கடிதங்கள் – நவம்பர் 13,2003

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue


அன்புள்ள நண்பர் நாடோடி அவர்களுக்கு, வணக்கம் நாகூர் ரூமி.

சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்தேன். உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் விரயமாக்கிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. நான் ஆபிதீன் சாரு மூவரும் நாகூர்க்காரர்கள் என்பது மட்டுமல்ல ரொம்ப நெருங்கியவர்களாக இருந்தோம். தற்போது ஆபிதீன் பரமஎதிரி. நான் பார்த்தே ரொம்ப வருஷமாகிவிட்டது.

ஆபிதீன் எதிரியானதற்குக் காரணம் சொல்லவில்லையே ? ஒன்றுமில்லை, ஆபிதீன் எழுதிய நாவல்கள் அடங்கிய மூன்று டயரிகளை அவர் சாருவிடம் கொடுத்து வைத்திருந்தார். ஆனால் சாரு அதிலிருந்து சில பகுதிகளை ‘அப்படியே எழுதி ‘ தலைப்பை மட்டும் மாற்றி ‘தஸ்தகீர் நெய்தல் நிலக்குறிப்புகள் ‘ என்ற பெயரில் குமுதத்திலும் ‘சஃபர் ‘ என்ற பெயரில் இந்தியா டுடே தமிழிலும் எழுதி பரிசுகள் வேறு பெற்றார்! அதை ஆபிதீன் கேட்டதால் அவர் எதிரியாகிவிட்டார்.

இது பற்றிய விபரங்களும் நிரூபணங்களும் அடங்கிய ஆபிதீனின் சமீபத்திய சிறுகதைத் தொகுதி ‘இடம் ‘ சென்னை ஸ்னேகா வெளியீடாக வந்துள்ளது. முடிந்தால் வாங்கிப் பார்க்கவும். சாரு திருடியதற்கு ஆதாரமாக சாருவே கைப்பட எழுதிய கடிதங்களும் சாருவின் முதல் மனைவியாக வாழ்ந்து ‘பட்ட ‘ சகோதரி விசாலாட்சி (அமரந்தா) யின் கடிதம் உட்பட பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் மற்றும் நிரூபணங்களுக்கு ஆபிதீனின் வலைத்தளமான

என்ற முகவரியில் பார்க்கவும்.

ஒரு திருட்டு சொல்வதற்கெல்லாம் நீங்கள் பதில் எழுத வேண்டுமா என்பதுதான் என் வருத்தம்

அன்புடன்

நாகூர் ரூமி

07-11-03

Ambur

(ஒரு வார்த்தை நீக்கப் பட்டுள்ளது.)


திண்ணையின் வசீகரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாகூர் ரூமியின் ஒப்பீடுகள் திண்ணையின் இளம் எழுத்தாளர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கின்றன.

அன்புடன்,

அருண்பிரசாத்.

everminnal@yahoo.com


ஆசிரியருக்கு

தயிர் சாதம் கவிதை எனக்கு பிடித்தது- நானும் ஒரு தயிர் சாதப் பிரியை.உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒரு வேளை ஒரு வாய் தயிர்சாதம் சாப்பிட்டால்தான் மனம் நிறைவு பெறும், நிம்மதியாக தூக்கம் வரும்.தயிர் சாதத்துடன் ஊறுகாய் பற்றி அடுத்து அவர் கவிதை எழுதுவார் என்று நினைக்கிறேன்.

சுதா.R

rsudha_india@yahoo.com


கடிதங்கள்

‘ஜெயகாந்தன் விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம் ‘ என்ற சங்கரபாண்டியின் எதிர்வினைக்கு கடிதங்கள் பகுதியில் சரியான பதிலடி கொடுத்துள்ளார் பி.கே.சிவகுமார். சிவகுமாரின் கருத்துகளை நியாயமாக அரசியலும் சமூகமும் பகுதியில் வெளியிட்டிருக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை எந்த ஒரு பெண்ணும் பிரதமர், முதல்வர் போன்ற அதிகாரம் மிகுந்த பதவிக்கு வருவதை வெளிநாடுகளில் வசிக்கும் ஆணாதிக்கவாதிகள்கூட விரும்புவதில்லை. அதை நேரிடையாகச் சொல்ல முடியாமல் வேறு வழிகளில் சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

இத்தகைய ஆணாதிக்க மனப்பான்மை இல்லாதவர்களெனில், அதைத் தெளிவுபடுத்துவது அவர்களது கடமை. இந்தியாவைப் பொறுத்தவரை சோனியா காந்தி, ஜெயலலிதா, மாயாவதி போன்றவர்களுக்கும், அமெரிக்காவில் ஸெனட்டர்கள் ஹிலாரி கிளிண்டன், பார்பரா பாக்ஸர், மிச்சிகன் மாநில கவர்னர் ஜெனிபர் க்ரான்ஹோல்ம் போன்றவர்களுக்கும், உலக அரசியலில் ஷேக் ஹஸினா, மேகவதி சுகர்ணோபுத்ரி, பேநசிர் புட்டோ போன்றவர்களுக்கும் எதிராக எழுதுபவர்கள், பெண்கள் அதிகாரத்துக்கு வருவது குறித்த தங்கள் கருத்துகளை அதே கட்டுரைகளில் தெளிவுபடுத்துவது அவசியம்.

