ணையில் நகைச்சுவை பகுதிகள் அதிகம் இல்லாத குறையை, இத்தகையக் கடிதங்கள் தீர்த்து வைக்கின்றன. வாய் விட்டு சிரிக்க முடிந்தது. இவர்தம் தானைத் தலைவர் எப்படியெல்லாம் தன்னலமற்ற தியாக உணர்வுடன் தனது மருமகனின் மந்திரிப் பதவிக்காகவும், அமெரிக்க மருத்துவச் செலவுகளுக்காகவும், ஒரு சில விஷ ஜந்துக்களுடன் (இவரது தற்போதைய அகராதிப்படி, பா ஜா கா வினருடன் என்று படிக்கவும்), கடந்த நாலு வருடங்களாக நடத்தி வந்த மயிர் கூச்செரியும் சாகசங்களும், இப்பொழுது தன் மகனின் எதிர்கால முதல்வர் பதவிக்காக அவர் நடத்தும் அரசியல் தியாகங்களும், வரலாற்று சிறப்பு மிக்கது என்பதில் சற்றும் ஐயமில்லைதான்.

அன்புடன்

விஸ்வாமித்திரா

viswamitra12347@rediffmail.com


இது தமிழ் பணி இல்லையா ? – அமெரிக்க தமிழ் சங்கங்களைப்பற்றி தாரா குமார்.

திரு கோச்சா அவர்கள் அமெரிக்க தமிழ் சங்கங்களை பற்றியும் FeTNA வைப்பற்றியும், தனது வருத்தங்களை எழுதியிருந்தார். FeTNA எனது அறிவுக்கு அப்பாற்ப்பட்டது. எனவே FeTNA பற்றி நான் எதுவும் எழுதப்போவதில்லை. ஆனால் அமெரிக்க தமிழ்ச் சங்கங்களைப்பற்றி எனது கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.

அமெரிக்க தமிழ் சங்கங்கள் தமிழ் பணி ஒன்றும் ஆற்றாததால், ‘தமிழ்ச் சங்கம் ‘ என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று திரு கோச்சா சொல்கிறார். 10 வருடங்களாக தமிழ் சங்கங்களை பார்த்த அனுபவம் அவருக்கு இருக்கிறது என்றும் சொல்கிறார். ஆனால், இந்த 10 வருடங்களில் ஒன்றை கவனிக்கத் தவறிவிட்டார். அமெரிக்காவில் இருக்கும் எந்த தமிழ்ச் சங்கமும், ‘தமிழ் சங்கம் ‘ என்ற பெயரை கொண்டதில்லை. ‘வாசிங்டன் தமிழ் சங்கம் ‘, ‘சிகாகோ தமிழ் சங்கம் ‘, ‘அரிசோனா தமிழ் சங்கம் ‘, ‘ நியு யார்க் தமிழ் சங்கம் ‘ என்று அந்த அந்த ஊர் பெயரை வைத்து தான் அழைக்கபடுகிறது. இதிலிருந்தே எலோருக்கும் புரியும் இவை புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடங்கிய தமிழ் சங்கங்கள் என்று.

அப்படியே ‘தமிழ் சங்கம் ‘ என்றே அழைக்கப்பட்டாலும், அதிலென்ன தவறு ? மதுரைத் தமிழ் சங்கம் மட்டும் தான் தமிழ் பணி செய்கிறதா ? இலக்கியங்கள் படைத்தால் தான் தமிழ் பணியா ? ஏற்க்கனவே இருக்கும் தமிழ் இலக்கிய படைப்புகளை படித்து தெரிந்து கொள்வதற்க்கே நமக்கு பல வருடங்கள் ஆகுமே ? முத்தமிழ் சங்கங்கள் கண்ட நமது தமிழகத்திலேயே இன்று தமிழ் கானாமல் போய்கொண்டிருக்கிறதே ? மேலும் புது இலக்கியங்களை படைப்பது மட்டும் தமிழ் பணி அல்ல. இருக்கும் தமிழை கானாமல் போகாமல் பார்த்துக்கொள்வதும் தமிழ் பணிதான். அதைத்தான் இந்த கால தமிழ்ச் சங்கங்கள் செய்துகொண்டிருக்கின்றன.

அமெரிக்காவிலேயே பிறந்து வளரும் குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்ள, பேச தமிழ் சங்கங்கள் உதவுகிறதே இது தமிழ்ப் பணி இல்லையா ?

கவியரங்கம், பட்டிமன்றம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் ஆர்வம் உள்ளவர்களுக்கு மேடை அமைத்து கொடுக்கிறதே இது தமிழ்ப் பணி இல்லையா ?

சில மாதங்களுக்கு முன் அலபாமா தமிழ் சங்க நிகழ்ச்சி ஒன்றிர்க்கு சென்றிருந்தேன். அங்கே 10, 12 வயது சிறுவர்கள் தங்களுக்கு பிடித்த திருக்குறளை மேடையில் வந்து வாசித்தார்கள். அவர்கள் அர்த்தம் புரிந்து வாசித்தார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அலபாமாவில் திருவள்ளுவரின் மகத்தான படைப்பு ஒளிக்கிறதென்றால், அதற்க்கு காரணம் தமிழ் சங்கம் தானே ? வேறு எங்கு போய் திருக்குறளை வாசிக்க முடியும் ? இது தமிழ்ப் பணி இல்லையா ?

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது, நம் தமிழ் நாட்டையும், வீட்டையும், உறவினர்களையும் பிரிந்த சொகம் தெரியாமல் இருக்க விழா எடுத்து, 3 அல்லது 4 மணி நேரங்கள் நம்மை மகிழ்ச்சியிலும் குதூகலத்திலும் ஆழ்த்துவது தமிழ் சங்கங்கள் தானே ? இது தமிழ்ப் பணி இல்லையா ?

தமிழ் சங்கங்கள் நடத்தும் பத்திரிக்கைகளை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். நான் இன்று இந்த கடிதத்தை தமிழில் தட்டச்சு செய்து ‘திண்ணை ‘ க்கு அனுப்புகிறேன் என்றால், அதற்க்கு என்னை ஊக்குவித்தது வாசிங்டன் தமிழ்ச் சங்கம் நடத்தும் ‘தென்றல் முல்லை ‘ பத்திரிக்கை தான். எனக்கு எழுதுவதில் மிகவும் ஆர்வம் உண்டு. நான் முதன் முதலில் எழுதி அனுப்பிய கட்டுரையை பிரசுரித்து எனக்கு அங்கீகாரம் கொடுத்தது ‘தென்றல் முல்லை ‘. நான் மட்டும் அல்ல, ஒரு சிறு குழந்தை கூட தான் வரைந்த படத்தையோ, சிறு துணுக்கையோ அந்த பத்திரிக்கையில் பார்த்து மகிழ முடிகிறதே, இது தமிழ்ப் பணி இல்லையா ?

இப்பேற்ப்பட்ட மகத்தான பணிகளை தமிழர்களுக்கு செய்யும் சங்கங்கள் ‘தமிழ்ச் சங்கம் ‘ என்று அழைக்கப்பட எல்லா தகுதிகளையும் பெற்றிருக்கின்றன. எனவே பெயரை மாற்றும் அவசியம் ஒன்றும் இல்லை என்பது என் கருத்து.

