ஏன் போர்கள் நடக்கின்றன ? (முதல் பகுதி)

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

மார்வின் ஹாரிஸ்

(இந்தக் கட்டுரை, டாக்டர் மார்வின் ஹாரிஸ் எழுதிய பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் என்ற மானுடவியல் பாடப்புத்தகத்தின் மூன்றாவது அத்யாயம், Primitive Wars)

பரவிக்கிடக்கும் பழங்குடிகளான மாரிங் பழங்குடிகள் நடத்தும் போர்கள், மனிதனது அடிப்படை வாழ்க்கை வழிகள் பற்றியே சந்தேகங்களை எழுப்புகின்றன. நவீன நாடுகள் போர்களுக்குச் செல்லும்போது, என்ன உறுதியான, சரியான காரணத்தினால் இவை போருக்குச் செல்கின்றன என்பதை கண்டுபிடிக்க நாம் பலமுறை தலையைப் பிய்த்துக்கொள்ளும்படி இருக்கிறது. ஆனால், இருக்கும் பலவிதமான ஏராளமான காரணங்களில் ஏதேனும் ஒன்றை பொறுக்குவது கடினமல்ல.

வரலாற்றுப் புத்தகங்களில், எதிர்த்துப் போராடும் மனிதர்கள் வியாபார தடங்களுக்காகவும், இயற்கை வளங்களுக்காகவும், விலைகுறைந்த உழைப்பாளர்களுக்காகவும் (அடிமைகள்), பெரும் வியாபார சந்தைகளுக்காகவும் நடந்த போர்களைப்பற்றிய துல்லிய விவரங்கள் கிடைக்கின்றன. இவ்வாறு நடக்கும் நவீன போர்கள் வருத்தம் தருபவையாக இருந்தாலும், அவை புரிந்து கொள்ள கடினமானவை அல்ல. ‘பகுத்தறிவுக்கு எட்டும் லாப நஷ்டம் சார்ந்தே போர்கள் நடைபெறுகின்றன ‘ என்ற பாகுபாடே இன்றைய அணு ஆயுதங்களை அடுக்கிவைப்பதன் அடிப்படை. (மொ.கு: இது எழுதப்பட்ட போது சோவியத் அரசாங்கம் இருந்தது).

அதாவது, அமெரிக்காவோ, சோவியத் ரஷ்யாவோ தனது பிரச்னைகளின் தீர்வுக்காக ஒரு போரை ஆரம்பிக்காது. ஏனெனில் அப்படி ஒரு போரை ஆரம்பித்தால், அந்தப் அணு ஆயுதப் போரின் முடிவில் (யார் ஜெயித்தாலும்) லாபம் கிடைப்பதைவிட நஷ்டமே (இரண்டு பக்கங்களிலும்) அதிகமாக இருக்கும். இப்படியான அணுஆயுத சேமிப்பு அமைப்பு போரை தடுக்கும் என நாம் நினைப்பதற்கு காரணம், போர்கள் நடைமுறைக்கும், லாப நோக்குடனும்தான் நடக்கும் என நாம் எதிர்ப்பதுதான்.

பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட காரணங்களாலும், புரிந்து கொள்ள முடியாத காரணங்களாலும் போர்கள் நடக்கலாம் என்றால், ‘நம்மை நாமே அழித்துக்கொள்வோம் ‘ என்ற நினைப்பின் மூலம், போர்களை நிறுத்த முடியுமா ? முடியாது.

போர்கள் நடப்பதன் காரணம் , அடிப்படையில் ‘மனிதர்கள் போர்க்குணம் மிக்கவர்கள் ‘ என்று சிலர் நம்புகிறார்கள். மனிதர்கள் விளையாட்டுக்காகவும், பெருமைக்காகவும், பழிதீர்க்கவும், சும்மா ரத்தம் பார்க்க தோன்றும் ஆர்வத்தாலும் போருக்குப் போகிறார்கள் என்றால், நாம் உடனே இந்த அணுகுண்டு ராக்கெட்டுகளை அழித்து விடவேண்டும்.

