லு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம்

This entry is part [part not set] of 23 in the series 20020505_Issue

சாம்பரன்


இன்று நடைபெற இருக்கும் பிரான்சின் ஐனாதிபதி தேர்தலானது பிரான்ஸ் வரலாற்றிலேயே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜந்தாவது குடியரசென அழைக்கப்படும் புதிய பிரான்சில் முதன்முதலாக ஒரு அதிதீவிர வலதுசாாி, இனவெறி தேசியமுன்னணியின் தலைவரான லு பென், ஐனாதிபதி தேர்தலின் இறுதிச் சுற்றிற்கு தொிவாகியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ல் நடைபெற்ற முதல்சுற்று ஐனாதிபதிக்கான தேர்தலில் இம்முறை 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இன்றைய ஐனாதிபதியான கன்சவடிக் கட்சியைச் சேர்ந்த சிராக்கிற்கு வெறும் 20 சதவீத வாக்குகளே கிடைத்தன. சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இன்றைய பிரதமர் ெஐாஸ்பினுக்கு 16 சதவீத வாக்குகள் கிடைத்தவேளை, தேசிய முன்னணியைச் சேர்ந்த லு பென் 17 சதவீத வாக்ககள் பெற்றதன் மூலம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இதன் காரணமாக ஐனாதிபதிக்கான இறுதிசுற்று தேர்தலில் பங்குபற்றக் கூடிய இருவாில் ஒருவராக வந்துள்ளார். 1969ல் இரு வலதுசாாிவேட்பாளர்கள் இறுதிச் சுற்றிற்கு தொிவானதையடுத்து இம்முறைதான் மறுபடி இடதுசாாி வேட்பாளர் ஒருவர் இறுதிச்சுற்றுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அதிதீவிர வலதுசாாி, இனவெறி வேட்பாளரொருவர் தொிவானதானது, பிரான்சில் மட்டுமல்ல உலகெங்கணும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான காரணங்களாக பெருந்தொகை தொழிலாளர் வேலையிழப்ப, விவசாயிகளின் நலன்கள் பாதிப்பு, நகரங்களில் அதிகாித்த கிாிமினல் குற்றங்கள், கடந்த வலது,இடதுஃசோசலிஸ்ட்களின் ஆட்சிகளில் மனம்வெறுத்த மக்கள், ஐனாதிபதி சிராக் மேலுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், இடதுசாாிகளின் அரசியலானது நடு அரசியலாகே, வலதுசாாி அரசியலுடன் ஒன்றிப்போனவற்றைக் காட்டலாம். அத்துடன் பல இடதுசாாிகட்சிகள் போட்டியிட்டதால், வாக்குகள் பிரிந்துபோனதுவும் (இரு ரொட்சியக்கட்சிகள் 10 சதவீதத்துக்குமதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளன), அதிக தொகையினர் வாக்களிக்கச் செல்லாததுவும் காரணங்களாக கூறப்படுகின்றன.

லு பென்னின் பிரச்சாரமானது முக்கியமாக, சட்டம் ஒழுங்கை கொண்டுவரப் போவதாகவும், உள்நாட்டு பாதுகாப்பு பற்றியதாகுமேயிருந்தது. 2இலட்சம் சிறையறைகளை கட்டவிருப்பதாகவும், மரணதண்டனையை மீண்டும் அமூலுக்கு கொண்டுவரப் போவதாகவும், சட்டவிரோத மற்றும் தண்டனைவிதிக்கப்பட்ட வெளிநாட்டினரை வெளியேற்றப் போவதாகவும் கூறியது. அய்ரோப்பியகூட்டுக்கு எதிரானவரும், யூத மற்றும் வெளிநாட்டினர் எதிர்ப்பாளருமான லு பென் முஸ்லீம்களின் குடியேற்ற வளர்ச்சியானது( முக்கியமாக வட ஆபிாிக்கர்கள்) 1000வருட பழமையான பிரான்சின் கிறிஸ்தவ பாரம்பாியத்தையே அழிக்கப் போவதாக அச்சமூட்டினார். செப்டம்பர் 11 நிகழ்வையடுத்து ஒட்டுமொத்த முஸ்லீம்கள் மீதான குற்றச்சாட்டுகளும் பீதிகளும் பரப்பப்படுகின்றன.