மேலும் நீங்கள் ‘ஒரு ஊரில் தமிழ் பேசும் சிலர் கூடினால் தமிழ் சங்கம் ஆரம்பிக்கிறார்கள். அப்புறம் கலை நிகழ்ச்சி தான் கொண்டாட்டம் தான் எப்போதும் ‘ என்று சொல்கிறீர்கள். 10 வருடங்கள் உங்களுக்கு பார்வையாளராக மட்டும் தான் அனுபவம் இருந்திருக்கிறதென்று நினைக்கிறேன். தமிழ் சங்கம் ஆரம்பிப்பதை எவ்வளவு சுலபமான காரியமாக சொல்லிவிட்டார்கள் ? முதலில் தமிழர்களை ஒரிடத்தில் கூட்டுவதே மிகச் சிரமம். அதிலும் அவர்களை கூட்டி ஒரு விழா எடுப்பதில் எத்தனை சிரமங்கள் இருக்கிறதென்று எப்படி உங்களுக்கு தெரியாமல் போயிற்று ? பரவாயில்லை. இப்பொழுதாவது தெரிந்துக்கொள்ளுங்கள்.

விழாவுக்கான அழைப்பிதழை மின் அஞசலில் அனுப்பிய பிறகும், நகரத்தில் இருக்கும் அத்தனை இந்திய கடைகளிலும் ஏறி இறங்கி Flyer வைத்திருக்கிறீர்களா ?

அது பத்தாது என்று, விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் தெரிந்தவர்களை எல்லாம் தொலை பேசியில் அழைத்து ‘விழாவுக்கு அவசியம் வந்துவிடுங்கள் ‘ என்று வாய் வலிக்க கெஞ்சி இருக்கிறீர்களா ?

‘அமெரிக்கா வந்தும் இப்படி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டார்களா ? ‘ என்று எரிந்து விழுபவர்களின் முன் கூனி குறுகி நின்றிருக்கிறீர்களா ?

இப்படி வலிய வலிய அழைத்தும் விழா அன்று வந்திருக்கும் மிக சிறிய கூட்டத்தைப் பார்த்து மனம் வேதனைப் பட்டிருக்கிறீர்களா ?

சங்கத்தின் சேமிப்பில் இருக்கும் சிறிய தொகையை வீணாக செலவு செய்ய மனம் இல்லாமல், உங்கள் கைப் பணத்தை போட்டு சிறு சிறு செலவுகள் செய்திருக்கிறீர்களா ?

ஒரு விழாவில் நாட்டியத்திலோ, நாடகத்திலோ பங்கு பெற பலர் ஆர்வம் காட்டுவார்கள். எலோருக்கும் சந்தர்ப்பம் கொடுக்கமுடியாது. பலரை நிராகரித்து சிலருக்கே வாய்ப்பு கொடுக்கவேண்டியிருக்கும். அப்படி நிராகரிக்கப்பட்டவர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறீர்களா ?

நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்க நேரமில்லாமல் ஓடி ஓடி அரங்கத்தில் வேலை செய்து, சாப்பாடு பரிமாறி களைத்து போயிருக்கிறீர்களா ?

விழா முடிந்து அனைவரும் சென்ற பிறகும், அரங்கதில் இருக்கும் நாற்காலிகள் எல்லாம் மடக்கி வைத்து, சிந்திய உணவுப்பொருட்களை துடைத்து, சுத்தம் செய்து அரங்கத்தை பொருப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு நல்லிரவில் களைப்பின் உச்சியில் வீட்டுக்கு வந்து படுக்கையில் விழுத்திருக்கிறீர்களா ?

இத்தனையும் செய்துவிட்டு, ‘தமிழ் சங்கமா ? சரியான போர் ‘ என்ற சுடு சொற்க்களைக் கேட்டு மனம் பதைத்திருக்கிறீர்களா ?

தமிழ்ச் சங்கத்திற்க்கு பணம் சேர்க்க ஆசைப்பட்டு, ‘Fund rising Festival ‘ நடத்தி, அது நஷ்ட்டத்தில் முடிந்த கொடுமையை அனுபவிதிருக்கிறீர்களா ? நஷட்டமானாலும் பரவாயில்லை, ஒரு நல்ல நிகழ்ச்சியையாவது தமிழர்களுக்கு கொடுக்க முடிந்ததே, அது போதும் என்று மனதை தேற்றிக்கொண்டிருக்கிறீர்களா ?

இதையெல்லாம் நான் செய்யவில்லை. செய்தவர்களைப்பார்த்து பிரமித்துப்போயிருக்கிறேன். இத்தனை சிரமங்களும் எதற்க்காக ? தமிழர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்க்காகத்தானே ? இது தமிழ்ப் பணி இல்லையா ?

நானும் என் கணவரும் வாசிங்டன், டிசிக்கு குடி வந்த போது எங்களுக்கு யாரையும் தெரியாது. பிறகு தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளுக்கு போக ஆரம்பித்த பிறகே நல்ல பல நண்பர்கள் கிடைத்தார்கள். இது எங்களுக்கு தமிழ்ச் சங்கத்தினால் கிடைத்த மிகப்பெரிய பலன்.

உங்களுடைய சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு உள்ளது. அதாவது, வெறும் கொண்டாடங்களும், பாட்டும், கூத்தும் மட்டும் இல்லாமல், தமிழை வளர்க்கும்படியாகவும் நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்பது உண்மை. ஆனால் அதிலும் சிரமங்கள் இருக்கிறது. 100 தமிழர்களை எடுத்துகொண்டார்களென்றால், அதில் 25 பேர் தமிழ் ஆர்வமும் தமிழ் அறிவும் உடையவர்களாக இருந்தால் பெரிது. மீதம் உள்ள 75 பேர் பொழுது போக்கவும் கலை நிகழ்ச்சிகளைப்பார்க்கவும் தான் வருகிறார்கள். அவர்களை வைத்துக்கொண்டு இலக்கியத்தையும் இதிகாசத்தையும் பேசினால் என்னவாகும் ? கொஞ்சம் நஞ்சம் தமிழ்ச் சங்கத்திற்க்கு வருபவர்களும் வராமல் போய்விடுவார்கள். எனவே உங்களுடைய ‘விவேக் ‘ formula இங்கே சரிப்படாது. தமிழ் சங்கங்கள் மேலும் தரமான தமிழ் அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகளை, பணிகளை செய்யவேண்டும், ஆனால் அது சுவயாக தமிழார்வம் இல்லாதவர்களையும் ஈர்க்கும் வகையில் படைக்கப்பட வேண்டும். இது மிகவும் சிரமமான காரியம். ஒவ்வொரு தமிழ்ச் சங்கங்கமும் இதற்கான முயற்ச்சியில் ஈடுபட வேண்டும்.

இந்த கடிதத்தை கோச்சா அவர்களுக்காக மட்டும் நான் எழுதவில்லை. அவரைப்போல பலர் அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களை குறைவாக மதிப்பிடுகின்றனர். அவர்களை நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உங்கள் வீட்டுக் குழந்தை அபஸ்வரமாக ஒரு பாட்டைப் பாடினால் என்ன செய்வீர்கள் ? சிரித்தால் குழந்தை வருத்தப்படுமே என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு செல்லமாக கண்டித்து திருத்துவீர்கள் இல்லையா ? அதே போல இங்கு இருக்கும் தமிழ் சங்கங்களை கிண்டல் செய்யாமல் அதனை மேம்படுத்த உங்கள் யோசனைகளை சொல்லுங்கள். தமிழர்களாகிய நாம் தான் நமது தமிழ் சங்கத்தினை தட்டிகொடுத்து வளர்க்க வேண்டும்.

நன்றி,

தாரா குமார்.

tharasiva@yahoo.com


2004/01/07

ஆசிரியர், “திண்ணை”.

அன்புடையீர்,

2004/01/01 திகதி கொண்ட ‘திண்ணை’யில் “கலைச்சொற்கள், இன்றைய தமிழ் – சில கேள்விகளும் குறிப்புகளும்” என்னும் தலைப்பில் கே.ரவி சிறிநிவாஸ் எழுதிய விபரங்கள் தமிழில் எழுதும் அனைவராலும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை. பொதுவாக மொழிபெயர்ப்பிலும் குறிப்பாக கலைச்சொல்லாக்கத்திலும் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சனைகளையும், அவற்றுக்குத் தீர்வு காண்பதில் அவர்கள் எதிர்நோக்கும் முட்டுக்கட்டைகளையும் பல்வேறு எடுத்துக்காட்டுகள் வாயிலாக அவர் விளக்கியுரைத்துள்ளார்.