பழங்குடியினரின் போர்களுக்கு புரிந்துகொள்ளமுடியாத , பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரணங்களே காரணம் என்று பல மானுடவியலாளர்கள் விளக்குகிறார்கள். போரில் பங்கெடுப்பவர்களுக்கு சாவுதான் நிச்சயம் என்பது தெரிந்திருப்பதால், எதற்காக போரிடுகிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்று எண்ணுவதும் தவறு. பசுக்களாகட்டும், பன்றிகளாகட்டும், போர்களாகட்டும், சூனியக்காரிகளாகட்டும், புதிர்களின் காரணங்கள் அதில் பங்கெடுப்பவர்களின் மனத்தில் இல்லை. போரில் பங்கெடுப்பவர்களுக்கும், போர்களில் ஈடுபடுவதற்கும், அமைப்பு ரீதியான காரணங்களும் தெரிந்திருப்பதில்லை. போருக்கான காரணமாக, போருக்குச் சற்று முன்பு நடந்த சில நிகழ்ச்சிகளும், தனிநபரின் உணர்வுகளும், தனி நபரின் கோபங்களும் குறிப்பிடப்படுகின்றன. தலை கொய்யும் பயணத்துக்குப் புறப்படும் ஒரு ஜிவாரோ, எதிரியின் ஆன்மாவை கைப்பற்றும் ஒரு வாய்ப்பை வரவேற்கிறார். காக்கைப் போராளி (க்ரோ வாரியர்) எதிரியின் இறந்த உடலைத் தொட்டு தனக்குப் பயமில்லை எனக்காட்ட விரும்புகிறார். மற்ற போராளிகள் பழிக்குப்பழி வாங்குவதை விரும்பி வரவேற்கிறார்கள். இன்னும் சிலர் மனித உடலைத் தின்பதை விரும்பி வரவேற்கிறார்கள்.

இந்த மேற்கண்ட காரணங்கள் எல்லாமே போரின் விளைவுகளே தவிர, போருக்கான காரணங்கள் அல்ல.

இவை, மனிதனது வன்முறை சிந்தனையைத் தூண்டி, போர்க்குணத்தை வளர்க்க உருவானவையே தவிர, இவைகளால் போர் வருவதில்லை. பழங்குடியினரின் போர்கள், பசுக்கள் மீது அன்பு வைப்பதைப் போலவும், பன்றிகளை வெறுப்பதைப் போலவும், நடைமுறை அடிப்படை உள்ளவை. ஏனெனில், பழங்குடியினருக்கு பாரத்தைக் குறைப்பதற்கும், இளம் வயதில் குழந்தைகள் இறப்பதை தடுப்பதற்கும், இதைவிட வலி குறைந்த வேறு வழி இல்லாததால், பழங்குடியினர் போரில் ஈடுபடுகிறார்கள்.

மாரிங் பழங்குடியினரும், மற்ற பழங்குடியினரைப் போல, எதிரிகளின் வன்முறையை எதிர்த்துப் பழிவாங்க போருக்குப் போவதாகக் கூறுகிறார்கள். ராப்பபோர்ட் குறிப்பெடுத்த எல்லா நிகழ்ச்சிகளிலும், முன்னாள் நட்பு உபகுழுக்கள் திடாரென்று ஒருவர் மீது ஒருவர், குறிப்பிட்ட வன்முறை நிகழ்ச்சிகளை காரணம் காண்பித்து, போர் தொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அடிக்கடி சொல்லப்படும் காரணங்கள், ஆநிறை கவர்தல், பெண்களை கடத்திச் செல்லுதல், தோட்டத்துக்குள் புகுந்த பன்றியை அம்புகளால் கொல்லுதல், பயிரைத் திருடுதல், சூனியம் காரணமாக நடக்கும் மரணங்கள், பயிர்களுக்கு வரும் வியாதிகள் போன்றவை.

ஒரு முறை இரண்டு மாரிங் உபகுழுக்களுக்கிடையே போர் நடந்து இறப்புகள் நடந்துவிட்டால், பின்னர் அவர்களுக்கு திரும்பவும் போர்களை ஆரம்பிக்க தேவையான காரணங்களுக்குப் பஞ்சமிராது. ஒவ்வொரு போர்க்கள இறப்பும் பல காலம் மக்களால் பேசப்பட்டு, உறவினர்களால் ஞாபகம் வைக்கப்பட்டு, எதிரிகளில் ஒருவனை கொல்லும் வரை அது போவதில்லை. ஒவ்வொரு முறை நடக்கும் போரும், அடுத்த போருக்காக ஏராளமான காரணங்களை கொண்டுதருகிறது. மாரிங் போராளிகள் எதிரிகளில் ஒரு குறிப்பிட்ட ஆளைக் கொல்லும் எரியும் ஆர்வத்தோடு போருக்குள் நுழைகிறார்கள். இந்தக் குறிப்பிட்ட ஆள் பெரும்பாலும் பத்து வருடங்களுக்கு முன்னர் இவரது சகோதரரையோ, தந்தையையோ கொன்றதற்குக் காரணமாக இருப்பார்.

