ஹைதராபாத்தில் பார்க்க வேண்டிய இடம்.

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue

கோமதி நடராஜன்


அன்புள்ள அனைவருக்கும்

சில எண்ணங்களைத் நமக்குள்ளேயே வைத்து ரசித்துக் கொள்ளத் தோன்றும்,சிலவற்றை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள தோன்றும்.அப்படி ஒரு விஷயத்தைதான்இந்தக் கடிதம் மூலம் உங்களுக்கு சொல்ல இருக்கிறேன்.

நாம் எல்லோரும் தெய்வத்தின் குழந்தைகள்தான்,இருந்தாலும் தெய்வத்தின் குழந்தைகள் என்று ஆத்மார்த்தமாக உணர்ந்து , சொல்ல வேண்டுமென்றால்,அது நிச்சயமாக ‘ஸ்வயம்க்ருஷி ‘போன்ற அமைப்பின் ஆதரவில் வாழும் குழந்தைகளைத்தான் சொல்லவேண்டும். நான் ஹைதராபாத் சென்றிருந்த சமயம் திருமதி ஜெயா சாாி, திருமதி சாவித்திாி இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, இவர்கள் ஸ்வயம்க்ருஷி காப்பகத்துக்கு அவ்வப்போது சென்று அவர்களின் தேவையை கேட்டு அறிந்து, வங்கி மூலமாகவோ, சங்கங்கள் மூலமாகவோ இயன்றவரை அவர்களுக்கு உதவி வருபவர்கள், இவர்கள் என்னை, தங்களுடன் அவர்கள், சேவை ஆற்றும், இந்தக் காப்பகத்துக்கு, அழைத்துச் சென்றனர். இவ்வமைப்பைப் பற்றி ஓாிரு எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பெற்றோர் செய்த பாவமோ அல்லது அவர்களின் பூர்வ ஜென்ம பாவமோ சில குழந்தைகள், பிறவியிலேயே மனநிலை பாதிக்கப் பட்டு, அடுத்தவர் ஆதரவின்றி வாழமுடியாத நிலையில், சபிக்கப் பட்டு விடுகின்றனர். ஆனால் உண்மையில் பார்க்கப் போனால் ,அவர்கள்தான் வாழ்த்தப் பட்டு வந்தவர்கள் என்று சொல்லலாம்.

அவர்கள் மனம் பளிங்குபோல் பளபளப்பாகவும் ,எண்ணங்கள், பனி போல் தூய்மையாகவும் இருக்கும். நம்மில் எத்தனைபேர் போட்டி, பொறாமை, பேராசை, வெறுப்புணர்ச்சி, காழ்ப்புணர்ச்சி என்று ஏதேனும் ஒரு வேண்டத்தகாத உணர்ச்சிக்கு அடிமையாகாமல் இருக்கிறோம். நாம் சொல்லிக் கொள்கிறோம், நம் அறிவு பழுது படவில்லை என்று. ஆனால் நாம்தான் மனத்தளவில் முடங்கியிருக்கிறோம்.

‘mentally retarded ‘என்ற ஆங்கில வார்த்தை கூட அந்தக் குழந்தைகளுக்கு உகந்த பெயர் அல்ல,என்று கருதி, ‘mentally challenged ‘என்றுதான் குறிப்பிட்டு வருகிறார்கள். அந்தப் பிஞ்சு மனங்களில் கோபம் இருக்காது, ஆசை இருக்காது, அடுத்தவனிடம் இருக்கிறதே என்ற் பொறாமை இடம் பிடிக்காது. தங்கள் குறை கூட அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள். எப்பொழுதும் சிாித்த முகம்,நட்புணர்வு வெளிப்படுத்தும் பார்வை,நினைத்தவாறு கைகளை அசைக்க இயலாதென்றாலும் நேசக்கரம் நீட்டதுடிக்கும் நெஞ்சம் என்று சாதாரண மனிதனிடம், காண முடியாத பல நல்ல குணங்களை அந்தக் குழந்தைகளிடம் காணலாம்;கற்றுக்கொள்ளலாம்

அப்படிப்பட்ட தெய்வக்குழந்தைகள் வாழும் ஸ்வயம்க்ருஷி காப்பகம் ஆந்திரமாநிலத்தில் செகந்தராபாத் நகாில்,சந்திரகிாி காலனியில் அமைந்திருக்கிறது.1991ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தக் காப்பகம்.பல வங்கிகளின்,நிதி நிறுவனங்களின் ஆதரவோடும் பல சமூக நலனில் அக்கரையுடன் செயல்படும்,சங்கங்களின், ஒத்துழைப்போடும் தங்கள் சேவையை ஆற்றி வருகிறது.

