குறிப்புகள் சில 30 அக்டோபர் 2003

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


ஒபன் சோர்ஸ் – மக்கள் தொகைப் பெருக்கம்-இஸ்லாம் அறிவியல் நவீனத்துவம்-RulesPyar Ka Super Hit

Formula

ஒபன் சோர்ஸ் என்பது கணினி பென்பொருள் என்பதில் துவங்கி இன்று பல துறைகளில் கையாளப்படும் ஒரு கோட்பாடு/முன்மாதிரியாக உள்ளது.நவம்பர் 2003 wired இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை இது குறித்த ஒரு நல்ல அறிமுகக் கட்டுரையாக உள்ளது.மனித ஜீனோம் தகவல்கள், அறிவியல் சஞ்சிகைகள் வெளியிடுவது போன்று பலவற்றில் இதன் தாக்கம் உள்ளது. இந்த முன்மாதிரியை எப்படி பயன்படுத்த முடியும்,இதனை அடிப்படையாகக் கொண்டு புதியனவற்றை படைக்க முடியுமா, ஆம் எனில் எப்படி போன்ற கேள்விகளை எதிர் கொள்வது, உபயோகிப்பாளர் பங்கேற்ப்பு,ஒபன் சோர்ஸ் குறித்தும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஒபன் சோர்ஸ் ஒரு கூட்டு முயற்சி மூலம் புதியவற்றை படைப்பது, இருப்பவற்றை மேம்படுத்துவது சாத்தியம் , இதில் அறிவு சார் சொத்துரிமைகள் கூட்டு முயற்சிக்கு இடையூறாக இருக்க வேண்டியதில்லை என்று காட்டியுள்ளது.வளர்முக நாடுகளில் இதனை பலவிதங்களில் பயன்படுத்த முடியும்.Wikipedia என்ற இணைய கலைக்களஞ்சியம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.ஆர்வமுள்ள தனி நபர்கள் கூட்டாக செயல்படும் போது project gutenberg போன்ற திட்டங்கள் ஒரு நூலகத்தையே நம் முன் வைக்கின்றன. இதையெல்லாம் ஆராய்ந்த பென்க்லர்(benkler) Coase ‘s Penguin என்ற கட்டுரையில் ஒபன் சோர்ஸ் 21ம் நூற்றாண்டிற்கான முன்மாதிரி என்று கருத்து தெரிவித்துள்ளார். wired ல் வெளியாகியுள்ள கட்டுரை ஒபன் சோர்ஸ் எவ்வாறு நடைமுறையில் தீர்வுகளை காண உதவுகிறது என்பதை எளிய நடையில் விளக்கியுள்ளது. ஒபன் சோர்ஸ் என்பது ஒரு தத்துவமும் கூட, கோட்பாடும் , நடைமுறையும் ஒன்றை ஒன்று வளப்படுதுவதை இதில் காணலாம்.wiredல் வெளியான கட்டுரையை இணையத்தில் காண http://www.wired.com/wired/archive/11.11/opensource.html

open access journals என்ற புதிய வகை journals வெளியாகியுள்ளன.இவற்றினை இணையத்தில் இலவசமாகப் படிக்க முடியும்.வெல்கம் டிரஸ்ட் உட்பட பல அமைப்புகள் இதை ஆதரிக்கின்றன.

இந்த முறையில் கட்டுரை வெளியிட கட்டுரை எழுதியவர்(கள்) $1500 தர வேண்டும், கட்டுரை மதிப்பிடப்பட்டு பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டால். Science, Nature போன்ற journal கள் கட்டுரையை

வெளியட பணம் கோருவதில்லை. எனவே இம்முயற்சி வெற்றி பெறுமா என்று சந்தேகிப்பவர்களும் உண்டு.

பென்க்லரின் கீழ்கண்ட கட்டுரைகள் முக்கியமானவை

Benkler. 2002. Coase ‘s Penguin, or, Linux and The Nature of the Firm. 112 Yale L.J. (Winter 2002-03). Available at http://www.law.nyu.edu/benklery/.