ஏனைய துை>றகளைக் காட்டிலும் விஞ்ஞான, தொழில்நுட்ப, மருத்துவத் துறைகளிலேயே கலைச்சொல்லாக்கம் மிகவும் கடினம். அதேவேளை கலைச்சொல்லாக்கம் ஒரு நேர் வழி அல்ல, அது ஒரு குறுக்குவழி என்பதையும், அது முதன்மையானதல்ல, இரண்டாம் பட்சமானது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது ஓர் ங்கிலச் சொல்லுக்கு அல்லது தொடருக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அல்லது தொடரைக் கண்டுபிடிப்பதில் நாம் கொள்ளும் அக்கறையைக் காட்டிலும், அதனை வாசகருக்குப் புரிய வைப்பதில் நாம் அதிக அக்கறை எடுக்க வேண்டும். எமது கலைச்சொல்லே அதனைப் புரிய வைக்குமாயின், அதுவே சிறந்த தீர்வாகும். அப்படி அமைவதும் உண்டு: “ஊடு கதிர்” (X-ray). அப்படி அமையாததும் உண்டு: “கணியக் கோட்பாடு” (quantum theory).

இலங்கையில் quantum theory கணியக் கோட்பாடு எனப்படுகிறது. இதனை வைத்து இதன் பொருளை, அதாவது a theory based on the idea that energy exists in units that cannot be divided (Oxford Advanced Learner’s Dictionary) என்ற பொருளை வாசகர் புரிந்துகொள்ளப் போவதில்லை. அதாவது வெறும் கலைச் சொல்லாக்கத்திலிருந்து விளக்கம் பிறக்காது போகக்கூடும். அந்த வகையில் கலைச்சொல்லாக்கம் என்ற குறுக்கு வழி அதன் முக்கியத்துவத்தை இழக்கின்றது. ஒரு பொறுப்பு வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் பொருளுக்கே முதன்மை அளிக்க வேண்டும். அதாவது “பிரிக்க முடியாத அலகுகளைக் கொண்டதே வலு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கோட்பாடு” என்ற விளக்கத்துக்கே அவர் முதன்மை அளிக்க வேண்டும். இந்த விளக்கத்துக்கு இரண்டாம் பட்சமானதே கலைச் சொல்லாக்கம். இங்கே கணியக் கோட்பாடு என்ற கலைச்சொல்லாக்கம் இன்றியே வாசகருக்கு வேண்டிய விளக்கம் கிடைக்கிறது அல்லவா!

Science இந்தியாவில் “அறிவியல்” என்றும், இலங்கையில் “விஞ்ஞானம்” என்றும் குறிப்பிடப்படுகிறது. Science அல்லது “விஞ்ஞானம்” என்பதன் பொருள் அறிவியல் என்பதில் ஐயமில்லை. “அறி” என்று பொருள்படும் scire என்ற இலத்தீன் சொல்லே science-ன் தோற்றுவாய் (The Concise Oxford Dictionary). தாலால் இந்தியாவில் இது “அறிவியல்” எனப்படுகிறது போலும். இவ்வாறு சொற்பிறப்பியலுக்குக் கட்டுண்டு சொல்லாக்கத்தில் ஈடுபடுவது மிகவும் எளிது. எனினும் இதில் எச்சரிக்கை தேவை. இது எதிர்பாராத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, science “அறிவியல்” என்றால், ஏனைய இயல்கள் அல்லது துறைகள் “அறிவியல்கள்” காவா ? அறிவியல் என்று பொருள்படும் Epistemology-ஐ எவ்வாறு குறிப்பிடுவது ? Epistemology is a science என்ற வசனத்தை எவ்வாறு தமிழ்ப்படுத்துவது ? போன்ற வினாக்கள் எழுகின்றன. மறுபுறம் Science, “விஞ்ஞானம்” இரண்டும் திட்டவட்டமான முறையில் பொருளை உணர்த்துவது கவனிக்கத்தக்கது.

Philosophy-ஐ “தத்துவம்” என்று கொள்வது இலங்கையிலும் இந்தியாவிலும் நெடுநாளைய வழக்கு. அதனை “மெய்யியல்” என்று கொள்வோரின் எண்ணிக்கை தற்பொழுது பெருகி வருகிறது. அப்படி என்றால் realism என்ற சொல்லை எவ்வாறு தமிழ்ப்படுத்துவது ? Philosophy-ஐ மட்டும் “மெய்யியல்” என்று கொள்வதில் எஞ்சிய இயல்கள் மெய்யை நாடாதவை என்பது தொக்கி நிற்கிறது. இத்தகைய உட்கிடைகளைத் தவிர்ப்பதற்காகவே விஞ்ஞானம், தத்துவம் போன்ற சிற்சில வடமொழிச் சொற்களை ஈழத் தமிழ் இரவல் பெற்றுள்ளது போலும்.

அறிவியலாளர் கந்தையாவின் தாயகம் ஈழம்.

இராதாகிருஷ்ணன் ஒரு மெய்யியலாளர்.

மேற்படி வசனங்களை ங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தலைப்படும் ஒருவரை அறிவியலாளர், மெய்யியலாளர் கிய சொற்களின் நெகிழ்ச்சி திணறடிக்கக்கூடும். Epistemologist Kandiah hailed from Sri Lanka அல்லது Radhakrishnan was a realist என்று அவர் மொழிபெயர்க்கக்கூடும். மறுபுறம் கீழ்க்காணும் வசனங்களை எடுத்த எடுப்பிலேயே ங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்:

விஞ்ஞானி கந்தையாவின் தாயகம் ஈழம் (Scientist Kandiah hailed from Sri Lanka).

இராதாகிருஷ்ணன் ஒரு தத்துவஞானி (Radhakrishnan was a philosopher).

இலங்கை அரச சொல்தொகுதிகளில் இடம்பெற்றுள்ள பிற கலைச்சொற்களுள் சில வருமாறு:

artificial intelligence செயற்கை நுண்மதி

cell கலம்

compact disk இறு வட்டு

compulsory licensing கட்டாய உத்தரவளிப்பு

evolution கூர்ப்பு

de jure சட்டப்படி

gravity புவியீர்ப்பு

ipso facto அந்நிகழ்வாலே

metalanguage மீமொழி

photo synthesis ஒளிப்படத் தொகுப்பு

quantum கணியம்

stem cell அடிக் கலம்

source தோற்றுவாய்

சொல்லாட்சியைப் பொறுத்தவரை மொழிபெயர்பாளர்களிடையே ஒருமைப்பாடு (uniformity) தேவை என்பதையும் கே.ரவி சிறிநிவாஸ் உணர்த்தியிருக்கிறார். முதலில் இலங்கையின் உள்ளேயும் இந்தியாவின் உள்ளேயும் இந்த ஒருமைப்பாடு ஏற்படுவது முக்கியம். அப்புறம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒருமைப்பாட்டுக்கு வழி பிறக்கும். இலங்கை அரசகரும மொழிகள் ணைக்குழு 2000-ம் ண்டில் வெளியிட்ட “தகவல் தொழில் நுட்ப கலைச்சொல் அகரமுதலி”யின் முகவுரையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்: “தமிழ் நாட்டினதும் இலங்கையினதும் அறிஞர்களின் இணைவு முயற்சியினடியாக வெளிவரும் முதலாவது கலைச்சொல் வெளியீடு இது என்ற வகையில் இதற்கு மிகவும் முக்கியமான ஒரு இடமுண்டு. கடந்த நுற்றாண்டின் பின்னரைக் காலம் முதல் இத்தகைய ஒருங்கிணைப்பு முயற்சி நடைபெறல் வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வந்துள்ளது”.