மேலும், சிவகுமாரின் கருத்துகளை ஸ்ரீகாந்த மீனாட்சியின் கடிதமும் உறுதிப்படுத்துகிறது. எல்லாத் தரப்பினரின் கருத்துகளையும் வெளியிடும் திண்ணையின் நடுநிலைமை பற்றி என் போன்றவர்களுக்குச் சந்தேகம் இல்லை என்றாலும் இந்த விவாதத்தில் திண்ணை ஒரு தலைப்பட்சமாக சங்கரபாண்டிக்குச் சாதகமாக செயல்படுகிறதோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தனிநபர் தாக்குதலும், கருப்புச் சட்டையும் காக்கி நிக்கரும் அணிந்த ஆணாதிக்கக் கருத்துகளும் வாசகரின் கவனத்தை எளிதில் கவரும் விதத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேலும், ஸ்ரீகாந்த மீனாட்சியின் கடிதம் சங்கரபாண்டிக்கு அனுப்பப்பட்டு, அவருடைய பதிலும் அதே பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதே அணுகுமுறை மற்றவர்கள் விஷயத்திலும் கடைபிடிக்கப்படுகிறதா என்பதைத் திண்ணை தெளிவுபடுத்த வேண்டும்.

மைதிலி நீலாவதி

mythili_nk@hotmail.com

(சங்கரபாண்டிக்கு திண்ணைக்குழு கடிதம் எதையும் அனுப்பவில்லை. நேரடியாக ஸ்ரீகாந்த் அனுப்பியுள்ளார். – திண்ணை குழு)


நாடோடியின் ‘சாரு நிவேதிதாவின் கோணல்கள் ‘ படித்தேன். அருமை. நவீன இலக்கியவாதிகள் என்று சொல்லிகொள்பவர்களுக்கு ஒரு சாட்டையடி. சூடு சுரணையற்ற சாரு நிவேதிதா போன்றவர்கள் இதைப்போன்ற கட்டுரைகளைப் பார்த்து திருந்திவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனினும் இதுபோன்ற சாட்டையடி விமர்சனங்கள் நிறைய வரவேண்டும். யார் வேண்டுமானாலும் ‘மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தலாம் ‘ என்று எண்ண பயப்படவேண்டும். விமர்சனம் எழுதவே சாரு நிவேதிதா இ-மெயில் ஐ டி-யும் தொலைபேசி எண்ணும் கொடுக்கிறார் என்று நினைத்தது நாடோடியின் தவறுதான்! ‘அமெரிக்கா வாருங்கள் பயணச்செலவு, தங்கும் செலவு, சுற்றிக் காட்ட ஏற்பாடு அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் ‘ என்று எழுதுவீர்கள் என்று சாரு நிவேதிதா எதிர்பார்க்கிறார். அவரிடம்போய் ‘தப்பாக எழுதாதீர்கள் ‘ என்று விமர்சனக் கடிதம் எழுதினால் அவருக்கு ஆபாசமாகத்தானே தெரியும்!!

‘தமிழக அசடுகள் ‘ என்று நாடோடிக் குறிப்பிடுகிறார். ‘முட்டாள் அசடுகள் ‘ என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன். இன்னும் ‘நானிருக்கும் நாட்டுக்கு வாருங்கள் செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் ‘ என்பதற்கும், வெளிநாட்டிலிருந்துகொண்டு மெனக்கெட்டு தொலைபேசியில் அழைத்து விடிய விடிய பேசிக்கொண்டிருக்கவும், புத்தகங்கள், இசைத்தட்டுகள் வாங்கி அனுப்பவும் தமிழக முட்டாள் அசடுகள் இருக்கும்வரை சாரு நிவேதிதா போன்ற அரைகளுக்கு ஒரு குறைவுமில்லை. இல்லையென்றால் ஒரு வேலையும் செய்யாமல் வீட்டில் உட்கார்ந்துகொண்டு 5 நட்சத்திர விடுதிகளில் குடித்துக்கொண்டு, ஓசியில் உலகம் சுற்றிக்கொண்டு, தற்புகழ்ச்சியில் ஆடிக்கொண்டு, திறமையானவர்களைக் கிண்டல் செய்துகொண்டு காலந்தள்ள முடியுமா ? தற்புகழ்ச்சியில் தலைகனம் கொண்டு ஆடுவது மட்டுமல்ல, சாரு நிவேதிதா ஒரு இலக்கியத்திருடர் என்பதும் இப்போது தெரியவருகிறது. கல்லூரிக்காலங்களில் நூலகத்திலேயே அவர் இருந்தது (அவரே அவ்வாறு கூறுகிறார்) வீண்போகவில்லை. இப்போது எதையாவது எழுதிவிட்டு, அவர் போல இருக்கிறது, இவர் போல இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். அதுகூட பரவாயில்லை. ஆனால் நண்பனாக -அதைவிட மேலாக ஒர் சகோதரனாகப்- பழகியவரின் புத்தகத்தையே வாங்கி வைத்துக்கொண்டு அதிலிருந்து பகுதிகளை எடுத்து தன் பெயரில் கதைகளாக அவர் வெளியிடுகிறார் என்று தெரியவந்திருக்கிறது! இந்த கேவலாமான பிழைப்பை என்ன சொல்ல ? அந்த நண்பர் மனம் வெதும்பி எழுதியிருப்பதை கீழ்கண்ட தளத்தில் பார்க்கலாம்:

