தெய்வநிந்தனை குற்றத்துக்காக பாகிஸ்தான் சிறையின் தூக்குமர நிழலிலிருந்து ஒரு கடிதம்

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

டாக்டர் யூனுஸ் ஷேக்


(டாக்டர் ஷேக் அகில உலக மனிதத்தன்மை மற்றும் ஒழுக்கநெறிக்கான அமைப்பின் இயக்குனர் பாபு கோகினேனிக்கு எழுதிய கடிதம் இது. டாக்டர் ஷேக் தன்னுடைய கொள்கைகளுக்காக பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ எஸ் ஐ-யின் தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்டு , தெய்வ நிந்தனைக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 2001-ல் எழுதப்பட்ட கடிதம் இது. டாக்டர் ஷேக் அமைதிப் போராளி. மதக் கொடூரங்களுக்கு எதிராக கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடுபவர். மருத்துவர். அயர்லாந்தில் பணி புரிந்து விட்டு பாகிஸ்தான் திரும்பி ராவல் பிண்டி மருத்தவக் கல்லூரியில் பணி புரிந்தவர். )

நீங்கள் நலமென்று நம்புகிறேன். நானும் மனம் தளராமல் இருக்க முயல்கிறேன். செப்டம்பர் 11 அன்று நடந்த அவலச் சம்பவங்களினால் விலமதிப்பற்ற உயிர் இழப்பு எனக்கு பெரும் துயரம் அளிக்கிறது. மனிதகுலத்திற்கும், பண்பாட்டிற்கும் இது ஒரு பெருத்த அடி. மதக் காட்டுமிராண்டித்தனம் நடத்திய இந்தத் தாக்குதல் மதத்தின் மூட நம்பிக்கைகள் எவ்வளவு கொடூரத்திற்கு இட்டுச் செல்லும் என்பதன் நிரூபணம். மனிதத்தன்மையின் அவசியம் பற்றியும் இது நமக்கு அறிவுறுத்துகிறது. இங்கு அமெரிக்கத்ட் தூதரகத்திற்கும், என் அனுதாபச் செய்தியை அனுப்பியுள்ளேன்.

மும்பையில் நடந்த மனித்தன்மை மற்றும் ஒழுக்க நெறிகளுக்கான மாநாட்டில் நான் அளித்த ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு ‘ தீனி மதரஸாக்களும் தாலிபன் வளர்ச்சியும் ‘ என்பது தங்கள் நினைவில் இருக்கக் கூடும். உலகமயமாக்கலின் விளைவாக , மிகத் தொலைவில் இருந்த பிற்பட்ட சமூகங்களிலும் உள்ள இது போன்ற மதக் கொடுங்கோன்மை உலகுக்குத் தெரிய வருவது ஒரு நன்மை என்று சொல்ல் வேண்டும். மூன்றாவது உலகில் உள்ள தாரளவாதிகளையும், ஜனநாயக் அரசுகளையும் ஆதரிக்க வேண்டிய அவசியமும் இதனால் விளங்கும். ஜனநாயகம் என்ற கோஷம் மட்டும் போதாது. மதச்சார்பின்மையும், மனிதத்துவமும், தாராளவாதமும் உலகமயமாக்கப்பட வேண்டும்.

என் வழக்கு

இனி என்னைப்பற்றி. ஆகஸ்ட் 18-2001-ல் என் மீதுமரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது – எந்த நியாயமும் இல்லாமல்.

1. 2000-ஆண்டு அக்டோபர் முதல் தேதி தெற்காசியச் சங்கத்தின் ஒரு கூட்டத்திற்கு நான் சென்றேன். அங்கு ஐ எஸ் ஐ-யிலிருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஷெளகத் காதிர் என்பவர் பேசினார். இவர் மதச்சார்பான அரசியல் இயக்கமான ஜமாத் இஸ்லாமியைச் சார்ந்தவர். தெற்காசிய அமைதி பற்றியும், காஷ்மீர் பற்றியும் நான் கேட்ட சில கேள்விகள் பிடிக்காமல் அங்கேயே என்னை அவர் மிரட்டினார். வெளியுறவு அமைச்சக ஆட்களும், கோட்பாடு வகுக்கும் அரசாங்க நபர்களும் கூட அங்கே இருந்தனர்.

2. 48 மணி நேரத்திற்குள்ளாக பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலர் எனக்கு எதிராக ஒரு புகார் வரைந்து ஒரு மதகுருவிடம் அளித்து, அவர் வழிகாட்டுதலில் நான் தெய்வ நிந்தனை, இழிவு செய்ததாக ஜோடனை செய்த ஒரு கடிதம் தயார் செய்தார். இவர் என் மானவர். அக்டோபர் 2-ம் தேதி என் வகுப்பில் இந்த சொற்கள் சொல்லப் பட்டதெனக் குற்றச்சாட்டு.