Benkler. 2001. ‘A Political Economy of the Public Domain: Markets in Information Goods vs. The Marketplace of Ideas, ‘ in Expanding the Bound of Intellectual Property: Innovation Policy for the Knowledge Society (R. Dreyfuss, D. Zimmerman, H. First eds.). Oxford. 2001

பென்க்லர் தவிர ஜேம்ஸ் பாய்ல், லாரன்ஸ் லெசிக் எழுதியுள்ளவைகளும் முக்கியமானவை.சில மாதங்கள் முன்பு Research Policy ஒபன் சோர்ஸ் குறித்து ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது.


மக்கள் தொகைப் பெருக்கம் ஒரு பிரச்சினை என்றால் அதை எப்படி அணுகுவது. வெறும் மக்கள் தொகை

மட்டுமே பிரச்சினையா, இல்லை மூலவளங்கள் பயன்பாட்டுடன் இதை தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டுமா ?

உதாரணமாக ஒரு சராசரி அமெரிக்கர் ஒரு பங்களாதேஷ் நாட்டு குடிமகனை(சராசரி) போல் 30 பங்கு

அளவு மூலவளங்களை பயன்படுத்துகிறார் என்றால் இதன் பொருள் என்ன ? மக்கள் தொகைப் பெருக்கம்

அதிகரிக்காத போதும் நுகர்வு அதிகரித்தால் அதன் விளைவு என்ன ? அதிக மக்கள் தொகைப் பெருக்கமே பெரும் பிரச்சினை என்பதின் கருத்தியல் பிண்ணணி என்ன ?இது போன்ற பலவற்றை விவாதிக்காமல் நாம் மக்கள் தொகை பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாது. பெண்ணியவாதிகள் இனப்பெருக்க உரிமைகள்

(reproductive rights) என்ற கோட்பாட்டினை முன்வைத்துள்ளனர். பிரிட்டனில் உள்ள CornerHouse என்ற

அமைப்பு இது குறித்து பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

இவற்றை http://www.thecornerhouse.org.uk/ என்ற இணைய முகவரியிலிருந்து பெற முடியும்.


யூதர்கள்,அமெரிக்கா மற்றும் உலக வர்ததக அமைப்பு குறித்து மலேசிய பிரதமர் கூறிய கருத்துக்கள்

சர்ச்சை கிளப்பி உள்ளன.இத்தகைய கருத்துக்களை அவர் கூறுவது இது முதல் முறையல்ல என்றாலும்

OIC மாநாட்டில் அவர் கூறியுள்ளதால் அது இஸ்லாம் vs கிறிஸ்துவ,யூத மதங்கள் என்பதாக பொருள் கொள்ள இடமளிக்கிறது. ஈராக்கில் நடப்பது சாத்தானுக்கு எதிரான போர் என்று கூறியிருப்பதும்

சர்ச்சைக்குரியதுதான். மலேசிய பிரதமர் மஹாதிர் முகமது ஆற்றிய முழு உரையையும் வாசகர்கள்

படித்தால் ஊடகங்கள் சுட்டிக்காட்டாத, முக்கியமான செய்திகள் அதில் உள்ளதை அறிய முடியும்.(1)

அவர் பேச்சில் முஸ்லீம் நாடுகள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் பேசியுள்ளார்.அது உரிய கவனத்தைப் பெறவில்லை. கடந்த வாரம் வெளியான UNDP அறிக்கை ஒன்று அரபிய நாடுகளில் அறிவியல் வளர்ச்சிக்கான தடைகளைப் பற்றி விரிவாக குறிப்பிடுகிறது(2). அராபிய மொழியில் அறிவியல் தொழில்நுட்ப கருத்துக்களை வெளியிடுவதில் உள்ள பிரச்சினைகளையும் இது குறிப்பிடுகிறது. அறிவியல் வளர

தேவையான் சூழலை நிதியை அதிகரிப்பதால் மட்டும் ஏற்படுத்திவிட முடியாது. மாறாக கருத்து சுதந்திரம்,

