கடிதங்கள்
மே மாதம் 30ஆம் தேதி, 2003
****
ஆசிரியருக்கு,
கோபிகிருஷ்ணனுக்காக நான் எழுதிய அஞ்சலியையும் விவாதமாக்கும் மனப்பான்மைக்கு வணக்கம்.
கோபிகிருஷ்ணனின் நோய் மற்றும் சிகிழ்ச்சை சம்பந்தமான விஷயங்கள் அனுபவம் சார்ந்தே சொல்லப்பட்டுள்ளன. மேற்கோள்களால் அல்ல. இவ்விஷயத்தில் நுனிவரை போய் தப்பித்த அனுபவம் எனக்கும் உண்டு .
அஞ்சலிக் குறிப்பில் இயல்பாக எழுந்த ஆதங்கமே உள்ளது . கோபிகிருஷ்ணனால் ஏற்கனவே சொல்லப்படாத அந்தரங்கம் எதுவும் எழுதப்படவில்லை. ஒரு எழுத்தாளனனைபற்றிய எக்குறிப்பும் அவரது படைப்புலகை புரிந்துகொள்ள மேலும் உதவவேண்டும் என்ற அளவிலேயே முக்கியமானது. என் குறிப்பு கோபிகிருஷ்ணனின் ஆக்கங்களை குறிப்பாக டேபிள் டென்னிஸ் போன்ற பூடகமான படைப்பை புரிந்துகொள்ள உதவுவது என்று படித்தவர்களுக்கு தெரியும்.
என்னைவிட பத்துவருடம் மூத்தவர் என கோபிகிருஷ்ணன் என்னிடம் சொன்ன நினைவில் அவரது வயது குறிப்பிடப்பட்டது. அஞ்சலிக்குறிப்பு ஆய்வுக்குறிப்பு அல்ல. அவசரமாக எழுதப்படும் ஒன்று
ஜெயமோகன்
***
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
சென்ற வாரம் வெளியான அலெக்ஸ் கிர்பி எழுதிய ‘ஆஃகானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம் ‘ என்னும் கட்டுரையில் ‘தீய்ந்த யுரேனியத்தின் ‘ [Depleted Uranium] கதிரியக்கம் அற்ற யுரேனியம் வளைகுடாப் போரில் பணி புரிந்த அமெரிக்கப் படை வீரர்களின் உடலில் அதிகமாக இருந்ததை அறிந்ததாகத் தெரிகிறது! தீய்ந்த யுரேனியத்தில் மெய்யாக இருக்கும் யுரேனிய ஏகமூலங்களான யுரேனியம்235, யுரேனியம்238 [Uranium Isotopes U235, U238], புளுடோனியம்239, மற்று முள்ள கழிவுகள் அனைத்திலும் கதிரியக்கம் உள்ளது! அணு உலையிலிருந்து எடுக்கப் பட்ட தீய்ந்த யுரேனியத்தின் கதிர்வீச்சுகளை நீக்கவே முடியாது!
1991 வளைகுடாப் போர், 2002 ஆஃப்கானியப் போர் அடுத்து சமீபத்தில் நிகழ்ந்த 2003 ஈராக்கிப் போர் அனைத்திலும் தீய்ந்த யுரேனியக் குண்டுகள் வீசப்பட்டுள்ள செய்தி சமீபத்தில் டெலிவிஷன் காட்சி ஒன்றில் வெளியானது! அமெரிக்கா மூன்று போரிலும், பிரிட்டன் கடேசி இரண்டு போரிலும் கதிர்வீச்சு யுரேனியக் குண்டுகளைப் பயன்படுத்தி யுள்ளது, முற்றிலும் மெய்யான செய்தி யாகும்!
