இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- 2

This entry is part of 16 in the series 20010505_Issue

விஜயா தேஷ்பாண்டே


குறியீட்டளவில் ஊசி (ஷலகம்) கொண்டு கண்ணில் காணும் மறுவை அகற்றுவது குறிப்பிடப் படுகிறது. உதாரணமாக ‘ததாகதர் சாதாரண மருத்துவர்களைக் காட்டிலும் சிறந்தவர் ஏனெனில், அறியாமைக் கண்மறுவை ஞானம் என்னும் தங்க ஊசி கொண்டு அகற்றவல்லவர். ‘ என்று பேசப் படுகிறது. கண் மருத்துவ அறிவு கொஞ்சம் கொஞ்சமாக சீனாவிற்கு பெளத்தம் வழியே பரவியது. அறுவை சிகிச்சையும், கண் மருத்துவமும் சீனாவில் அவ்வளவாக வளர்ச்ச்சி பெறாத நிலையில் சீனாவின் மேல்தட்டினரான பெளத்தர்களை இது கவர்ந்தது.

சீன மருத்துவத்தில் அறுவை சிகிச்சை.

பழங்கால இந்திய மருத்துவம் அறுவை சிகிச்சையையும், மருந்து சிகிச்சையையும் பேணி வந்தது. சீன மருத்துவம் அறுத்துப் பார்த்து உடல் உறுப்புகள் பற்றி அறிவது போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வில்லை. இதன் காரணம் இரண்டு : கன்பூஷியஸ் உடல் தம் பெற்றோரிடமிருந்து பெறப் பட்ட புனிதமான பேறு அதனை எந்த விதஹ்திலும் சின்னாபின்னம் செய்வது தவறு என்று செய்த போதனை. இன்னொன்று உடலின் யின் யாங் என்ற இரண்டு சக்திகளின் சமநிலைக் குலைவே உடல் நோய்க்குக் காரணம் என்ற கருத்து. எனவே பொதுவாக மருந்து கொடுத்துக் குணம் செய்தால் போதும் என்ற எண்ணம்.

இந்திய அறுவை சிகிச்சை அறிவுப் பரவலுக்கு முன்பு சீன மருத்துவம் அறுவை சிகிச்சையைப் பெரிதும் பேணாததால், கண் மருத்துவம் இந்தியாவிலிருந்து வந்த போது பெரிதும் அரவணைக்கப் பட்டது. இந்திய மருத்துவம், மற்றும் மருந்தியல் பற்றி மேன்மேலும் அறிந்து கொள்கிற ஆர்வமும் பரவலாயிற்று. சுயி வம்சாவளி மன்னர் (581-619 கி பி) வரலாற்றில் இந்திய விஞ்ஞான நூல்களும், கணித நூல்களும், மருந்தியல் நூல்க்ளும் குறிப்பிடப் படுகின்றன. மஹாயானம் நிறுவிய ‘போதிசத்துவர் நாகார்ஜ்உனர் ‘ இதன் ஆசிரியராய்ச் சொல்லப் படுகிறார். மருத்துவர் நாகர்ஜ்உனரைக் குறிப்பிடாமல் தத்துவ வாதி நாகார்ஜ்உனரைக் குறிப்பிடுகின்றனர்.

இந்தக் கால கட்டத்தில் பரவிய இந்த அறிவினால், மனித உடல் பற்றியும், நோய்க் காரணங்கள் பற்றியும் சீனாவில் அறிமுகம் செய்யப் பட்டது. யின் மற்றும் யாங் பஞ்ச பூதங்கள் அடிப்படையாய்க் கொண்ட கருத்துகள் மாறி , முதன் முறையாக பெளத்தர்களின் நான்கு மூலக் காரணங்களை அடிப்படையாய்க் கொண்ட மருத்துவ இலக்கியம் உருவாகிற்று.

இந்திய மருத்துவக் கோட்பாடுகளின் தாக்கம் முதன்முதலில் ‘ஆயிரம் பொற்காசுகள் மதிப்புள்ள மருத்துவச் சீட்டு ‘ என்ற பெயரில் எழுதப் பட்ட கண் மருத்துவ நூலில் காணப்பட்டது. தாங் மன்னர் (618-907 கி பி) காலகட்டத்தைச் சேர்ந்த சுன் சிமியோ என்ற மருத்துவ இலக்கியவாதியால் இது எழுதப் பட்டது. இவர் சீனத்தின் தாவோயிசம் மட்டுமல்லாமல், பெளத்தக் கோட்பாட்டிலும் தேர்ந்தவர். ‘புதிய விமல்கீர்த்தி ‘ என்ற அடைமொழி கொடுத்து இவர் அழைக்கப் பட்டார். அவர் மருந்துச் சீட்டுப் புத்தகங்கள் உடல் உறுப்புகளின் பாகங்களின் பெயர்கள், அறுவை சிகிச்சை முறைகள், லேகியம் மூலிகை மருஹ்துவம் , ஈரலை வலுப்படுத்த மருந்துகள் என்று இந்தியக் கண் மருத்துவத்தினை நினைவு படுத்துகின்றன. சுஸ்ருதரின், மூன்று விதச் சிகிச்சை முறைகள் – மேல் பூச்சு,. உள் மருந்து, அறுவை சிகிச்சை -இவற்றைக் குறிப்பிடக் காணலாம்.

சீன மருத்துவத்தில் நாகர்ஜ்உனரின் கண் மருத்துவம்

ஆறாவது நூற்றாண்டின் பிறகு வெளீவந்த பல சீன மருத்துவக் கையேடுகளில் நாகர்ஜ்உனரின் கண் மருத்துவம் குறிப்பிடப் பட்டுள்ளது. நான்கு-ஐந்து நூற்றாண்டுகளில் வெளி வந்த பல சீன ஏடுகளில் இந்திய மருத்துவம் குறிப்பிடப் பட்டுள்ளது. 752-கி பியில் கண் மருத்துவ ஏடு வெளிவந்தது. பிறகு 8-ம் நூற்றாண்டின் நடுவில் ‘போதிசஹ்ட்துவர் நாகார்ஜ்உனரின் கண் மருத்துவ நூல் ‘

வெளி வந்தது. 12-ம் நூற்றாண்டில் மீண்டும் நாகார்ஜ்உனரின் முழுமையான நூல் வெளி வந்தது.

(தொடரும்)

Series Navigation