உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை -1

This entry is part of 29 in the series 20020728_Issue


தனிப்பட்டவர்கள் அதிகமாக கடன் பட்டால், எந்த அளவுக்கு ஒருவர் கடன் பட முடியும் என்பதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அதன் பெயர் திவால். அந்த எல்லைக்குக் கீழ் கடன் கொடுப்பவர் ஒரு நபரை விழ விடமாட்டார். அதற்கு மேல் அவருக்கு கடன் கொடுக்க மாட்டார். ஆனால் அப்படிப்பட்ட ஒரு எல்லைக்கோடு நாடுகளுக்கு இல்லை. ஆகவே, ஏழை நாடுகள் வெகுவாக கடன் பட்டால், அவர்கள் தொடர்ந்து ஆழத்துக்குச் சென்று கொண்டே இருப்பது நடக்கிறது. இந்த ஏழை நாடுகளின் அரசாங்கங்கள் ஏராளமான அளவு பணம், மேற்கத்திய நாடுகளுக்க்கும், இந்த மேற்கத்திய நாடுகள் கட்டுப்படுத்தும் பலநாட்டு நிதி நிறுவனங்களுக்கும் கடன் பட்டிருக்கின்றன. இதே நிறுவனங்கள் தான், இந்த ஏழை நாடுகள் பட்டிருக்கும் கடனை எந்த அளவுக்கு விலக்கிக் கொள்ளலாம் என்பதையும் நிர்ணயிக்க அதிகாரம் பெற்றிருக்கின்றன.

இது நியாயமற்றது.

சரி ஆரம்பத்துக்கு வருவோம்.

எப்படி இந்த பெரும் அளவு கடன் சேர்க்கப்பட்டது ? ஏன் இந்தக் கடனை திரும்பச் செலுத்துவது இந்த நாடுகளுக்குச் சிரமமாக இருக்கிறது ?

பிறப்பு அமெரிக்காவில்

1960இல், அமெரிக்க அரசாங்கம் பற்றாக்குறை பட்ஜட் போட ஆர ஆரம்பித்தது. ஆகவே, வரும் வருமானத்தைவிட செலவு அதிகமாக இருந்ததால், அது அதிகமாக டாலர்களை அச்சடிக்க ஆரம்பித்தது. ஆகவே, உலக டாலர் மதிப்பு விழ ஆரம்பித்தது.

இது பெரும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு கெட்ட செய்தி. ஏனெனில், பெட்ரோல் டாலரில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, அவர்கள் உற்பத்தி செய்த பெட்ரோலுக்கு குறைவான அளவே பணம் பெற்றார்கள். ஆகவே, 1973இல் அவர்கள் பெட்ரோல் விலையைக் கூட்டினார்கள். இந்தப் பணம் ஏராளமாக வந்தது. இந்தப்பணத்தை மேற்கத்திய நாடுகளில் இருக்கும் வங்கிகளில் முடக்கினார்கள்.

எதிர்காலத்தை நம்பிய வங்கிகள்.

இதன் பிறகு பிரச்னை ஆரம்பித்தது. ஏராளமாக பணம் குவிந்ததால், வட்டி விகிதம் குறைய ஆரம்பித்தது. வங்கிகள் பலநாட்டு நிதிப் பிரச்னையை எதிர்நோக்கின. வட்டி குறையக்கூடாது என்பதற்காக மிக அதிகமாக பணத்தை வெளியே கடன் கொடுக்க ஆரம்பித்தார்கள். இதற்காக அவர்கள் மூன்றாம் உலக நாடுகளை அணுகினார்கள். இந்த மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் அப்போது நன்றாகவே முன்னேறி வந்துகொண்டிருந்தது. அப்போது, அவர்கள் தங்களது முன்னேற்றத்தை தொடர்ந்து நடத்துவதற்கும், விலையேறிய பெட்ரோலை வாங்குவதற்கும் அவர்களுக்கு பணம் வேண்டியிருந்தது.

