டி என் ஏ என்ற டிஜிட்டல் ஆறு

This entry is part [part not set] of 18 in the series 20010204_Issue

ரிச்சர்ட் டாக்கின்ஸ்

ரிச்சர்ட் டாக்கின்ஸின் ‘ஏடனிலிருந்து பெருகும் நதி ‘ என்ற புதிய புத்தகத்திலிருந்து சில பகுதிகள்

இந்த உலகத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற எல்லா தாவரங்களும், மிருகங்களும், காளான்களும், ஊர்வனவும், இந்த வார்த்தைகளை படிக்கும் வாசகர்களும் தங்களது முன்னோர்களை திரும்பிப்பார்த்து ஒரே ஒரு விஷயத்துக்காக பெருமைப்படலாம். நமது முன்னோர்களில் ஒருவர் கூட குழந்தைப்பருவத்திலேயே இறக்கவில்லை. ஒவ்வொருவரும் வளர்ந்து பெரியவர்களாகி வெற்றிகரமாக காதலித்து குழந்தையை உருவாக்கினார்கள். நமது ஒரு முன்னோரும், ஒரே ஒரு குழந்தையையாவது இந்த உலகத்துக்கு தருவதற்கு முன்னர், எதிரியால் வீழ்த்தப்படவில்லை, அல்லது வைரஸால் சாகவில்லை, அல்லது தவறாக ஒரு மலைவிளிம்பிலிருந்து கால்வைத்து கீழேவிழுந்து இறக்கவில்லை. நம் முன்னோர்களின் ஆயிரக்கணக்கான கூட்டாளிகள் இந்த அத்தனைவிஷயங்களில் ஒன்றிலாவது இறந்தார்கள். ஆனால் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் கூட இந்த தவறுகளில் ஒன்றைக்கூட செய்யவில்லை. யோசித்துப்பாருங்கள். உங்கள் முன்னோர்களில் ஒரே ஒருவர் குழந்தையில்லாமல் இறந்திருந்தால்கூட நீங்கள் இங்கே இதைப்படித்துக்கொண்டிருக்க முடியாது. நாம் இங்கே இந்த வார்த்தைகள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெளிவாகத் தெரிந்தாலும், இதிலிருந்து ஏராளமான விஷயங்கள் நாம் தெரிந்து கொள்ள இருக்கின்றன. ஏராளமான விஷயங்களை இவை விளக்குகின்றன, ஏராளமாய் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

எல்லா உயிரினங்களும் தங்களுடைய வெற்றிகரமான முன்னோர்களிடமிருந்து மட்டும் ஜீன்களைப் பெறுவதால், எல்லா உயிரினங்களும் வெற்றிகரமான வெற்றிக்குரிய ஜீன்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. இந்த உயிரினங்கள் இன்னொரு உயிரினங்களுக்கு முன்னோர்களாக இருக்க எல்லா தேவையான ஜீன்களையும் கொண்டிருக்கின்றன. அதாவது உயிர்வாழ்வதற்கும், பல்கிப்பெருகுவதற்கும். அதனாலேயே எல்லா உயிரினங்களும் நன்றாக வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தை (உடலை) கட்டமைக்க தேவையான ஜீன்களைக் கொண்டிருக்கின்றன. அதனாலேயே பறவைகள் பறப்பதை சிறப்பாகச் செய்கின்றன. மீன்கள் நீந்துவதை சிறப்பாகச் செய்கின்றன. குரங்குகள் மரமேறுவதை சிறப்பாகச் செய்கின்றன. வைரஸ்கள் பரவுவதைச் சிறப்பாகச் செய்கின்றன. அதனாலேயே நாம் வாழ்க்கையையும், செக்ஸையும், குழந்தைகளையும் விரும்புகிறோம். இது ஏனெனில் நாம் எல்லோரும், ஒரு ஆள் பாக்கி இல்லாமல், எல்லோரும் வெற்றிகரமான முன்னோர்களிடமிருந்து, உடையாத முன்னோர் வழியிலிருந்து, ஜீன்களைப் பெற்றிருக்கிறோம். முன்னோர்களாக இருக்கமுடியும் உயிரினங்களால் இந்த உலகம் நிரம்பி இருக்கிறது. ஒரே வரியில் சொன்னால் இதுதான் டார்வினிஸம்.

