தேங்கிய குட்டையாய் காவேரி

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue

எஸ் ஆனந்த்


(நன்றி: அவுட்லுக் பத்திரிக்கை)

நுண்கலையில் மூழ்கி மூச்சுத் திணற வேண்டுமென்றால், டிஸம்பரிலும் ஜனவரியிலும் சென்னைக்குப் போகலாம். சுமார் 53 சபாக்கள், ஏறத்தாழ 2000 நிகழ்ச்சிகளை மேடையேற்றுகின்றன. இது அத்தனையும் நான்கே நான்கு வாரங்களில். மார்கழித் திருவிழாவின் போது சென்னையின் கர்நாடக சங்கீத கேட்கும் ஆசையும், பரதநாட்டியம் பார்க்கும் ஆசையும் திவ்யமாக நிறைவேறும். இது எக்காலமும் குறைவதாகவும் தெரியவில்லை. ஒரு மாதத்தில் அத்தனையையும் சாப்பிட்டுவிட்டு வருடம் முழுவதும் அசை போட நல்ல சந்தர்ப்பம். இந்த சங்கீத அலை அடித்த கரையில் நின்றால் சாவின் அறிகுறியும் தெரிகிறது. கப்பல் உடைந்து சிதறிய இறப்பல்ல. பெரிய கப்பல் மெல்ல மெல்ல முழுகும் தடயங்கள். தவறான வழிகாட்டும் கருவியாலும், குழம்பிய குட்டையாகக் கிடக்கும் கலாச்சார தண்ணீராலும் வரும் முழுகல்.

விளம்பரதாரர்கள் கொடுக்கும் ஆக்ஸிஜனால் மட்டுமே உயிர்வாழும் இந்த நுண்கலை, இறுக்க அடைக்கப்பட்டதால், மூச்சு முட்டி, உள்ளுக்குள்ளேயே கலவி புரிந்து கொண்டு, வீர்யமின்றி மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கிறது. இத்தனை கலை நிகழ்ச்சிகள் இருந்தாலும் எங்கே பார்வையாளர்கள் ? 6000 பரத நாட்டியக்காரர்கள் இருந்தாலும், சென்னையின் எந்த தெருவிலும் ஒரு மாமி ( மாமி என்ற பதம் மூலத்திலேயே உள்ளது – மொ பெ) பாட்டு மற்றும் நடனப் பள்ளி நடத்திக்கொண்டிருந்தாலும், நிகழ்ச்சிகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 15000த்தைத் தாண்டாது.

ஆடிட்டோரியம் காலியாக இருப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். விளம்பரதாரரின் பானரை விமரிசையாகத் தொங்கவிட்டால் போதும். நிகழ்ச்சி நன்றாக நடைபெறும். அனுமதிக்கட்டணத்தைக்குறைத்தால் கூட்டம் வரவா போகிறது ? கிருஷ்ணகானசபாவில் 21ஆம் வரிசையில் உட்கார 200 ரூபாய் கொடுக்க வேண்டும். மூன்றாம் வரிசையிலிருந்து நடனம் பார்க்க 500 ரூபாய் கொடுக்க வேண்டும். ஸ்ருதி என்ற பத்திரிக்கை நடத்தும் பட்டாபி ராமன் சொல்வது : ‘இத்தனை கூட்டமும் பிராம்மணர்கள்தான் ‘ அதுவும் சந்தோஷமாகக் கூறுகிறார், ‘இன்னும் சொல்லப்போனால் அத்தனையும் தமிழ் பிராம்மணர்கள்.. வெளிநாட்டிலிருந்து வந்து பார்க்கும் இந்தியர்களையும் சேர்த்து ‘

