பசுமையாகும் மார்க்சியமும்,புதிய பார்வைகளும்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

K. ரவி ஸ்ரீநிவாஸ்


மார்க்சியம்,இயற்கை,உற்பத்தி சக்திகள் குறித்து ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக விவாதம் நடைபெறுகிறது என்றால் பலருக்கு வியப்பாக இருக்கும்.மார்க்ஸ் கோதா திட்டம் ஒரு விமர்சனம் என்ற நூலில் ‘Labour is not the source of all wealth.Nature is just as much the source of use values ‘ என்று குறிப்பிடுகிறார்(1). இங்கு பயன் மதிப்பீடுகளின் மூலம் இயற்கை என்று என்று அவர் குறிப்பிடுவது கவனிக்கதக்கது.

இன்று மார்க்சை மறுவாசிப்பு செய்பவர்கள் மார்க்சின் சிந்தனைகளில் ஒரு பசுமைப் பரிமாணத்தை காண்கின்றனர் என்றால் அது மிகையல்ல. கடந்த 30/20 ஆண்டுகளில் சுற்றுச்சூழல், வளர்ச்சி, முதலாளித்துவம், அதற்கான மாற்றுகள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மார்க்சியர்கள் மட்டுமின்றி இதில் பெண்ணியவாதிகள், குறிப்பாக ecofeminits, பசுமை இயக்கம்கள்/கட்சிகள் தொடர்புடையவர்கள்,anarchists, சோசலிசவாதிகள் பங்கேற்று பல புதிய பார்வைகளை முன் வைத்துள்ளனர். பின் நவீனத்துவம்,Actor-Network- Theory போன்றவை முன்வைக்கும் கருத்துக்களையும் மார்க்சியர்கள் எதிர் கொண்டுள்ளனர்.

1970களிலும் அதன் பின்னரும் அமெரிக்கா,ஐரோப்பாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் பெருகின.இதுபோல் அமைதி/அனு ஆயுத எதிரிப்பியக்கங்களும் வலுப்பெற்றன.பசுமை கட்சிகள்/குழுக்கள் உருவாயின.பின்னர் இவை அரசியலில் ஈடுபட்டு, சில நாடுகளில் ஆட்சியில் பங்கேற்றன.மார்க்சியர்கள் இப்போக்குகளை ஒதுக்க இயலாத நிலை ஏற்பட்டது.சில இடதுசாரிகள் அமைதி/அனு ஆயுத எதிரிப்பியக்கங்களில் ஈடுபட்டனர் (அ) ஆதரித்தனர்.ஆன்றெ கோர்ஸ் (Andre Gorz) போன்றார் முன்வைத்த விமர்சனங்கள் குறிப்பிடத்தக்கவை.சமூக மாற்றம்/புரட்சியில் தொழிலாளி வர்க்கம் எப்போதும் முன்னோடியாக விளங்கும் போன்ற புரிதல்கள் கேள்விக்குள்ளாயின.மார்க்யுச்(marcuse) தன் நூல்களில் இது குறித்த வழக்கமான மார்க்சிய புரிதல் முன்னேறிய முதலாளித்துவ சமூகத்திற்க்கு பொருந்துமா என்ற கேள்வியை எழுப்பினார்.