ஏடனிலிருந்து ஒரு நதி புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறது. இது காலத்தில் ஓடுகிறது, வெளியில் ஓடவில்லை. இது டி என் ஏ நதி. எலும்புகளின் அல்லது சதைகளின் நதி அல்ல. இது செய்திகளின் நதி. எப்படி நல்ல உடலைக் கட்டுவது என்ற விவரங்களைத் தாங்கி ஓடிவரும் செய்தி நதி. உடல்களால் ஆன நதி அல்ல இது. இந்த செய்தி நமது உடலுக்குள் சென்று அவைகளை பாதிக்கிறது. ஆனால் உடலால் இந்த செய்திகள் பாதிக்கப்படுவதில்லை.

நல்ல தோழர்கள் போல பழங்காலத்திலிருந்து இன்றுவரை வெற்றிநடை போட்டு வருவது போல இந்த ஜீன்களின் ஆறு ஓடி வருகிறது. கலப்புறவு கொண்டு மக்களை பெருக்கும் எந்த ஒரு மக்கள்தொகையின் ஜீன்களும், நீண்டகாலத்தில், ஒவ்வொரு ஜீனுக்கும் இன்னொரு ஜீன் தோழனாக இருக்கிறது. குறுகிய காலத்தில், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு உடல்களில் தங்கி அதே உடலில் இருக்கும் மற்ற ஜீன்களின் தோழனாக இருக்கிறது.

(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: உதாரணமாக புலியின் பல் என்பது ஒரு 10 ஜீன்களைப் பொறுத்து இருக்கிறது என்று கொள்ளலாம். எல்லாப்புலிகளின் பல் ஜீன்களும் மொத்தம் 15 ஜீன்கள் என்றும் கொள்ளலாம். ஆகவே இந்த 15 ஜீன்களின் permutation பத்து பத்து ஜீன்களாக பல்வேறு புலிகளில் இருக்கின்றன. ஆகவே ஒரு புலியின் பல் சற்று கோணல்மாணலாக இருக்கிறது. ஒரு புலியின் பல் நேராக இருக்கிறது. புலியின் கிழிக்கும் பற்கள் கூர்மையாக இருக்கின்றன. ஒரு புலியின் கிழிக்கும் பற்கள் அவ்வளவு கூர்மையாக இல்லை என்றாலும் நன்றாகவே மானின் தோலைக் கிழிக்கின்றன. ஆகவே, இந்த 15 ஜீன்களும், புலியின் ஜீன் ஆற்றில், காலநதியில் புலிகளின் பிள்ளைகளுக்கும் அவர்களது பிள்ளைகளுக்குமாக ஓடிக்கொண்டே இருக்கின்றன)

நல்ல உடலைக் கட்ட உதவும்போதும், அந்த நல்ல உடல் அதனது சுற்றுப்புறத்தில் நன்றாக வாழவும், அந்த இனம் தேர்ந்தெடுத்துக்கொண்ட வழியில் பல்கிப்பெருகவும் முடியும்போதே அந்த ஜீன்கள் யுகங்கள் யுகங்களாக வாழவும் முடியும். ஆனால், இதில் இன்னும் பெரிய விஷயங்கள் இருக்கின்றன. ஒரு ஜீன் வாழ்வதற்கு, அந்த ஜீன் அந்த உயிர் இனத்தில் இருக்கும் மற்ற ஜீன்களுடன் சேர்ந்து வேலைசெய்யக்கூடிய விஷயம் பெற்றிருக்க வேண்டும். நீண்டகாலம் ஒரு ஜீன் வாழ்வதற்கு அந்த ஜீன் ஒரு நல்ல தோழனாக இருக்க வேண்டும். அது அந்த ஆற்றில் இருக்கும் மற்ற ஜீன்களுடன் தோழமையுடனும் அந்த ஜீன்களின் பின்னணியிலும் நன்றாக வேலை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.

மற்றொரு உயிரினத்தின் ஜீன்கள் மற்றொரு நதியில் இருக்கின்றன.

