கடிதங்கள்
மார்ச் 2, 2003
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
‘கதிரியக்கச் சூழ்நிலையில் வாழ்வது ‘ பற்றிச் சென்ற வாரம் வந்த எனது கட்டுரையில் ஒரு திருத்தம். காலிஃபோர்னியாவில் உள்ள ஹான்ஃபோர்டு என்பது, வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஹான்ஃபோர்டு என்று திருத்தப் பட வேண்டும்.
******
நண்பர் சின்னக்கருப்பன் எதிர்காலத்தில் உறுதியாக வரப்போகும் ‘அணுப்பிணைவு சக்தியைக் ‘ [Fusion Energy] கனவு என்று புறக்கணிப்பது வியப்பாக இருக்கிறது! உலக முற்போக்கு நாடுகள் முழு முயற்சியில் மூழ்கி முன்னேற்றம் கண்டு வரும் ஒரு புது முயற்சியைக் கனவு என்று ஒதுக்குவது விந்தையாக உள்ளது! 1903 ஆண்டில் முதன் முதலில் அமெரிக்காவின் ஆர்வில் ரைட் தனது ஊர்தியில் மணிக்கு 30 மைல் வேகத்தில் 850 அடி பறந்ததைப் பார்த்துப் பலர் புறக்கணித்தனர்! 1914 இல் ராபர்ட் கோடார்டு மணிக்கு 60 மைல் வேகத்தில் 40 அடி உயரம் சென்ற அவரது முதல் ராக்கெட்டைக் கண்டு பலர் சிரித்தார்கள்! இப்போது விமானத் துறையும், ராக்கெட் விஞ்ஞானமும் அடைந்துள்ள மகத்தான வெற்றிகளை, நூறாண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்திருக்க முடியாது! அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவில் ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆசியாவில் ஜப்பான் போன்ற விஞ்ஞான முற்போக்கு நாடுகள் எல்லாம், அணுப்பிணைவு சக்தியின் எதிர்காலத்தை நம்பி மில்லியன் கணக்கில் டாலர் நிதியையும், திறனையும், காலத்தையும் கழித்து வருவது ஒருபோதும் கனவாக முடிவு பெறாது! இந்தியா தனது ஜன்னல் கதவுகளைத் திறந்து, அணுப்பிணைவு சக்தியில் வெளி உலகம் என்ன செய்து வருகிறது என்று காணாது கண்களை மூடிக் கொள்வது வரவேற்கத் தக்க முறை யில்லை! விஞ்ஞானப் பாதையில் முன்னேறி வரும் பாரதம், மேலை நாடுகளின் நிழல் படாமலே அணுப்பிணைவு முயற்சியில் ஒதுங்கிப் போனால் பிறகு பின்தங்கிய நாடாகிப் போய்விடும்!
சி. ஜெயபாரதன், கனடா.
ஜெயமோகன் எழுதிய தேவதை சமீபத்தில் வாசிக்க நேர்ந்த மிக முக்கியமான கதைகளில் ஒன்று . ஆன்மீகம் என்பதற்கு இருபக்கங்கள். சிறந்த மனிதனாக வாழ்வதன் மூலம் அடையப்ப்படும் ஆன்மீகம் ஒன்று. மனித வாழ்வின் பலவீனங்களையும் சிறுமைகளையும் நிராகரிக்காத ஆன்மீகம் அது. மண்ணில் நிற்குமான்மீகம் அது . இன்னொன்று கடவுளாக மாற விழையும் ஆன்மீகம். மனித குணங்களை நிராகரித்தபடியே செல்வது அது . வானத்தை நோக்கிய ஆன்மீகம் அது . இரண்டுவகையிலுமே மாமேதைகள் உள்ளனர். இவ்விரு ஆன்மீக நோக்குகளுக்கும் இடையேயான மோதலை அருமையாக சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். இசை என்னை ஒரு புழுவென உணரவைக்கிறது என்ற வரியில் கதை தொடங்குகிறது. விண்ணின் முடிவின்மை கீழே அபாச்சா , மேரி இருவருமே புழுவாக உணர்கிறார்கள்.அபாச்சா அழுகிறார். மேரி சிரிக்கிறார் . இரண்டுமே உச்ச நிலைகள்தான். மனம் நிறைவு பெறும் இதுபோன்ற கதைசித்த்ரிப்பு புள்ளிகள் மிக அபூர்வமாகவே நமக்கு கிடைக்கின்றன. சமீப காலமாகவே வித விதமான உத்திகளில், உத்திகளைமட்டுமே எழுதி அறுப்பவர்கள் மத்தியிலே இக்கதையின் கட்டுரை உத்தி மிகவும் கற்பனைகளை தூண்டுவதாக இருந்தது. காந்தியை நினைவுபடுத்தியிருக்கவேண்டிய அவசியமே இல்ல என்பதே குறை.
சிவம் கந்தராஜா
- ஜீவி கவிதைகள் இரண்டு
- கடிதங்கள்
- கிரிக்கெட் நாகரிகம்
- உலக வளத்தை நோக்கி முதல் அடிச்சுவடுகள்
- நினைத்தேன்..சொல்கிறேன்… காமாத்திபுரா பற்றி
- சோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை
- பரத நாட்டியம் – சில குறிப்புகள் – 1
- ஓ…. கல்கத்தா!
- வாயு (குறுநாவல் அத்தியாயம் மூன்று)
- மீண்டும் ஒரு காதல் கதை 2
- புத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும்
- அவர்களும் மனிதர்கள்தாம்!
- நீ… ? ? ? ?
- அது ஓர் நிலாக்காலம்
- பாத்திரம் அறிந்து….
- என் பிரியமானவளே !
- காதலே
- ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள்
- கானல் பறக்கும் காவிரி
- அழிவை அழி
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 13 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- சூரியதீபனின் ‘வினோதமான பண்பாட்டு அசைவுகள் ‘ : பழமை அறியாத பாமரர் ?
- அறிவியல் துளிகள்-16
- எனக்குள் ஒரு….
- ‘மனிதன்! கவிஞன்! முருகன்! ‘
- இரண்டு பேட்டிகளும் ஒரு எதிர்வினையும்
- கனவுகளும் யதார்த்தங்களும் சங்கமித்த சுவிற்சர்லாந்தின் ஐரோப்பிய குறும்பட விழா
- மழைக்காலமும் குயிலோசையும் மா. கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் நூலின் முன்னுரை
- நூலகம்
- உணவும் உயிரும் (ஜாக் லண்டனின் ‘உயிர் ஆசை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 50)
- விக்ரமாதித்யன் கவிதைகள் – ஒரு வாசிப்பு
- புத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும்
- சோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை
- பேரன்பு, கொடை, மற்றும் காதல் ரூமி (RUMI) கவிதைகள்
- வீடுகளில் ஒளிந்து கேடு செய்யும் ரேடான் கதிர்வீச்சு [Radon Radiation]
- டார்வின் தினம்
- தம்பி தாளெடுத்து வா – உரைவெண்பா
- என்னை வரைந்த படம் – உரைவெண்பா
- இன்றாவது மழை வருமா ?
- புத்தி
- முகம் பார்க்க மாட்டாயா ?
- என்னோடு நீ…
- வார்த்தை
- முகம்
- முகம்