விவாதிக்க தேவையான சூழல் போன்றவை தேவை. இவற்றிற்கு மத நம்பிக்கைகள், அரசுகளின் கொள்கைகள் தடையாக உள்ள போது அறிவியல் வளராது.பல இஸ்லாமிய நாடுகளில் தணிக்கை முறை ஏதோ ஒரு விதத்தில் அமுலில் உள்ளது. எனவே நூல்கள் வெளியிடுவதும் கருத்துப் பரிமற்றமும் எளிதல்ல. இவை குறித்து டேவிட் டிக்ஸன் எழுதியுள்ள Science and faith in the Muslim world என்ற தலையங்கம் பொருத்தமாக உள்ளது.இஸ்லாமிய சமூகம் கடந்த காலத்தில் கருத்துப் பரிமாற்றததை ஊக்குவித்தது, பல மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டன. அரேபியா ஆசியாவும், ஐரோப்பாவும் கலாச்சார ரீதியாக சந்திக்கும் பிரதேசமாக விளங்கியது. ஆனால் இன்று இஸ்லாமிய சமூகங்கள் நவீனத்துவத்தையும், அறிவியலையும் எதிர்கொள்வது தவிர்க்க இயலாத தேவை.இதை எப்படிசாத்தியமாக்குவது என்பதுதான் கேள்வி.டிக்ஸனின் தலையங்கம் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை.மஹாத்தியாரின் பல கருத்துகள் எனக்கு உடன்பாடனவை அல்ல.மீண்டும் மத்திய கால கண்ணோட்டத்தில், மத ரீதியாக நாடுகளை நாம் அணுககூடாது. சமூவேல் ஹ்ட்டிங்கடன் முன்வைத்த clash of the civilizations கருத்தும், மஹாத்தியர் முன்வைக்கும் சில கருத்துக்களும் பலத்த எதிர்ப்பினைக் கிளப்பியதில் வியப்பில்லை.

(1) http://www.oicsummit2003.org.my/speech_03.php

(2) http://www.undp.org/rbas/ahdr/


Rules Pyar Ka Super Hit Formula என்ற திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன்.மிக நன்றாக வந்திருக்க வேண்டிய திரைப்படம் சில காரணங்களால் சாதரணமான படமாக உள்ளது. வழக்கமான காதல் கதையல்ல.

காதலும், ஈர்ப்பும் வேறுபடும்/ஒன்றுபடும் இடங்கள் என்ன ? என்பதை இயக்குநர் பலமான திரைக்கதை மூலம்

இன்னும் சுவாரசியமாக சொல்லியிருக்கமுடியும். ஒரு சூபர் மாடல் மீது அதீத ஈர்ப்புக் கொண்ட ஒரு சாதரண, பிரமாதமான அழகில்லாத பெண் தன் அத்தை கூறும் விதிகளை கடைப்பிடித்து அவரை தன் வசமாக்க முயல்கிறாள்.அதில் வெற்றி கிடைக்கும் போது அவள் அது ஒரு விளையாட்டு என்பதை அவரிடம் கூறுகிறாள்.அதற்க்குப்பின்னும் அவர் அவளை விரும்புவதாக கூற அவளுள் எழும் குழப்பம், போராட்டங்களை படத்தில் இன்னும் சிறப்பாக காட்டியிருக்க முடியும்.இங்கு இயக்குநர் செண்டிமெண்டல் மெலொடிராமத்தனங்களை தவிர்த்திருக்கலாம்.தேவையில்லாத பல பாத்திரங்கள், அவை மூலம் சொல்லப்படும் கருத்துகள் படத்திறகு வலுச்சேர்க்கவில்லை.முடிவு வழக்கமான முடிவு.காதல் வெல்கிறது.பாட்டியாக வரும் தனுஜாவின் நடிப்பு மிக இயல்பு, மிகப் பொருத்தமும் கூட.

இயக்கம் பார்வதி கோபால்

நடிப்பு மிலின்ட் சோமன், மீரா வாசுதேவன், தனுஜா

ravisrinivas@rediffmail.com

Series Navigation