புதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் ?

This entry is part [part not set] of 13 in the series 20010519_Issue

கோபால் ராஜாராம்

இந்தக் கேள்வி சமீப காலத்தில் எழுப்பப் பட்டு வருகிறது. இதன் அடிப்படை என்ன என்று தெரிந்து கொள்வதற்காக இதழ்களையும், மின் இதழ்களையும் பார்வையிட்டேன். ‘இளைய பாரதி ‘ என்பவர் தொகுத்து வெளியிட்ட ‘கண்மணி கமலாவுக்கு ‘ கடிதத் தொகுப்பு மறு பதிப்பு வருகிறது. அந்தத் தொகுப்பு வெளிவரக் கூடாது, புதுமைப் பித்தன் படைப்புகளின் முழு உரிமையையும் நாங்கள் வாங்கியிருக்கிறோம் என்று காலச் சுவடு பதிப்பகம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்பாக புதுமைப் பித்தன் மகள் தினகரி இளைய பாரதிக்குப் பதிப்பிக்கத் தரப்பட்ட உரிமை ஒரு பதிப்புக்கானது தான் என்று தெரிவித்துள்ளார். இதில்லாமல் ‘புதுமைப்பித்தன் பதிப்பகம் ‘ என்ற பெயரில் இளைய பாரதி தொடங்கிய பதிப்பகத்தின் பெயரையும் மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கேட்டிருக்கிறார் தினகரி என்று அறிகிறேன்.

புதுமைப் பித்தன் எழுத்துகள் மக்களுக்குச் சொந்தம் என்று குரல் எழுப்பியுள்ளனர் சிலர். ச.செந்தில் நாதன், வீ அரசு, இன்குலாப் போன்றவர்கள் காலச்சுவடு மற்றும் சுந்தர ராமசாமியைத் தாக்கியும் இந்தப் போக்கின் பின்னணியில் இவர்கள் தான் இருக்கிறார்கள் என்றும், புதுமைப் பித்தன் படைப்புகள் ‘மக்களு ‘க்கே சொந்தம் என்று குரல் கொடுத்திருக்கின்றனர். பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், புதுமைப் பித்தனின் எழுத்து மக்கள் இலக்கியம் என்ற இவர்களின் வரையறைக்குள் அடங்குவதாய் இவர்கள் ஒப்புக் கொண்டிருப்பது தான்.

இவர்கள் இது நாள் வரையில் புதுமைப் பித்தனின் சிறப்பை ஒப்புக் கொண்டதில்லை. முற்போக்கு முகாமில் புதுமைப் பித்தனின் ‘பொன்னகரம் ‘ கதை தவிர மற்ற கதைகள் சிறப்பான கதைகள் என்று கூட இவர்கள் ஒப்புக் கொண்டதில்லை. நம்பிக்கை வரட்சி, இருண்மைவாதம் என்று தான் புதுமைப் பித்தன் பற்றிய இவர்களின் பார்வை இருந்தது. இன்று இவர்கள் தம் பார்வையை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து மகிழ்ச்சி. ச செந்தில் நாதன் ‘புதுமைப் பித்தன் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி ‘ என்கிறார் இப்போது.

‘புதுமைப் பித்தன் பதிப்பகம் ‘ என்ற பெயருக்குச் சட்ட ரீதியாய் தினகரி அவர்கள் தடை பெற முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. மேனாடுகளில் உள்ள காப்புரிமைச் சட்டம் பெயர்களைப் பயன் படுத்துவதையும் பாது காக்கிறது. நம் நாட்டில் அப்படி இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் புதுமைப் பித்தன் பதிப்பகம் என்ற பெயர் வியாபார நோக்கங்களூக்காக அல்லாமல் வேறு எந்த நோக்கம் கருதி இளைய பாரதியினால் பயன் படுத்தப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. சமீப காலத்தில் காலச் சுவடு முயற்சியால் புதுமைப் பித்தன் உணர்வு பரவலாக்கப் பட்டிருப்பதைப் பய்னபடுத்திக் கொள்ளும் முயற்சி இது என்று தான் தோன்றுகிறது.

அதில்லாமல் ‘கண்மணி கமலாவுக்கு ‘ நூலில் இளைய பாரதியின் பங்கு ஒரு அச்சுக் கோர்ப்பவரின் பங்குக்கு மேலானதாய் எனக்குத் தெரியவில்லை. கடிதத் தொகுப்பு என்பது சும்மாவேனும் கடிதங்களைத் தொகுத்துப் போடுவதல்ல. கடிதங்களில் பேசப் படுகிற நபர்கள், நிகழ்வுகள் பற்றிய பின்னணியையும் , மற்றும் இந்த நிகழ்வுகள் கடிதம் எழுதியவரின் வாழ்க்கையில், படைப்பில் பெற்ற இடம் பற்றியும் வெளிச்சம் காட்டுகிற ஒரு உழைப்பின் தேவை கடிதத் தொகுப்பாளனுக்கு உள்ளது. அது இளைய பாரதியிடம் சுத்தமாக இல்லை. நிச்சயமாக ஆய்வாளர் என்ற முறையில் வெங்கடாசலபதி , இளைய பாரதியை விடவும் சிறப்பான பணியாளர் தான்.