http://abedheen.tripod.com/writing/abedletters1.html

அரசியலைவிட இலக்கிய உலகில் குழுக்கள் அதிகம் என்று நாடோடி கூறுவது அப்பட்டமான உண்மை. ஜெயமோகன்களும், ஜெயபாரதிகளும், ஞாநிகளும், ஸ்ரீநிவாஸ்களும் ‘திண்ணை ‘யில் அடித்துக்கொள்வதே போதுமான சாட்சியாக இருக்கிறது. இந்த கிறுக்குகள் எப்போது திருந்துவார்களோ ?!

குணசேகர கார்த்திகேயன்.

catch_with_me@yahoo.com

(திண்ணைக்குழு:ஒரு வார்த்தை நீக்கப் பட்டுள்ளது)


முதலில், அன்பர் சிவகுமார் என்னை ‘சங்கரபாண்டியின் நண்பர் ‘, ‘முனைவர் ‘ என்று அண்ணாதுரை-ஜெயகாந்தன் குறித்த என் கடிதத்தில் நான் பயன்படுத்தாத அடைமொழிகளோடு குறிப்பிடுவதின் நோக்கம் என்ன என்று புரியவில்லை. ஒருவேளை, எனக்கும், சங்கரபாண்டிக்கும் சேர்த்து ஒரே மூளைதான் இருக்கிறது என்று நினைத்திருக்கலாம். அல்லது இந்த அடைமொழிகள் தன்னுடைய வாதத்திற்கு வலு சேர்ப்பதாகவும் கருதியிருக்கலாம். அப்படியானால், இனிமேல் முனிரத்தினத்தின் புதல்வன், அய்யாசாமியின் பேரன் (என்னுடைய மின்னஞ்சல் முகவரியிலிருந்து யூகிக்கக் கூடிய அடையாளங்கள்) என்ற அடைமொழிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நோபெல் பரிசுகள் பற்றிய செய்திக் கட்டுரையை நானும், சங்கரபாண்டியும் இணைந்து எழுதியதன் காரணம் இருவரும் ஒன்றையொன்று முழுமைப்படுத்தும் வெவ்வேறு துறைகளில் பயிற்சியுடையவர்கள் என்பதால் எழுதும் விஷயம் துல்லியமாக இருக்கும் என்பதற்காக. பட்டப்பெயர்களை வைத்து பந்தாடிக் களிப்பது ‘திண்ணை ‘ எழுத்தாளர்கள் சிலரின் பொழுதுபோக்கு என்பதை தெளிவாகவே உணர்ந்திருக்கும் நான், மிகுந்த தயக்கத்துடனேயே ‘முனைவர் ‘ என்ற முன்னொட்டை, அறிவியல் விஷயங்களை எழுதும் கட்டுரையாளரின் கல்விப் பின்னணி ஒரு நம்பகத்தன்மையை அளிக்கும் என்ற காரணத்திற்காகச் சேர்த்தேன். தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள் எழுதும் முனைவர் விஜயராகவன், ஜெயபாரதன், மற்றும், துறைசார்ந்த விஷயங்களை எழுதுவதற்கும், பொது விஷயங்களை எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டை தெளிவுபடுத்திய கட்டுரையில் மட்டும் தன் பட்டம்-பதவிப் பெயர்களைச் சேர்த்து எழுதிய பேராசிரியர் வேதசகாயகுமார் ஆகியோரின் அடிகளையொட்டி செய்த முடிவு. மற்றபடி படிக்காத மேதைகளும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முனைவர் பட்டங்களை போட்டுக்கொள்வதில் எனக்கு ஆட்சேபனையும் இல்லை. தொழில் சாராது பெயர் எழுதும் தருணங்களில் பட்டங்களை சுமப்பதில் நம்பிக்கையும் இல்லை. சங்கரபாண்டிக்கும் இதேபோன்ற எண்ணம் இருக்கலாம். என் கோரிக்கையை ஏற்று அவர் எழுதித்தந்த பகுதியில் தன் பெயரைக்கூட போடாமல் தான் எனக்கு அனுப்பிவைத்தார். சங்கரபாண்டியிடம் கேட்ட கேள்விக்கு நான் பதில் அளிக்கக் காரணம், ‘முனைவர் ‘ பட்டத்தைச் சேர்த்த அந்த முடிவு, இறுதி வடிவத்தை ஆசிரியருக்கு அனுப்பிவைத்த என்னுடையது.

