உ.வ.மை.யில்லாத உலகம் -1

This entry is part [part not set] of 18 in the series 20011022_Issue

டெக்ஸன்


செப்டம்பர் 11ஆம் தேதி உ(லக) வ(ர்த்தக) மை(யம்) தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, எனது நண்பர்களிடையே மின் அஞ்சல் மூலம் நடைபெற்ற கலந்துரையாடலிலிருந்து சில பகுதிகள்:

பாலன்: உலகமே வியந்து போற்றிய பிரம்மாண்டமான புத்தாின் சிலைகளை அழித்தவர்கள் இந்தத் தாலிபான்கள். இஸ்லாமியரல்லாதவர்களுக்கு, ஹிட்லர் பாணியில் அடையாளச் சீட்டு கொடுத்தவர்கள். இந்தக் கொடியவர்களுக்குத் தண்டனையும் உலகிற்குப் பாதுகாப்பும் தரத் தேவையான இராணுவ மற்றும் பொருளாதார பலம் கொண்ட ஒரே நாடு அமொிக்காதான்.

ஷர்மா: நான் குற்றத்தைத் தண்டிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. தீவிரவாதத்தை அழிக்க எந்தக் காவல்துறையாலும் முடியாது என்றுதான் சொல்ல வருகிறேன். இந்தத் தண்டிக்கும், காயப்படுத்தும் ஆசைதான் தீவிரவாதத்தின் விதை. இது ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் இருக்கிறது. ஒரு ஒஸாமா பின் லாடனை அழிப்பது மூலம், இந்த மோசமான உலகத்தை உருவாக்கியதற்கு நான் பொறுப்பு இல்லை என்று பிரகடனப்படுத்துவது எளிது. ஆனால் அன்பு நிறைந்த உலகை உருவாக்குவது கடினம். இது வெறும் கனவு, நடக்காத காாியம் என்பதெல்லாம் உபயோகமில்லாத பேச்சு. இதை எந்த நிறுவனமும் செய்யப்போவதில்லை. நம்மைப் போன்ற தனி மனிதர்கள்தான் செய்ய வேண்டும்.

ஜார்ஜ்: சொல்வது யார் என்பதைப் பொறுத்து எந்தக் கதைக்கும் பல கோணங்கள் இருக்கின்றன. பொதுவாய் வெற்றி பெற்றவர்கள்தான் சாித்திரம் எழுதுகிறார்கள். இன்று மீடியாமீது ஆதிக்கம் செலுத்துபவர்கள் எழுதுகிறார்கள். இதில் சாி எது ? தவறு எது ? நான் சமீபத்தில் ஹாரோஷாமா படம் பார்த்தேன். அப்பா! எத்தனை சாவுகள்! அப்புறம் நாகஸாகி ? வெந்து தணிந்து கொண்டிருந்த இரண்டாம் உலகப் போருக்கு இவை தேவை தானா ? கொாியா ? வியட்னாம் ? ( நாபால்ம் நினைவிருக்கிறதா ?) இந்தோனேஷாயா ? கம்யூனிசத்தை ஒழிக்கும் ‘புரட்சி ‘யில் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் இறந்த பிறகு, வந்தது யார் ? ஸ ‘ஹார்டோ. இன்னும் நிகாரகுவா, க்வாடமாலா, பனாமா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் — அடுக்கிக் கொண்டே போகலாம்.

வினோத்: இதற்கெல்லாம் மூல காரணம் சக்தி வாய்ந்த நாடுகள் பலவீனமான நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதுதான். ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலைமைக்கு ரஷ்யா எவ்வளவு பொறுப்போ அவ்வளவு அமொிக்காவும். இதற்கு உலகம் மொத்தமும் விலை தரப் போகிறது. கார்கில் சண்டையின் போது, நிறைய இந்திய வீரர்கள் இறந்ததற்குக் காரணம், பாகிஸ்தான் தரப்பில் சண்டையிட்ட பெரும்பாலோர், அமொிக்கா ஊட்டி வளர்த்த ஆப்கானிஸ்தானின் முஜ்ஹதீன்கள் என்பதுதான். செப்டம்பர் 11ாஆம் தேதி, பாலஸ்தீனியர்கள் அவ்வளவு பேர் சந்தோஷப்படக் காரணமென்ன ? நமக்கு எப்போதும் இஸ்ரேலின் கோணத்திலிருந்துதானே செய்திகள் வருகின்றன ?