இயற்கையின் மீதான மேலாண்மை குறித்து பிராங்க்பர்ட் மார்க்சியர் எழுதினர்.பிராங்க்பர்ட் மார்க்சியர் குறித்து தமிழில் எஸ்.வி.ராஜதுரை,வ.கீதா எழுதியுள்ள நூலை காண்க.ecofeministகள் இயற்கை மீதான ஒடுக்குமுறை,பெண்கள் மீதான ஒடுக்குமுறை இவை இரண்டையும் தொடர்புபடுத்தி காண்பவர்கள் எனலாம்.இது ஒரு எளிமையான விளக்கம்.வந்தனா சிவா,மரியா மீய்ஸ்,கரோலின் மெர்சன்ட்,இரீன் டையமண்ட்,க்ரெட்டா கார்ட்,அரியல் சலேஹ்,கரென் வாரென் ஆகியோரின் நூல்களை உதாரணமாக குறிப்பிடலாம்(2).இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.மேலும் ecofeministகளிடம் உள்ள கருத்து/பார்வை வேறுபாடுகளையும் கவனிக்கவேண்டும்.மீரா நந்தா, பீனா அகர்வால் முன்வைத்துள்ள கருத்துக்களும் முக்கியமானவை.மேரி மெல்லார் போன்றார் சோசலிச ecofeminism குறித்து எழுதுகின்றனர்.சாரம்சவாதம்(essentialism) ecofeminism குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.பின்நவீனத்துவம் ‘இயற்கையின் இயற்கை ‘ குறித்து கேள்விகள் எழுப்பியது.மீஷையில் பூக்கோவின் கருத்துக்கள் , குறிப்பாக govermentality என்ற கருத்து இன்று சுற்றுச்சூழல்-அறிவு-அமைப்புகள்-அதிகாரம் குறித்து ஆராய பயன்படுத்தப்டுகிறது. பூக்கோவின் கருத்துக்களை பெருமளவிற்கு பயன்படுத்தி எஸ்கோபார் வளர்ச்சி என்ற கருத்தாக்கம் குறித்து ஒரு முக்கியமான நூலை எழுதினார்.உலக வங்கி எப்படி வளர்ச்சி-இயற்கை முரணை எப்படிகையாள்கிறது என்பதை விளக்க govermentality என்ற கருத்தை பயன்படுத்துகிறார் மைக்கேல் கோல்ட்மான்.eco governmentality,green governmentality போன்ற வார்த்தைகள் இன்று உருவாகியுள்ளன. எரிக் டேரியர் பதிப்பித்த Discourse and Environment என்ற நூல் பூக்கோவின் கருத்துக்கள் இவ்வாறு பயன்படுத்தப்படுவது குறித்த முதல் நூல் எனலாம்.புரூனோ லாடுர்,ஜான் லா போன்றாரின் கருத்துக்களின் அடிப்படையில் Actor-Network Theory என்ற கருத்தாக்கம் இன்று முன்வைக்கப்படுகிறது.(இது குறித்து பின்னர்).வழக்கமான அரசியல் பொருளாதார கண்ணோட்டதை விட இது ஒரு சிலவற்றை விளக்க பெரிதும் பயன்படும் என்று கருதப்ப்டுகிறது. நோயல் காஸ்ரீ Actor-Network- Theory மற்றும் சூழலியல் மார்க்சியம் குறித்து எழுதுகிறார்.சுருக்கமாக சொல்வதென்றால் மார்க்சியர்கள் இத்தகைய சிந்தனைப் போக்குகளை எதிர்கொளவது தவிர்க்க இயலாத ஒன்று.இன்று பசுமை அரசியல் கோட்பாடு, பசுமை தாரளவாதம், சூழல்நவீனமயமாக்கம்(ecological modernisation) என அரசியல்-சமூகவியல் துறைகளில் பல புதிய கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன.மேலும் உலகாளவிய அளவில் உள்ள சூழல் பிரச்னைகள் குறித்து கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவிற்கு ஆய்வுகள் நடந்துள்ளன.உலகமயமாதலும்,சூழல் பிரச்சினைகளும் குறித்தும் பல நூல்கள் விவாதிக்கின்றன.மார்க்சியர்கள்/இடதுசாரிகள் இவ்வாறு பல துறைகளில் சுற்றுச்சூழல்/சூழலியம் பெற்றுள்ள முக்கியத்துவத்தை உண்ர்ந்துள்ளனர். நுகர்வு(consumption) குறித்து இன்று சமுகவியல்,சமுக உளவியல் துறைகளில் பல ஆய்வுகள் செய்யப்டுகின்றன(3).மார்கசிய கண்ணோட்டத்தில் மாநுடத்தேவைகள் குறித்து ஆய்வுகள் செய்யப்ப்டுகின்றன.

மார்க்சியம் என்பது மானுட விடுதலை குறித்து பேசும் தத்துவம் மட்டுமல்ல, அதனை நடைமுறையில் செயலாக்க விழையும் செயற்பாடும் ஆகும்.தாம் காண விரும்பிய கம்யுனிச சமூகம் குறித்த ஒரு விரிவான சித்திரத்தை தர மார்க்ஸ் விரும்பவில்லை.ஆனால் அது குறித்த அவரது எண்ணங்கள் அவரது எழுத்துக்களில் உள்ளன.இயற்கை-மானுடம்/மனிதன் பற்றி அவர் எழுதியுள்ளார்.அவரது சிந்தனைகளில் அந்நியமாதல் முக்கியமான ஒன்று.எனவே அந்நியமாதல்-தொழில்நுட்பம்-இயற்கை குறித்து ஆய்வது அவசியம்.தமிழில் அந்நியமாதல் குறித்து ராஜதுரை ஒரு நூல் எழுதியுள்ளார்.ஞானி,நாகராஜன் அந்நியமாதல் பற்றி எழுதியுள்ளனர்.ஆனால் அந்நியமாதல்-தொழில்நுட்பம்-இயற்கை குறித்து நான் இக்கட்டுரைகளில் அதிகம் கவனம் செலுத்த்ப்போவதில்லை.(4)இந்த விவாதங்கள் (அ) மார்க்சியமும் சுற்றுச்சூழலும் குறித்தோ சில கட்டுரைகள் மூலம் மிக விரிவாக விளக்க முடியாது என்பது வெளிப்படை. மாறாக சில நூல்கள்,சில கருத்துக்கள் ஆகியவற்றை முன் வைத்து மூலம் சிலவற்றை தெளிவாக்கமுடியும் என்று நினைக்கிறேன்.பசுமையாகும் மார்க்சியம் குறித்த ஒரு

புரிதலுக்கான ஒரு ஆரம்ப கட்ட முயற்சி என இதைக் கொள்க.

***

(1) Karl Marx (1875) Critique of The Gotha Program

(2) Ecofeminism as Politics by A.Saleeh என்ற நூல் குறித்த என் மதிப்புரை Economic and Political Weekly,April 10,1999 ல் வெளியாகியுள்ளது.(www.epw.org.in)

(3) உ-ம் Jhaveri, Nayna J. Consuming Ecologies: Emergent Environmental Studies ,Global Environmental Politics, Volume 3, Number 1, February 2003

(4) மார்க்சியம் குறித்த ஆய்வுகள் இதனையும் விவாதித்துள்ளன. (உ-ம்) Marx and The Domination of Nature:

Alienation,Technology and Communism Reiner Grundmann, EUI Working Paper 88/363, European University Institute,Florence,1988

***

ravisrinivas@rediffmail.com

Series Navigation