‘ஒரு நாட்டின் இறையாண்மைக்காக உயிர்விட்ட இந்திராவின் மரணத்தையும், திராவிட நாடு வேண்டும் என்று பிரிவினைவாதம் பேச அரசியலில் உயர்ந்த அண்ணாதுரையின் மரணத்தையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கும் மயக்கம் ‘ கொண்டவன் என்று குறிப்பிடும் சிவகுமார் அவர்களுக்கு, காந்தி, இந்திரா காந்தி ஆகிய இருவரையும் ஒரே தட்டில் வைத்துப்பார்ப்பதில் தயக்கமில்லை. இருவருடைய மரணங்களும் கொடூரமான முறையில் நிகழ்ந்தன என்பது உண்மைதான். அந்த வகையில் இந்திரா காந்தி இறந்தபோது பலரைப் போல எனக்கும் அனுதாபம் இருந்தது. ஆனால் இருவரும் ‘காந்தி ‘ என்ற பெயரைக் கொண்டவர்கள், வெவ்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர்கள் என்பவற்றைத் தவிர வேறெந்த முக்கியமான ஒற்றுமையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காங்கிரசின் குறிக்கோளான அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்தவுடன் இயக்கத்தை கலைத்துவிடவேண்டும் என்று விரும்பியவர் மகாத்மா காந்தி. கட்சியைக் கட்டிக்காத்து, தன் பரம்பரைச் சொத்தாக மாற்றிக்கொண்டவர் இந்திரா காந்தி. இருவரின் முடிவகளுக்கான காரணங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. மகாத்மா காந்தி பிரிவினையை ஏற்றுக் கொண்டதற்காக கொல்லப்பட்டார். இந்திரா காந்தி பிரிவினையைத் தடுக்க மேற்கொண்ட தீவிரச் செயல்களுக்காக கொல்லப்பட்டார் (தன் அரசியல் லாபங்களுக்காக, பிரிவினையைக் கோரியவருக்கு கொம்பு சீவிவிட்டவரே இந்திரா தான் என்ற பரவலான கருத்தும் உண்டு).

அரசியல் லாபங்களுக்காக மரணத்தைப் பயன்படுத்திய அண்ணாதுரையின் கட்சிதான் காங்கிரஸ் கட்சிக்கும் முன்மாதிரியாக அமைந்தது என்று சிவகுமார் கூறுவது வியப்பாக உள்ளது. தி.மு.க. போன்ற பிராந்தியக் கட்சியிடம், அதைவிட அரை நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தேசியக் கட்சியான காங்கிரஸ் இப்படிப்பட்ட மோசமான பாடத்தை கற்றுக் கொள்ளுமா என்ன ? டில்லியில் நடந்த வன்முறைக்கும் தி.மு.க. தான் முன்னோடியா ?

என் கேள்வி ஜெயகாந்தனுக்கு இந்திரா காந்தியின் மீதிருந்த அபிமானத்துக்கான காரணம் பற்றியதோ, மரணத்தின்போது அவர் எப்படி அனுதாபம் செலுத்தினார் என்பதோ அல்ல. அண்ணாதுரை மரணம் அடைந்தபோது வெளிப்பட்ட அனுதாபம் ‘ஒரு சமூக அநாகரிகமாக மாறி என் உணர்வுகளை வெகுவாகப் பாதித்திருந்தது ‘ என்று ஆரம்பித்து அவர் செய்துள்ள ஆரவாரங்களைப் பற்றியது–குறிப்பாக கும்பலுக்கும், கூட்டத்துக்கும் உள்ள வித்தியாசங்களைக் குறித்த வியாக்கியானம் பற்றியது. ‘சமூகரீதியாக, கலாச்சார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் என் எதிரிதான், இறந்தாலும் என் எதிரிதான் ‘ என்று பிரகடனம் செய்துவிட்ட ஒருவரிடமிருந்து அத்தகைய துணிச்சல் வெளிப்பட்டது இயற்கை (வெளிப்படுத்த முடிந்த சூழல் அன்று இருந்தது என்பதை வசதியாக மறந்துவிட்டாலும்). அந்த பேச்சுக்காக எழுத்தாளர் வாசந்தி தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல அந்தக் காலத்தில் ஜெயகாந்தன் ஒரு ‘புனித பிம்பமாக ‘ கருதப்பட்டார். இன்னும்கூட சிலபேர் வாய்ப் பிளந்து ஆச்சரியப்படுகிறார்கள். அப்போது ஒலித்த ‘காலத்தின் குரல் ‘ இந்திராவின் மரணத்தைத் தொடர்ந்து ‘கும்பல் சேராமல், கூட்டமாகக் கூடும் ‘ மரபில் வந்த காங்கிரஸ்காரர்களால், 8,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது எப்படி ஒலித்தது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் தான். அவருடைய துணிச்சலின் அடிப்படை சமூகப் பொறுப்புள்ள ஒரு கலைஞனின் நேர்மையா அல்லது அரசியல் வெறுப்பின் விளைவா என்று புரிந்துகொள்ளும் முயற்சிதான் நான் கேட்டதிற்கான காரணம். அதற்கான விடை நான் அறிந்தவரையில் எங்கும் கண்டதாக நினைவில்லை–சிவகுமாரின் பதில் உள்பட. இனிமேலும் யாரவது சுட்டிக்காட்டினாலும் புனித பிம்பத்தின் அரசியல் விமர்சன நேர்மையைப் பற்றிய என் மதிப்பீட்டை மாற்றிக்கொள்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை.