ஏற்கெனவே, எப்படி மாரிங் இன மக்கள் போருக்கு ஆயத்தமாகிறார்கள் என்பதில் பாதி விஷயத்தை முந்தைய அத்யாயத்தில் சொல்லிவிட்டேன். புனிதமான ரும்பிம் மரத்தைப் பிடுங்கிய பின்னர், எதிரெதிர் உபகுழுக்கள் மாபெரும் பன்றி விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். இந்த விழாக்களில் அவர்கள் தங்களுக்கு புதிய நட்பு உபகுழுக்களை உருவாக்கும் முயற்சிகளையும், ஏற்கெனவே நட்பு இருக்கும் உபகுழுக்களை இருத்திக்கொள்ளவுமான முயற்சிகளையும் எடுக்கிறார்கள். இந்த கைகோ பெரும் சத்தமான நிகழ்ச்சி. பல பகுதிகளில் மாதக்கணக்கில் இந்த விழா நடப்பதாலும், மறைந்திருந்து தாக்க முடியாது. உண்மையில், தாங்கள் நடத்தும் கைகோவைப் பார்த்து எதிராளிகள் மனம் சோரவேண்டும் என விரும்புகிறார்கள். இருபுறமும், மாரிங் உபகுழுக்கள் போருக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். தூதுவர்கள் மூலம், இரண்டு உபகுழுக்களின் இடங்களுக்கும் மத்தியில் இருக்கும் காடு இல்லாத ஒரு நிலப்பரப்பு போர்க்களமாக நிச்சயம் செய்யப்படுகிறது. இருதரப்பினரும் மாறி மாறி, இந்த நிலத்தை சுத்தம் செய்யவும், செடிகொடிகளை அப்புறப்படுத்தவும் உழைக்கிறார்கள். முன்னமே இருதரப்பினரும் பேசி நிச்சயம் செய்யப்பட்ட ஒரு நாளில், சண்டை ஆரம்பிக்கிறது.

போர்க்களத்துக்கு கிளம்பும் முன்னர், போராளிகள் தங்களது போர் மந்திரவாதியின் முன்னர் வட்டமாக குழுமுகிறார்கள். இவர்கள் நெருப்புக்கு முன்னர் முழந்தாளிட்டு தங்கள் மூதாதையர்களோடு பேசி, அழுகிறார்கள். மந்திரவாதிகள் பச்சை மூங்கிலை நெருப்பில் வைக்கிறார்கள். நெருப்பு பச்சை மூங்கிலை வெடிக்கவைக்கும் போது, போராளிகள் தங்கள் பாதங்களை தரையில் ஓங்கி அடித்து, ‘ஓஓஓஓ ‘ என்று கத்தி, போர்க்களத்துக்கு ஒருவர் பின்னர் ஒருவராக, குதித்துக்கொண்டும் பாடிக்கொண்டும், கிளம்புகிறார்கள். எதிராளிகள் இதே போல அந்த போர்க்களத்தில் அந்தப்பக்கம் ஒரு அம்பு விடும் தூரத்தில் நிற்கிறார்கள். இவர்கள் ஒரு மனித உயரம் உள்ள மரத்தாலான கவசங்களை தரையில் நட்டு, அதன் பின் மறைந்து கொண்டு நின்று கொண்டு, எதிராளிகளை பயமுறுத்தவும், திட்டவும் செய்கிறார்கள். சில நேரங்களில் ஒரு போராளி தனது கவசத்தின் பின்னிருந்து வெளிவந்து எதிராளிகளில் முன் ஆட்டிக் காண்பிக்கிறார். மழை போல வரும் அம்புகளிடமிருந்து தப்பிக்க அவசர அவசரமாக தன் கவசத்துக்குள் ஓடுகிறார். போரின் இந்தப்பகுதியில் காயங்கள் குறைவு. ஒரு ஆள் தீவிரமாகக் காயம்பட்டவுடன், போரை நிறுத்தவேண்டி நட்பு உபகுழுக்களைச் சேர்ந்தவர்கள் முயற்சி செய்கிறார்கள். எதிர்த்து நிற்கும் இருகுழுக்களில் ஒரு குழு இன்னும் பழி வாங்க வேண்டும் என விரும்பினால், போர் தொடர்ந்து நடக்கிறது. போராளிகள், தங்களுடன் கோடாலிகளையும், குத்தீட்டிகளையும் கொண்டு வருகிறார்கள். எதிரெதிர் போராளிகள் நெருங்கி வருகிறார்கள். இரு குழுக்களில் யாராவது ஒரு குழு திடாரென முன்னுக்குச் சென்று இறப்பை ஏற்படுத்த முயலலாம்.

யாராவது ஒருவர் இறந்து போனாலும் உடனே போர்நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது.