இந்தக்கும்பல், காஞ்சீவரம் பட்டுப்புடவையிலும், நித்யஸ்ரீ மஹாதேவன் தாளம் தட்டும்போது அவரது கையிலிருந்து ஒலிக்கும் தங்க வளையல் சத்தத்திலும், ஃபில்டர் காப்பி மணத்திலும்தான் திளைத்து இருக்கிறது. மீதமுள்ள ஒரு சதவீத பிராம்மணரல்லாதவர்கள், பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் வெள்ளைக்கார இசைஞர், சர்தார்ஜி, ஜப்பானிய இசைஞர் போன்ற வினோதர்களோடு வினோதர்களாக உட்கார்ந்திருக்க வேண்டும். தே னப்பிரிவு சதவீதமும், வினோதமும் நிகழ்ச்சி கொடுப்பவர்களிலும் ருக்கிறது. து நிச்சயமாக ந்த நுண்கலைகளில் வரலாற்றில் ல்லாத ஒரு வினோதம். வரலாற்று ரீதியாக இவை பிராம்மணர்களின் ஏக போகச் சொத்தல்ல. உண்மை அதற்கு நேர்மாறு. பரதநாட்டியத்தின் மூலக் கலை சதிர். இந்தச் சதிர் தேவதாசிகளால் 1920வரை நடத்தப்பட்டு வந்தது. 1947ல் நிறைவேற்றப்பட்ட தேவதாசி சட்டம், விபச்சாரத்துக்கு எதிராக தோன்றி வந்தும், இந்த நடனம் விபச்சாரத்துக்கு சமானமாகவே ஆக்கப்பட்டதுண்டு.

விக்டோரிய ராஜ்யத்தினாலும், காங்கிரஸ் தேசியவாதத்தாலும் வெறுத்தொதுக்கப்பட்ட இந்த நடனம் திடாரென்று மறு உருவாக்கம் பெற்று, மறு பெயர் பெற்று மரியாதைக்குரிய நுண்கலையாக ஆனது. இந்த சுத்திகரிப்பிற்கு முக்கிய காரண கர்த்தா, பிராம்மணரான ருக்மணி தேவி அருண்டேல். தியாசபிகல் சொஸைட்டியின் ஆலமர நிழலில், ருக்மணிதேவியின் கலாக்ஷேத்திராவில், சதிரில் இருக்கும் காமம் அகற்றப்பட்டு, ஆன்மீகப்படுத்தப்பட்டது. இழிவாக்கப்பட்ட தேவதாசிக்கலை தேசீய நடனமாக பரதநாட்டியமாக மறுகற்பிதம் செய்யப்பட்டது. சதாநந்த் மேனன் என்ற விமரிசகர், ‘பிராம்மணர்களுக்கு இந்த நடனத்துக்கு வேண்டிய உடல்வாகு இருந்ததுமில்லை இருக்கப்போவதுமில்லை. இவர்கள் நடனமாடுவதைப் பார்க்கும்போது முதுகெலும்பு எங்கே போயிற்று என்று ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது ‘ என்று கூறுகிறார். ரகுநாத் மாநத் என்ற பிராம்மணரல்லாத நடனக்காரர் முரணான இந்த உடலமைப்பின் விளைவுகளைக் கூறுகிறார். ‘சபாக்கள் நடனக்காரப் பெண்களையே கேட்கிறார்கள். இல்லையென்றால் ஆண்நடனக்காரரோடு ஆட துணையாகவாவது பெண் நடனக்காரர் வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை எல்லா ஆண் நடனக்காரர்களும் ஒரேமாதிரிதான். கேட்டால், ‘நாங்கள் ஏற்கெனவே ஒரு ஆண் நடனக்காரருக்கு இடம் கொடுத்துவிட்டோம்… ‘ என்று பேசுகிறார்கள். பெண்களுக்கு மேக்கப், நகைகல், அழகான உடைகள் எல்லாம் இருக்கின்றன. ஆண்களுக்கு வெறும் உடம்பு மாத்திரமே இருக்கிறது ‘

தஞ்சாவூர், திருவாரூர், பந்தநல்லூர் கோவில்களின் சுற்றுச்சூழலிருந்து வலிந்து பிரிக்கப்பட்ட ந்த கலாச்சார நுண்கலை, டி பாலசரஸ்வதியின் சொற்களில் கூறுவதென்றால், ‘சமைக்கவும் தங்கள் கணவருக்கு பரிமாறவுமே தகுதியான ‘ பெண்களின் உடல்கள் மீது திணிக்கப்பட்டது. உடல் மொழியும் மாறிவிட்டது. சிருங்கார அங்க அசைவுகள் பிராம்மண ரசனைக்கேற்றபடி ருக்க வேண்டி தூக்கி எறியப்பட்டு, பக்தி சார்ந்த அங்க அசைவுகள் டத்தைப் பிடித்துக்கொண்டு விட்டன. க்ஷேத்திரய்யாவின் காம பதங்களும், தூண்டும் ஜாவளிகளும் மறைந்து, உடல் அசைவுகள் கழுவப்பட்டுவிட்டன. வெள்ளை உடல் தேவையான ஒரு விஷயமாகி விட்டது.