மற்றபடி எனக்கு பிடித்த/ஏதுவான கருத்துக்களை மற்றவர்கள் எழுதக்கோரும் நோக்கமில்லை. நான் குறிப்பிட்டபடி ஜெயகாந்தனை அரைகுறையாகத்தான் படித்திருக்கிறேன் (அந்த கட்டுரை வெளிவந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பும் என் அரைகுறை படிப்பில் அடங்கும்). அதனால் தான், சிவகுமாரே குறிப்பிட்டபடி ஜெயகாந்தனை முழுதும் படித்த அவரைப் போன்றவர்களிடம் கேட்டுப் பார்த்தேன். ‘இன்னொரு கோணம் காட்டுகிறது என்பதையும், விவாதத்திற்குரியது என்று தா(நா)ன் நம்புகிறவற்றையே தா(நா)ன் தட்டச்சு செய்துதர இயலும் ‘ சிவகுமார் சங்கரபாண்டியின், என் கடிதங்களுக்கு காட்டமான எதிர்வினை எழுதி, ஜெயகாந்தனை முழுமையாகப் படிக்காமல் (குறிப்பிட்ட கட்டுரை வெளிவந்த புத்தகம் உட்பட) புளகாங்கிதம் அடைந்துள்ள மற்ற இரண்டு கட்டுரை/கடிதம் பற்றி எழுத மறந்துள்ளதில் அவர் எதிர்பார்க்கும் ‘கோணம் ‘ தெளிவாகவே தெரிகிறது. ஜெயகாந்தன் ஆராதனைக்கான பின்னணியும் விளங்குகிறது. தனக்குத் தோதானவற்றை மட்டுமே மறுப்பதிப்பு செய்வார் என்பதைத் தெரிந்துகொண்டபடியால் என்னுடைய வாதத்தை இதோடு முடித்துக்கொள்கிறேன்.

***

மேலே எழுதியவற்றுக்கு தொடர்பில்லாத விஷயங்கள்:

1. கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்பத் தம்பிரான் மறைவு குறித்த ஞாநியின் செய்திக் கட்டுரை மறைந்த கலைஞருக்கு சிறப்பு செய்வதோடல்லாமல் ஒரு சின்ன சமூக விமர்சனமாகவும் இருந்தது. முடிந்தால் கூத்து பற்றிய என் அனுபவங்கள் சிலவற்றை அடுத்த இதழில் எழுதுகிறேன்.

2. புகாரியின் நூல்வெளியீட்டு விழா அழைப்பிதழில் பார்த்த பிறகுதான் அறிவியலாளராக மட்டும் நான் அறிந்திருந்த மதிப்பிற்குரிய பேராசிரியர் V. S. அனந்தநாராயணன் ஒரு கவிஞரும் என்று தெரிந்துகொண்டேன். அனந்த் என்றபெயரில் ‘திண்ணை ‘யில் கவிதைகள் எழுதியுள்ளவரும் அவர்தான் என்பதை மீண்டும் அவற்றைப் படித்த போது புரிந்தது.

மு. சுந்தரமூர்த்தி

munirathinam_ayyasamy@yahoo.com


பி. கே. சிவக்குமாரின் கடிதம் தொடர்பாக…

பி. கே. சிவக்குமார் ஜெயகாந்தன் என்ற முகமூடியை கழற்றி வைத்துவிட்டு நேரடியாகக் ‘கோதா’வில் இறங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சி. அந்த ர்வத்தில் என்னை தேசத்துரோகி, ணாதிக்க மனோபாவங்கொண்டவன் என்றெல்லாம் புகழ்ந்திருப்பது குறித்தும் மகிழ்ச்சியே. தன்னை இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்காக உழைப்பவர் என்றும், பெண்ணாதிக்கத்தை ஒழிக்க வந்த மகாத்மா என்றும் பெருமையாகச் சொல்லியது குறித்தும் இரட்டிப்பு மகிழ்ச்சியே. அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். ஜெயகாந்தனின் கொள்கை பரப்புவதால் மட்டுமே தானும் ஒரு மேதையென்று நினைக்கிறவர்களுக்கு இப்படிப்பட்ட மமதையிருப்பது ஒன்றும் வியப்பில்லை. இருந்தாலும், சில விசயங்கள் குறித்து சிவக்குமார் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு என்னுடைய பதிலைத் தர விரும்புகிறேன்.