அந்தக் காப்பகத்தில்,குழைந்தைகளின் உணவு உடை இருப்பிடம் என்ற மூன்று அத்தியாவசியங்களை மட்டும் பூர்த்தி செய்வதோடு நின்று விடாமல்,அவர்கள், தங்கள் தேவையை, யாரையும் எதிர்பார்க்காமல் செய்து கொள்ளவும்,அடுத்த கட்டமாகத் தங்கள் பொருளாதாரத் தேவையைத் தங்கள் உழைப்பின் மூலமே, ஈட்டி வருகிறார்கள். உதாரணமாக அவர்கள் ஈடுபடுவது இலகுவான அதே சமயத்தில் மக்களுக்குத் தேவையான பொருட்களைத் தாங்களே செய்து பொருள், ஈட்டுகின்றனர். தொன்னை இலையில் தட்டுகள்,கீதா நர்சிங்க் ஹோமுக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கும் ஃபினைல் வினியோகம் செய்வதும்,உஷா மின்சாரவிசிறியின் உதிாி பாகத்துக்கானப் பெட்டிகள் செய்வது,ஸ்கிாீன் பிாிண்ட்டிங் மூலம் நாகார்ஜுனா உரக்கம்பெனிக்கு ஃபைல் அச்சடித்துதருவது, மேலும் பல கைவினைப் பொருட்கள் செய்வதுமாகத், தங்கள் நேரத்தையும், இறைவன் இரக்கம் கொண்டு, அவர்களுக்கு அளித்த, புாிந்து கொள்ளும் மன வலிமையையும் வீணாக்காமல்,அற்புதமாக வாழ்ந்து வருகிறார்கள்.

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால்,பழுது படாத அறிவு,திறன் குறையாத கைகால்கள்,நலமான நாவும் செவியும்,இத்தனையும் கடவுள் அருளால் பெற்ற நாம்,சமுதாயத்துக்கு என்ன செய்கிறோம் ?அடுத்தவர் வீட்டில் நடக்கும் சம்பவமும் ,அவர்கள் வாங்கி அடுக்கும் பொருளும்,நம் கவனத்தைச் சிதற அடிக்கிறது.தான் என்ற அகங்காரம்,தன்னால்தான் நடந்தது என்ற கர்வம்,விட்டுக்கொடுக்க மனம் இல்லாத, ஈகோத்தனம்,அடுத்தவர் மனம் புண்படும்படி விமாிசித்தல், என்ற அவசியமற்றக் குணாதிசயங்களை,அவை, வேண்டத்தகாதவை ,விரும்பத்தகாதவை, என்று அறிந்தும், அவைகளை மனதில் இருத்தி உழல்கிறோம்.இதில் ஏதாவது ஒரு குணத்தை நீங்கள் அந்தக் குழந்தைகள் மனதில் காணமுடியும் என்று நினைக்கிறீர்களா ?முடியவே முடியாது.பழகுவதில் பண்பாளர்கள் என்றால் அது அவர்களாகத்தான் இருக்க முடியும்.கங்கையும் காவிாியும் பாயும் புனித ஸ்தலம் அவர்கள் மனமாகத்தான் அமையமுடியும்.அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.பேசத்தொியாது என்பதால் அவர்கள் பேதைகள் அல்ல.முடங்கியிருப்பதால் அவர்கள் மூடர்களும் அல்ல.

ஸ்வயம்க்ருஷி குழந்தைகளுக்குக் கைத்தொழில் கற்றுத்தருவதோடு ,அவர்களின் படைப்புக்களைக் கொண்டு மிகப் பொிய அளவில் பொருட்காட்சி நடத்தி அவர்களின் கைத்திறனை வெளிப்படுத்தி ஊக்குவித்து வருகின்றனர்.