வங்கிகள் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை கடன் கொடுக்க ஆரம்பித்தன. வாங்குபவர்களுக்கு திருப்பித்தரும் வலு இருக்கிறதா என்று பார்ப்பதுதான் எந்த கடன் கொடுப்பவரும் செய்வது. அதையெல்லாம் பார்க்காமல் இந்த மேல்நாட்டு வங்கிகள் கடன் கொடுக்க ஆரம்பித்தன. மூன்றாம் உலக நாடுகளும் சந்தோஷமாக கடன் வாங்க ஆரம்பித்தன. ஏனெனில், இதன் வட்டி விகிதம், தங்கள் நாட்டு பணவீக்கத்தை விட குறைவாக இருந்தது.

சர்வாதிகாரிகளின் வளர்ச்சி

மெக்ஸிகோ, வெனிசூவெலா போன்ற சில நாடுகள் தாங்கள் முன்னால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காக அதே வங்கிகளிடம் கடன் வாங்க ஆரம்பித்தன. ஆனால், மற்ற நாடுகளைப் பொறுத்த மட்டில், இதுதான் முதல் முறையாக வியாபார வங்கிகளிடம் கடன் வாங்குவது. அவைகளில் பல, தங்கள் நாட்டு வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகத்தான் வாங்கின.

இறுதியில், வாங்கிய கடனில் மிகச்சிறிய அளவே ஏழை மக்களுக்கு உதவியது. இந்தக் கடனில் சுமார் ஐந்தில் ஒரு பாகம் ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கும், கொடுங்கோல் அரசுகளைத் தக்கவைப்பதற்கும் சென்றது. பல அரசாங்கங்கள் பெரும் முன்னேற்றத்திட்டங்களை ஆரம்பித்தன. இவைகளில் பல பிரயோசனமற்றவை. தனிப்பட்டவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு பல சென்றன. ஏழைகள்தான் ஏமாளிகளானார்கள்.

பேரழிவை நோக்கி

1970இல், மேற்கத்திய நாடுகளால் பணப்பயிர்களை பயிரிட வற்புறுத்தப்பட்டதால், மூன்றாம் உலக நாடுகள் திடாரென்று தாங்கள் உற்பத்தி செய்யும் கச்சாப்பொருட்களுக்கு கிடைத்துவந்த விலை கிடைக்காமல் போனதைக் கண்டு கோபம் அடைந்தன. செம்பு, காபி, டா, பருத்தி, கோக்கோ ஆகியவை வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் எல்லா நாடுகளிடமும் சொல்லியதால், அவை எல்லாம் இவைகளை உற்பத்தி செய்ததால், ஏராளமான பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டதால், இவைகளின் விலை குறைந்தது.

பிறகு வட்டி விகிதம் அதிகரிக்க ஆரம்பித்தது. இது அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்க ஆரம்பித்ததால் இன்னமும் அதிகரித்தது. இதற்கிடையில் பெட்ரோல் விலையும் அதிகரிக்க ஆரம்பித்தது. எலிப்பொறி தயார். மூன்றாம் உலக நாடுகள் ஏற்றுமதிக்கு தாங்கள் பெற்றுவந்த பணத்தைவிட குறைவாக இப்போது பெறுகின்றன. தாங்கள் வாங்கிய கடனுக்கு அதிகமாக வட்டி தர வேண்டிய கட்டாயம். தாங்கள் இறக்குமதி செய்யவேண்டிய பொருட்களுக்குப் பணம் வேண்டும். இதைவிட கொடுமை, தாங்கள் கொடுக்க வேண்டிய வட்டிக்கு வேண்டிய பணத்துக்காக அதே நிறுவனங்களிடம் கடன் கேட்க வேண்டும்.

எலிப்பொறியில்

1982இல் மெக்ஸிகோ தன்னால் கடனை திருப்பித்தர இயலாது என்று தனக்கு கடன் கொடுத்தவர்களிடன் கூறியது. International Monetary Fund (IMF)உம், World Bankஉம் உள்ளே நுழைந்து, இன்னும் கடினமான சட்டதிட்டங்களுடன், வட்டியைச் செலுத்தப் பணம் தான் கொடுப்பதாக கூறியது. ஐஎம்எஃப் மேற்கத்திய நாடுகள் கட்டுப்படுத்தும் ஒரு நிறுவனம். பெறுபவராக இருந்தாலும், பெறுபவர் போல நடந்து கொள்ளாமல் மற்ற கடன்களைக் கொடுத்து தீர்க்க , குறுகிய கால கடன் கொடுக்கும் நிறுவனம்.