1. ஏட்டுக்கல்வி அடிப்படையில் பெறும் முனைவர் பட்டத்துக்கும், மூன்றாம் வகுப்பு கூடப் படிக்காமலே வாங்கும் முனைவர் பட்டத்துக்கும் என்னைப் பொருத்தவரை எந்த வேறுபாடும் இல்லை. முனைவர் பட்டம் என்பது ஒருவருடைய ராய்ச்சி அறிவை கெளரவிப்பதற்காக வழங்கப்படுகிற படியால்தான் ஒருவர் முறைப்படியான கல்வி கற்காவிடினும், ஏதாவது ஒரு துறையில் தன்னுடய சிந்தனைத்திறன் மூலம் பங்களிப்பைச் செய்திருந்தால் பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்கிக் கெளரவிக்கின்றன. எதையுமே வர்ணாசிரம தர அளவுகோல் கொண்டு உயர்வு தாழ்வு பாராட்டுபவர்களுக்கு அது புலப்படாதுதான்.

திண்ணையில் வந்த எங்களுடைய அறிவ்ியல் கட்டுரையில் முனைவர் பட்டத்தை போட்டதன் காரணமே, தகுதி-தர நிர்ணயப் பண்டிதர்களான சிவக்குமார் போன்ற ‘ஜெ’ இரசிகர்கள், அக்கட்டுரை எழுத எங்களுடைய தகுதியைச் சந்தேகித்து விடக்கூடாது என்பதால்தான். அந்த ஒரு கட்டுரை தவிர எங்குமே என்னுடைய பெயருடன் முனைவர் ஒட்டிக் கொண்டதுமில்லை. யாருக்கும் என்னுடைய கல்வித்தகுதியைப் பற்றியும் நான் சொன்னதுமில்லை. அந்த கட்டுரையைப் படித்தபின் இப்பகுதியில் வாழும் சில தமிழ் நண்பர்கள் என்னுடைய பெயருடன் தற்பொழுது முனைவர் சேர்த்து அழைக்கும் பொழுது எனக்குக் கூச்சந்தான் மேலிடுகிறது.

2. 2003 FETNA மாநாடு தொடங்குவதற்கு முந்திய தினம், ஏற்கனவே அழைக்கப்பட்ட கவிஞர் ஒருவர் வர முடியாததால், என்னை கவியரங்கத்தில் கலந்து கொள்ள அழைத்ததால், கவிதை என்ற பெயரால் என்னுடைய கருத்துக்களை உரைநடையாய் எழுதி வாசித்தேன். அந்தக் கருத்துக்களில் சிலவற்றை மட்டும் ஏற்கனவே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் கெளதம் என்றொருவர். அவருடன் தற்பொழுது சேர்ந்து கொண்டுள்ளார் சிவக்குமார். திண்ணை வாசகர்களுக்கு நான் வாசித்த முழு கருத்துக்களையும் அப்படியே கொடுக்க விரும்புகிறேன். வாசகர்களே புரிந்து கொள்ளட்டும் சிவக்குமாரின் விஷமத்தனத்தை.

(கவிதை தமிழோவியம் இணையதளத்தில் உள்ளது. – திண்ணை குழு)

இதில் இந்தியாவுக்கெதிராக நான் ஒன்றும் புதிதாகச் சொல்லி விடவில்லை. மனித உரிமைக்குழுக்கள் அனைத்தும் ஏற்கனவே சொன்ன கருத்துக்கள்தான் அவை.

3. பிரதமராகும் தகுதி சோனியா காந்திக்கு இல்லை என்று நான் கூறியது பெண் என்ற அடிப்படையிலோ அல்லது வேற்று நாட்டவர் என்பதாலோ அல்ல. நான்கு வருடங்களுக்கு முன் ஜெயகாந்தன் அவரை பிரதமராக தரித்த பொழுது அவர் எந்த வித அரசியல் அனுபவமும் இல்லாதவர், இராஜீவ் காந்தியின் மனைவி என்பதைத் தவிர. (ரப்ரி தேவி முதல்வராக்கப்பட்ட பொழுது சிவக்குமார் எப்படிக் குதித்திருப்பார் என்று இங்கு கற்பனை செய்து பார்த்தேன்.) இப்பொழுது அவர் இந்திரா, இராஜீவ் காந்திகளை விட காங்கிரஸை நன்றாக நடத்திச் செல்லுகிறார் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

4. காஞ்சி ஜெயேந்திரரின் துறவறப் பொன்விழாவை கொண்டாடும் விழாவில், ஜெயகாந்தன் கூறிய (செப்டம்பர் 17, 2003 தினமணியில் வந்த) கருத்துக்களாவன: “துறவிகளுக்குச் சிறந்த மரியாதை தருவது நமது மண். ன்மிகவாதிகள் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களே வந்து இந்த தேசத்தை ண்டால் மிகச்சிறப்பாக இருக்கும். காவி பழுத்தால் சிவப்பு. சிவப்பு வெளுத்தால் காவி. னால் காவியை சிவப்பு எதிர்ப்பது ஏன் என்று புரியவில்லை”