ஜெயமோகன் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டுவது போல், தமிழில் எண்ணிறந்த வேர்ச் சொற்கள் மண்டிக் கிடக்கின்றன. அவற்றைக் கொண்டு அவர் 2000 கலைச்சொற்களைத் தொகுத்து வைத்திருப்பதாகவும் அவற்றை வெளியிடும் வகை அறியாது வருந்துவதாகவும் “திண்ணை”யில் அவர் குறிப்பிட்டதுண்டு. அவற்றை அவர் தனிப்பட்ட முறையில் வெளியிடலாகாது. சொல்லாட்சியில் ஒருமைப்பாடு இன்றியமையாதது. அகராதிகள், சொல்தொகுதிகள் எல்லாம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட வேண்டியவை. இலங்கையில் அரசகரும மொழிகள் ணைக்குழுவே சொல்தொகுதிகளை வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில் தனியார் அவ்வாறு செய்வதாகத் தெரிகிறது. அப்படி என்றால் ஒருமைப்பாடு ஓங்குவது எங்கனம் ? ஜெயமோகன் போன்ற சொல்லேருழவர்கள் ட்சியாளருடனும் பல்கலைக் கழகங்களுடனும் தொடர்புகொள்வதே நல்லது. ட்சியாளரும் பல்கலைக்கழகங்களும் அவர்களுடைய திரட்டுகளைக் கருத்தில் கொள்ளல் சாலும். தமிழகத்தில் ஓர் ட்சிமொழி ணைக்குழு இல்லை என்றால், ட்சியாளரின் உறுதுணையுடன் பல்கலைக்கழகங்களே அகராதிகளையும் சொல்தொகுதிகளையும் அதிகாரபூர்வமாக வெளியிட நேரும்.

தமிழில் வெளிவந்த ங்கிலம்-தமிழ் அகராதிகளுள் சென்னைப் பல்கலைக்கழக ங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியமே தலைசிறந்தது. The Concise Oxford Dictionary-ஐ அடிப்படையாகக் கொண்ட அந்த அகராதி 1965 வாக்கில் வெளிவந்தது. ண்டுக்கு 500 சொற்கள் ங்கிலத்தில் புதிதாக நுழைகின்றன. அதாவது அந்த அகராதி வெளிவந்த பின்னர் ஏறத்தாழ 20,000 சொற்கள் ங்கிலத்தில் நுழைந்துவிட்டன. கவே அதற்கு ஒரு புதுக்கிய பதிப்பு வெளிவரல் நலம்.

மு.கு: கே.ரவி சிறிநிவாஸ் என்ற பெயரில் உள்ள சிறியை அவர் எழுதியவாறு கிரந்த எழுத்தில் அச்சிடும் விதம் தெரியாமைக்கு வருந்துகிறோம்.

இவ்வண்ணம்

மணி வேலுப்பிள்ளை

manivel@rogers.com


இந்து, இந்தி, இந்தியா

முதலில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் திரு.விஸ்வநாத கக்கனுக்கு சில கேள்விகள்-

தாங்கள் பெற்ற உதவிக்கு பிரதிபலனாக தலித்துகள் கிறித்துவ, இசுலாமிய மதங்களைத் தழுவினால் குற்றம் என்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது, எவ்வாறு இந்துவாக மதம் மாறினீர்கள் ? காஞ்சி சங்கராச்சாரியாரும், சங்கபரிவாரங்களும் உங்களுக்கு என்ன உதவி செய்தார்கள் என்று கூற முடியுமா ? நீங்கள் ஏற்கனவே இந்துதான் என்று சொல்லாதீர்கள். தலித்துக்களை எந்த சாஸ்திரம் இந்து என்று சொன்னது, சொல்கிறது அல்லது சொல்லப்போகிறது ? சாஸ்திரங்களைச் சங்கராச்சாரியார் மாற்றப்போகிறாரா என்ன ?

சிறுபான்மை மதத்தினரின் மேல் நடத்தும் வன்முறையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரை அடிதடிக்குப் பயன்படுத்தி வரும் இந்துத்துவவாதிகள் இப்பொழுது கூட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு முறைகளை இந்து வழிமுறைகளாக ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்களது சிறு தெய்வங்களை இந்து தெய்வங்களாக ஏற்றுக்கொண்டதில்லை. அப்படியிருக்கும் பொழுது தலித்துக்களை எப்படி இந்துக்கள் என்று அழைக்கிறார்கள் ?

தலித்து தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் இந்து என்று ஏற்றுக் கொள்கிறார்களா என்று சங்கராச்சாரியாரைக் கேளுங்கள். ஆமெனில், நகரங்களுக்கு இடம் பெயர்ந்துள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இறை நம்பிக்கையை மதித்து நகரங்களிலுள்ள பெரிய கோயில்களில் அய்யனார், முனி, இசக்கி, சுடலைமாடன் சாமி சிலைகளை வைக்க அனுமதிப்பார்களா என்று கேளுங்கள். அப்படியில்லாமல் நீங்கள் உங்களின் வழிமுறைகளைக் கைவிட்டு மேல்தட்டு வழிமுறைகளைத்தான் ஏற்க வேண்டுமென்றால் அதற்குப் பெயரும் மதம் மாற்றந்தான். நீங்கள் இந்துவாக மாறுவது பாவம் என்று நான் சொல்லவில்லை. ஏற்கனவே சாதி இந்துக்களில் கல்வி, பண வசதியடைந்தவர்கள் அப்படி மாறி இன்று வாஸ்துவையும், வரலட்சுமியையும் தேடி வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அப்படியே செய்து உங்களை ஆர்.எஸ்.எஸ் வழிப்படி ‘விரைவாக முன்னேற்றிக் ‘ கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் இந்துவாக மதம் மாறவில்லை என்று பொய் சொல்லாதீர்கள். உங்களைப்போல் மற்ற தலித்துக்கள் பிற மதங்களுக்கு மாறுவது குற்றம் என்று கூறி தடை செய்யாதீர்கள்.

திரு. கக்கனின் பேட்டியை தட்டச்சு செய்த மண்ணாந்தைக்கும், பணம் கொடுத்து திருமாவளவன் போன்றவர்களின் மூளையை கிறித்துவ மதம் விலைக்கு வாங்கி விட்டதாக எழுதும் இந்து மதக்காவலர்களுக்கும் ஒரு வேண்டுகோள் — இந்து மதத்தை எதிர்ப்பதாலோ அல்லது மதமாற்றத் தடைச்சட்டத்தை எதிர்ப்பதாலோ ஒருவர் கிறித்துவ அல்லது இசுலாமிய மதத்தை உயர்த்திப் பிடிப்பதாக அர்த்தமில்லை. மதங்கள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதான். மக்களின் மயக்கத்தைப் பயன்படுத்தி சுரண்டலுக்கு வழி வகுப்பவை. இந்தியாவில் இந்து மதம் பெரும்பான்மையான மதமாக இருப்பதால், அது மதம் பிடித்துப் போவது மிக ஆபத்து என்ற பயத்தால்தான் இந்து மதத்தைப் பற்றிய விமர்சனம் இந்தியாவில் அதிகம் எழுகிறது. கிறித்துவம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் கிறித்துவத்தையும், இசுலாமியம் பெரும்பான்மையான நாடுகளில் இசுலாமியத்தையும் மதம் பிடிக்காமல் இருக்க அந்தந்த நாடுகளில் அம்மதங்களை அதிகம் எதிர்க்கிறார்கள் நல்லெண்ணம் கொண்டவர்கள். உதாரணம் வேண்டுமானால் கடந்த வாரத் திண்ணையில் வந்துள்ள கட்டுரையைப் (http://www.thinnai.com/pl01010413.html) படியுங்கள். முக்கியமாக, கடைசிப் பத்தியை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.

