வைர வியாபாரமும் வன்முறையும்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue


1950-களில் தென் ஆப்பிரிக்கக் கம்பெனி டி பீர்ஸ் கம்பெனி தன் வைர வியாபார மேலாண்மை குறையக் கண்டது. உலகின் ‘கச்சா ‘ வைரங்களின் 80 சதவீதச் சந்தையை டி பீர்ஸ் கம்பெனி ஆக்கிரமித்திருந்தது. ஆனால் சியரா லியான் நாட்டிலிருந்து லைபீரியாவிற்கு வைரம் கடத்தப்ப்படுவது நடந்தது. அங்கிருந்து உலகச் சந்தைக்கும் சென்றது. இதனால் டி பீர்ஸ் கம்பெனி தன் இஷ்டத்திற்கு வைரத்தின் விலையை நிர்ணயிப்பது தடைப்பட்டது. இதைத் தவிர்க்க டி பீர்ஸ் கம்பெனி கண்டுபிடித்த வழி : சர் பெர்சி சில்லிடோ என்பவரை தலைவராய்க் கொண்டு வரம் பாதுகாப்பு அமைப்பு என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தது. இவர் எம் ஐ-5 என்ற பிரிட்டிஷ் உளவு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். சில்லிடோ உடனே சியரா லியானிலிருந்து செல்லும் வைரத்தை வழிப்பறி செய்யும் ஒரு கூலிப் படையை உருவாக்கினார். மூன்று வருடத்திற்குள் இந்தக் கடத்தல் நின்று விட்டது.

டி பீர்ஸ் வரலாற்றில் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அந்தக் கம்பெனியின் வழமையான விஷயம். உலகின் வைரச் சந்தையில் 40ன் சதவீதம் டி பீர்ஸ் கட்டுப்படுத்தினாலும், அதன் முக்கிய வலிமை வைரச் சுரங்கத்தினால் அல்ல, சிண்டிகேட் என்ற மத்திய விற்பனை அமைப்பு வழியாய் வருவது தான். சிண்டிகேட் தான் வருடந்தோறும் எவ்வளவு விற்பனை செய்யலாம், என்ன விலை நிர்ணயிக்கலாம் என்று தீர்மானிக்கிறது. 2000-ம் ஆண்டு உலக வைர விலை நிர்ணயத்தில் தான் தலையிடுவதில்லை என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒரு சகாப்தத்தின் முடிவு என்று சொல்ல வேண்டும்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக வைரங்கள் அரிதான ஒரு பொருளாய் இருக்கும்படி டி பீர்ஸ் கம்பேனி பார்த்துக் கொண்டது. இதைச் செய்ய, அந்தக் கம்பெனி பல விதமாய் சந்தையைக் கட்டுப்படுத்தியது. தயாரிப்பாளர்களை ஒரு அணியில் இஇருக்கும்படி செய்தது. வைரங்கள் சேர்த்துவைக்கும் கம்பெனிகளைத் தவிர்த்தது. போட்டி இல்லாமல் பார்த்துக் கொண்டது. சைபீரியாவில் 1950-களில் பெரும் வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப் பட்டபோது, டி பீர்ஸ் சோவியத் யூனியனுடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. இதன்படி சைபீரியாவில் தயாரிக்கப் படும் வைரங்கள் எல்லாவற்றையும் சந்தைவிலைக்குச் சற்று அதிகமாக விலை கொடுத்து டி பீர்ஸ் வாங்கிக் கொள்ள முன்வந்தது. ஸைரே நாடு சிண்டிகேட்டை அல்லாமல் , எவரும் வாங்க முன்வராதபடி டி பீர்ஸ் பார்த்துக் கொண்டது. 20ம் நூற்றாண்டின் மிக வலிமையான கம்பெனிக் கூட்டு ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கி நிர்வகித்ததில் டி பீர்ஸ் பெரும் பங்கு வகித்தது.

ஒவ்வொரு ஐந்தாவது திங்கட்கிழமையும் லண்டனில் 17, சார்ட்டர் ஹவுஸ் என்ற முகவரிக்கு வைர வியாபாரிகள் படையெடுத்தார்கள். அங்கு வைரங்கள் அடங்கிய பெட்டி ஒன்றையும் அதன் விலயையும் வர்கள் பெறுவார்கள். அந்த விலைக்கு அவர்கள் வாங்கியாக வேண்டும் இல்லை, நிராகரிக்க வேண்டும். பேரத்திற்கு வழி இஇல்லை. ஆனால் ஒரு முறை வாங்காத வியாபாரி மீண்டும் அங்கு அழைக்கப் படமாட்டார்.

ஆனால் 80-களில் டி பீர்ஸ் 90 சதவீதம் சந்தையைக் கட்டுப்படுத்தியது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் ராஜ்யம் சுருங்க ஆரம்பித்தது. ரஷ்யாவுடன் இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்தவுடன் ரஷ்ய வைர வியாபாரத்தின் மீது டி பீர்ஸ் கட்டுப்பாடு செலுத்தமுடியாது போயிற்று. ஆஸ்திரேலியா, கனடாவில் புதிய சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மத்திய ஆப்பிரிக்காவிலும் , மேற்கு ஆப்பிரிக்காவிலும் நடந்த உள்நாட்டுக் குழப்பங்களினால் வைரக் கடத்தல் பெருகியது. டி பீர்ஸ் , வைரச் சந்தையின் மிகுதிப்பட்ட வைரங்களை வாங்கிச் சேர்த்து வைத்தது பெரும் நட்டத்தில் முடிந்தது. அந்த வைரங்கள் லாபம் ஈட்டாமல் கிடங்கிகளில் கிடந்தது.

டி பீர்ஸ் புதிய திட்டம் தீட்டியது. சிண்டிகேட் தொஇடர்ந்து இருந்தாலும் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள வைரங்களை விற்கத் தொடங்கியது. ஆனால் சந்தையின் மூன்றில் இரண்டு பங்கு இஇருப்பு இன்னமும் டி பீர்ஸிடம் இருப்பதால் விலை நிர்ணயம் இன்னமும் டி பீர்ஸ் கையில் தான். இப்போது டி பீர்ஸ் உள்நாட்டுக் குழப்பங்களினால் நாட்டிற்கு வெளியே வரும் வைரங்களை விற்பனை செய்யவிடாமல் தடை செய்ய வேண்டும் என்று நாடுகளை வற்புறுத்தி வருகிறது. (கூலிப்படையை தயார் செய்து தாக்குதல் நடத்திய கம்பெனி இன்று மனித உரிமை அமைப்புகளை நாடுகிறது.)

சந்தைச் சக்திகளை வெற்றிகரமாய்த் தோற்கடித்து வைரவிலையை அதிகமாகவே வைத்திருக்கும் டி பீர்ஸ் கம்பெனியும் , சிண்டிகேட்டும் அதன் நோக்கங்களில் வெற்றி பெற்றே வந்திருக்கிறது. விலை அதிகமாய் இருப்பது ஒரே பொருளை விற்கும் எல்லாக் கம்பெனிகளுக்கும் நல்லது தான் என்றாலும் , தன்னுடைய கம்பெனிப் பொருள்கள் அதிக அளவில் விற்கவேண்டும் என்பதும் கம்பெனி முயற்சி செய்யும். இந்த இரண்டையும் சமநிலைப் படுத்தி டி பீர்ஸ் கம்பெனி ஒரு கூட்டமைப்பை இவ்வளவு காலம் வெற்றிகரமாய் நடத்தி வருவது ஆச்சரியம் தான்.

———–

Series Navigation

செய்தி

செய்தி