சங்கராச்சாரியுடன் மேடையில் தோன்றியதையோ, அவருடன் கை குலுக்குவதையோ அல்லது பிரசாதம் வாங்கி சாப்பிடுவதையோ நான் குறையாகச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட நாகரீகங்களை எல்லோருமே கடைபிடித்து வருகின்றனர். (கலாப்ரியா கருணாநிதியுடன் மேடையில் தோன்றி அவரை தன்னுடைய “இலக்கியம் 101 சான்” என்று சொல்லியதை அநாகரீகமான செயலாகக் கருதுவது ஜெயமோகன்தான்.) பெரியாரைப் பாராட்ட நடக்காத கூட்டத்தில் கூட பெரியார் அங்கு இருக்கிறார் என்று அறிந்து தன்னுடைய மாற்றுக் கருத்துக்களை துணிச்சலாகச் சொன்னவர் ஜெயகாந்தன். தமிழ் நாடே பைத்தியமாக இருந்த வேளையில், அண்ணாவின் இரங்கல் கூட்டத்தில் சமூக நாகரீகத்தையெல்லாம் குப்பையில் போட்டு விட்டு, அண்ணாவைப் பற்றி தன் மனதில் பட்ட உண்மையை வெளுத்துக் கட்டினார் ஜெயகாந்தன். னால் இங்கு காஞ்சி ஜெயேந்திரரைப் பாராட்டுவதற்காக எற்பாடு செய்யப் பட்ட கூட்டத்தில், காஞ்சி ஜெயேந்திரரின் இந்துத்துவத்தை விமர்சிக்கத் தைரியம் இல்லையா அல்லது அவருடன் உடன்படுகிறாரா என்பதை சிவக்குமாரே சொல்லட்டும். காவியை(இந்துத்துவத்தை)ப் புகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், கம்யுனிஸ்டு கட்சிகளை இடித்தும் காண்பித்திருக்கிறார்.

5. பிராமணியம் (சாதியம்) என்றால் என்ன என்று தெரிய வேண்டுமானால் சிவக்குமார் இந்திய சமுக வரலாறு பற்றிய புத்தகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளட்டும். அல்லது இரவிக்குமாரைப் பற்றி படிக்க ரம்பித்திருக்கிற படியால், அவரிடம் நிறப்பிரிகை வணங்களைக் கேட்டுப் படித்துக்கொள்ளட்டும். வருணாசிரம தர்ம அடிப்படையான சாதிப்பிரிவுகளை இன்னமும் நம்பிக்கொண்டும் அவற்றுக்கு புதிய விளக்கம் கொடுத்துக்கொண்டும் தங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றிக்கொண்டு வருபவர்களைத்தான் பிராமணீயவாதிகள் என்று குறிப்பிடுகிறார்கள். அவர்கள் பிராமணர்கள் மட்டும் அடங்கவில்லை, எல்லாச்சாதியினரும் அடங்குவர். என்னைப்பற்றி எதுவும் தெரியாமலே, என்னுடைய கருத்துக்களை பற்றி எதுவும் அறியாமலே நான் அமெரிக்காவில் பல இழிசெயல்களைச் செய்து வருவதாகக் கூறிய சிவக்குமாரின் மெஞ்ஞானத்தை மெச்சத்தான் வேண்டும். ஒரு குறிப்பிட்ட சாதிக்கெதிராக கோஷத்தை தூக்கிப் பிடிக்கிறேனாம். நம்முடைய சாதியம் பற்றியும், சாதிகள் பற்றியும் இன்னொரு முறை விவரமாக என்னுடைய கருத்துக்களை தனிக்கட்டுரையாக எழுதுவேன். சுருக்கமாக அண்மையில் ஒரு யாஹூ குழுமத்தில் நான் கூறிய கருத்துக்களை அப்படியே தருகிறேன்:

From: ‘sudalaimadan ‘ sudalaimadan@y… Date: Mon Sep 29, 2003 7:47 pm

Subject: Re: An article in JU VI about Panchayathu

— In malar2003@yahoogroups.com

Brahmins are not part of any of these atrocities.

It is purely perpetuated by the non-brahmin upper

and middle castes.

Even Kanchi Sankaracharya (KS) or Brahminical_fanatic coterie

like R.Venkataraman or Cho Ramasamy are not doing this,

nor encouraging this kind of atrocities.

Non-Brahmin local leaders of all political

parties (except the communists and Dravidar

Kazhagam) are either doing this or mute spectators

of this. On the one hand, they criticize Brahmins

and on the other hand, they let this pass on silently.

But the Brahmins and the Brahminical_fanatic coterie

try to protect this most cruel Brahminical order.

The coterie does it intentionally and purposefully

while innocent Brahmins do it out of ignorance.

When this coterie is able to punish innocent leaders by

POTA for no unlawful act, they cannot bring or

implement a law against the caste crimes. When they

can ban century-old animal sacrifice without thinking

about the social consequences, they can not enforce

anything against caste crimes. The simple reason is

that they believe in the Brahminical order which states

that all humans are not equal by birth. It has been

repeatedly uttered by Kanchi Samiyar.

Fight Brahminism, that is the most cruel and vulgar

form of oppression in India. Even innocent Brahmins

need to be liberated from the clutches of Brahminism.

——-

Date: Mon Sep 8, 2003 7:10 pm

Subject: Re: Religion, Caste & Politics

I am not bothered about KS having his myopic views

on humanity. But it bothers me deeply when he wields

influence with central and state governments.