ஓரிரண்டு நாட்கள், போராளிகள் வீடுகளில் தங்கி, ஈமக்கடன் செய்யவும், மூதாதையர்களிடம் பிரார்த்தனை செய்யவும் நேரத்தைச் செலவிடுகிறார்கள். ஆனால் இருவரும் ஒரே அளவு சக்தியுடன் இருந்தால், இருவரும் மீண்டும் போர்க்களத்துக்கு வருகிறார்கள். போர் இழுத்தடிக்கப்படப் பட, தோழமை உபகுழுக்களைச் சார்ந்தவர்களுக்குப் போரடித்து, அவரவர்கள் தங்கள் தங்கள் கிராமங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள். இரண்டு குழுக்களில் ஒரு குழுவிடம் அதிகமான வெளிநடப்புகள் இருந்தால், சக்தி வாய்ந்த குழு, சக்தி இழந்த குழுவை போர்க்களத்திலிருந்து துரத்த முயற்சி செய்யும். சக்தி இழந்த குழு தனது கால்நடைகளையும், எடுத்துச் செல்ல முடிந்த பொருள்களையும் கூட்டிக்கொண்டு, தங்கள் நட்பு உபகுழுவின் கிராமங்களுக்கு ஓடிப்போகும். அதிக சக்தி வாய்ந்த உபகுழு, வெற்றியை எதிர்பார்த்து, தனது வாய்ப்புக்களை அதிகப்படுத்த, எதிராளிகளின் கிராமத்துக்குள் இரவு நேரத்தில் புகுந்து அதற்கு தீவைத்து, அங்கிருக்கும் மனிதர்களில் எவ்வளவு பேரைக்கொல்லமுடியுமோ அவ்வளவு பேரைக்கொல்ல முயலும்.

இப்படி தோல்வி நடக்கும்போது, வெற்றிபெற்றவர்கள் எதிராளியைத் துரத்திக்கொண்டு செல்வதில்லை. பதிலாக, வீடுகளைக் கொளுத்தவும், பயிர்களை அழிக்கவும், பன்றிகளைத் திருடவும், stragglers கொல்லவும் முயல்கிறார்கள். தெரிந்த 29 போர்களில் 19 போர்கள் ஒரு குழு முழுக்க தோற்பதில் முடிந்தது. இவ்வாறு முழுக்கத் தோல்விக்குப் பின்னர், வெற்றி பெற்ற குழு தனது கிராமத்துக்குத் திரும்பி வந்து அங்கிருக்கும் மீதமான பன்றிகளை பலி கொடுக்கிறது. புதிய ரும்பிம் மரத்தை நட்டு போர்நிறுத்தத்தையும் சமாதானத்தையும் அறிவித்துவிடுகிறது. வெற்றி பெற்றக்குழு தோல்விஅடைந்த குழுவின் நிலங்களை ஆக்கிரமிப்பதில்லை.

நிச்சயமான தோல்வியை அடைந்து பலர் இறந்து போன உபகுழு எப்போதும் தனது பழைய நிலங்களுக்குத் திரும்புவதில்லை. தோல்வியடைந்தவர்களின் சந்ததியார் தங்களது நட்பு உபகுழுக்களுடன் இணைந்து மறைந்துவிடுகிறார்கள். அவர்களது நிலங்களை வெற்றி பெற்றவர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். சில வேளைகளில் தோல்வியடைந்தவர்கள் தங்களது நிலங்களை தங்களது நட்பு உபகுழுக்களுக்குக்கொடுத்துவிடுகிறார்கள். பிஸ்மார்க் மலைப்பிரதேசங்களின் மாரிங் பழங்குடிகளை ஆராய்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ வைய்டா கூறுவது படி, தோல்வியடைந்த உபகுழுக்கள் முழுக்கத்தோல்வியடையவில்லை என்றால், தங்களது எதிரிகளிடமிருந்து வெகுதூரம் தள்ளி தங்களது புது குடியிருப்புக்களைக் கட்டுகிறார்கள்.

மாரிங் இன மக்களுக்குள் வரும் மக்கள்தொகை அழுத்தம் (Population Pressure) வருவதால் போர்கள் நடக்கின்றனவா, நிலங்கள் கைமாறுகின்றனவா என்ற கேள்வி பல மானுடவியலாளர்கள் பேசிவந்த விஷயம். மக்களுக்குத் தேவைப்படும் உணவுகள் கிடைக்காமல் போவதால், மக்கள்தொகை அழுத்தம் உருவாகின்றது என்று எடுத்துக்கொண்டால், மாரிங் பிரதேசத்தில் மக்கள்தொகை அழுத்தம் இருக்கிறது என்று சொல்ல முடியாது.

