கடிதங்கள்
(ஜனவரி 19, 2003)

திண்ணைக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பிய அனைவருக்கும் திண்ணைக்குழுவின் மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் திண்ணைக்குழு பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது
அன்புள்ள ஆசிரியருக்கு,
திரு. ரஃப்பீக் அவர்களது கருத்துகள் குறித்து,
மார்க்சியம் மிக தெளிவாக பரிணாம தத்துவத்தை அங்கீகரிக்கிறது. ஆனால் டார்வினிய பரிணாம அறிவியலுடன் அது உடனுறைய முடியுமா ? குறிப்பாக மானுட பரிணாமத்தை குறித்த அறிதலில் ஏங்கல்ஸான் சில அபிப்பிராயங்களுக்கு சான்று பகர்தலே பல பத்தாண்டுகளாக சோவியத் மானுடவியலாளர்களின் முதல் நோக்கமாக இருந்தது.
இன்றைக்கும் பல மார்க்சிய இணையதளங்களில், மார்க்சிய அறிவியல் விமர்சகர்களின் வார்த்தைகளிலிருந்து நேரடி மேற்கோள்கள் மூலம் டார்வினிய எதிர்ப்பு மார்க்சியத்தில் உள்ளோடுவதை, இன்றியமையா தன்மையுடன் இருப்பதை அறியமுடியும். உதாரணமாக நம் மதிப்பீடுகளுக்கு உயிரியல் அடிப்படை உண்டு என ஒரு அறிவியலாளர் கூறினால் அதனை மார்க்ஸாய அடிப்படைவாதி எவ்வாறு எதிர்கொள்வார் ? தொல்மானுட இயலாளரும் அறிவியல் புனைகதையாளருமான இவான் யெஃபிரமாவ் அழகியலுக்கு உயிரியல் வேர்கள் இருக்க கூடும் என கூறியது மார்க்ஸாஸ்ட் இலக்கியவாதிகளால் ாவக்கிர சிந்தனைா என வசையாடப்பட்டது. இருபதாம் நுறெ¢றாண்டின் மிகக் கொடூரமான அறிவியலாளர் கழையெடுப்புகள் மார்க்சிய அரசுகளால் திறம்பட நடத்தப்பட்டன. பரவுதன்மை கொண்ட ஆபிரகாமிய மதங்களுடனான மார்க்ஸியத்தின் மீமிய ஒற்றுமை அதனை நிச்சயமாக கிறிஸ்தவ இஸ்லாமுடன் வைக்க போதுமானதாகும். அறிவியலின் கதிரியக்கத்தில் மார்க்சியத்திற்கு ஏற்பட்ட மரபணு பிறழ்ச்சியே பின்நவீனத்துவம். இனவாத வெறுப்பியல், இஸ்லாமிய பயங்கரவாதம், அறிவியல்/தொழில்நுட்ப எதிர்ப்பு என அனைத்து அறிவியக்க எதிர்ப்பு சக்திகளுடனும் தன்னியல்பில் நட்பு பாராட்டும் தன்மை பின்நவீனத்துவத்திற்கு உண்டு. என் எழுத்து இன்னமும் அதன் இடியாப்பக் குழப்ப இயல்பிலிருந்து விடுபடவில்லை என்பதை உணர்த்தியதற்கு நன்றி. தெளிவாக எழுத முயல்கிறேன்.
அரவிந்தன் நீலகண்டன்
நாகர்கோவில்.
அ.முத்துலிங்கத்தின் சிறுகதை ‘கொழுத்தாடு பிடிப்பேன் ‘ வழக்கமான அவரது கதைப்பாணியிலிருந்து விலகி முக்கியமானதொரு மையக் கருவினைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள நல்லதொரு சிறுகதை. புலம் பெயர்ந்த தமிழர் ஒருவரின் அனுபவமொன்றை, யாரும் அதிகம் கதைகளில் கையாளத் தயங்குகின்ற விடயத்தினைப் பொருளாக வைத்துப் பின்னப் பட்டுள்ளதால் சுவைக்கின்றது. கைதியின் பார்வையில் புலம் பெயர்ந்த சூழலில் நிலவும் கோணல்கள், இழந்த மண், உறவுகள் பற்றிய ஏக்கங்கள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. பாராட்டுகள்.