முந்தைய பிராம்மண நாட்டியக்காரர்களான ருக்மணிதேவி போன்றவர்கள் ஜாதித் தடைகளை உடைத்து நடனத்துக்குள் புகுந்தார்கள். திராவிட இயக்கத்தினால் தாக்கப்பட்ட இந்த சமூகம், இந்த நுண்கலைமூலம் அடைந்த லாபல் நிறைய. ‘ இது இவர்களுக்கு புதிய முகத்தைக் கொடுத்தது. தேசியவாதத்துக்கு முத்திரையாக பயன்படுத்தப்பட்ட் இந்த நடனம், உலகெங்கும் இந்தியக்கலையாக அறிமுகப்படுத்தப்படவும் ஏதுவானது ‘ என்று கூறுகிறார் மேனன். ‘எல்லா மத்தியதர வர்க்க பிராம்மணப்பெண்ணும் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள தூண்டப்படுகிறாள். இது டைப்பிங் வகுப்புக்குச் செல்வதன் மூலம் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதுபோலத்தான் ‘

பிராம்மணரல்லாத நாட்டியக்காரர்களான பாலசரஸ்வதியும் மைலாப்பூர் கெளரி அம்மாளும், 1927ல் பிறந்த மெட்ராஸ் மியூசிக் அகாடமியிடமிருந்து 1950வரை ஆதரவு பெற்றார்கள். ஆனால், ருக்மணி தேவியின் பிராம்மண அழுத்தமே இறுதியில் வென்று எதிர்காலத்தை நிர்ணயம் செய்தது. நட்டுவனார்கள் பரம்பரை பரம்பரையாக தேவதாசி , இசை வெள்ளாளர் போன்ற பாரம்பரிய இசைக்கலைஞர்கள் வகுப்பிலிருந்து வந்தாலும், இவர்கள் தஞ்சாவூர், திருவாரூர் பந்தநல்லூர் போன்ற நகரமற்ற மையங்களில் மட்டுமே இருந்ததனால் அழியும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

இன்றைய நாட்டியக்காரர்களிடம் பிராம்மணரல்லாதவர்கள் ஒரு சிலரே. அலர்மேல் வள்ளி, ஊர்மிளா சத்யநாராயணன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதைத்தாண்டி பார்த்தால், பரதநாட்டியம் மேல்குடிக் கலையாக உண்மையிலேயே உருவாகி விட்டது. சமூக ஆக்கிரமிப்பும் முழுமையாகி விட்டது. மாநத் கூறுகிறார், ‘என்னுடைய பெற்றோர், என் சகோதரிகளை 14ஆம் வயதுக்குப் பின்னர் நடனமாட அனுமதிக்கவில்லை. இசைவெள்ளாளர்கள் மத்தியில் நடனமாடுவது திருமணத்தை வெகுவாகப் பாதிக்கிறது. ஆனால் பிராம்மணர்கள் மத்தியில் இது திருமணத்துக்கு ஆதரவானது. சொல்லப்போனால் வரதட்சணையில் து ஒரு பகுதி ‘

கர்னாடக சங்கீதமும், பரதநாட்டியமும் பிராம்மணர்களின் பொழுதுபோக்கு என்று பொதுவாக கருத்து இருப்பதை பட்டாபி ராமன் ஒப்புக்கொள்கிறார். பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் இதில் ஒன்றும் தவறிருப்பதாகப் பார்க்கவில்லை. ‘பிராம்மணர்கள் இல்லையேல் பரதநாட்டியம் எங்கிருக்கும் ? ‘ என்று கேட்கிறார். இதுவே இதனை நியாயப்படுத்திவிடுகிறது.