ஒரு உயிரினத்தில் இருக்கும் எல்லா உயிர்களுக்குள்ளும் ஒரே ஒரு ஜீன்கள் ஆறு ஓடுகிறது. அந்த ஜீன்கள் அந்த உயிரினத்தில் இருக்கும் மற்ற ஜீன்களுடன் தோழமையாக இருக்க தயாராக இருக்கின்றன. இருக்கும் ஒரு உயிரினம் இரண்டாக பிரியும்போது இன்னொரு உயிரினம் தோன்றுகிறது. அதாவது அந்த உயிரினத்தின் ஜீன்களின் ஆறு காலவெளியில் இரண்டாகப் பிரிகிறது. ஒரு ஜீனின் பார்வையில், இந்த speciation என்னும் புதிய உயிரின உருவாக்கம், ஒரு ‘பிரியாவிடை ‘. ஒரு குறுகிய கால அரைகுறை பிரிவுக்குப் பின்னர், இரண்டு நதிகளும் தனித்தனி வழியில் எப்போதும் செல்கின்றன. அல்லது ஒரு பிரிவு கால மணலுக்குள் காய்ந்து வற்றிப்போகும் வரை.

கரைகளுக்குள் பாதுகாப்பாக, இந்த நதி நீர், பாலுறவால் தொடர்ந்து கலந்து, மறுபடியும் கலந்து ஓடுகிறது. ஆனால் எப்போதும் தண்ணீர் தன் கரைகளைத் தாண்டி இன்னொரு நதியை களங்கப்படுத்துவதில்லை. ஒரு உயிரினம் தனியாகப் பிரிந்த பின்னர் இந்த இரண்டு ஜீன் குழுக்களும் மற்ற ஜீன் குழுவில் இருக்கும் ஜீன்களின் தோழர்களாக இருப்பதில்லை. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவைகள் இனிமேல் ஒரே உடலில் சந்திக்கப் போவதில்லை. எனவே அவைகள் தோழமையோடு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இன்றைக்கு டி என் ஏ நதிக்கு, சற்றேரக்குறைய 3 கோடி கிளைகள் இருக்கின்றன. அதுதான் உலகத்தில் இருக்கும் தனித்தனி இனங்களின் எண்ணிக்கை. இன்னும் ஒரு விஷயம். இன்றைக்கு இருக்கும் இனங்களின் எண்ணிக்கை இதுவரை உலகத்தில் தனி இனங்களாக இருந்த இனங்களின் எண்ணிக்கையில் சுமார் 1 சதவீதமே என்பது. இதிலிருந்து நாம் இதுவரை இந்த டி என் ஏ நதிக்கு சுமார் 300 கோடி கிளைகள் இருந்திருக்கின்றன என்பதையும் அறியலாம். இன்றைக்கு இருக்கும் 3 கோடி கிளைகள் திரும்பிபோகமுடியாதபடிக்கு தனியானவை. இவைகளில் பெரும்பாலும் வற்றிப்போய் காணாமல் போகும். ஏனெனில் பெரும்பாலான இனங்கள் மறைந்துவிடுவதுதான் இயற்கை. இந்த 3 கோடி கிளைகளை காலத்தில் பின்னோக்கி சென்று பார்ப்போமானால், நாம் இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பின்னால் சென்று இன்னும் ஒரு கிளை இணைந்து இன்னும் ஒரு நதியுடன் இணைந்து கொண்டே போவதைப் பார்க்கலாம். மனித ஜீன்களின் ஆற்றுக்கிளை மற்ற குட்டிபோட்டு பால்கொடுக்கும் இனங்களுடன் (எலிகள், பூனைகள், வவ்வால்கள், யானைகள்) போன்றவற்றுடன் இணைவதைப் பார்க்கலாம். அவையும் பின்னால் சென்று பறவைகளுடனும், ஊர்வனவுடனும், முதலைகளுடனும், மீன்களுடனும், முதுகெலும்பற்ற உயிரினங்களுடனும் இணைவதைப் பார்க்கலாம்.