– வ.ந.கிரிதரன் –
Hallo,
In Thinnai why the name of persons, who translated Enlish articles, are not mentioned ?-for examples in this week `Does oil require blood ? ‘.
R. Srinivasan vasanth
It means the people running thinnai do the translation. They do not want any recognition (nor brickbats) for the translation.
Thinnai takes responsiblity for such translations.
அன்புள்ள ஆசிரியருக்கு,
திண்ணை இதழில் இந்த வாரம் நான்கு சிறுகதைகளுமே நன்றாக இருந்தன. பொதுவாக சமகால நிகழ்வுகளை வைத்து கதைகள் தமிழில் எழுதப்படுவதில்லை. இந்த விதத்தில் ஆனந்த ராகவ் எழுதிய கதை வித்தியாசமானது என்று சொல்ல்வேண்டும். முத்துலிங்கத்தின் கதை இன்று கனடாவில் உள்ள தமிழ் மக்கள் பெரும்பாலோர் உணரும் உணர்வுகளைச் சொல்கிறது.
எண்ணெய்க்காகப் போரிட வேண்டிய அவசியமில்லை. ஈராக் மீதுள்ள பொருளாதாரத் தடையை நீக்கிவிட்டு, கண்காணிக்கப்படும் விதத்தில் எண்ணெய வாங்கினாலே போதும் என்று வாதிடும் கட்டுரை யார் காதில் விழும் ? பாவண்ணனின் கட்டுரை அபர்ணா சென்னின் படத்தைப் பார்க்கத் தூண்டும் விதத்தில் உள்ளது. காபுலிவாலா கூடப் படமாய் வந்தது என்று நினைக்கிறேன்.
பாத்ரூம் கட்டுரையை தமிழ் நாட்டில் படித்தவர் ஜெயமோகன் ஒருவர் தானா ? இது போய் பெரிய பிரசினை என்று எழுதியிருக்கிறீர்களே என்று நினைக்கிறார்கள் போலும்.
ரஃபீக்
அன்புள்ள ஆசிரியருக்கு,
சென்றவாரம் அதற்கு முந்தின வார கட்டுரை கவிதைகளை பார்ப்பது எப்படி என்று தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.
நட்புடன்
திருவேங்கடம்
திண்ணைக்குறிப்பு: அரசியலும் சமூகமும் போன்ற தலைப்புக்களை கிளிக் செய்தால், அது இதுவரை அந்த பகுதியில் வந்திருக்கும் படைப்புக்களை காண்பிக்கும்.
நிகழ்ச்சிகள்
- கழிப்பறைகளும் விழிப்புணர்வும்
- பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)
- ஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள்
- தமிழகமும் தண்ணீர் நெருக்கடியும்
- திரைக்கடலோடியும் –
- கடிதங்கள்
- அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு
- இந்த வாரம் இப்படி (ஜனவரி 19, 2003) (சாலமன் பாப்பையா, மணிரத்னம், கருகும் விவசாயிகள், ஜெயா-மோடி, புர்கா கொலைகள், கிரிஸ்தவ பிரச்சார
- பறவையும் பெரு முட்டையும்!
- உயிர்ப்பு
- எல்லைகளைப் போடாதீர்!
- பூவின் முகவரி
- என்னென்ன செய்யலாம் ?
- பாம்பு பற்றிய பயங்கள்.
- கடல் அரசனின் கட்டளை!
- மனம் என்னும் விசித்திரப்புதிர் (ஒரு தலித்திடமிருந்து-ஆங்கிலத்தில் வசந்த் மூன், தமிழில்: வெ.கோவிந்தசாமி, புத்தக திறனாய்வு)
- பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)
- பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] (1889-1953)
- அறிவியல் துளிகள்-9
- காதல்..
- நன்றி
- எளிமையும் பெருமையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 44 – நதேனியேல் ஹாதர்ணின் ‘கல்முகம் ‘)
- தப்பும் வழி
- ஓடிவா மகளே!
- ஒரு நாள் = 40 மணி நேரம்.
- மழை
- காத்திருக்கிறேன் அம்மாவிற்காக
- மேலாண்மை (management) பற்றிய முதல் பாடம்
- அனுபவம்