கடிதங்கள்
பெப்ரவரி 2ஆம் தேதி 2003
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
திரு. விஜயானந்தை பாரட்ட இக்கடிதம். அவரது கவிதை மிகவும் நன்றாக உள்ளது.
இருப்பினும் ஒரே ஒரு கேள்வி. அவரது கவிதையில் அவர் கூறியுள்ளது அனத்தும் அவர் பெற்றவையா அல்லது அவர் தேடுபவையா ? இல்லை இதுவும் மற்ற கவிஞர்களைப் போல் முக்தி அவரது கற்பனையிலா ?
அன்புடன்
நாயேன் பேயேன்
அன்புள்ள ஆசிரியருக்கு,
மாயாவதியைத் திட்டுவது ஏன் என்ற கட்டுரை ஒரு பக்கம் மாயாவதி செய்த செலவை ஆதரித்தாலும் அது பொருந்தாதது என்பதே என் கருத்து. எல்லோருக்கும் பொதுவான அரசாங்கப்பணத்தை வீண் விரயம் செய்வது எதுவானாலும் கண்டிக்கப்பட வேண்டும் என்பதே சரியான விஷயமாக இருக்க முடியும். ஜெயலலிதா செய்த ஆடம்பரத் திருமணத்தைக் கண்டித்து தமிழக மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள். அப்பொது அவரை இந்திய பத்திரிக்கைகள் அனைத்துமே கண்டித்துதான் எழுதின. யாரும் அதனை நியாயப்படுத்தவில்லை. மேலும் அந்த வீண்செலவுக்கு லல்லு பிரசாத் யாதவும் வந்திருந்தார்.
அரசாங்கப்பணம் எல்லோருக்கும் பொதுவானது, அது மேல்சாதி கீழ் சாதி என பார்த்து, என் சாதி ஆட்கள் செய்தால் பரவாயில்லை என எழுதுவது சரியான முறை அல்ல.
சிபிச்செல்வனின் கவிதைகளும் சிறப்பாக இருந்தன. அவரது கவிதைகள் பற்றி எழுதிய பாவண்ணனின் கட்டுரையும் சிறப்பாக இருந்தது.
நரேஷ்
அன்புள்ள ஆசிரியருக்கு,
இந்த வாரம் வந்திருந்த அனைத்துக் கவிதைகளுமே மோசம். சிபிச்செல்வன் கவிதை உட்பட. இதனால் நான் திண்ணையில் கவிதைகள்படிப்பதையே நிறுத்திவிடலாம் என்று இருக்கிறேன். ஆசிரியராவது இந்த கவிதைகளை ஒருமுறை படிக்கிறாரா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.
திண்ணையில் வந்திருந்த கட்டுரைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை மாயாவதியை திட்டுவது ஏன், வாய்பாயிக்கு எழுதிய கடிதம் ஆகியவை. சின்னக்கருப்பனின் உடைந்த ஜன்னல்களும் நாறும் பாத்ரூமும் கட்டுரை நான் ஒப்புக்கொள்ளமுடியாத நிலைப்பாட்டில் இருந்து எழுதப்பட்டிருந்தாலும், அவரது வெளிப்படையான எழுத்துக்கு என் பாராட்டுக்கள் என்றும் உண்டு.
இளமுருகு.
அன்புள்ள ஆசிரியருக்கு,
மகாத்மா காந்தியின் மரணம் பற்றிய ஜெயபாரதனின் கட்டுரை வினோதமாக இருந்தது. எல்லாமே சொன்ன விஷயங்களே. எதுவும் தமிழ் மக்களுக்குத் தெரியாத விஷயமில்லை. எந்த ஒரு புது பார்வையையும்,புதிய செய்தியையும் அது சொல்லவில்லை. மிகைப்படுத்தப்பட்ட அந்த கட்டுரையில் என்ன சொல்கிறார் கட்டுரையாளர் என்பதே தெரியவில்லை.
மருதுக்குமார்
- என் தாய் பண்டரிபாய்
- கடிதங்கள்
- பதினோராம் அவதாரம்
- இளமை
- கலைமன்றம் வழங்கிய காணிக்கை
- இந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது
- ஐரோப்பிய குறும்பட விழா
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம்
- இந்த வாரம் இப்படி- பிப்ரவரி 2, 2003
- காத்திருப்பாயா…
- இட்லி
- ‘படைத்தவனைத் தேடுகிறேன் ‘
- அமைதி
- இரண்டு கவிதைகள்
- சின்னவரே! சின்னவரே!
- இன்னொரு உயிர்…
- அவனுக்கென்று ஒரு வானம்…
- சனநாயக நாடென்னும் போதினிலே….
- புதிய தானியம்
- அறிவியல் துளிகள்-12
- தினகப்ஸா
- இந்த வார அறிவியல் செய்திகள்
- இந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது
- அன்பு என்னும் மாமருந்து (ஸ்டாபன் கிரேனின் ‘அவமானம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 46)
- புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (முதல் பகுதி)
- காணாமல் போன ஒரு சிறுபத்திரிகையாளன்
- சொன்ன கதைகளில் சொல்ல மறந்த கதைகள்: தேவர் மகனும் தலித் மகளும்
- எங்கேயோ கேட்ட லொல்லு
- அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய கெலென் ஸீபோர்க் [Glenn Seaborg] (1912-1999)
- புரட்சித்தலைவரும் சூப்பர் ஸ்டாரும் கோவை சரளாவும் ( ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு புதுமைத் தொடர் )
- கெட்ட வார்த்தைக் கிளி (உரை வெண்பா)
- பைமடந்தை
- தூக்கம்
- மழை வரும் போது…
- அரபிய நாட்டினிலே..
- முடிந்த தொடக்கம்…
- ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதை தொகுப்பின் கவிதைகள், முன்னுரை