திரு.பி.எஸ்.நரேந்திரனிடம் ஒரே ஒரு கேள்வி —

பல புதிய விசயங்களைச் அலசி எழுதத்தெரிந்த நீங்கள், இந்தி பற்றி மட்டும் (இந்தி படிக்காததால் வட மாநிலங்களுக்குத் தமிழர் வேலைக்குச் சொல்ல முடியவில்லையென்று) தமிழ்நாட்டின் துக்ளக் கும்பல் சொன்னதையே கக்கிக் கொண்டிருக்கிறீர்கள் ஏன் ? சவாலாகக் கேட்கிறேன் கூறுங்கள், இந்தியாவின் பிற பகுதிகளில் வேலை கிடைத்த பின்னும், இந்தி தெரியாத ஒரே காரணத்தால் அங்கு செல்லாத ஒரு தமிழரின் பெயரையும், முகவரியையும் சொல்லுங்கள். (முதலிலேயே சொல்லி விடுகிறேன், துக்ளக் கும்பல் என்று நான் குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட சாதியினரல்ல. பாஸிச சாதியக் கட்டுமானத்தை மீட்டும், காத்தும், பாட்டாளி மக்களைச் சுரண்டி தங்களின் வசதியான வாழ்க்கைக்கு வழிவகுக்க நினைப்பவர் எந்தச்சாதியைச் சேர்ந்தவர் என்றாலும் துக்ளக் கும்பலில் அடங்குவர்)

வட இந்தியாவுக்கு வேலை செய்யச் செல்லும் தமிழர் இந்தி தெரியாமல் முதல் ஒரு வருடம் சிரமப்பட்டிருக்கலாம். மற்ற தென் மாநிலத்தவரும் இந்தி நன்றாகத் தெரியாததால் சிரமப்பட்டிருக்கின்றனர் என்பதை நான் டெல்லியில் பணியாற்றிய பொழுது கூறக்கேட்டிருக்கிறேன். தமிழர்களை விட கொஞ்சம் குறைவாகச் சிரமப்பட்டிருப்பர் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பெரும்பாலான தமிழர், குறிப்பாக ஆங்கிலம் நன்றாகத் தெரியாதவர்கள், ஓரிரு வருடங்களுக்குள் இந்தியைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கூட பார்த்தறியாத நான், டெல்லிக்குச் சென்ற ஒரே வருடத்தில் எழுத்துக்களை வாசிக்கத் தெரிந்து கொண்டேன், பேசுவதையும் ஓரளவுக்கு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆங்கிலம் நன்கு தெரிந்தும் உச்சரிப்பு வேறுபாட்டால் அமெரிக்காவில் கூட முதல் வருடம் நாம் சிரமப் பட்டிருக்கிறோம். பின்னால் போகப் போக எல்லாம் பழகிவிடும்.

உலக வரலாற்றில் மொழி, பண்பாடு போன்றவற்றால் முற்றிலும் வேறுபட்ட நாடுகளுக்குக் கூட பிழைப்பைத் தேடி எளிதாக இடம் பெயர்ந்து சென்ற இனங்களில் தமிழர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களுக்கு மொழி ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை. (Guilmoto, C.Z., 1993. The Tamil Migration Cycle, 1830-1950, Economic and Political Weekly, January 16-23, 111-120.) இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று பணிபுரியும் தமிழர்கள் யாருமே தமிழ்நாட்டில் இந்தி மற்றும் ஏனைய மொழிகளைத் கற்றுக் கொண்டவர்களில்லை. இப்படிப்பட்ட முழுப்பூசணிக்காய் உண்மையை துக்ளக் கும்பல்கள்தான் சோற்றில் மறைக்கிறார்கள் என்றால் உங்களுக்கு என்ன ஆயிற்று ?

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் இந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லாமல் கோடிக்கணக்கில் இருக்கும் இந்தியர்களை என்ன சொல்வது ? முட்டாள்கள் என்கிறீர்களா அல்லது தகுதியில்லாதவர்கள் என்கிறீர்களா ? கேப்பையில் நெய் வடிகிறது என்று துக்ளக் கும்பல்கள்தான் கூறுகிறார்கள் என்றால் நரேந்திரனுக்கு என்ன ஆயிற்று ? பட்டாக்கத்தியை அட்டைக்கத்தியாக மாற்றி விட்ட திமுக பைரவன்களைப் பற்றி நீங்கள் பழகிக் கண்டுபிடித்த பட்டறிவு, பகுத்தறிவின் மேல் பாய்வது ஏன் ?

இந்தியென்ன எந்தவொரு மாற்று மொழியைத் கற்றுக் கொள்வதிலும் நிறைய நன்மைகளுண்டு, தீமைகள் எதுவுமேயில்லை என்பதை அனைவரும் அறிவர். அதற்கான எந்தத் தடையும் தமிழ் நாட்டிலில்லை. குறைந்தபட்ச செயல்பாட்டுக்கான இந்தி கற்க வேண்டும் என்ற ஆவல் உண்மையிலேயே இருந்தால் 40 ரூபாய்க்கு கிடைக்கும் 40 நாள் மொழிக்கல்விப் புத்தகங்களை வாங்கிப் படித்தாலே போதும். ஆனால் துக்ளக் கும்பல் விரும்புவது வேறு. வட நாட்டுக்கு வேலைக்குச் செல்ல நினைக்கும் இளைஞர்கள் மக்கள் தொகையில் 1% கூடத் தேறமாட்டார்கள். அந்த 1 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களைக் காரணம் காட்டி அனைத்து மக்களின் வரிப்பணத்தில் தேவையோ இல்லையோ, விருப்பமோ இல்லையோ எல்லாரையும் இந்தி படிக்க வைக்க வேண்டும்.

கட்டாயப் படுத்தப்பட்டு தங்களுடைய வரிப்பணத்திலேயே எல்லா மக்களும் இந்தியைக் கற்றபின் எல்லாம் இந்திமயமாக்கப் படவேண்டும். அதன் பின்னால் இந்தியைத் தூக்கி குப்பையில் எறிந்து விட்டு, வழக்கொழிந்து போன சமஸ்கிருதத்தைத் திணித்து தங்களுடைய மேலாண்மையை இந்தியா முழுவதும் நிறுவ வேண்டும். தென்னிந்திய மொழிகள் அனைத்தும் தங்களுடைய தனித்தன்மையை இன்னும் இழக்காமலிருப்பதற்கு தமிழ்நாட்டில் எழுந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்ச்சிதான் காரணம் என்றும், அந்த எழுச்சிதான் இந்திவெறி பிடித்தவர்களின் வேகத்தைத் தடுத்தி நிறுத்தியது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் புகழ் பெற்ற கன்னட எழுத்தாளரும் முன்னாள் துணைவேந்தருமான யூ.ஆர்.அனந்தமூர்த்தி. அது தற்பொழுது என் நினைவுக்கு வருகிறது.

இந்தியை ஏற்றுக் கொள்ளாமலிருக்கும் பொழுதே, தொலைக்காட்சியில் துக்ளக் கும்பல் போட்ட ஆட்டம்தான் நாம் அறிவோமே. ‘தூரதர்ஷண் ‘ என்பதை ‘தொலைக்காட்சி ‘ என்றாலே பாவமென்று கூறிய இப்பிறவிகள் இன்று வெட்கங்கெட்டுப்போய் சென்னை அலைவரிசைக்குப் ‘பொதிகை ‘ என்று பெயர் வைத்ததேன் ? தமிழ்ப்பற்று வந்து விட்டதாக நினைக்கிறீர்களா ? தனியார் தொலைக்காட்சிகள் வந்ததால், தங்களுடைய திண்ணைக்கே ஆபத்து என்று அறிந்ததனால் பரிதாபமாக தொலைக்காட்சியை விட்டு விட்டு இப்பொழுது மைல் கற்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்!

