இசைக்கலைஞர்களை ஒழிக்க பாகிஸ்தான் முயற்சி

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

அஸ்ஃபாக் யூசுப்ஜாய்


வடமேற்கு எல்லை மாகாணத்தில் (எல்லைக்காந்தி கான் அப்துல் கபார் கான் அவர்களது பக்தூன் பூமி. இது இன்னும் பாகிஸ்தானில் பிரிட்டிஷார் கொடுத்த North West Frontier Province என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது) இன்று இசைக்கலைஞர்கள் எல்லோரும் தங்கள் உடமைகளையும் இசைக்கலையையும் விட்டுவிட்டு வெவ்வேறு மாநிலங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம், இங்கு பதவியேற்றிருக்கிற இஸ்லாமிய மத அரசாங்கம் (MMA) இசையைத் தடை செய்திருப்பதுதான்.

NWFP முதலமைச்சரான அக்ரம் கான் துர்ராணி அவர்கள் பதவியேற்றதும் பேசிய முதல் பேச்சிலேயே சினிமாவுக்கும் இசைக்கும் தடை விதிப்பதாக அறிவித்தார். இந்தக் காரியங்கள் இஸ்லாமுக்கு எதிரானவை என்ற காரணத்தாலேயே அவர் இவற்றுக்குத் தடை விதித்தார். இசைக்கலைஞர்களை தங்களது இசைக்கருவிகளை வெளியே காட்டக்கூடாது என்று போலீஸ் உத்தரவிட்டிருக்கிறது. இசையைத் தடை செய்வது என்பது சாப்பிடக்கூடாது என்பது போல. ஏனெனில் இசைக்கு இவ்வளவு காலம் மிகவும் பழக்கப்பட்டுப்போய்விட்டார்கள். ஏற்கெனவே கஷ்ட ஜீவனத்தில் இருந்த சைக்கலைஞர்கள் இப்போது இசை தடை செய்யப்பட்டதும் இன்னும் அதிகமான கஷ்டத்தையே அனுபவிக்க வேண்டும்.

பஷ்டோ நாடோடி இசை என்பது மற்ற எந்த பிராந்திய இசை போலவே மிகவும் வளமையானது. மற்றவர்கள் நினைப்பது போலன்றி, பக்துன் இசை பக்தூன் மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு அங்கம். இது அவர்களது பாரம்பரியத்தோடும், நடைமுறை வாழ்க்கையோடும் இணைந்து எல்லா திருமண கொண்டாட்டங்களிலும், மற்ற விழாக்களிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த நடைமுறையே வழமுறை என்றிருந்தால், கலாஷ் பிராந்திய மக்கள் உண்மையிலேயே இந்த அமைப்புக்கு ஒரு அதிர்ச்சிதான் தருவார்கள். அவர்கள் தங்களது நெருங்கிய நபர் இறந்துவிட்டால் ஒரு வினோதமான ராகத்தில் பாடுகிறார்கள். பஷ்டூன் பிராந்தியத்தில் தோன்றும் பலவும் வெறும் தோற்றம் மட்டுமல்ல.

பெஷாவரில் வானொலி நிலையம் ஏற்படுவதற்கு முன்னால், பக்தூன் இசைக்கலைஞர்கள், வீட்டிலேயே செய்த தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளுடன் அவரவர் வீடுகளில் பாடிக்கொண்டிருந்தார்கள். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இவர்கள் தங்களது திறமையை , எல்லோரையும் கவரும் விதத்தில் மெய்மறக்கச் செய்யும் தங்களது இசை நிகழ்ச்சிகள் மூலம் நிரூபித்தார்கள். ஹஜ்ரா என்றழைக்கப்படும் ஆண்கள் விருந்தகங்களிலும் திருமண நிகழ்ச்சிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இதனால் இசைக் கலைஞர்கள் ஊக்கம் பெற்றனர். எல்லோருக்கும் கலையுணர்வு பொதுவானது தானே, பட்டாணியர்கள் விதிவிலக்கா என்ன ?

முதன் முதல் பஷ்டோ இசை பாட்டு மிர் அஹ்மத் ஷா அவர்களால் மர்தான் என்ற இடத்தில் 1918ல் பதிவு செய்யப்பட்டது. பிரிவினைக்கு முன்னர், பஷ்தோ இசையை வளர்த்தவர்களில் முதன்மையானவர்கள் மிர் அஹ்மத் கான், ஜார் கான், சோபத் கான், என்ஜார் கான், முஜாபர் கான் ஆகியோர். மென்மையான நளினம் நிறைந்த பல இசைப்பாடல்களை இவர்கள் பாடியிருக்கிறார்கள். தாப்பா, சார்பெட்டா, லோபா, நீமாகாய், பதலா, ருபாய் என்பவை இவர்கள் உருவாக்கிய சைப்பாடல்கள் ரகங்களே. இவை இன்றும் நாடோடிப்பாடல்களின் பிரிக்கமுடியாத அங்கமாகக் கருதப்படுகின்றன.

