‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

முன்னாள் பிகார் டிஜிபி ஓஜா


ஸிவான் எம்பி-ஆக இருக்கும் மொகம்மது ஷஹாபுதீனின் ஐ.எஸ்.ஐ தொடர்புகள் மற்றும் குற்றவாளிகளுடனான தொடர்பு பற்றிய அறிக்கையை பிகார் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததும் பிகார் டிஜிபி ஓஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்காக அருண்குமார் எடுத்த பேட்டியிலிருந்து.

உங்கள்து டிஸ்மிஸ் அரசியல்ரீதியானது என்று கருதுகிறீர்களா ?

அரசாங்கத்தின் ‘மூளை ‘ என்றறியப்படுபவர் ஜெயிலுக்குச் சென்று குற்றம்சாட்டப்பட்ட எம்பியை எல்லோரும் அறிய கொண்டாட்டத்துடன் சந்திக்கிறார். நான் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முறையும் தவறு தான். வேறென்ன சொல்லமுடியும் ?

லாலு பிரசாத் யாதவ் ஜெயிலுக்குச் சென்று எம்பியை சந்தித்ததைச் சொல்கிறீர்களா ?

எல்லோருக்கும் அது தெரியும். மக்கள் முட்டாள்கள் அல்லர்.

லாலு உங்களை ஒரு சதுரங்கக்காய் போல தனது அரசியல் விளையாட்டில் பயன்படுத்திக்கொண்டாரா ?

யாரும் என்னை ஒரு சதுரங்கக்காய் போல பயன்படுத்திக்கொள்ளமுடியாது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். அப்படிப் பயன்படுத்தமுடியும் என்றால் என்னை இப்படி டிஸ்மிஸ் செய்திருக்கமாட்டார்கள்.

நீங்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள் என்று சந்தேகித்தீர்களா ?

அது வருகிறது என்று எனக்கு எப்போதும் தெரியும். நான் ஷஹாபுதீன் பற்றிய வழக்குகளை நடத்தியவிதம், இந்த அரசாங்கத்துக்கு மிகவும் சங்கடம் தருவதாக இருந்ததுபோலத் தோன்றுகிறது.

உங்களால் சமாளிக்கமுடியாத படி அளவு மீறிவிட்டார்களோ ?

இல்லை. நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குத் தெரிந்தே இருந்தது. நான் சரியானபடிக்கு சட்டம் ஒழுங்கைக் கொண்டுவர முயற்சித்தேன். ஆனால் அரசாங்கம் துரதிர்ஷ்டவசமாக என் பக்கம் இல்லை. அரசாங்கம் தனது வேலையாளாக போலீஸ் இருக்க வேண்டும் என விரும்புகிறது.

இப்படி வெளிப்படையாகப் பேசும் குணம் உங்களது இந்த நிலைமைக்குக் காரணமா ?

தாங்கமுடியாத நிலை வந்தால் ஒரு போலீஸ் அதிகாரி என்னதான் செய்யமுடியும் ? ஒரு பெரும் காரியத்துக்காக சில தடைகளை உடைக்கத்தான் வேண்டும்.

இந்த டிஸ்மிஸ்க்கு எதிராக போராடுவீர்களா ?

நிச்சயமாக. இந்த விஷயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துக்கொண்டு செல்வேன். நான் ஏன் டிஸ்மிஸ் செய்யப்பட்டேன் என்பதை கண்டறிய முயல்வேன்.

ஷஹாபுதீனுக்கு எதிரான நீங்கள் திரட்டிய தகவல்களும் முடிவு பெறாத வேலையாய் இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அந்த விஷயம் நீர்த்துப்போய்விடும் என்று கருதுகிறீர்களா ?

சும்மா உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கும் ஆள் இல்லை நான். நான் சுப்ரீம் கோர்ட்டிற்குச் செல்வேன். ஷஹாபுதீனுக்கு இருக்கும் தொடர்புகளைப் பற்றி போதுமான தடயங்கள் என்னிடம் இருக்கின்றன. இந்த வழக்கு நீர்த்துப்போகாது.

Series Navigation

முன்னாள் பிகார் டிஜிபி ஓஜா

முன்னாள் பிகார் டிஜிபி ஓஜா