இந்தியாவின் உண்மையான மேம்பாட்டுக்கு வழி சமூக, பொருளாதார வளர்ச்சியே!

சொல்லப்போனால் துக்ளக் கும்பல்களுக்கு இந்தி மேலும், இந்தியாவின் மேலும் கூட பற்றில்லை. தங்களுடைய மேலாண்மையை நிறுவதைத்தவிர எந்த நோக்கமுமில்லை. உண்மையிலேயே இந்தியாவின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் அக்கறையிருந்தால், இந்தி பேசாத மாநிலங்களை விட பல வகைகளிலும் பின்தங்கியிருக்கும் இந்தி பேசும் மாநிலங்களில் வாழும் அப்பாவி ஏழை எளிய மக்களின் எழுத்தறிவுக்கு, சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி திணிக்க வாரி வழங்கும் பெரும்பணத்தைச் செலவழிக்கலாம். மீதிப் பணத்தை புலம் பெயர்ந்து வாழ விருப்பப்படும் எந்த இந்தியரானாலும், தங்களைப் புது இடங்களுக்குத் தயார் செய்ய தேவைப்படும் பொழுது மட்டும் இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இலவசமாகக் கற்றுத் தர எல்லா மாநிலங்களிலும் மொழி மையங்களை ஏற்படுத்தலாம்.

புத்திசாலித் துக்ளக் கும்பல்களுக்கு இதுவெல்லாம் தெரியாததல்ல. கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள், மக்கள் கேணைகளாக இருக்கும் வரை. பல்வகை மொழிகள், மதங்கள் மற்றும் பண்பாடுகளின் ஊற்றுக்கண்ணாய்த் திகழும் பாரதத்தை, இந்து-இந்தி-சமஸ்கிருத மயமாக்கி, பாஸிச சாதியக் கட்டுமானத்தை மீட்டெடுத்து, பாட்டாளி மக்களைச் சுரண்டி தங்கள் வயிற்றை நிரப்புவதே அவர்களது ஒரே நோக்கம். அதில் பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் எந்த வேறுபாடுமில்லை. பாபர் மசூதியை இடித்து இந்து-முஸ்லீம் கலவரத்துக்குக் காரணமாக இருந்தது இரண்டு கட்சிகளின் கூட்டு சதிதான். தேசியம் பற்றிப் பேசிக்கொண்டே நதிநீர் சிக்கல்களிலெல்லாம் பிராந்திய வெறியை ஊட்டி, மாநிலக்கட்சிகளை விடக் கேவலமாக நடந்து கொள்வது இந்த இரு கட்சிகளும்தான்.

வெட்கங்கெட்ட தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகள் அவர்களின் முன்னால் மாறி மாறி மண்டியிட்டு பல்லக்குத் தூக்கி வருகின்றன. தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் ஒரு சட்ட மன்றத்தொகுதியைக் கூட வெற்றி பெறத் துப்பில்லாத பாரதிய ஜனதா, காங்கிரசு கட்சிகளுக்கு பெரும்பாலான தொகுதிகளை விட்டுக் கொடுத்து, தங்களுடன் தோளோடு தோள் நின்று துணிவுடன் போராடும் பொதுவுடைமைக் கட்சிகளையும், தலித்தியக்கங்களையும் இறுதி வரை இழுத்தடித்து அவமானப் படுத்தும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அழிந்து போனால்தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம். சங்கரபாண்டி

sankarpost@hotmail.com


வெட்டியாய் எழுதுவதை தொடரவேண்டம், கடைசி வரியை எழுதி நீலகண்டனே வெற்றி கொடி நாட்டிகொள்ளட்டும், என்றுதான் இருந்தேன். இப்போதும் அதுதான் நோக்கம். ஆனால் நீலகண்டன் வழக்கம்போலவே, யாருக்கும் சாத்தியமாகாத ஒரு தைரியத்துடன், ஒரு தவறான கணித/அறிவியல் தகவலை திண்ணை வாசகர்கள் பார்வைக்கு வைத்துள்ளதால் எழுதவேண்டியுள்ளது.

1. நீலகண்டன் சொல்கிறார், ‘ உதாரணமாக முனைப்புச்செயல்பாடுகளில் (point actions) பயன்படுத்தப்படும் Dirac delta function. இதன் வரையறை எவ்வாறெனில் ஒரு மாறுபடுகாரணி (variable)யின் மதிப்பானது 0 வாக அனைத்து delta(t) க்கும் இருக்கும், t யின் மதிப்பு 0 வாக இல்லாத வரை. delta(0) வின் மதிப்பு முடிவிலியாக இருக்கும். இது இணைக்கப்படுகையில் எதிர் முடிவிலியிருந்து நேர் முடிவிலிவரையாக இணைக்கவேண்டும். கணிதத்தின் தர்க்க அடிப்படையில் இத்தகையதோர் function அபத்தமானது. ஆனால் நாம் க்வாண்டம் இயற்பியலில் அதனை பயன்படுத்துகிறோம். ‘

நீலகண்டன் எழுதியுள்ளது ஒளரல். விஷயம் குறித்த முழு புரிதல் இல்லாமல், ஏதாவது ஒரு புத்தகத்தில், ஒன்றை படித்துவிட்டு அதை அப்படியே மொழிபெயர்க்கும் மேதவித்தனம்தான் இது. நீலகண்டன் இங்கே பேசும் ‘Dirac delta function ‘ , மிக தெளிவாக, கணிதத்தின் கறாருடன் வரையரை செய்யபட்ட ஒரு விஷயம். அவர் சொலவது போல் (அல்லது மொழிபெயர்துள்ளது போல்) ‘கணிதத்தின் தர்க்க அடிப்படையில் இத்தகையதோர் function அபத்தமானது ‘ என்பது உண்மையல்ல. function என்பதற்கான வழக்கமான ஒரு பொருளில், சட்டகத்தில் இதை வரையரை செய்யமுடியாது. ஆனால் ஒரு ‘distribution ‘ என்ற அதைவிட விரிவான ஒரு சட்டகத்தினுள், ஒரு ‘distribution ‘ என்ற பொருளில் இதை வரையரை செய்யமுடியும். செய்யபட்டிருக்கிறது. இதற்கு பின்னால் ‘distribution theory ‘ என்று ஒரு முழு துறையே இருக்கிறது. இதை விளக்க ஒரு இரண்டு வருட பாடம் எடுக்கவேண்டிவரும். இப்படி ஒரு தவறான தகவலை தந்து ‘சில தருணங்களில் கணிதத்தின் தர்க்க அமைப்பியல் சார்ந்த எல்லைகளை மீறி அல்லது அவை தகர்ந்த நிலையிலும் கணிதம் மொழியாக செயல்படுவதுண்டு. ‘ என்று அதிகபட்சமாய் ஓளரும் தைரியம் நீலகண்டனுக்கும், அவரது குரு ஹாரிசனுக்கும்தான் இருக்கமுடியும். நீலகண்டன் சொலவது போல் ஒரு எழவும் கிடையாது.

ஆனால் நீலகண்டன் ‘Distribution theory ‘ குறித்து கேள்விபடாமலிருப்பது எந்த விதத்திலும் குற்றமில்லை. அதை தவறாக புரிந்துகொண்டால் கூட குற்றம் சொல்லமுடியாது. ஆனால் அதை ஒரு ‘எல்லாம் தெரிந்த பாணியில் ‘ தவறான தகவலாய், அதுவும் ஹாரிசன் ஒளரிய தவறான விஷயத்தை நியாயப்டுத்த, அதுவும் தவறான விதத்தில் பயன்படுத்தியுள்ளத்தைதான் மன்னிக்கமுடியாது. தனது புளுகு பாணியை கணிதத்திலும், அறிவியலிலுமே கைகொள்ள தொடங்கிவிட்டவர் வேறு எதை விட்டுவைக்க போகிறார் ?