நீதிமன்றம் மதகுருவின் சாட்சியம் வெறும் யாரோ சொல்லிக் கேட்டதென தள்ளுபடி செய்தது.

அந்த மாணவன் என்மீது குற்றம் சாட்டப்பட்ட அன்று பள்ளிக்கே வரவில்லை என்று அவனுடைய சாட்சியமும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இரண்டு மாணவர்கள் என் நிந்தனைப் பேச்சை 2-10-2000 அன்றி 12:15 மணிக்குக் கேட்டதாய் சாட்சியம் சொன்னார்கள் என் வகுப்பு 12:00 மணி முதல் 12:45 வரை நடந்ததாய்ச் சொன்னார்கள்.

என்னுடைய அறிக்கையில் நான் அன்று 12:00 முதல் 12:45 வரையில் எந்த வகுப்பும் எடுக்க வில்லை என்றும் என் வகுப்பு 9:30 முதல் 12:00 வரையில் தான் என்று தெரிவித்தேன். பள்ளி கால அட்டவணையையும் நான் தாக்கல் செய்தேன்.

இந்த நிகழ்ச்சி நடைபெறவே இல்லை என்றும், எந்த நிந்தனை வார்த்தைகளும் பேசப்படவில்லை என்றும் சொன்னேன்.

நீதிமன்றத்தின் முன்னால் தினமும் மதம் பயிலும் தாலிபன் போன்ற மாணவர்கள் தாலிபன் போல தலையணி அணிந்து என்னையும், என்னுடைய வழக்குரைஞரையும் மிரட்டினார்கள். இவர்கள் அச்சுறுத்தலினால் வழக்கு ராவல் பிண்டியின் மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மக்கள் பார்வைக்கு இல்லாமல் தனித்த முறையில் இந்த வழக்கு நடத்தப்பட்டது. எந்த சாட்சியமும் இல்லாமல் எனக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.

பாகிஸ்தானின் பீனல் சட்டம் 295/சி பிரிவு மதப் பயங்கரவாதமேயாகும்.

தங்கள் போன்ற நண்பர்களினால் நான் இன்னமும் மனத்தைத் தேற்றிக் கொண்டிருக்கிறேன். IHEU-விற்கும் என் நன்றி. இங்கு வரும் செய்திகளுன் படி ஆஃப்கானிஸ்தானை தாலிபன்களிடமிருந்து விடுவிப்பதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இதனால் இஸ்லாமாபாதிலும் சில நல்ல மாறுதல்கள் ஏற்படலாம் என்று நம்பிக்கை தோன்றியுள்ளது.

எம் வாழ்க்கை நெறியான மனிதத்துவத்தின் மீது நம்பிக்கை இன்னமும் மிக உறுதியாய் உள்ளது, உலகின் மனிதத்துவக் குடும்பம் எனக்கு அளித்துள்ள பரிவிற்கும் ஆதரவிற்கும் என் நன்றிகள்.

தனிப்பட்ட முறையிலும், பொதுவான முறையில் எல்லா மனிதத்துவ நெறியாளர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

மனிதத்துவம் நம்பும்

டாக்டர் எம் யூனுஸ் ஷேக்

மரண தண்டனைப் பிரிவு.

***

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்

1. டாக்டர் யூனுஸ் ஷேக் அவர்கள் மட்டுமே இந்த தெய்வநிந்தனை குற்றத்தின் கீழ் மரணதண்டனை பெற்றவர் அல்ல. இவர் போல, வசதியும், நண்பர்களும் இல்லாத பலர், இந்த குற்றத்தின் கீழ் மரண்தண்டனை பெற்று இறப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்

2. 1980களில் ராணுவ சர்வாதிகாரி ஜியா வுல் ஹக் அவர்களால் பாகிஸ்தானை இஸ்லாமியப்படுத்துவதற்கான முயற்சியின் அங்கமாக சட்டமாக்கப்பட்ட இந்த விதி, யாரொருவர் முகம்மது நபியின் பெயரை அவமதித்தாலும் அவருக்கு மரண தண்டனை வழங்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

3. இது பெரும்பாலும், முஸ்லீம் மதகுருக்களுக்கு வேண்டாதவர்கள் மீதும், சிறுபான்மையினரான இந்துக்களுக்கும், கிரிஸ்தவர்களுக்கும், அகமதியா முஸ்லீம் பிரிவைச்சார்ந்தவர்களுக்கும் எதிராக பிரயோகப்படுத்தப்பட்டாலும், இது முஸ்லீம்களுக்கு எதிராகவும் பிரயோகப்படுத்தப்படுகிறது.