‘பாரதியார் கவிதைகளை ஏ வி மெய்யப்பச் செட்டியார் முடக்கி வைத்திருந்தார். அது போல் காலச்சுவடு புதுமைப் பித்தனை முடக்கப் பார்க்கிறது என்று ‘ அ மார்க்ஸ் பேசுகிறார். ஆனால், இந்த நிலைமைக்கு முன்பு நடந்ததைத் திரும்பிப் பார்த்தால் இந்தப் பேச்சின் அபத்தம் தெரியும். முற்போக்கு இலக்கியங்களை வெளியிடுகிறோமாக்கும் என்று சமையல் புத்தகங்களையும் , சோவியத் குப்பைகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்த என் சி பி எச், கி ரா வின் நாட்டுப் புறக் கதைகளை பல பதிப்புகள் வெளியிட்டு அவருக்குச் சேர வேண்டிய ராயல்டியைக் கூடக் கொடுக்காமல் இருந்த முற்போக்குப் பதிப்பகம் என் சி பி எச் ஏன் முன் வந்து புதுமைப் பித்தன் படைப்புகளை வெளியிடவில்லை ? அ மார்க்ஸ் தான் புதுமைப் பித்தன் தலித் விரோதி, வேளாள மரபின் பின்செல்பவர் , இந்துத்துவ வாதி என்கிறாரே- என்றால் அவர் வாதப் படி காலச் சுவடின் வெளியீடாக புதுமைப் பித்தன் படைப்புகள் வெளி வருவது தானே பொருத்தம் ?

இந்த வாதங்களில் ஒரே ஒரு சரியான பார்வை, புதுமைப் பித்தன் படைப்புகள் நாட்டுடைமையாக்கப் பட ணே¢டும் என்ற கோரிக்கை தான். நாலாந்தரத் தமிழ்த் தூய்மைவாதி மறைமலையடிகளையும், வியாபார எழுத்தாளர் கல்கியையும் , தரமற்ற மற்றவர்களையும் நாட்டுடைமையாக்கிய அரசு ஏன் புதுமைப் பித்தன் பற்றிக் கண்டு கொள்ளவே இல்லை ? அந்த அரசின் போக்கை விமர்சிக்க வேண்டிய இவர்கள் ஏன் ‘காலச் சுவடு ‘ புதுமைப் பித்தன் படைப்புகளை வெளியிடுவதைத் தாக்குகிறார்கள் ?

இதை யோசிக்கும் போது இவர்கள் புதுமைப்பித்தன் படைப்புகள் பரவலாய்ப் படிக்கப் பட வேண்டும் ஒருவரிடம் அவர் படைப்பின் உரிமைகள் முடங்கிவிடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தைக் காட்டிலும் ஏதோ ஓர் ஆயுதத்தை ஏந்தி ‘காலச் சுவடு ‘-வைத் தாக்கிவிட வேண்டும் என்பதாய்த் தோன்றுகிறது. இப்போதைய ஆயுதம் புதுமைப் பித்தன் .

புதுமைப் பித்தன் படைப்புகள் நிச்சயமாய் மக்களுக்குச் சொந்தம் தான் – படிக்கவும் கருத்துச் சொல்லவும். ஆனால், அதன் மூலம் லாபம் அடைகிற , யார் லாபம் பெற வேண்டும் என்று தீர்மானிக்கிற உரிமை அவர் குடும்பத்தினருக்குத் தான் உண்டு.எல்லாப் படைப்பாளிகளுக்கும் அப்படித்தான் இருந்தது. இருக்க வேண்டும்.

பாரதி தாசனுக்கும் அப்படித் தான் இருந்தது. பாரதி பாடல்களுக்கு ஜீவா, காமராஜ் நடத்திய போராட்டம் மாதிரி இவர்கள் ஏன் பாரதிதாசன் படைப்புகளுக்கு இவர்களோ இவர்களை ஒத்தக் கருத்துக் கொண்டவர்களோ நடத்த வில்லை ? இவர்கள் நோக்கம் இது போன்ற சிறந்த படைப்பாளிகள் நாட்டுடைமையாக்கப் பட வேண்டும் என்பதைக் காட்டிலும் ‘காலச் சுவடு ‘வின் முயற்சிகளை விமர்சிக்க வேண்டும் என்பது தான்.

Series Navigation