கடிதங்கள்

This entry is part of 34 in the series 20030607_Issue

ஜூன் 7, 2003ஆசிரியருக்கு,

இது வழக்கம் போல விவரமான கருத்து அல்ல, ஒரு உநி கோபம் மட்டுமே. சின்னகருப்பனின் வழக்கமான டிராமவை படித்தேன். சின்னகருப்பனின் வழக்கம் போன்ற குசும்புக்கு பொறுமையாய் ரவிஸ்ரீனிவாஸ் பதில் அளித்ததை `வைகிறார், முத்திரை குத்துகிறார் ‘ என்று கோபத்தில் புலம்புகிறார். `பாரம்பரியம் பேசுபவரை ‘ இந்துதவவாதி , பழமைவாதி என்றெல்லாம் சொல்ல விருப்பமில்லைதான். ஆனால் அதற்க்கு ஒற்றை உதாரணமாவது வேண்டாமா ? ஹிப்பாகரசி என்ற வார்த்தைக்கு முழு உதாரணமாய் இருந்தால் வேறு என்னத்தை சொலவது. ஒருபக்கம் சாதிபெயரை நீக்ககூடாது, வேர்கள் அழிக்கபடகூடாது, என்று டான்ஸ் காட்டும் சின்ன கருப்பன், இன்னொரு பக்கம் காலம் காலமாக தாங்கள் வாழ்ந்த நிலத்தை, மரத்தை, விலங்குகளை, கடவுள்களை, இன்ன பிற எல்லா ஆடையாளங்களையும் விட்டு கொடும் நகரத்தில் அநாதையாக்கபட்டு, ஒரு இனமே அணைக்கடு என்ற என்ற பெயரில் அழிக்கபடுவது குறித்து (அல்லது அதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து) எழுதியதை படிக்கவேண்டுமே, ஹிப்பாக்கரஸி என்றா வார்த்தைக்கு வேமு விளக்கம் உண்டோ ? சரி, சின்ன கருப்பனே, நீங்களும் மஞ்சுளா மாமியும் உங்கள் சாதிபெயரை குறிப்பிட்டு எழுதினால் பிறகு பேசலாம்.

Rosavasanth.


ஆசிரியருக்கு,

சின்னக்கருப்பன் என் கட்டுரையை படிக்காமலே பதில் எழுதியுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.ஒரே பூமி – ஒரே மதம் என்ற ‘மிஷினரி ‘ மனப்பான்மைதான் அவரிடமும் உள்ளது.நான் எழுதாததை நான் எழுதியதாக கருதி வாதிட்டால் விவாதம் எப்படி சாத்தியமாகும். பாரம்பரியம் என்பதை FETISH ஆக நான் மாற்ற விரும்பவில்லை.நரேஷ் அவசரப்படாமல் திண்ணையில் யார் யார் என்ன எழுதியுள்ளார்கள் என்பதை படித்தால் நல்லது. சில வாரங்களுக்கு முன் ஜெயமோஹனின் புதிய நூல் குறித்து திண்ணையின் கடிதங்கள் பகுதியில் எழுதியிருக்கிறேன். நரேஷ் அதைப் படித்தாரா என்று தெரியவில்லை.. ‘அ ‘ விற்கு முறையான பயிற்சியில்லை என்ற ரீதியில் நான் எழுதவில்லை. மறைந்த ஒரு தலைவரைப் பற்றி கிசுகிசு எழுதி அதை இலக்கிய விவாதம் என்று முன் வைக்கவில்லை. ஜெயமோஹன் ஒரு ஒப்பீட்டு அணுகுமுறையை முன் வைத்து கருத்துக்களை அஞ்சலிக் குறிப்பில் எழுதாமல் இருந்திருந்தால் நான் அவ்விதம் எழுதியிருக்க தேவையெழுந்ததுள்ளாது .யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கில்லை. ஜெயமோஹன் எழுதிய குறிப்பு பற்றி இணையத்தில் பதிவுகள் விவாத களத்திலும் கருத்துக்கள் உள்ளன.கவிதாசரண் இதழ்களைப் படித்தால் நரேஷ் சில விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம்.கோபிகிருஷ்ணன் மனநல ஆலோசனை மையம் ஒன்றை சில காலம் ஒரு நண்பருடன் கூட்டாக நடத்திவந்துள்ளார்.எனக்கு கோபிகிருஷ்ணன் பழக்கம் இல்லையென்றாலும், அந்த நண்பரைத் தெரியும்.நாங்கள் சந்திக்கும் போது உளவியல், உளவியல் சிகிச்சைகள் குறித்து பேசியுள்ளோம்.

k.ரவி ஸ்ரீநிவாஸ்


Series Navigation