ஏராளமான அளவு தீய்ந்த யுரேனியம் அமெரிக்கா, பிரிட்டன், மற்ற பல நாடுகளிடமும் உள்ளன! யுரேனியம் 2.5 மடங்கு இரும்பை விடக் கனமானதால், பகைவரின் இரும்பு டாங்க்குகளைத் தாக்கிப் பிளக்கவும், பாதாள இரும்புக் கோட்டைகளைத் தகர்த்து உடைக்கவும் தீய்ந்த யுரேனியக் குண்டுகள் போரில் பயன்படுத்தப் பட்டன! அது வெடிக்கும் போது சிதறும் கதிரியக்கத் துணுக்குகளைப் போடும் படையினரும், எதிர்க்கும் பகைவரும் நுகர்வோ அன்றி வாய்வழியாக உட்கொள்ளவோ ஏதுவாகிறது! வளைகுடாப் போருக்குப் பிறகு அவ்விதம் பரவிய கதிரியக்கத் தீண்டல்கள் [Radioactive Contaminations] ஈராக்கில் பல இடங்களில் காணப் பட்டுள்ளன! அந்தப் போரில் கலந்து கொண்ட சில பிரிட்டாஷ் படையினரும் கதிரியக்கத்தால் தாக்கப் பட்டுள்ளது பின்னால்தான் அறியப் பட்டது! இதில் வியப்பு என்ன வென்றால், 1991 இல் அமெரிக்கா தீய்ந்த யுரேனியக் குண்டுகளை ஈராக்கி டாங்க்குகளின் மீது வீசியது, நேச நாடான பிரிட்டனுக்குக் கூடத் தெரியாமல் ரகசியமாய் இருந்திருக்கிறது!
சி. ஜெயபாரதன், கனடா.
***
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
ரவி சீனிவாஸ் எழுதியதை தொடர்ந்து அக்கறையுடன் வாசித்துவந்தாலும், அவர் எழுதும் பசுமை அரசியல் பற்றிய குறிப்புகள் (அதனை ஒரு விளக்கக்கட்டுரை என்று கூறமுடியவில்லை) அதனைத் தொடர்ந்து வேறு புத்தகங்களை பயன்படுத்த உதவுமென்றாலும், கடிதப்பகுதியில் ஜெயமோகன் எழுதிய இரங்கல் கட்டுரையை தாக்கியது படு மோசமாக உறுத்துகிறது. ஜெயமோகன் எழுதிய இரங்கல் கட்டுரையிலும், உளவியல் பற்றிய அனைத்து புத்தகக் குறிப்புகளையும் கொடுத்து எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா சீனிவாஸ் ? ஒருவர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தார் என்று எழுதினால், ப்ராய்டிலிருந்து நவீன சைக்காலஜி டுடே வரையிலும் மேற்கோள் காட்டி எழுதவில்லை என்றால், ஜெயமோகனுக்கு படிப்பறிவில்லை என்றா அர்த்தம் ? தன் நண்பரைப் பற்றி உணர்வுப்பூர்வமாக உணர்ந்ததை ஜெயமோகன் எழுதுகிறாரே அன்றி, உளவியல் ரீதியான விளக்கக்கட்டுரையா எழுதுகிறார் ? காய்தல் உவத்தல் அன்றி என்ற வார்த்தை எல்லோரையும் விட அறிவுஜீவிகளுக்குத்தானே முக்கியமாக இருக்கவேண்டிய குணம் ? ஆனால் அவர்களுக்குத்தான் கண்மூடித்தனமான தனிமனித தாக்குதல் குணம் இருக்கும் போல இருக்கிறது. ஜெயமோகன் எதை எழுதினாலும் திட்டுவதையே வழக்கமாய்க் கொண்டிருப்பவர் இவர் என்பது இவருடைய பழைய கடிதங்களைப் படிக்கும் போது புரிகிறது.
வருத்தத்துடன்
நரேஷ்
**
- கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.
- புன்னகை
- கடிதங்கள்
- வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு
- 50 ரூபாய்க்கு சாமி
- பறவைப்பாதம் 3
- குதிரை
- நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5
- தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்
- வினையில்லா வீணை
- ஆண்களைக் காணவில்லை
- நான்
- ஞாபகம்
- சொறிதல்…
- என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்
- ஒருசொல் உயிரில்….
- தாழ் திறவாய், எம்பாவாய்!
- சித்திரமே என்னை சிதைக்காதே
- சிறுகதை – அதன் அகமும் புறமும்
- வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு
- இந்தி சினிமாவின் பத்துவிதிகள்
- கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)
- சத்துள்ள பச்சடி (ராய்த்தா)
- ஒற்றைச் சிறகு
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear
- அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவாக…
- மனம்
- இருக்குமிடத்தை விட்டு…
- கணினித் தத்துவம்
- ‘காலையும் மாலையும் ‘
- வளர்ந்தேன்
- இலக்கணக்குழப்பம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு
- ஓ கடிகாரம்!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு