காய் கவர்ந்தற்று

This entry is part [part not set] of 19 in the series 20010226_Issue

பாரதிராமன்


அன்புள்ள ? !

இக்கடிதத்தை எனக்கு எழுதலாம் எனத் தீர்மானித்துக்கொள்கிறேன்.

ஆக, தமிழ் இலக்கிய விசாரம் என்பது வம்பும் வசையுமாகிவருகிறது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் அல்லது நமக்கே உாிய முற்போக்குத்துவம் ஆகியவற்றின் சாபமா இது என்று தொியவில்லை. ஆனால் விளைச்சல் தீவிரம் கண்டிருக்கிறது.

தமிழ் இலக்கியம் கருவிலிருந்தபோது சச்சரவு வியூகத்தைப் பிளந்து உட்புகக் கற்றுத் தந்தவர்கள் அதிலிருந்து வெளிவரும் உபாயத்தைக் கற்றுத்தரும் முன்பே அவசரப்பட்டுத் தூங்கிவிட்டோமோ என்று தோன்றுகிறது. இனி எந்தத் ாதுவம்ா நமக்கிதைக் கற்றுத்தரப்போகிறது ?

இலக்கியம் ஒரு போதை என்று வெளிப்படையாகக் கூறத் தயங்கினாலும் விருந்துக்குப் பின்னான தாம்பூலம் போன்ற ஓர் அலங்காரப் பொருளே அது. ஓர் அலங்காரப் பொருளுக்காக ஓர் அலங்கோலச் சண்டையா ? மனித வாழ்வை மேம்படுத்தச் செய்ய வேண்டிய சோலிகள் பல இருக்க மத்தளத்துக்கு மாவு பிசைந்துகொண்டிருப்பதா ? சமீபத்திய சில இலக்கிய விசாரங்களும் பதிவுகளும் இதைத் தான் செய்துகொண்டிருக்கின்றன.

‘ இங்கே பிரபலங்களின் எழுத்துக்களில்கூட ரசம் இல்லை. மனித வாழ்வின் நிகழ்ச்சிகளை எழுதுவது இலக்கியமாகாது ‘ எனக் கருதும் ஓர் எழுத்தாளர் தன் 17 வயதுக்குள் தான் படித்த அளவு மேனாட்டு இலக்கிய நூல்களை வேறெவரும் படித்திருக்கமுடியாது என்று நிறைகுடமாகச் சொல்கிறார். ( எழுபதானாலும் என்னால முடியாதுடோய்!) அப்படிப்பட்டவாின் பங்களிப்பு எவ்வளவு செழுமையாக இருந்திருக்க வேண்டும் ? ஆப்பிாிக்க, லத்தீனமொிக்க இலக்கியத்தின் இறக்குமதி பெருமைக்காரராய் இருக்கிறார். சாி, அதையாவது சுத்தப்படுத்தி தேசிய லேகியமாக்கி எல்லோருக்கும் படைத்திருக்கலாம் என்றாலோ ா எனக்கு அவிழ்க்கத்தான் தொியும், கட்டத் தொியாதுா என்ற ாீதியில் பார்க்கிறார். இவருக்காக நம் மக்கள் ஆப்பிாிக்க, லத்தீனமொிக்க கெடுபிடிகாலங்களையும் துயரங்களையும் இறக்குமதி செய்து அனுபவித்துவிட்டு இலக்கியம் செய்ய வேண்டும்போலிருக்கிறது,ஒரு காலத்தில் சங்கம் கொடி கட்டிப் பறந்துகொண்டிருந்த நாடு நமதென்பதையும் மறந்து.

நடை பாதைகளில் பல்பொடியோ, புஷ்டிலேகியமோ, சர்வரோக நிவாரண தாயத்தோ விற்கும் வித்தைக்காரன் ாஎல்லோரும் பலமாகக் கை தட்டுங்கோா எனும்போது தட்டாதவர்களையும், ஒன்றும் வாங்காமல் செல்பவர்களையும் திட்டித் தீர்ப்பதைப்போல தங்கள்

படைப்பு பாராட்டப் படாவிட்டால் நெற்றிக் கண்களைக் காட்டுகிறார்கள் இன்னும் சிலர்.

.

எழுத்துத் தத்துவங்களைப்பற்றிப் பேசி ஒரு தீர்மானத்துக்கு வரலாம் என்றாலோ பெரும்பாலோர் கூட்டத்தில் பேசத் தயங்குகிறார்கள். கூட்டத்தைக் கூட்டிவிட்டு அவமானப்பட வேண்டியதாக இருக்கிறது என்றுகூட ஓர் அங்கலாய்ப்பு! இன்றைய இலவச இலக்கியக் கூட்டங்களுக்கு இருபது பேர் வந்தாலே அது மாபெரும் கூட்டம். கைப்பணம் போட்டு இருபது பேர் கூடி, ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டாய் நாற்பது கருத்துகள் தொியவர, அவர்களை சீக்கிரமாகத் தெளியவைத்து காாியஸ்தர்கள் தனித்துப்பேசியும், தனித்துப்போயும், இலக்கியத்தைத் தனிமைப் படுத்த முயற்சி செய்கிறார்கள். முற்போக்குவாதிகள், தலித், பெண்ணியவாதிகள் இறுதியில் சமாதானப்பட்டு அடுத்த ஆண்டு கூடி சர்ச்சைக்குள்ளான விஷயங்களை மீண்டும் சர்ச்சிக்க ஃபோட்டோ செஷனுக்கிடையே முடிவெடுத்துப் பிாிவதும் பதிவு செய்யப்படுகிறது. அடுத்துக் கூடுமுன் இன்னொரு சாகித்திய அகாதமி விருதும் மேலும் பல இலக்கிய விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கும். பல புதிய தொகுதிகளும் அவற்றுக்கான விமாிசனங்களும் கூட வெளியாகியிருக்கும். சில தலித்திய, பெண்ணிய நாவல்கள், குறைந்தது ஒரு மெடா நாவல் போன்றவை இனம்காணப்படாதுபோன அடாவடிக் காரணங்கள் அம்பலமாகலாம். பதிவுகளுக்கா பஞ்சம் ?

ஆனால் உண்மையான பஞ்சத்தைப் போக்க உதவுமா இப்பதிவுகள் ? உதயம் காம்ப்ளெக்ஸைச் சுற்றி நடைபாதைகளில் நெளியும் மனிதப் பூச்சிகளுக்கும், அதே போன்ற வேறிடப் பூச்சிகளுக்கும் இப்பதிவுகள் காட்டக்கூடிய தீர்வுகள் என்ன ? நான் நிச்சயமாக்கூறுவேன்: இலக்கியம் சோற்றுக் கவலைக்காரர்களுக்கு தேவையற்றது. இந்தப் பூச்சிகள் கேட்பதெல்லாம் பரவசப்படுத்துமிலக்கியசாதனைகளல்ல- பட்டினித்துவத்திலிருந்து பாதியளவாவது விடுதலை; பீடா அல்ல- பீடியோ சாராயமுமோ; மிராசுகளே வாங்கமுடியாத விலையிலான தலித்திய இதழ்கள் அல்ல- மிஞ்சிப்போனால் ஒரு சினிமா; தீர்மானங்களால் வரையறுக்கப்பட்ட இலக்கியத் தீர்வுகள் அல்ல- திறந்த வெளியில் உடல் சூட்டைத் தணித்துக்கொள்கையில் திரை போட ஒரு சேலைக் கந்தல் அவ்வளவே!

அடடா! தலித்துக்களுக்கூட பயன்படாத ஒன்றுக்கா இவ்வளவு ஓசைகளும், ஒளிவு மறைவுகளும், ஒவ்வாமைகளும், ஒத்திவைப்பு, ஒதுக்கிவைப்புத் தீர்மானங்களும் ?

நமது பாரம்பாியம் நமக்குக் கற்றுத் தந்திருப்பது:-

‘ லோகோ பின்ன ருசிஹா. ‘ ‘ லோகாஸ் ஸமஸ்தா: சுகினோ பவந்து ‘-

உலகம் பல ருசிகளுடையது. உலகமனைத்தும் உய்யட்டும்!- என்பதுதானே ? அப்படியிருக்க தனக்குப் பிடித்த ருசிகளைத் தவிர மற்றவைமீது ஏன் வெறுப்பு ? இலக்கியத்திலும் ஒன்றைப் போல மற்றொன்று என்று ஏன் எல்லாத் ாதுவங்ாகளையும் கொண்டாடக் கூடாது ? ஒருவேளை பதிவுகளுக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயமாக இருக்கலாம்.. அப்படி என்னவெல்லாம் நேரும் ?

ஒன்று: எல்லாப்பதிவுகளுமே சந்தோஷப் பதிவுகளாகிப் போகலாம்.

இரண்டு: ஒருவர் முதுகை மற்றொருவர் சொறிவதற்குப் பதிலாக எல்லோரும் எல்லோருடைய முதுகுகளையும் சொறிய நேரலாம்.