இசையும் இதனைப் போலவே ஆகிவிட்டது. 1930லிருந்து 1960வரை மேல்குடி பிராம்மணரல்லாதார்கள் இதில் வல்லுனர்களாக இருந்தார்கள். வயலின் என்றால் த்வாரம் வெங்கடசாமி நாயுடுவும், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையும், மைசூர் செளடய்யாவும் தான். மிருதங்கம் வாசிக்கவென்றால் பழனி சுப்பிரமணிய பிள்ளை தான். தனம்மாள் பரம்பரையில் வந்த டி. முக்தாவும், டி. பிருந்தாவும் எம். எஸ் சுப்புலட்சுமியும் 60லும் 70லும் பிராம்மண பெண்களுக்கு முன்பே முன்னோடியாக இருந்தார்கள். (எம் எஸ் சுப்புலட்சுமிக்கு செல்வாக்கு அவர் பிராம்மணராக மாற்றம் பெற்ற பின்னரே வந்தது). இன்று பிராம்மணரல்லாத கர்நாடக சங்கீத வித்வான்கள் அரிதாக இருக்கிறார்கள். இசைவெள்ளாளர்கள் (இசையை பயிர் செய்பவர்கள்) என்று தங்களைக் குறிப்பிட்டுக்கொண்ட ஒரு பெரும் சமூகமே இன்று வாயற்று ருக்கிறது என்று புலம்புகிறார் கனடாவைச் சார்ந்த இசை ஆராய்ச்சியாளர் தேவேஷ் ஸோனேஜி.

விளம்பரதாரர்களும், சபைகளில் சாப்பாடு பறிமாறுபவர்களும் வேண்டுமானால் தலைமுடி நரைத்துக்கொண்டே வரும், குறைந்து கொண்டே வரும் பார்வையாளர்களைப் பற்றி கவலைப்படலாம். ஆனால் ரசிகர்களும் வித்வான்களும் பாரம்பரிய சை தன்னுடைய சமூகத்தளத்தை விரிவு படுத்துவதை விரும்புவதில்லை. பட்டாபி ராமனும் சுப்பிரமணியமும் ‘ மற்றவர்களை யாரையும் சங்கீதம் படிக்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தவில்லையே ‘ என்று கூறலாம். அது உண்மையும்தான். ஆனால் ‘மற்றவர்களுக்கு ‘ அங்கீகாரம் அவ்வளவு எளிதாக வந்துவிடாது. 1930களில் புதிய சங்கீத கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் பாரம்பரிய முறையில், வீட்டில் குருக்களைக் கொண்டு, கற்றுக்கொண்டவர்களுக்குத்தான் வெளியேயும் உள்ளேயும் அங்கீகாரமும் மதிப்பும்.

சினிமாவுக்கும் பாடும் சிறந்த பாடகரான பி உன்னிக்கிருஷ்ணன் தான் பிராம்மணராக ல்லாததை பற்றி சிரிக்கிறார். ‘என்னை அவர்களில் ஒருவனாக கருதிக்கொண்டிருக்கலாம் ‘ (மேலும் அவருக்கு பிராம்மண குருக்கள் ருந்தார்கள்). சுத்தக்கார விமர்சகர்கள் முன்னிலையில் ஒரு விஷயத்தை நிரூபிப்பதில் பெரும் கஷ்டம் ருப்பதை அவர் உணர்ந்திருக்கிறார். கே ஜே யேசுதாஸ் போன்றவர்கள் எதிர்நீச்சல் போடுகிறார்கள். ஆனால் சென்ற கிரிஸ்துமஸின் போது நாரத கான சபாவில் கிரிஸ்து மீது சங்கீர்த்தனம் பாடியது போல ன்று பாடுவதற்கான டத்தைப் பிடிக்க அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்.

‘ இந்துஸ்தானியில், ஒரு குத்துச்சண்டை பயில்வானின் மகனான ஹரிபிரசாத் சவுராஸியா மிக உயர்ந்த இடத்துக்கு வர முடிந்திருக்கிறது. இத்தகைய ஒரு வாய்ப்பு கர்னாடக சங்கீதத்தில் சுத்தமாக மூடிக்கிடக்கிறது ‘ என்று கூறுகிறார் திரைப்பட இயக்குனர் ராஜீவ் மேனன். ஒரு சில இந்து அல்லாதவர்கள் கர்நாடக சங்கீதத்தில் சிறந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். நாதஸ்வரத்தில் ஷேக் சின்ன மெளலானா போன்றவர்கள் இருந்தாலும், நாதஸ்வரம் ஏற்கெனவே பிராம்மணரல்லாதவரின் இசைப்பகுதி என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். காலாவட்டத்தில் இந்த கம்பீரமான காற்றிசைக்கருவி கச்சேரி மேடைகளிலிருந்து ஒதுக்கப்பட்டு வெறும் மங்கள இசை வாத்தியமாக தள்ளப்பட்டு விட்டது.