ஃப்ரான்ஸிஸ் கிரிக், ஜேம்ஸ் வாட்ஸன் என்ற இரண்டு பெரும் அறிவியலாளர்கள் ஜீனின் மூலக்கூறு அமைப்பை நமக்குச் சொன்னார்கள். இதற்காக நாம் அரிஸ்டாட்டில், ப்ளாட்டோ போன்றோரை கெளரவிப்பதுபோல அவர்களையும் கெளரவிக்க வேண்டும். அவர்களுக்கு கொடுத்த நோபல் பரிசு, ‘மருத்துவம், உடலியல் ‘ போன்றவற்றுக்காக வழங்கப்பட்டது. அது முக்கியமல்ல. 1953இல் வெளிவந்த இந்த இரண்டு இளைஞர்களின் சிந்தனை, நமக்கு உயிர் பற்றிய சிந்தனையை புரட்சிகரமாக மாற்றியமைத்தது. வாட்ஸன்-கிரிக்குக்குப் பின்னர், மூலக்கூறு உயிரியல் டிஜிட்டலாக (கணிணி உபயோகப்படுத்தும் எண்கள் செய்தி போன்று புரிந்து கொள்ளப்படுதல்) ஆகிவிட்டது.

வாட்ஸனும் கிரிக்கும் நம்மை, ஜீன்களை பார்க்க வைத்தார்கள். அவைகளின் நுண்ணிய உள்ளமைப்புக்குள், அவை சுத்தமான டிஜிட்டல் செய்தியாக இருப்பதை நம்மை காணவைத்தார்கள்.

ஒரு கணிணி போல, கணிணியில் உபயோகப்படுத்தும் அடர்தகடு போல (compact disk) அவைகளுக்குள் இருக்கும் செய்திகள் வெறும் ஒன்று-சைபராக இருப்பது போல, இந்த ஜீன்களும் வெறும் டிஜிட்டல் செய்திகளாக இருப்பதை காண்பித்தார்கள். இந்த ஜெனடிக் குறியீடு, கணிணியில் இருப்பது போல இருஎண் குறியீடு (binary code) அல்ல. பல தொலைபேசிகளில் இருப்பது போல எட்டுஎண் குறியீடு அல்ல. ஆனால் நான்குஎண் குறியீடு (quaternary code). ஜீன்களுள் இருக்கும் இயந்திரக்குறியீடு, கணிணிபோலவே இருக்கின்றன. என்ன பெயர் நாங்கள் சொல்கிறோம் என்பதை விட்டுவிட்டால், ஒரு மூலக்கூறு உயிரியலின் கட்டுரையை அப்படியே கணிணியியல் கட்டுரையாகப் பார்க்கலாம்.

இதன் விளைவு, இந்த டிஜிட்டல் புரட்சி, உயிர் என்பது வெறும் டிஜிட்டல் செய்திதான் என்ற புரிதல், முன்பு இருந்த vitalism என்ற தேற்றத்துக்கு சாவு மணி அடித்துவிட்டது (vitalism என்பது உயிர்வாழும் பொருட்களும் உயிரற்ற பொருட்களும் அடிப்படையிலேயே வித்தியாசமான பொருட்கள் என்று சொல்வது). 1953 வரை, வாழும் புரோட்டோப்ளாஸம் அடிப்படையிலேயே, குறைக்க முடியாதபடி மர்மமானது என்பதை நம்ப முடியும். ஆனால் 1953க்குப் பின் அதுபோல நம்ப இயலாது. முன்பு உலகம் இயந்திரமயமானது என்று பேசிவந்த பழங்காலத் தத்துவவியலாளர்கள் கூட அவர்களது நம்பிக்கை இந்த அளவுக்கு நிரூபிக்கப்படும் என்று கனவில் கூட கருதியிருக்கமுடியாது.