மூன்று : முற்போக்கு, பெண், தலித்தியங்கள்,கற்பனாவாதிகள், யதார்த்திகள், சனாதனிகள் எல்லோருமே சமபந்தி போஜனம் செய்ய நோிடலாம்.

நான்கு; மெடா நாவல்காரரும், புாியாத கவிதைக்காரரும், விளக்கெண்ணெய் விமர்சகரும், இறக்குமதி ஃபேன்சி எழுத்தாளரும் ஒன்றாய்க் கலந்து போகலாம் அல்லது ஒளிந்துகொள்ள நேரலாம்.

ஐந்து: கற்பனைகள் செல்லாிக்கப்பட்டு உயிர் தாித்திருக்கும் எழுத்துகள் இடமாகவும், கற்பனைகள் விஸ்தாிக்கப்பட்டு உயிரூட்டம் பெற்ற எழுத்துகள் வலமாகவும் இலக்கியத்தை நடத்திச் செல்லும் காட்சிகள் பதிவாக நோிடலாம்.

ஆறு: உலகப்பொதுமயமாக்குதலில் இலக்கியமும் சேர்க்கப்பட்டு பதிவு செய்யப்படலாம். ஓட்டத்தில் சேராத சீனா, க்யூபா போன்ற நாடுகள் இருண்ட இலக்கியப் பகுதிகளாகவோ, அங்கிருந்து தப்பவிரும்பி எழுதுபவர்களின் எழுத்துகள் உலகப் பாிசுகளுக்குாியவை என்றோ பதிவு படுத்தப்படலாம்.

ஏழு: யதிகள், சைதன்யர்கள்,பாபாக்கள், யோகிகள், அடிகளார்கள், முனிகள், ஜ ‘யர்கள், பாரதிகள், சரஸ்வதிகள், தீர்த்தர்கள், பூாிகள், மாதாக்கள், ஆனந்தாக்கள் என்போர்களிடம் எழுத்துகள் சரணடைந்து அவை ஆன்மீகப் பதிவுகளாகலாம்.

எட்டு: ஒரு வேளை பண்டைய பிற்( ?) போக்குத்துவமே மேல் எனக் கருதப்பட்டு இலக்கியம் புராணங்களாகிப் போக நோிடலாம்கூட!

இப்படி இலக்கியம் விழுமியத்தை அடையுமானால் பாிசுகள் பலவும் பாிசுத்தமாகிவிடும், பதிவு செய்தபடி பாிசுகள் தரப்படும்/பெறப்படும்.

தருமி கேட்டதுபோல ஒவ்வொரு தவறுக்கும் ஒரு தொகை கழிக்கப்பட்டு எல்லோருமே பாிசு பெறக்கூடிய வாய்ப்புகள் வரும்.

கூட்டங்களில் கூச்சல் குறையும், குதூகலம் குலவும்.

இலக்கியத்தின் உயிரணுக்களையும் மரபணுக்களையும் இப்படியே ஆராய்ந்துகொண்டுபோய் புதிய போலிகளை உற்பத்தி செய்ய இடம் வகுப்பது எனது எண்ணமல்ல. எனினும் தானாகவே அது மாதிாி விளைந்துவிடுமோ என்ற அச்சம் இன்றைய இலக்கிய விசாரங்களையும் பதிவுகளையும் படிக்க நேர்கையில் எழுகிறது.

எழுதத் தொிந்தவன் எழுதிப் பார்க்கட்டுமே, படிக்கத்தொிந்தவன் படித்துப் பார்க்கட்டுமே என்று விட்டுவிடுவதாக இல்லை யாரும். ஆகவேதான் ஆரம்பத்தில் எடுத்த தீர்மானத்தை இப்போது மாற்றிக்கொள்ளத் தீர்மானிக்கிறேன்.இக்கடிதம் எனக்காக மட்டும் எழுதியதாக ஆகிவிடக்கூடாது, தமிழ் இலக்கியம் படைக்கும், படைக்க நினைக்கும் அத்தனை பேருக்குமானதாக இருந்துவிட்டுப் போகட்டும் என்றெண்ணி ‘ திண்ணை ‘ தபாலில் சேர்த்துவிடத் தீர்மானிக்கிறேன் —

மொழி இலக்கியம் பாலைப் போன்றது, அதை இயல்புடனே பருகலாம்,

கூட இனிப்பு சேர்த்து பாயசமாக்கிப் பருகலாம், உறைய வைத்து மோராக்கிக் குடிக்கலாம் ஆனால் வம்பையும் வசையையும் கலந்து விஷமாக்கவேண்டாம் என்ற வேண்டுதலுடன்,

வணக்கம்,

அன்புடன்,

பாரதிராமன்.

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.