2. dirac delta function குறித்து அவர் சொன்ன தவறான தகவல் ஒரு பக்கம் இருக்கட்டும். அதை எப்படி ஒரு குழப்படி பாணியில் பயன்படுத்துகிறார் என்பதை பார்க்கவேண்டும். ஒரு பேச்சுக்கு ‘dirac delta function ‘ கணித தர்கத்திற்கு அப்பாற்பட்டதாக வைத்துகொள்வோம். அது எப்படி ‘கணிதம் ‘ இயற்கை மொழி என்பதற்கு சான்றாக முடியும் ? இதன் மூலம் கணிதத்தின் ஒரு வரிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்பு வர முடியும் என்றால் (ஹாரிசன், நான் குறிப்பிட்டுளது போல்) இந்த வாதம் சொன்னது சரியாகும். அதற்கும், ddf கணித வரையரைக்குள் ‘வராததற்கும் ‘ என்ன தொடர்பு ? இதுதான் நீலகண்டன். இவருடைய அத்தனை வாதங்களுமே இதே தரத்தவைதான்.

மற்றபடி நீலகண்டன் மீண்டும், மீண்டும் ஹாரிசனின் ஒளரலை நியாயபடுத்தும்விதமாய் வாதங்களை அடுக்கிகொண்டிருப்பது ஆபாசத்தின் எல்லைகளை எல்லாம் கடந்து கொண்டிருக்கிறது. கணிதம் அறிவியல் போன்ற விஷயங்களையே தவறான தகவல், பொய், திரித்தல் என்று சாத்தியப்படும் அத்தனையையும் செய்து தனக்கு சாதகமாக்கி கொள்வதை பார்க்கும்போது, மற்ற விஷயங்களில் அவர் என்னவெல்லாம் செய்யகூடும் என்று புரிந்து கொள்ளலாம்.

மிக தெளிவாக நான் எழுதிய பின்னும் வேண்டுமென்றெ அவர் இஷ்டப்படி வாதங்களை முன்வைத்து வருகிறார். கணிதம் என்ன, உலகில் எல்லாவற்றுக்குமே சூழலுக்கு ஏற்றபடித்தான் பொருள் வரும். ஒரு கணிதவாக்கியத்தில் A என்று சொல்லபடும் விஷயத்தை வேண்டுமானால் நீலகண்டன் என்று அழைக்கலாம். வீட்டுக்குள், திண்ணையில் நீலகண்டன் என்றால் அது அவரை குறிக்கும், இன்னொரு இடத்தில் பார்த்தால் அது விஷம் அருந்திய ஒருவரை குறிக்கலாம். Aக்கு பதில் நீலகண்டனை பயன்படுத்திய கணித வாக்கியத்தில், முன்னால் A என்ன பொருளை தந்ததோ அதே பொருளை மட்டும்தான் நீலகண்டன் தருவார். இதற்கு பெயர் பல வாசிப்பா, என்னய்யா ஒளரல் ?

ஹாரிசன் தெளிவாக ஒளரியிருக்கிறார். ‘Thus, it is fair to argue that mathematics, the language of Physics, is a natural language with all of the levels of multiple meaning and ambiguity of other such languages. In this view, then, the strong positions of Heisenberg and Schrய்dinger on the worldview of Quantum Mechanics is similar to an argument between two scholars of literary criticism on the meaning of a T.S. Eliot poem. ‘ என்று சொல்வது ஒளரலின் உச்சம். ஹாரிசன் ஏதோ சூழலுக்கு ஏற்பத்தான் எல்லாவற்றிற்கும் அர்த்தம் என்று சும்மா சொன்னால் பரவாயில்லை. மேலே உள்ளதையும், இன்னும் ‘In any case, the analogy between interpretations of poems and interpretations of scientific theories that I made above puts me into direct opposition to much of the following by D.H. Lawrence: ‘[Literary] criticism can never be a science: it is, in the first place, much too personal, and in the second, it is concerned with values that science ignores. The touchstone is emotion, not reason. ‘ — Phoenix: The Posthumous Papers ‘ என்று சொலவதனால்தான் இத்தனை பேசவேண்டியுள்ளது. நான் தெளிவாகவே இதை கணக்கில் எடுத்துகொண்டுதான் எழுதியுள்ளேன். அதெல்லாம் நீலகண்டனுக்கு ஒரு பொருட்டா ? ‘கணிதமொழி என்பதை, சில அடிப்படை axioms மற்றும் சில அடிப்படை சட்டதிட்டங்கள் கொண்டு உருவாக்கபடும் அதன் இயங்குதல் மொழியை குறிப்பிடுகிறேன் (என்று போனதடவையே சொல்லிவிட்டேன்.) அதை எந்த மொழியில் சொன்னாலும் ஒன்றுதான். சொல்லபோனால் எந்த மொழியையும் பயன்படுத்தாமலே வெறும் குறிகளை கொண்டு மட்டும், கணிதத்தை எழுதவும் முடியும். அந்த வகையில் கணிதத்தில் எழுதபடும் ஒரு வாக்கியத்திற்கு இரண்டு வாசிப்புகள், எந்த கட்டத்திலும் சாத்தியமில்லை. கணிதத்தில் ஒரு, ஒரே ஒரு வாசிப்புதான் எல்லா கட்டத்திலும் (அதை புரிந்து கொள்ளகூடிய) எல்லோருக்கும் சாத்தியம். இது ஒரு hypothetical statement. அதாவது கணிதம் குறித்து புரியாத மனிதர் நான் இதை இப்படி (தவறாய்) வாசிக்கிறேனே என்று சொல்வது குறித்து இங்கே சொல்லபடவில்லை. (ஹாரிசன் வாசிப்பாக அதைத்தான் சொல்கிறார்.) ‘

‘ஹாரிசன் செய்வது என்ன ? ஒரு கணித ஆய்வுதாளோ, இன்னும் சொல்லபோனால் எளிமையான கணிதம் தொடர்பான கட்டுரை எழுதினால் கூட சில குறியீடுகளின் அர்த்தங்கள் முதலிலேயே தெளிவாக வரையரை செய்யபட்டு விடும். A மேல் புள்ளி வைப்பதற்கு என்ன பொருள் என்பது தொடக்கத்திலேயே தெளிவு படுத்தபட்டுவிடும். பாடத்தை முதலிலிருந்து ஒழுங்காக படிக்கமல், திடாரென நடுவில் எதையாவது படிக்க முயலும் ஒரு ஹாரிசனுக்கு அது இஷ்டத்திற்கு தோன்றினால் அதற்கு பல வாசிப்புகள் இருப்பதாக அர்த்தமில்லை. இன்னும் சொல்லபோனால் ஒரே விஷயத்தை வேறு மாதிரி சுட்டினாலும் அர்த்தம் மாறிவிட போவதில்லை. நான் B.Sc. படித்து கொண்டிருந்தபோது, கணித தேர்வில் ஒருமுறை, வாத்தியார் வகுப்பில் பயன்படுத்தியிருந்த குறியீட்டை விட்டு , ( (x,y) எனபதற்க்கு பதிலாக (m,n) என்று ) வேறு ஒன்றை நான் பயன்படுதியதால், (மற்றபடி நான் எழுதியது சரியாக இருந்தும்), எனக்கு முட்டை போட்டிருந்தார். அந்த ஆசிரியரின் அறிவு தளத்தில்தான் ஹாரிசனும் இருக்கிறார். ‘