இத்தனை பழமைத்தனம் இருந்தாலும், கர்நாடக சங்கீதம் நவீன உபகரணங்களை தழுவிக்கொள்ளத் தவறுவதில்லை. மூன்று மணி நேர, பதினைந்து வாத்திய 1930ஆம் வருட கச்சேரி அன்றைய 19ஆம் நூற்றாண்டு சங்கீத கச்சேரி அமைப்பிலிருந்து வெகுவாக மாறுபட்டது. இன்றோ, பெரும்பாலான வித்வான்கள் எலக்ட்ரானிக் தம்பூரா, சிடி-ராம் தம்பூரா போன்றவற்றை உபயோகிக்கிறார்கள். நான் இவற்றிற்கு ரிமோட் கண்ட்ரோல் கூடப் பார்த்தேன். அகாடமியில் ஒரு பந்தலில் ஒருவர் இரண்டு சிடிகளை சுமார் 1250ரூபாய்க்கு விற்றுகொண்டிருந்தார். இது கணினியில் போட்டு குரு இல்லாமலேயே எல்லா கர்நாடக சங்கீதத்தையும் கற்றுக்கொள்ளும் அமைப்பு. சுமார் 10 பாக்கெட்கள் ஒரே நாளில் விற்பனை.

பெரும்பாலான வித்வான்கள் சார்ட்டட் அக்கவுண்டண்டாகவும், வங்கி மேலாளர்களாகவும் ஸாண்ட்ரோ காரிலும் சியல்லோ காரிலும் பவனி வந்து கொண்டு, அவ்வப்போது வெளிநாட்டு விஜயங்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஒரே ஒரு விஷயம் மட்டும் நிரந்தரமானது. இந்த அமைப்பு முழுவதும் பிராம்மணர்களின் தனி உரிமை என்பது. ‘திராவிட இயக்கத்தின் பின்னணியில் இந்த சமூகம் தங்களை பாரம்பரியத்திலும், உயர்கலையிலும் அடையாளப்படுத்திக்கொண்டது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், இன்று இந்தக்கலைகள் இந்த சமூகத்தை உலகளாவிய முறையில் காட்டிக்கொள்ள களவாடப்படுகிறது ‘ என்று கூறுகிறார் ராஜீவ் மேனன்.

பெரும்பாலான குருக்கள் தங்களது இசையின் ஜாதிச்சிறப்பை காட்டிக்கொள்ளத் தயங்குவதில்லை. ‘பிராம்மணர்கள் பாடினால் மட்டுமே இது சிறப்பாக ஒலிக்கும் ‘ என்பது வழக்கமான பேச்சு. பழமைத்தனம் வார்த்தை விளையாட்டில் வேறு. கர்னாடிக் என்று ஆங்கிலப்படுத்தப்பட்ட இந்த வார்த்தை கர்நாடகம் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. கர்நாடகம் என்பது பாரம்பரியம் என்ற பொருள் கொண்ட வார்த்தை. சுமார் 250 வருடங்களுக்கு முன்னர், பக்தி இயக்கத்தின் விடிவெள்ளிக்காலத்தில், இந்த இசையின் இலக்கணமும், அழகியலும் தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற இலக்கிய மொழிகளை கட்டிக்காப்பாற்றி வந்த சமூகத்தால் உருவாக்கப்பட்டன. தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஸ்யாமா ஸாஸ்திரிகள் போன்றவர்கள் 18-19ஆம் நூற்றாண்டில் காவேரிக்கரையில் திருவையாறு போன்ற இடங்களில் பிறந்து நவீன கர்நாடக இசையை புணருத்தாரணம் செய்ய 1200 பாடல்களுக்கு மேல் இயற்றினார்கள். இன்று இந்த மும்மூர்த்திகள் தெய்வங்களாகி விட்டார்கள். அவர்களது சங்கீதம் காட்சிப்பொருள் போல மியூஸியம்படுத்தப்பட்டுவிட்டது. தீஷிதர், சாஸ்திரி போன்றோரின் பாடல்களும், தியாகராஜரின் சங்கீதமும் கவிதை ரீதியில் வளமையானவைதான். ஆனால் பக்தி இயக்கத்தின் வெளிப்பாட்டை ஒப்பிட்டால் ஒதுங்க வேண்டியதுதான். சதானந்த மேனன், ‘பக்தி இயக்கம் என்பது மனித நேயம் பற்றியது. மும்மூர்த்திகள் இந்த பக்தி இயக்கத்தின் இதயமான மனித நேயத்தை எதிர்த்தவர்கள். இது பிராம்மணர்கள் மீண்டும் மறுமலர்ச்சி அடைய தளம் அமைத்தது ‘ என்று கூறுகிறார்.