1963இல் செம்பகா (Tsembega) உபகுழு பன்றி விழாவைக் கொண்டாடியபோது, மனிதர்கள் எண்ணிக்கை 200ஆகவும், பன்றிகள் எண்ணிக்கை 169ஆகவும் இருந்தது. செம்பகா உபகுழுவின் கீழ் இருந்த நிலப்பரப்பின் மூலம், (காட்டின் வளங்களை நிரந்தரமாக அழிக்காமலும், இன்னும் அவர்களது வாழ்விடங்களை அழிக்காமலும்) இன்னும் 84பேர்களுக்கு (அல்லது இன்னும் 84 பன்றிகளுக்கு) உணவளிக்க முடியும் என்று ராப்பபோர்ட் கணக்கிட்டார்.

ஆனால், சுற்றுச்சூழல் நிரந்தரமாக அழிவது, அல்லது உணவுப்பற்றாக்குறையை மனிதர்கள் உணர்ந்த பின்னர் தான் மக்கள்தொகை அழுத்தம் வருகிறது என்பதாக நிர்ணயிப்பதை நான் எதிர்க்கிறேன். எனது எண்ணத்தில், மக்கள்தொகை புரோட்டான் குறைப்பாடுக்கு நெருங்க ஆரம்பிக்கும்போதே மக்கள்தொகை அழுத்தம் வந்து விடுகிறது. மக்கள் வாழ்க்கையை தக்கவைக்கும் சக்தியை இழக்க ஆரம்பிக்கும் சுற்றுச்சூழல், மக்கள்தொகை அதிவேகமாக வளரும், அவர்கள் உணவுத்தேவை அதிகரிக்கும் ஆரம்பத்திலேயே மக்கள்தொகை அழுத்தம் வந்து விடுகிறது.

carrying capacity என்ற சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவது, உணவுத்தேவைகளை சரிக்கட்ட முடியாமல், சுற்றுச்சூழல் அழியும் மக்கள்தொகையின் அதிக பட்ச அளவு. (மொகு: உதாரணம்: ஒரு சுற்றுச்சூழலில் 100 பேருக்கு தான் உணவு இருக்கிறது என்பதால் அந்த சுற்றுச்சூழலின் carrying capacity 100 பேர் என்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் சொல்வது. ஆனால், மார்வின் ஹாரிஸ் கூற்றுப்படி மக்கள்தொகை அழுத்தம் அவர்கள் 75 பேராக இருக்கும்போதே வந்துவிடும் என்று கூறுகிறார்)

மாரிங் பழங்குடியினர் போல பல பழங்குடிகளில், மக்கள் தொகை அழுத்தம் அதிகமாகிவிடாமல் இருக்கவும், மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தவும், பின்னோக்கித் திருப்பவும், அந்த சமூகத்தின் carrying capacityக்குக் கீழ் மக்கள்தொகையைக் கொண்டுவரவும், பல நடைமுறை உபாயங்கள் இருக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்பு பல ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பத்தை விளைவித்தது. எந்த வித மோசமான சூழ்நிலையும் அப்போது இல்லாமல் இருந்தாலும், பல சமூகங்கள் தங்களது மக்கள்தொகை வளர்ச்சியையும், உற்பத்தியையும், சாப்பாட்டையும் கட்டுப்படுத்துகின்றன. இதனால் சில ஆராய்ச்சியாளர்கள், மக்கள்தொகை அழுத்தத்துக்கும், மக்கள் செய்யும் மக்கள்தொகை குறைப்பு வேலைகளுக்கும் சம்பந்தமில்லை என்று சிந்தித்தார்கள். பாய்லரில் சேஃப்டி வால்வ் இருக்கிறது என்பதற்காக நாம் பாய்லரை கொதிக்கவிட்டு, சில சமயங்களில் அந்த சேஃப்டி வால்வ் அடைத்துக்கொண்டு பாய்லர் வெடிப்பதைப் பார்ப்பதில்லை. (பாய்லரைப்போல, முழுமையாக மக்கள்தொகை அழுத்தம் தோன்றும்வரை காத்திருக்கும் சமூகங்கள் அழிந்துவிடும்)

எப்படி இந்த குறைப்புகள் – கலாச்சார ரீதியான சேஃப்டி வால்வ்கள், சர்க்யூட் பிரேக்கர்கள் – பழங்குடிகளின் வாழ்க்கையின் ஒரு இன்றியமையாத பாத்திரம் வகிக்கின்றன என்பதில் ஒரு மர்மமும் இல்லை.