ஜார்ஜ்: பாலனின் அமொிக்காதான் உலகப் போலீஸ்காரனாய் இருக்க வேண்டும் என்ற கூற்றில் எனக்குச் சிறிதும் உடன்பாடில்லை. இந்தப் பிரச்சனை மிகவும் சிக்கலானது. இதற்கு எளிதான தீர்வுகள் எதுவுமில்லை. ஆனால், அமொிக்காவை உலகப் போலீஸ்காரனாக்குவது நிச்சயமாய்த் தீர்வுகளில் ஒன்றல்ல. பாலன் அமொிக்கக் கலாச்சாரத்துடன் நன்கு ஐக்கியமாகிவிட்டான் என்று தொிகிறது! இது போன்ற சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். அமொிக்காவில் கூட சீக்கியர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றதாக அறிந்தேன்.

வினோத்: ஈரானில் ஷா பஹ்லவியை அமர்த்திய மாதிாி, ஒரு தலையாட்டி பொம்மை அரசாங்கத்தை பழைய அரசர் ஷா மூலம் ஆப்கானிஸ்தானில் அமர்த்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தொிகிறது. பிறகு, ஹாலிவுட், கோக கோலா போன்ற போதைப் பொருள்களை இறக்குமதி செய்து விடலாம்.

ஷர்மா: நமக்குள் இவ்வளவு சிறுமையும், ஆக்ரோஷமும் இருக்கையிலும், சிறுமையைப் பற்றியும் அஹாம்சையைப் பற்றியும் ஏதோ நமக்குச் சம்பந்தமில்லாதது போல் நாம் வெட்கமில்லாமல் பேசுகிறோம். நமக்கு வெளியேதான் பிரச்சனை, ஒரு ஒஸாமாவைத் தீர்த்துக் கட்டிவிட்டால் பிரச்சனைக்குத் தீர்வு என்ற ாீதியில் நாம் எண்ணுகிறோம். உண்மையில் இதுதான் பிரச்சனையே. நீயும் நானும் – ஹாந்து, கிறிஸ்துவன், முஸ்லீம் போன்ற – இந்த அடையாளங்களின் சுமைகளைக் களைய வேண்டும். வார்த்தைகளின், வடிகட்டிகளின், ாஇஸங்ாகளின் (கிருஷ்ணமூர்த்தியிஸம் உட்பட) பிடியிலிருந்து விடுபடவேண்டும். ாஉண்மைா யை உள்ளபடி பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வினோத்: திரும்பத் திரும்ப நாம் மட்டுமே பேசிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மற்றவர்களெல்லாம் எங்கே போனார்கள் ?

நான்: பாலனின் புதிய நாட்டுப் பற்றிலிருந்து, அமொிக்காவுக்கெதிரான கருத்துக்களும், ஷர்மாவின் ‘JK ‘யிசமும் படிக்கச் சுவாரசியமாய் இருப்பதால் இடையே புகுந்து கெடுக்க வேண்டாம் என்று மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம் ஒரு வேளை. வெளி நாட்டுக் கொள்கை என்ற பெயாிலும், கம்யூனிஸத்தின் வளர்ச்சியைத் தடுப்பதாகச் சொல்லிக் கொண்டும், அமொிக்கா பல நாடுகளில் புகுந்து திருவிளையாடல்கள் நடத்தியிருப்பது தொிந்த விஷயம்தான். இந்தத் திருவிளையாடல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை, செப்டம்பர் 11ஆம் தேதியன்று இறந்தவர்களின் எண்ணிக்கையை விட நிச்சயம் கூடுதலாகவே இருக்கும்தான். ஆனால், அதற்காக, பின் லாடன் செய்தது (என்று வைத்துக் கொண்டால்) நியாயமாகிவிடுமா ?

மேலும், சில கேள்விகளுக்கு விடை தொியவேண்டும்: உலகத்திற்கு ஒரு போலீஸ்காரன் தேவையா ? தேவையென்றால், அமொிக்காவைத் தவிர வேறு யார் இந்த வேலைக்குத் தகுதியானவர் ? UN வெறும் செத்த பாம்பு. அமொிக்கா ஆட்டிவைக்கும் பொம்மை. காவல்காரனே இந்த உலகிற்குத் தேவையில்லையென்றால், வேறு சில கேள்விகள் எழக்கூடும்: உலகின் ஒரு மூலையில், எல்லோரும் பார்க்கும்படியாக, ஒரு அப்பாவிப் பையனை ஒரு முரடன் அடித்துக் கொல்லுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நான் என்ன செய்வது ? அடிவாங்குவது என் பையனல்லவென்று சும்மாயிருந்து விடவா ?

— தொடரும் —

Series Navigation

டெக்ஸன்

டெக்ஸன்