இப்போது ஒரு அறிவியல் கதையை யோசிக்கலாம். இதில் பேசப்படும் தொழில்நுட்பம் இன்றைக்கு மிகவும் சாத்தியமானது. பேராசிரியர் ஜிம் கிரிக்ஸன் என்பவர் ஒரு தீய வெளிநாட்டு சக்தியால் கடத்தப்பட்டு, உயிரின போர் முறையை (biological-warfare) ஆராயும் பரிசோதனைச்சாலையில் கட்டாயப்படுத்தப்பட்டு வேலை செய்யவைக்கப்படுகிறார். (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: உயிரின போர் முறை (biological-warfare) என்பது வைரஸ்கள், கிருமிகளை ஒரு குறிப்பிட்ட ஜீன் உள்ளவர்களை மட்டும் தாக்கும்படிக்கு மாற்றி அதை எதிரி நாட்டில் பரப்புவது. உதாரணமாக பொன்னிற தலைமுடி உள்ளவர்களை விட்டுவிட்டு கருப்பு நிறத் தலைமுடி உள்ளவர்களை மட்டும் தாக்கி அழிக்குமாறு ஒரு வைரசுக்கு சொல்லலாம்.) மீண்டும் கதை. உலகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால், உலகத்துக்கு இந்த விஷயத்தையும், இன்னும் சில மகாரகசிய விஷயங்களையும் சொல்ல வேண்டும். ஆனால் எல்லா தொலைபேசி, கணிணி போன்ற தொடர்புச் சாதனங்கள் எல்லாம் அவரிடமிருந்து எடுக்கப்பட்டு விட்டன. என்ன செய்வது. ஒன்றே ஒன்று இருக்கிறது. டி என் ஏ குறியீடு 64 மூன்றெழுத்து குறியீடுஜீன்கள் (64 triplet ‘codons, ‘) கொண்டது. ஆங்கில பெரிய எழுத்து சின்ன எழுத்து அப்புறம் எண்கள், இடைவெளி குறீயீடு, அப்புறம் ஒரு முழுப்புள்ளி எல்லாவற்றையும் இந்த 64குறியீடுகளில் போட்டுவிடலாம். பேராசிரியர் கிரிக்ஸன் ஒரு இன்ஃப்ளூயன்ஸா வைரஸை எடுத்து அதன் டி என் ஏவுக்குள் அவரது செய்தியை ஒரு முழு வாக்கியங்களாக எழுதி அந்த டி என் ஏவை மாற்றி, அப்புறம் அந்த செய்திக்கு முன்னர் வேறொரு அறிவியலாளரால் கண்டுபிடிக்க முடியக்கூடிய ஒரு விஷயத்தையும் (முதல் 10 வகுபடா எண்கள்) போட்டு தனக்குத்தானே அந்த இன்ஃபுளூயன்ஸா வைரஸையும் முகர்ந்து பார்த்து, சளிபிடித்து நிறைய காவலர்கள் இருக்கும் இடத்தில், ஒரு பெரும் தும்மல் போடலாம். ஃபுளூ உலகமே பரவும். எல்லா பரிசோதனைச் சாலைகளும் இந்த புது ஃபுளூவுக்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்க இதன் டி என் ஏ ஆராய்ச்சியில் ஈடுபடும். அப்போது இந்த ஃபுளூவுக்குள் இருக்கும் தொடர்ந்து வரும் வினோத செய்தி (தொடர்ந்து வரும் வகுபடா எண்கள்) எல்லோராலும் படிக்கப்பட்டு விடும்.

நமது ஜெனடிக் அமைப்பு, உலகம் முழுவது இருக்கும் உயிர்களின் அடிப்படை அமைப்பு, அடித்தளம் வரை டிஜிட்டல் அமைப்பு. ஒரு பெரிய புத்தகத்தை இந்த டி என் ஏ வில் இருக்கும் குப்பை டி என் ஏ ( ‘junk ‘ DNA என்று இப்போது அழைக்கப்படுகிறது. ஆனால் இப்போது புரிந்துகொள்ளப்படாத இடம் என்று கொள்ளலாம்) என்று அழைக்கப்படும் இடத்தில் வார்த்தை வார்த்தை மாறாமல் எழுதிவிடலாம். நமது ஒவ்வொரு செல்லிலும் 715மெகாபைட் அளவுக்கு விஷயம் இருக்கிறது. இந்த விஷயத்தை பல படிக்கும் புரோட்டான்கள் படித்து சொல்லிக்கொண்டே இருக்கின்றன. நமது செல்களில் இருக்கும் நாடாக்கள் (க்ரோமசோம்கள்) எல்லா செல்களிலும் ஒன்றாகவே இருக்கின்றன. ஆனால் படிக்கும் புரோட்டான்கள் நாடாவில் வெவ்வேறு பக்கத்தைப் படிக்கின்றன. அவைகளுக்குத் தேவையான வெவ்வேறு செய்திகளை பெறுகின்றன. அதனாலேயே சதை செல்கள், ஈரல் செல்களிலிருந்து வேறாக இருக்கின்றன வேறு வேலைகளைச் செய்கின்றன. இங்கே ஆவி நடத்தும் உயிர்ச்சக்தி இல்லை. மர்மமான உயிர் மறைந்து நின்று காரியம் நடத்தவில்லை. வெறும் பைட் பைட்டாக டிஜிட்டல் செய்திதான்.