பரிணாமத்தில் மற்ற விஷயங்களைப் போலவே, இந்த தானாக செய்யும் மக்கள்தொகை குறைப்புகளை ( சேஃப்டி வால்வ்களை) கண்டுபிடித்த சமூகங்கள் தொடர்ந்து வாழ்ந்தன. இந்த சேஃப்டி வால்வுகளை ஏற்றுக்கொள்ளாத சமூகங்கள் பாய்லர் சில சமயம் அடைத்துக்கொண்டு வெடிப்பது போல, மக்கள்தொகை அழுத்தத்தாலும், carrying capacity தாண்டி வாழ முடியாமல் மறைந்தன. (மீதமிருப்பவை அப்படிப்பட்ட மக்கள்தொகை குறைப்பு உத்திகளை ஏற்றுக்கொண்ட சமூகங்களே)

பழங்குடியினரின் போர்கள் நினைத்தபோது நடப்பதுமல்ல, உள்ளுணர்வினால் வருவதுமல்ல. இந்தப் போர்கள், மக்கள்தொகை குறைப்பு உத்திகள். இந்த போர்கள், மக்கள்தொகை சுற்றுச்சூழலின் carrying capacity தாண்டி அதிகரிக்காலும், சுற்றுச்சூழல் ரீதியில் மக்கள் தங்கள் சுற்றுச்சூழலோடு ஒரு சமன்பாட்டில் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள பரிணாம ரீதியில் ஏற்பட்ட உபாயங்கள்

நம்மில் பெரும்பாலோனோர், போர் என்பதை ஒரு மக்கள்தொகை குறைப்பு உபாயமாகப் பார்க்காமல், சுற்றுச்சூழலை அழிக்கும், மனிதனின் கட்டுப்படுத்த முடியாத உணர்வாக, பகுத்தறிவுக்கு புரம்பான ஒரு விஷயமாகப் பார்க்கிறோம்.

எனது நண்பர்களில் பலர், போர் என்பதை எந்த ஒரு பிரச்னைக்கும், பகுத்தறிவுக்கு ஏற்ற ஒரு தீர்வு என்று சொல்வதை பாவம் என்று சொல்கிறார்கள்.

இருப்பினும், போரை உள்ளுணர்வாகப்பார்க்கும் பிரபலமான சித்தாந்தத்தைவிட, பழங்குடியினரின் போரை சுற்றுச்சூழலின் பரிணாம தேர்வாக பார்க்கும் என் விளக்கம், நவீன போர்களை நிறுத்துவதற்கு சிறந்த வாய்ப்புகளை அளிக்கிறது என நினைக்கிறேன். நான் முன்பே சொன்னது போல, போர்கள் உருவாவதற்கு, மனிதனின் அடிப்படையான கொல்லும் உள்ளுணர்வுதான் காரணமென்றால், நான் செய்வதற்கு ஒன்றுமில்லை; போர்களை தடுக்கவும் இயலாது. ஆனால், போர்கள் உருவாக மனிதர்களுக்குள்ளான உறவுமுறைகளும், நடைமுறை நிலைமைகளும் தான் காரணமென்றால், அப்படிப்பட்ட நிலைமைகளை மாற்றுவதன் மூலம் போர்களை நிறுத்த முயலலாம்.

போருக்கு வக்காலத்து வாங்குவதாக நான் தெரியப்பட விரும்பவில்லை. ஆகவே நான் கீழ்க்கண்டதை சொல்ல அனுமதியுங்கள். போர் என்பது சுற்றுச்சூழலுக்கு பொருந்திய பழங்குடியினரின் வாழ்க்கை முறை என்று சொல்கிறேன். நவீன போர்கள் என்பவை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை என்று சொல்லவில்லை. நவீன அணுஆயுதங்கள் கொண்டு செய்யும் அணுகுண்டு போர்களில் உலகத்தின் எல்லாப் பொருள்களும் அழிந்துதான் போகும். ஆகவே, மனிதர்களான நமது பரிணாமப் பாதையில் அடுத்தக் கட்டமாக, அணுஆயுதங்களை அழிப்பதையோ அல்லது போர் என்ற கருத்துருவாக்கத்தையே அழிப்பதையோதான் செய்யவேண்டும்.

சுற்றுச்சூழல் அமைப்பை கட்டுப்படுத்தும், அமைப்பை நிர்வகிக்கும் மாரிங் போர் முறைகளைப் பற்றி பல ஆதாரங்கள் மூலம் அறியலாம். முதலில், நாம் அறிந்தது, முன்னர் நடந்த போரின் இறுதியில் ஒன்றுமில்லாமல் இருந்த பன்றிகள்கூட்டமும், தோட்டங்களும் நன்கு வளர்ந்து செழுமையான நேரத்தில், உற்பத்தியும், உண்டு அழிப்பதும் உச்சத்தில் இருக்கும்போது போர் நடக்கிறது என்பது.