4. 1991இல் இரண்டு கம்பளி நெய்யும் சிறுவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் மரணதண்டனை வழங்கப்பட்டது. அந்த மரணதண்டனையை நீக்கிய ஒரு நீதிபதி நீதிமன்றத்திலேயே கொலை செய்யப்பட்டார். அந்த கொலையை செய்த குற்றவாளிகள் என இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. செய்தது ராணுவமே என்றும் வதந்தி உலவுகிறது.

மேலும் விவரங்களுக்கு

http://www.secweb.org/asset.asp ?AssetID=189

***

Edited extracts from Dr. Shaikh ‘s letter to Babu Gogineni, Executive Director, International Humanist and Ethical Union (www.iheu.org). (Written in November 2001):

I hope this letter finds you in the best of your health. I am well and trying to keep fit. Well, the 11th September US tragedy brought a lot of grief for the loss of valuable American lives. Indeed, it was a great loss for humanity and civilization. Religious barbarism struck a blow and awakened the world to the horrors of religious dogmatic beliefs and practices; as well as it stressed the need for humanism, liberalism and secularism. I wrote a letter to the US Embassy here, as well as sent a message expressing my grief to Prof. Paul Kurtz and American humanists.

As you might remember, my paper ‘Deeni Madarsas and Rise of Taliban ‘ presented at IHEU ‘s Mumbai Congress fringe was on this topic. Indeed, globalisation of the world village exposed even the most developed societies to the religious barbarism of most backward societies. And here intensely arises the question of developing and morally supporting the third world liberal persons, associations and governments. Mere slogans of democracy are not enough. Globalization of Humanism, Liberalism and Secularism is necessary not only for the good of the third world countries but also for the ‘spiritual ‘ and physical defence of the developed and civilised world.

My Case

Now about myself: on 18.08.01 Capital Punishment was pronounced against me, though the case did not merit this.

1.) On 1 October 2000 I attended a meeting of South Asian Union addressed by an ISI (Inter Services Intelligence) Brig. Shaukat Qadir (retd.) also running a religious-political association of Jamait – I – Islami. I asked a couple of questions about South Asian peace and Kashmir which offended him & he returned a threat. There were foreign office policy makers and newsmen sitting there.

2.) Within 48 hours, a foreign office Pakistan ‘s employee who was also my student at the medical college I used to lecture at the morning time, prepared an application against me alleging blasphemous remarks in their class and gave to a cleric, who improving upon the complaint, accused me of a specific instance of 2-10-2000 in the class of IInd year male students and registered the case with Police.

The Court set aside the cleric ‘s evidence as hearsay.

The student who wrote the application was found to be absent from the college on the day of the alleged incident, so his evidence was set aside.

Two other students gave evidence that they heard the alleged blasphemous remarks on 2-10-2000 at 12.15 noon in a lecture that lasted between 12.00 to 12.45 noon.

In my statement, I informed the Court that on 2-10-2000, I did not take any lecture from 12.00 o 12.45 noon, and therefore there was no incident of uttering blasphemous remarks at 12.15 noon. In support of this I presented the college timetable before the court, which confirmed that my timings at college were limited from 9.30 am to 12.00 noon only.

Therefore neither the incident took place, nor the prosecution proved that the alleged sentences were blasphemous.

During the trial, the religious students of the claimant clerics Deeni Madrassa used to demonstrate against me wearing the Taliban style headdress & uniforms, my solicitors were threatened so much so that the court had to be moved to central Jail, Rawalpindi.

The Court in camera held at Central Jail, Rawalpindi sentenced me to Capital Punishment, despite the flimsy and uncorroborated evidence against me, and despite documentary evidence in my favour, against which our appeal has been launched.

People here designed the abuse of the blasphemy law 295/c Pakistan Penal Code as Religious Terrorism with Law Code.

Thanks to friends like you, I am in good spirits and waiting for decision on my appeal. I am also thankful to IHEU, Amnesty International and other individuals and groups for their support.

As per news here, the American and Allied Forces have taken most of Afghanistan from the shackles of Taliban religious Terrorism; it had lots of influence on Islamabad administration, so hopes are rising for some liberal atmosphere.

My convictions for the truth of our life stance Humanism are indeed unshakeable and unbeatable. And I am most thankful for the sympathy and support from the Humanist Family of the World.

My regards to all Humanists, individually and collectively.

Yours in Humanism

Dr. M. Younas Shaikh

Death Cell

Series Navigation

டாக்டர் யூனுஸ் ஷேக்

டாக்டர் யூனுஸ் ஷேக்