1935ல் வானொலி ஆரம்பிக்கப்பட்டதும், பஷ்டோ இசைக்கு பிரகாசமான காலம் தொடங்கியது. வானொலி பெஷாவருக்கு வரும்முன்னரே, பாகிஸ்தான் தோன்றுவதற்கு முன்னரே, ஆல் இந்தியா ரேடியோவில் பஷ்தோ இசை ஒலிபரப்பப்பட்டு வந்தது.

ஸப்ஜ் அலி கான், கும்ரோ ஜான், பச்சா ஜரீன் ஜான், அப்துல்லா ஜான், தில்பர் கான், மெஹ்ருன்னிஸா, சிஸ்டி சாமன் ஜான், ரபீக் ஷின்வாரி, பலாலி ஆகியோர் பஷ்டோ இசைக்கு அடித்தளத்தை ட்டார்கள். 1970லிருந்து 1990வரை இருந்த காலகட்டத்தை பஷ்டோ இசையின் அடுத்த கட்டம் எனச் சொல்லலாம். தில் அஹ்மத் கான், மிர் அஹ்மத் ஷா, ஃபாஸ்ல் ரபி, ஷெர் ஆஃப்கன், குல் ஃப்ராஜ் நியாஜி ஆகியோர் சிறப்பு பெற்றனர். பிறகு மஷ்ஊக் சுல்தான், மா ஜபீன் க்வாஷில்பாஷ், ஜார் சங்கா, குல்ஜார் ஆலம், சர்தார் அலி டக்கார், குல்ரெஜ் தபாஸ்ஸம், அப்துல் மாலிக் அடாஃப் ஆகியோர் வந்தனர். இவை இன்னும் வடமேற்குப்பிராந்தியத்தில் எல்லா வீடுகளிலும் தெரிந்த பெயர்கள்.

சமீபத்தில், நன்றாகக் கல்வியறிவு வாய்க்கப்பட்ட ஹரூன் பாச்சா, ரஹீம் ஷா ஆகியோர் பஷ்டோ இசையை முன்னேற்றியிருக்கிறார்கள்.இந்த படித்த இசைக்கலைஞர்கள் இசையை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று, இவைகளில் புதிய வடிவுகளையும் புதிய முறைகளையும் புகுத்தி எல்லா தரப்பினரும் இசைக்கும்படியாக ரசிக்கும்படியாக உருவாக்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் பிரபல சைக்கலைஞரான குல்ஜார் ஆலம் அவர்களை குடித்திருந்ததாக போலீஸ் கைது செய்தது. தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் சை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருக்கும்போது இவரைக் கைது செய்து வரை அவமானப்படுத்தியது போலீஸ். இவரை சில நண்பர்கள் போலீஸிடமிருந்து தப்பிக்க வைக்க உதவினாலும் இவரது சகாக்கள் அரசாங்கத்திலிருந்து வரும் இப்படிப்பட்ட பயமுறுத்தல்களால் பாதுகாப்பு உணர்வின்றி வாழ்ந்து வருகிறார்கள்.

வானொலியில் இதுவரை 10.5 மில்லியன் நிமிஷங்கள் பஷ்டோ இசை ஒலித்திருக்கிறது. 8000 பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இவற்றில் 5000 பாடல்களே பாதுகாக்கப்பட்டுள்ளன. ‘ என்று முன்னால் ரேடியோ பாகிஸ்தானின் பெஷாவர் மைய இயக்குனரான நிஸார் மொஹம்மது கான் கூறுகிறார். இந்த இசைப்பிரிவில் ஏராளமான புதிய கலைஞர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்றும், புதிய கருத்துக்கள் தோன்றியிருக்கின்றன என்றும், புதிய இசைக்கலைஞர்கள் சமீபத்தில் இந்த இசையைப் புரட்சிகரமாக மாற்றியிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்.

ஆனால் இன்று நிலை வேறு. ‘நான் இந்த தொழிலில் 40 வருடங்களாக இருக்கிறேன். இந்த வயதில் இன்னொரு தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். இந்த வயதில் யார் எனக்கு வேறு வேலை தருவார்கள் ‘ என்று ஒரு இசைக்கலைஞர் கூறினார். அவரைப்பொறுத்த மட்டில் கடந்த 2 மாதங்களாக எந்த நிகழ்ச்சியும் நடத்தவில்லை என்றும் மற்றவர்களிடம் கடன் வாங்கி வீட்டில் அடுப்பு எரிகிறது என்றும் கூறினார். இந்த இசைக்கான தடை, இந்த துறையில் இருக்கும் சுமார் 10000 ஆட்களை வருமானமின்றி வறுமையில் ஆழ்த்தும் என்று இந்தக் கலைஞர் கூறினார். பிராந்திய கலாச்சாரம் என்று எது இருந்தாலும் அந்தக் கலாசாரத்தை அழிக்கத்துடிக்கும் தீவிரவாதிகளிலிருந்து பஷ்டோ இசையைக் காப்பாற்ற வேண்டிய ஒரு அவசியத்தேவை இன்று இருக்கிறது.

***

9 February 2003, Sunday issue of Dawn.

***

Series Navigation

அஸ்ஃபாக் யூசுப்ஜாய்

அஸ்ஃபாக் யூசுப்ஜாய்