தடுத்து நிறுத்தும் பன்றி விழாவும், அதன் பின்பு வரும் போர்களும், ஒவ்வொரு சுழற்சிக்கும் அதே உச்சத்தில் இருப்பதில்லை. சில உபகுழுக்கள் தங்களது நிலப்பாத்யதைக்கு முன்னர் இருந்த அளவு பன்றிகளை வளர்க்காமலேயே உரிமை கொண்டாடுகிறார்கள். இதற்குக் காரணம், எதிராளிகள் மிக வேகமாக தங்கள் சொத்துக்களை சேர்க்க ஆரம்பிப்பதுதான். சில நேரங்களில் சில உபகுழுக்கள் தங்களது நிலத்தின் carrying capacity தாண்டும் அளவுக்கு பன்றிகளைச் சேர்த்த பின்னரே போருக்கு இறங்குகிறார்கள். முக்கியமான விஷயம், ஒரு குறிப்பிட்ட உபகுழுவின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதல்ல. அங்கிருக்கும் மாரிங் பிரதேசம் முழுமைக்குமான மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதுதான்.

பழங்குடியினரின் போர்கள் தனது மக்கள்தொகை குறைப்பு வேலையை போர்களில் நடக்கும் இறப்புகள் மூலம் மட்டுமே கட்டுப்படுத்துவதில்லை. தொழிற்சாலை மயமான நாடுகளில் கூட, போர்களில் இறப்பவர்களால் மட்டுமே மக்கள்தொகைக் கட்டுபடுத்தப்படுவதில்லை. இருபதாம் நூற்றாண்டில், 10 கோடி மக்கள், போர்களில் இறந்தும், மக்கள்தொகையின் தொடர்ந்த அபரிமித வளர்ச்சியில் அது ஒரு சிறு தயக்கம் மட்டுமே.

ருஷ்யாவின் நிலையைப் பார்ப்போம். முதலாம் உலகப்போரின் போதும், போல்ஷ்விக் புரட்சியின் போதும் வந்த சண்டைகளாலும், பஞ்சத்தாலும் எதிர்பார்த்த மக்கள்தொகைக்கும் உண்மையான மக்கள்தொகைக்குமான வித்தியாசம் சில சதவீதப் புள்ளிகளே. சண்டைகள் முடிந்து பத்தாண்டுகளில், ருஷ்யாவின் மக்கள்தொகை முழுமையாக மீண்டுவிட்டது. அதன் மக்கள்தொகையும், அது வளரும் வேகமும், அந்த சண்டைகளும் பஞ்சமும் நடக்கவே நடக்காதது போல வளர்ந்திருந்தது. 1960களில், வியத்நாமில் தரையின் மீதும், வானத்திலும் நடந்த அத்தனைப் போர்களுக்கு மத்தியிலும், மக்கள்தொகை தொடர்ந்து அதே போல வளர்ந்து வந்திருந்தது.

இரண்டாம் உலகப்போர் போன்ற நாசங்களைப் பற்றி சொல்லும்போது, மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஃப்ராங்க் லிவிங்ஸ்டோன், வெளிப்படையாகவே சொன்னார், ‘ஒரு தலைமுறைக்கு ஒரு முறை நடக்கும் இந்த கொலைகளை கணக்கிலெடுத்துக்கொண்டால், இவைகளால் மக்கள்தொகை எண்ணிக்கையிலோ, வளர்ச்சியிலோ எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றுதான் கூறவேண்டும் ‘

இதற்கு ஒரு காரணம் ஒரு சராசரி பெண் சுமார் எட்டு அல்லது ஒன்பது குழந்தைகளை ஒரே தலைமுறையில் பெற்றுத்தள்ளும் சக்தி கொண்டவளாக இருப்பதுதான். இரண்டாம் உலகப்போரின் போது, போரால் இறந்த மக்களின் தொகை சுமார் 10 சதவீதம் தான். இந்த 10 சதவீதத்தை சரிக்கட்ட, அடுத்த சில வருடங்களுக்கு, பிள்ளை பெறக்கூடியப் பெண்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பெற்றாலே போதுமானது. (இது குழந்தைகள் இறப்பை குறைப்பதாலும், பொதுவாக மக்கள் இறக்கும் சராசரி வயதை அதிகரிப்பதாலும் கூட சரிக்கட்டி விட முடியும்)

மாரிங் இனத்தின் போர்களில் எவ்வளவு பேர் இறக்கிறார்கள் என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால், பிரெசிலுக்கும் வெனிசூலாவுக்கும் இடையே இருக்கும் பகுதியில் வாழும் யானமாமோ என்ற போர்க்குணம் மிகுந்த பழங்குடிகளில் வளர்ந்தவர்களில் சுமார் 15 சதவீதம் போர்களில் இறக்கிறார்கள். யானமாமோ பற்றி அடுத்த அத்யாயத்தில் நிறையப் பேசலாம்.