ஜீன்கள் சுத்தமான செய்திகளைக் கொண்டிருக்கின்றன. இந்த செய்திகள், எந்தவிதமான மாறுபாடும், குறைபாடும் இன்றி மீண்டும் மீண்டும் படிக்கவும், மீண்டும் மீண்டும் எழுதவும், மீண்டும் மீண்டும் பிரதி எடுக்கவும் இயலும் செய்திகள். சுத்தமான செய்தி பலபடி பிரதி எடுக்க இயலும் காரணம் இது டிஜிட்டல் செய்தியாக இருப்பதால் தான். பிரதி எடுப்பதில் சுத்தம் தெளிவாக இருக்க முடியும். நவீன பொறியியலாளர்கள் செய்வதற்கு போட்டியாக, டி என் ஏ எழுத்துக்கள் அட்சரசுத்தமாக பிரதி எடுக்கின்றன. தலைமுறை தலைமுறையாக பிரதி எடுக்கின்றன. எப்போதாவது சில தவறுகள் varietyக்காக. இந்த varietyயில் எந்த ஜீன் கூட்டு நல்ல இயந்திரத்தை உருவாக்கி அந்த இயந்திரம் தனக்குள் இருக்கும் டி என் ஏ செய்தியை அடுத்த தலைமுறைக்கு வெற்றிகரமாக செலுத்த பயன்படுகிறதோ அந்த ஜீன் கூட்டே பல்கிப் பெருகி உலகமெங்கும் ஆக்கிரமிக்கிறது. நாம், அதாவது வாழும் உயிரினம் ஒவ்வொன்றும், உயிர்வாழும் இயந்திரங்கள். எதற்கு ? நமக்குள் இருக்கும் ஒரு செய்தித்தளத்தை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு அனுப்ப செலுத்தப்பட்ட, உயிர்வாழ்வதற்கு அந்த செய்தித்தளத்தாலேயே நிரல் கொடுக்கப்பட்ட (ப்ரோக்ராம் செய்யப்பட்ட) உயிர்வாழும் இயந்திரங்கள். ( We – and that means all living things – are survival machines programmed to propagate the digital database that did the programming.)

பின்னோக்கிப் பார்த்தால், இது வேறுமாதிரி இருக்க முடியாது என்று விளங்கும். ஒரு அனலாக் ஜெனடிக் அமைப்பை கற்பனை செய்து பார்க்கலாம். அது ஜெராக்ஸ் எடுத்த பேப்பரை ஜெராக்ஸ் எடுத்த பேப்பரை ஜெராக்ஸ் எடுத்த மாதிரித்தான் இருக்கும். ஒரு 800 தலைமுறைகளுக்குப் பின்னர் பேப்பர் வெறும் கருப்பாகத்தான் இருக்கும். தொலைபேசிகளுக்கு நடுவே வைக்கும் ஆம்ப்ளிபைர், பல பிரதி தலைமுறை தாண்டிய ஒலிநாடா, போன்றவை எல்லாம் இதே போல கொஞ்சம் தலைமுறைகள் தாண்டிய பின்னரே தவறுகள் பூதாகரமாகி செய்தி காணாமல் போய்விடுகிறது. ஆனால் ஜீன்கள் 10 கோடி தலைமுறை தாண்டிய பின்னரும் இந்தச் செய்தி காணாமல் போவதில்லை. டார்வினிஸம் வேலை செய்வதன் காரணம், இந்த (அவ்வப்போது நடக்கும் செய்தி மாறுதலால் உருவாகும் புதிய உயிரினங்களில், நடைமுறைக்கு ஒவ்வாதவையாக இருப்பவை அழிந்து போய், ஒத்துப்போகும் உயிரினங்கள் வாழ்வது ஒருபக்கம் இருந்தாலும்) பிரதி எடுக்கும் முறை மிகச்சுத்தமானது என்பதால்தான். ஒரு டிஜிட்டல் ஜெனடிக் அமைப்பு மட்டுமே டார்வினிஸத்தை யுக யுகங்களாக நடத்திக்கொண்டிருக்க முடியும். ஒரு டிஜிட்டல் ஜெனடிக் ஆறு மட்டுமே உயிரின் முன்-கேம்பிரியன் யுகத்திலிருந்து இன்றுவரை நம்மை கொண்டுவந்திருக்க முடியும்.

Series Navigation