I recognize the self-respect of all ethnic groups,

languages and nationalities. Even though I despise

the caste system, caste meetings and caste feelings,

I do respect the cultural traits of castes, such

as food habits, names, language dialects, attire

etc.

However, I oppose the hegemonistic attitude of

one nationality, ethnic group, language group or

culture group over the another. If KS keeps his

Brahminical cultural trait to himself, I do not

care. But he wants to force it on the whole

state, i.e to hindufy and brahminify all the people

using the government apparatus.

6. சிவக்குமாரின் நான்கு பக்க பதில் முழுவதிலும் இவன் மூன்றாம் தரமான கட்சிகளான திமுக, மதிமுக கட்சி அனுதாபி, வைக்கோவின் சீடன் என்றெல்லாம் ஏகடியம் செய்திருக்கிறார். அவர் காங்கிரஸ் மீதும், நேரு பரம்பரை மீதும் கொண்ட பற்றைப் பார்க்கும் பொழுது நானும் திராவிடக்கட்சிகளின் அனுதாபியாயிருப்பது தப்பில்லைதான். FETNA மாநாட்டில் நான் படித்த கவிதையில் வரும் ஒரு வரியைப் பிடித்துக்கொண்டு அவர் கூறினாலும், என்னுடைய அனுதாபம் திராவிடக் கட்சிகளிடமிருந்து என்றோ போய் விட்டது. தேசியக் கட்சிகளை விட அவை தாழ்ந்து விட்டன என்று நினைக்கவில்லை. அல்லது திராவிடக்கொள்கைகள் மூன்றாம் தரமானவை என்று நினைக்கவுமில்லை. ஒன்று, திராவிடக் கட்சிகளின் தேவைக்கான காலம் முடிந்து விட்டது. இரண்டு, ஓரளவு வெற்றிக்குப் பிறகு அவை காலப்போக்கில் எல்லா இயக்கங்களைப் போலவும் இழிவடைய ரம்பித்து விட்டன. மூன்று, தலித்துகளின் மீதான சாதிய ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுபவர்களை திராவிட இயக்கங்கள் பாதுகாத்து வருகின்றன. அதன் விளைவுகள்தான் பாப்பாப்பட்டியும், கீரிப்பட்டியும். அதற்காக பார்ப்பனிய வாதிகள் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டிக்காக வடிக்கும் நீலிக்கண்ணிரை நம்பி விடப்போவதில்லை. உண்மையிலேயே தலித்துகளின் மீது கரிசனமிருந்தால் கட்டாய மதமாற்றத்துக்கான தண்டனை, கோயில்களில் மிருக பலிக்கான தண்டனை போன்றவற்றை உற்சாகமாகக் கொண்டுவரும் ஜெயலலிதாவும், ஜெயேந்திரரும், சாதிக் கொடுமை செய்வோருக்காக ஏன் கொடிய தண்டனை கொண்டு வரக்கூடாது. சாதிக்கொடுமை செய்யும் தேவரினத்தவர்களையும், வன்னியரினத்தவர்களையும், அவற்றுக்கு உடந்தையாக இருக்கும் மற்ற சாதி இந்துக்களையும் ஏன் சிறையில் அடைக்கவில்லை.

தற்பொழுது எனக்கு நம்பிக்கையளிப்பது தலித்து இயக்கங்களே. திராவிடக் கொள்கைகளின் காலகட்டம் முடிந்து விட்டது. தலித்தியம்தான் அடுத்தகட்ட விடுதலைக்கு இந்தியாவை எடுத்துச்செல்லக்கூடியது, அதற்கான தேவைதான் இன்று இந்திய சமூகத்தில் உள்ளது. அதற்காக திராவிடக் கொள்கைகளின் அக்காலத்தேவையயும் வெற்றியையும் மறுத்து அவை மட்டுமே இன்றைய இழிவுகளுக்குக் காரணமாகக் காட்டி, போலித்தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் பார்ப்பனிய மீட்புவாதத்தைக் கண்டு சும்மாயிருக்க முடியாது.

7. இறுதியாக, நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சி என்னுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது கேட்டார், “எதையெடுத்தாலும் ஏன் சாதிய அடிப்படையில் அலசுகிறேன்” என்று. சாதியம் என்பது இன்றைய சமூகத்தில் பன்முகங்களைக் கொண்டது. வெறி, பற்று, உணர்வு, சிந்தனை, அடையாளம், சாயல் என பலதரப்பட்ட நுண்மையான வேறுபாடுகளைக் கொண்டது. நம் அனைவரிடமும் சாதிய அடையாளமும், சாதியச் சாயல்களும் தெரிந்தோ தெரியாமலோ ஒட்டிக்கொண்டிருக்கின்றன. எனவே நம்முடைய அரசியல் நிலைப்பாடுகளுக்கு அவை கண்ணாடியாக அமைகின்றன. அதைப்பற்றி எடுத்துக்காட்டுகளுடன் பின்னால் தனியாக ஒரு கட்டுரையில் எழுதுவேன்.

சொ.சங்கரபாண்டி

sankarpost@hotmail.com


Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்