உலகமெங்கும் ஆண்களே முக்கியமான போராளிகளாகவும், முக்கியமான இறப்பவர்களாகவும் இருப்பதால், சண்டை மட்டுமே மக்கள்தொகை கட்டுப்படுத்தும் சாதனமாக நாம் கொள்ள முடியாது. உதாரணமாக, போர்களில் சுமார் 7 சதவீத பெண்களும், சுமார் 33 சதவீத ஆண்களும் இறக்கிறார்கள். ஆண்ட்ரூ வைய்டா அவர்கள் சொல்வது போல, மாரிங் இனப் போர்களில் மிக மோசமான இறப்புகளைக் கொண்ட போரில் இறந்தது 14 ஆண்கள், 6 பெண்கள், 3 குழந்தைகள் (தோற்ற உபகுழுவில் இருக்கும் மொத்த ஆட்களின் எண்ணிக்கை சுமார் 300). செம்பகா போன்ற உபகுழுக்களில் ஆண்கள் இறப்பதால் ஏற்படும் மக்கள்தொகை குறைப்பை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமின்றி உதறிவிடலாம். 75 சதவீத ஆண்கள் அனைவரும் இறந்து போனால் கூட, செம்பகா பெண்கள் சில வருடங்களில் வெகு எளிதாக இந்தக் குறைபாட்டை நிரப்பிவிடலாம்.

பெரும்பாலான பழங்குடிகளைப் போலவே, மாரிங் இன மக்களும் பலமணத்தினர். அதாவது பல ஆண்கள் பல பெண்களை மணக்கும் பழக்கம் உள்ளவர்கள். எல்லாப் பெண்களும் குழந்தை பெறும் வயது வந்ததும் திருமணம் செய்கிறார்கள். அவர்களுக்கு குழந்தை பெறும் வயது இருக்கும் வரைக்கும், அவர்கள் திருமணம் செய்தவர்களாகவே இருக்கிறார்கள். எந்த சராசரி ஆணும் எந்த நேரத்திலும் சுமார் 4 அல்லது 5 பெண்கள் கர்ப்பமாக இருக்கக் காரணமாக இருக்கிறார். ஒரு ஆண் இறந்துவிட்டால், அவரது விதவைகளை தங்கள் மனைவிகளில் ஒருவராக சேர்த்துக்கொள்ள, அந்த ஆணின் சகோதரர்களும், மாமன், சித்தப்பா பிள்ளைகளும் ஏராளமாக இருக்கிறார்கள். வாழ வேண்டிய கண்ணோட்டத்தில் பார்த்தால் கூட, ஒரு ஆண் முழுக்க தேவையற்றவராகவே இருக்கிறார். சண்டையில் ஆண்களது இறப்புகள் அந்த ஆணின் விதவைகளுக்கும் குழந்தைகளுக்கும் எந்தவித தாண்டமுடியாத சங்கடங்களையும் தோற்றுவிப்பதில்லை. மாரிங் இன மக்களுக்குள், நான் முன்பு குறிப்பிட்டதைப் போலவே, பெண்களே தோட்டவேலையையும், பன்றிகள் பராமரிப்பதையும் செய்கிறார்கள். இதுவே, உலகெங்கும் இருக்கும் வெட்டி எரிக்கும் சமூகங்கள் (cut and burn societies) அனைத்திலும் வாழும் முறை. ஆண்களே காடுகளை எரித்து நிலங்களை சுத்தம் செய்து தருகிறார்கள். ஆனால் பெண்கள் தாராளமாக இந்த கடினமான வேலையை செய்யமுடியும். பெரும்பாலான பழங்குடிகளில், பெரிய கனமான பொருட்களை வெகுதூரம் தூக்கிச் செல்லவேண்டுமென்றால், பெண்களையே இந்த ‘பாரம் தூக்கும் மிருகங்களாக ‘ கருதுகிறார்கள். மாரிங் இன ஆண்கள் இவ்வாறு மிகக்குறைந்த அளவே உழைப்புக்கும் வாழ்க்கைக்கும் உதவுவதால், மக்கள்தொகையில் பெண்கள் அதிகமாக இருந்தால், உணவு உற்பத்தித்திறன் அதிகமாக இருக்கும். உணவைப் பொறுத்த மட்டில், மாரிங் இன ஆண்கள் பன்றிகள் போலத்தான். அவர்கள் தின்பது அவர்கள் உற்பத்தி செய்வதை விட அதிகம். ஆண்களை வளர்க்காமல் பன்றிகளை வளர்த்தால், பெண்களும், குழந்தைகளும் நன்றாகச் சாப்பிடுவார்கள்.

(தொடரும்)

Series Navigation