இவர்கள்,மற்றும் ஒரு வித்தியாசமான முயற்சியை, நடைமுறையில் செயல் படுத்திவருகின்றனர்.இரண்டு மூன்று இல்லங்களை வாடகைக்கு எடுத்து ,அதில் குறைந்தது ஆறு குழந்தைகளைத் தங்க வைத்து ,அவர்களுக்கு சுயமாக இல்லத்தை நடத்தத் தேவையான பயிற்சியைத் தருகிறார்கள்.இந்த முயற்சியை, இந்தியாவிலேயே இவர்கள்தான் முதல் முதலாகத் தொடங்கி வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.

அதிகாலை எழுந்து ,படுக்கையை மடித்து வைப்பதில் தொடங்கி,வீடு சுத்தம் செய்வது,காலை உணவு தயாாிப்பது ,தங்கள் பணிக்குச் செல்லும் பொழுது மதிய உணவையும் முடித்துக் கையில் கட்டி எடுத்துச் செல்வதுவரை அனைத்தையும் அழகாகச் செய்யக்கற்றுத் தந்து விடுகிறார்கள்.இதற்கெல்லாம் ஆகும் செலவை ,சங்கங்களும்,வங்கிகளும் அளிக்கின்றன.எல்லாம் சாிவர இயங்கக் கூடிய அவயங்கள் பெற்றிருந்தும்,எனக்கு இயலவில்லை என்று வாய்க்கு வாய் புலம்பித் தள்ளுகிறோம்,இயலாத நிலையில்,அந்த இயலாமையை உணராதநிலையில் அவர்கள்,இமயத்தையே அசைத்துக் காட்டுகிறார்கள்.

இப்படி ஒரு தலத்துக்குச் சென்று வந்ததை மிகவும்,அர்த்தமுள்ளதாக நினைக்கிறேன்.நமக்கு மகிழ்ச்சி தரும் இடம் தேடி நான்கு இடங்களுக்குச் சென்றால்,அடுத்தவர் சந்தோஷத்துக்காக ஒரு இடமாவது சென்று வர வேண்டும்.ஆந்திரமாநிலத்தில் காணவேண்டிய சார்மினார், நெக்லஸ் சாலை,ஷாலார்ஜங்க் மியூசியம் ¢ என்று போனபோது கிட்டாத சந்தோஷம் ஸ்வயம்க்ருஷியில் கிட்டியது,காரணம்,மற்ற இடங்களில் நான் மட்டுமே மகிழ்ச்சி அடைய முடிந்தது ஆனால் இங்கோ பல குழந்தைகளின் முகங்கள் எங்கள் வருகையால் பூ போல் மலர்ந்தன.நாம் மட்டும் சந்தோஷப்பட்டால் அது உண்மையான சந்தோஷமா ?அடுத்தவரைச் சந்தோஷப்படுத்தி அதனால் கிட்டும் சந்தோஷம் உண்மையானதா ?

இது போன்ற காப்பகங்களுக்கு நன்கொடை அளிப்பதை,நியாயமான செலவாக நினைக்க மக்கள் பழகிக் கொள்ளவேண்டும்.

அங்கு சேவை செய்து வரும் ஆசிாியர்களைப் பற்றி ஓாிரு வார்த்தை எழுதவில்லையென்றால்,கட்டுரை முழுமை பெறாது.அங்கே குழந்தைகளுக்குப் பயிற்சி தரும் ஆசிாியர்கள் அனைவரையும் நாம் மனதாரப் பாராட்ட வேண்டும்.ஏனயக் கல்லுாிகளிலும்,பள்ளிகளிலும் பணி புாியும் ஆசிாியர்களை விட இவர்களது தொண்டு மிகவும் உயர்ந்ததாகக் கருதுகிறேன்.பொறுமையில் இவர்களைத் தாயைவிட மேலாகக் கருத வேண்டும்.பெற்ற குழந்தைகளைப் பேணிக் காப்பது போல் அவர்களைக் கவனிக்கின்றனர்.தாய்க்குக் கூட ஒரு சதவிகிதமாவது,பிள்ளை தலை யெடுத்ததும் தன்னக் காப்பாற்றுவான் என்ற சுயநலக் கலப்புடன் கூடிய கடமையாக இருக்கும். ஆனால் இவர்களது பணி ,எதிர்பார்ப்புகள் இல்லாதது.பூமாதேவியின் பொறுமை கலந்தது.இவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அன்புடன் கோமதிநடராஜன்[ngomathi@rediffmail.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்