இந்த வாரம் இப்படி – சூன் 30 2002 (முஷாரஃபின் ஜனநாயகம், ஸ்டாலின் பதவி)

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

மஞ்சுளா நவநீதன்


முஷரஃப் வாழ்க – அரசியல்வாதிகள் ஒழிக

முஷரஃப் பாகிஸ்தானின் சட்ட அமைப்பில் தன்னுடைய இடத்தை உறுதி செய்யும் விதமாக எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை நீக்கும் அதிகாரமும், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும் அவர் கையில் இருக்குமாம். அப்புறம் தேர்தல்கள் என்ற அனாவசியமான கேலிக்கூத்து எதற்கு என்று தெரியவில்லை. அதில்லாமல் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற பேநஸீர் புட்டோ, நவாஸ் ஷரீஃப் போன்றவர்கள் தேர்தலில் கலந்துகொள்ள அனுமதி இல்லை.

பொம்மலாட்டம் தான். பொம்மைகள் பிரதமர்கள் . முஷரஃப் என்ற ராணுவ சர்வாதிகாரியின் கையில் தான் இவர்களை ஆட்டுவிக்கும் கயிறு. இதற்குப் பெயர் ஜனநாயகம்.

**********

ஒரு ஆளுக்கு ஒரு பதவி : ஸ்டாலின் பதவிப் பறிப்பு

ஒரு ஆளுக்கு ஒரு பதவி என்ற சட்டம் ஸ்டாலினைப் பதவி இறக்கம் செய்யத்தான் என்றாலும் வரவேற்கத்தக்க ஒரு சட்டம் . இது மேயர் தேர்தலுகு முன்பு இயற்றப் பட்டிருக்க வேண்டும். அல்லது தற்போது இப்படிப் பதவை வகிப்பவர்கள் பதவிக் காலம் முடியும் வரையில் இது அவர்களுக்கு தடையாக இருக்காது என்று ஒரு புரிவு இருந்திருக்க வேண்டும் . இது போன்ற பெருந்தன்மையையோ நாகரிகத்தையோ ஜெயலலிதாவிடம் எதிர்பார்ப்பது தவறுதான்.

இது போன்றே எம் எல் ஏ யாக இருப்பவர்கள் எம் பி ஆக வேண்டுமென்றால் பதவியைத் துறக்க வேண்டும் என்று என்று சட்டம் இயற்ற வேண்டும். கட்சிகளில் தலைமைப் பதவியில் ஒருவரே வருடக்கணக்கில் இருப்பதும் தடை செய்யப் படவேண்டும். எம் எல் ஏ , எம் பி, முதல்வர பதவிகளுக்கும் கால வரையறை செய்ய வேண்டும். பத்து வருடங்களுக்கு மேல் யாரும் இந்தப் பதவிகளில் இருக்கக் கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.

***********

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்