பெரும்பாலான கர்நாடக சங்கீத குருக்கள் இந்துஸ்தானி சையை ‘ இஸ்லாமிய தர்பார் பாதிப்பில் ‘ உருவானது என்று கேலி செய்கிறார்கள். காவேரியின் கரைகளில் பாடப்பட்ட இசை மட்டுமே, சாம வேதத்தின் வேர்களிலிருந்து வந்த சுத்தமான புனிதம் என்று கோருகிறார்கள். இது அமெரிக்காவின் கெண்டக்கி மாநிலத்துக்குச் சென்றாலும், இதில் புதுமை என்பது சிந்திக்கக்கூடாதது. இந்து பத்திரிக்கையில் எழுதும் எஸ்விகே என்ற விமர்சகர், ‘ கால நிரந்தரமான தியாகராஜா, தீக்ஷிதர், சாஸ்திரி போன்றோரின் கீர்த்தனைகளை மட்டுமே பாட வேண்டும் ‘ என்று புதுப்பாடகர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

ஆகவே இவர்களைப் பொறுத்தமட்டில், பால முரளி கிருஷ்ணா, பாபநாசம் சிவன் போன்றோரின் ஆக்கப்பூர்வமான படைப்புகள் வெறுமனே மும்மூர்த்திகளை காப்பி அடிக்கும் முயற்சிதான். தற்கால மறு உருவாக்கம் என்பது பரதநாட்டியத்தில் சந்திரலேகாவால் ஓரளவுக்கு முயற்சியாவது செய்து பார்க்கப்பட்டது. ஆனால் கர்நாடக சங்கீதம் பொருந்தாத கால வழுவாக உட்கார்ந்திருக்கிறது. இன்றைய புதிய பாடகர்களான உன்னி கிருஷ்ணன், நித்யஸ்ரீ, பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் பாரம்பரிய சங்கீதத்திலிருந்து சினிமாவுக்கு செல்கிறார்கள். இது வர்களது கச்சேரிகளில் கூட்டத்தை கொண்டுவருகிறது. ஆனால் கச்சேரிகளில் நிச்சயமாக புதுமை இராது.

இதனாலேயே, தன்னுடைய பிராந்திய சிந்தனையை விட்டு செல்லாத கர்நாடக சங்கீதம் என்றென்றும் இந்தியாவிலோ, உலகளாவிய அளவிலோ ஒரு உணர்ச்சியை தூண்டவில்லை. ஏன் பம்பாயிலும், கல்கத்தாவிலும் இது புலம்பெயர்ந்த தமிழ் பிராம்மணர்களால் கூண்டுக்குள்தான் அடைக்கப்பட்டு ருக்கிறது. இது பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. ‘அம்ஜத் அலிகான் தன்னுடைய கச்சேரிகளுக்கு சுமார் 50,000 ரூபாய் வரை சென்னையில் வாங்குகிறார். ஆனால் தலை சிறந்த தென்னக வித்வான்கள் குப்பை விலைக்கு அவர்கள் சொந்த ஊரிலேயே பாட வைக்கலாம். செம்மங்குடிக்கு அகாடமி கொடுத்த பணம் வெறும் 2000 ரூபாய்தான் ‘ என்று புலம்புகிறார் பட்டாபி ராமன்.

இதே பாடகர்கள், இதே பாடல்கள், இதே ரசிகர்கள் இருக்கும் வரை எப்படி இந்த அழுகலை தடுக்க முடியும் ? இவ்வாறு ஒரு ஜாதி ஆக்கிரமிப்பு கலையின் உணர்வுக்கு எதிர் திசையில் செல்லுகிறது என்பதை புரிந்து கொண்டால் ஒரு வேளை இதற்கு விடிவு பிறக்கலாம். இப்போதைக்கு இவர்கள் இருண்ட மாயச்சுழலில் சிக்கி வெளிச்சத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

***

S Anand in Outlook

Series Navigation

எஸ் ஆனந்த்

எஸ் ஆனந்த்