முதலாவது சுற்றில் இவாின் வெற்றியையடுத்து பல இடங்களில் தன்னெழுச்சியாக எதிர்ப்பு ஊர்வலங்கள் செய்யப்பட்டன. அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட சோசலிஸ்ட், இடதுசாாிகள் தற்போது சிராக்கிற்க வாக்களிக்கும்படி கோருகின்றனர். மேதின ஊர்வலமானது இம்முறை இனவெறிக்கு எதிரான நாளாக அறிவிக்கப்பட்டது. இதில் இடதுசாாிகள், இடது ஆதரவாளர்கள், மனிதஉாிமையமைப்புகள், வெளிநாட்டின+ பெருந்தொகையினராக கலந்து கொண்டனர். 1968 மாணவர்எழுச்சிக்குப் பின்னர் பாிசில் நடைபெற்ற மாபெரும் ஊர்வலம் (4இலட்சம் பேர்) இதுவாகும். புிரான்ஸ் முழவதும் 15 இலட்சம் பேர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். லு பென்னின் மேதினக்கூட்டத்தில் 40 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால் மேற்கு அய்ரோப்பாவில் இன்றைய பொருளாதார மந்தநிலை, பெருந்தொகையானோர் வேலையிழப்பு, உலகமயமாதலில் அய்ரோப்பாவில் ஏற்படும் எதிர்மறைவிளைவுகள், அய்ரோப்பிய கூட்டினுள் அடையாளச் சிக்கல், அதிகார இழப்பு, நகரங்களில் குற்றச்செயல்கள் பெருகியமை, குடியேற்றவாதிகளின் தொகை அதிகாிப்பு போன்றன மக்களை பீதிக்கு உள்ளாக்கும் காரணிகளாக வளர்ந்துள்ளன. இந்நிலைமையானது அதிதீவிர வலதுசாாி, இனவெறிக் கட்சிகள்,குழுக்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அய்ரோப்பாவில் இனவெறிக் கட்சிகள் ஏற்கனவே ஆட்சியிலும் பங்குகொள்கின்றன. முக்கியமாக ஆஸ்திாியாவில் கைடாின் அரசாங்கம், இத்தாலியில் பெர்லுஸ்கோனியின் வலதுசாாி கூட்டரசாங்கம் என்பவற்றைக் கூறலாம். செப்டம்பர் 11யடுத்து ேஐர்மனியில் கம்பேர்க்கில் நடந்த தேர்தலில் உள்நாட்டுப் பாதுகாப்பு, கிாிமிளல் ஒழிப்பு கோசத்தை முன்வைத்து போட்டியிட்ட வலதுசாாி ஸில் ரோலண்ட், தனது குறகியகால புதியகட்சியின் சார்பில் 19 சதவீத வாக்குகளைப் பெற்றது ஒரு ேஐர்மனிய சமிக்ஞையாகும். போருளாதார நெருக்கடி, குற்றச்செயல்கள் அதிகாிப்பு இதனுடன் உள்நாட்டு பாதுகாப்புத் தொடர்பான பீதியும் சேர்ந்து கொண்டால் அதிதீவிர வலதுசாாிகளுக்கும் இனவாதிகளுக்கும் மக்கள் மயங்குவது நடக்கக்கூடியதே.

அண்மைய கருத்துக் கணிப்புகள் லு பென்னுக்கு அதிகபட்சம் 25 சதவீதம்தான் வாக்ககள் கிடைக்கலாம் என்பதைத் தொிவிக்கின்றன. இது சிறு மகிழ்ச்சியைத் தந்தாலும் இதுவும்கூட மிகவும் அதிகமான தொகையேயாகும். இவ் அங்கீகாரமாளது இச் சக்திகளைத் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக ஆக்கியுள்ளதுடன் அவர்களுக்கு மாபெரும் உந்துசக்தியையும் கொடுத்துள்ளது. அத்துடன் பிரான்ஸ் போன்று உலகிலும், ஜரோப்பிய ஒன்றியத்திலும் பொருளாதார, அரசியல் பலம் வாய்ந்த, ஐனநாயக பாரம்பாியம் கொண்ட நாடுகளில் ஏற்பட்டுவரும் இவ்வாறான மாற்றமானது, உள்நாடுகளில் மட்டுமல்லாது உலகம் முழவதிலும் அரசியல் பாதிப்பை ஏற்படுத்தும். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது காலனித்துவ அதிகாரம் கட்டமைத்துள்ள இனவாத, நிறவாத மனநிலைக்கெதிராக அய்ரோப்பிய ஐனநாயகப் பாரம்பாியமானது இதுவரைகாலமும் ஒன்றும் செய்யாதிருந்தது. ஏனெனில் அது ஜரோப்பிய நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இந் நிலையில் இங்குவாழும் வெளிநாட்டினர், தமது ஆதரவு சக்திகளுடன் சேர்ந்தும், தனித்தும் தமது நலன்கள், எதிர்காலம் தொடர்பாக செயற்பட வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

05.05.02

Series Navigation

சாம்பரன்

சாம்பரன்