இந்த முறைமை தொடர்ந்து தொடர்ந்து, மெக்ஸிகோ நிலையில் தன்னைக்கண்ட மற்ற நாடுகளிலும் பிரயோகம் செய்யப்பட்டது. கடன் அதிகரிக்க அதிகரிக்க, இன்னும் புதிய கடன்கள் அதன் தலைகள் மேல் ஏற்றப்பட்டன.

அடிப்படையில் சொல்லப்போனால், ஏழை நாடுகள் திவாலாக்கப்பட்டன.

பிரச்னையை தீர்க்கவந்தவர்கள்

1982இல் மெக்ஸிகோ தான் பெற்ற கடனை திருப்பிக்கொடுக்க இயலவில்லை என்று சொன்னபோது, அகில உலகக் கடன் அமைப்பே பிரச்னைக்குள்ளானது. மெக்ஸிகோ ஏராளமான பணத்தை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் திருப்பித்தர வேண்டும். அவை இந்தப் பணத்தை இழந்துவிடத் தயாரில்லை. ஆகவே அவை எல்லாம் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ஐஎம்எஃப் நிறுவனத்திடம் ஒரு திட்டத்தை அளித்து, கடன் பளுவை பல வருடங்களுக்கு பரப்பி விட ஆலோசனை தந்தன.

அதில் தொடங்கி ஐ எம் எஃப் பும் , உலக வங்கியும் – உலகின் முதன்மையான இரு நிதி நிறுவனங்கள் — வட்டி கொடுக்க முடியாத நாடுகளுக்கெல்லாம் மேல்ம் கடன் அளித்து, கடன் திருப்பித் தரும் தவணையை அதிகரித்து வந்திருக்கின்றன.

ஆனால் இந்தப் புதிய கடன்கள் மேலும் கடன் சுமையையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றன. தம் நாட்டில் மிக கடுமையான பொருளாதாரச் சீரமைப்பை இந்த நாடுகள் கடைப்பிடிக்கவேண்டும். இவை Structural Adjustment Programs (SAPs) அடிப்படைச் சீரமைப்புத் திட்டம் என்று அறியப் படுகிறது. SAPping the Poor

ஏழைகளைச் சுரண்டுதல்

அதாவது இந்தத் திட்டங்களின் படி நாடுகள் பணம் ஈட்ட வேண்டும்- எப்படி- ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இறக்குமதியைக் குறைக்கவேண்டும். ஒரு சில நாடுகளில் இந்தத் திட்டம் உதவி செய்துள்ளது . ஆனால் பெரும்பாலான நாடுகளில் இது பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்தத் திட்டம் செயல்பட்ட நாடுகளிலெல்லாம் ஏழைகள் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

நிறைய வெளிநாட்டுச் செலாவணி கிடைக்கவேணி இந்த நாடுகள் கீழ்க்கண்ட நடைமுறைகளை மேற்கொள்கின்றன.

– ஆரோக்கியம், கல்வி, சமூக நலத்திட்டங்கள் இவற்றில் செலவு குறைக்கப் படுகிறது.

– நாணய மதிப்புக் குறைப்புச் செய்யப்படுகிறது. இதனால் ஏற்றுமதி வருவாய் குறைகிறது. இறக்குமதி செலவு அதிகரிக்கிறது.

– உணவுக்குச் செலுத்தி வந்த மானியங்கள் குறைக்கப் படுகின்றன. இதனால் அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏறிவிடுகிறது.

– அரசு தொழிற்சாலைகளில் ஊழியர்களின் வருமானம் குறைக்கப்படுகிறது. அவர்கள் கட்டாய ஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

– தனியார்மயமாதல் நிஅக்ழ்கிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் நுழைகின்றன.

– சிறிய அளவில் நடந்து வந்தளுணவுப்பண்ட விவசாயம் அருகி, ஏற்றுமதியை முன்னிறுத்திய விவசாயத்தால் பெரும்பண்ணைகள் தோன்றுகின்றன. விவசாயிகள் தம் நிலத்தை இழக்க நேரிடுகிறது. பெரும் பண்ணைகளில் இவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

(அடுத்து: ஒரு மெளன யுத்தம்- கடன்கள் ஏழைகளை எபப்டிப் பாதிக்கிறது )

Series Navigation