இப்போது சூழலுக்கேற்பத்தான் எல்லாம் பொருள் வருமாம்! ஹாரிசனை பின்பற்றி நீலகண்டனும் ஒளருவது குறித்து என்ன சொல்ல இருக்கிறது, ‘உதாரணமாக ‘ஒரு முக்கோணத்தின் உட்-கோணங்களின் கூட்டுத்தொகை 180 ‘ எனும் கணித வாக்கியம் யூக்கிளிடிய வெளுயில் உண்மையாயிருக்கும். ஆனால் ஒரு கோளத்தின் பரப்பின் மீது அது உண்மையாயிருக்க முடியாது. ‘ எம்பெருமான் நீலகண்டனால் கூட கோளத்தின் மீது ‘முக்கோணம் ‘ வரையமுடியாது, நம்ம நீலகண்டனுக்கு எல்லாம் முடியும். ஏன் வளைந்திருக்கும் பக்கங்களை உடைய ஒரு முக்கோணத்திற்கு இது பொருந்தாது என்று சொல்ல வேண்டியத்தானே! கணிதம் என்றால் அதில் முதலிலேயே முக்கோணம், அதன் உட்கோணம், கோணம், அது உட்கார்ந்திருக்கும் வெளி, இன்னும் சொல்லபோனால் 180கூட தெளிவாய் வரையரை செய்யபட்டிருக்கும். அதை படித்து இரண்டுவாசிப்புகள் வர எந்த வாய்பும் கிடையாது.

இதற்கு எளிமையில்லாத உதாரணம் தருகிறாராம், என்ன ? அதிமேதாவி கேட்கிறார், ‘கணித பதங்களான + அல்லது – தன்னளவில் என்ன பொருளுடையவை ? ‘ + , – இன்னும் பெருக்கல் வகுத்தல் எல்லாமே தெளிவாக வரையரை செய்யபட்ட விஷயங்கள். அதை செய்தது ரஸ்ஸல். இது கணகோட்பட்டின் அடிப்படையில் வரையரை செய்யபட்டுள்லது. இதில் எந்த ‘AMBIGUTY ‘யும் கிடையாது. தமிழின் போலி கவிஞர்கள் பாணியில் நீலகண்டன் ஒளருவதற்கு எந்த அர்தமும் கிடையாது. எந்த மதிப்பும் தரமுடியாது.

கணிதத்தின் அஸ்திவாரம் கணகோட்பட்டில் ஊள்ளது. பேசப்படும் அதன் அத்தனை கருத்தாக்கங்களும், கணம் என்பதன் அடிப்படையிலேயே வரையரை செய்யபடுகிறது. கணகோட்ப்பாடில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை, அது இட்டு சென்ற முரணியலை (PARADOX), ரஸ்ஸல் (+ வொயிட் ஹெட்) சமாளித்த விதம் குறித்தும், கணிதத்தின் கறாரான வரையரைகள் குறித்தும் நான் எழுத தொடங்கிய கட்டுரையின் ஒரு சிறிய பகுதியை திண்ணைக்கு சென்றவாரமே அனுப்பியிருந்தேன். ஆனால் அதை தொடர்ந்து எந்த அளவு எழுதமுடியும் என்பது தெரியாததால் திண்ணை அதை இன்னும் வெளியிடவில்லை. நான் ஒருவேளை விளக்காமல் போனால் கூட, நான் வார்த்தை தவறியவனாக ஆவேனே ஒழிய கணிதம் ‘இயற்கை மொழி ‘யாகாது.

நீலகண்டன் சம்பந்தமில்லாமல் விஷயங்களை திரிக்கிறார், அல்லது வேறு விஷயங்களுக்கு ஆதரவாய் உள்ள வாதங்களை இங்கேவந்து கொட்டுகிறார். ஒரு உதாரணம், ஜான் கஸ்டி என்று ஒருவர் சொன்னது. அது ஹாரிசன் சொன்னதையா நியாயபடுத்துகிறது. சட்டகங்களின் முழுமையினமை குறித்த கோடலின் தேற்றம் பற்றியது அது. உண்மையா, பொய்யா என்று நிர்ணயிக்க இயலாத வாக்கியங்கள் எல்லா சட்டகத்தினுள்ளும் இருக்கும் என்ற விஷயம் பற்றியது. (இது குறித்து நான் ஒண்ணரை வருடம் முன்னால் திண்ணையில் எழுதியிருக்கிறேன்.) ஆனால் ஒரு கணித வாக்கியத்திற்கு இரு பொருள் நிச்சயம் கொள்ள முடியாது. ( ஆனால் மிஸ்டர் கஸ்டி ‘semantic components ‘ என்று எதை குறிக்கிறார் என்று எனக்கு புரியவில்லை. அவரது கட்டுரையும் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து இல்லாமல் இஷ்டபட்ட விஷயங்கள் குறித்து பேசுவதாய் இரூகிறது. அவர் சொல்லும் விஷயம் எதுவும் தெளிவில்லை. ஆனாலும்) நிச்சயமாய் அது நீலகண்டனுக்கும், ஹாரிசனுக்கும் ஆதரவாய் இருக்கமுடியாது.

கணிதம் குறித்து நீலகண்டனுடன் வாதம் செய்வது போன்ற ஒரு அபத்தமான ஒரு சந்தர்பம் வாழ்கையில் இதுவரை எனக்கு வாய்த்ததில்லை. விஷயம் புரியாமல், நிறுவபட்ட சங்கதிகள் பற்றி நீலகண்டன் புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிடுவது அருவருப்பின் எல்லைகளை கடந்துகொண்டிருக்கிறது. இதில் சூர்யா போன்றவர்களின் பார்வையில் நான் ஒளருவதாகவும், அவர் அர்தத்துடம் பேசுவதாகவும் தெரிவது போன்ற ஒரு அவலம் இருக்கமுடியாது. இதுதான் தமிழின் ‘முக்கிய எழுத்தாளர்களின் ‘ தரம்.

3. நீலகண்டனின் குஜராத் கட்டுரை குறித்து நான் என்ன சொன்னேன் என்று தெரியும் என்றாலும் தனக்கு வசதியாக அதை திரித்து URL தரட்டுமா என்று கேட்கிறார். படிப்பவர்கள் கவனிக்கணும். இது போல் அவர் சாதூரயமாய் பேச வாய்பில்லாமல் தெளிவான குற்றசாட்டாக, கோயம்புத்தூரில் ‘தலித்கள்தான் இஸ்லாமியர்கள் மீதான கலவரத்தில் ஈடுபட்டதாக ‘ பொய்பழி போட்டுள்ளது குறித்து, நான் எழுதியுள்ளதை அவர் முற்றாக மறைத்து புறக்கணித்ததை கவனிக்கவேண்டும்.

4. அந்த எய்ன்ஸ்டான்/ஹெய்ஸன்பர்க் தவறு குறித்து சொன்னதற்கு மன்னிப்பு கேட்ட நீலகண்டனின் நடிப்பு இருக்கிறதே, அட.. அட..! யாருக்கு வரும் இப்படி ஒரு யதார்த்தமான நடிப்பு! படிப்பவர்களுக்கு அது புரியாது. இந்த விஷயம் தொடர்பாக அவருடன் மின்னஞ்சல் தொடர்பு வைத்த எனக்குதான் அது புரியும். (அதன் முதல் மின்னஞ்சலின் நகல் திண்ணைக்கும் அனுப்பபட்டது.)

5. கடைசியாக ஒரு விஷயம், இது நீலகண்டன் மோசடி செய்வதாக நான் சொல்லவில்லை. எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். ஒரு நினைவூட்டல் மட்டுமே. மண்ணாந்தை என்ற பெயரில் எழுதுவது வேறு யாருமல்ல, நீலகண்டன்தான். ரோஸா வசந்த்


Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா