பேனா

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

ரவிசந்திரன்


..

ஆபிஸில் வந்த என்னை நோக்கி வேகமாக வந்த என் பொண்ணு
“அப்பா என் பேனா வை கண்டுபடித்துக் கொடு” என கட்டளை இட்டாள்

எனக்கு அதை தேட நேரம் இல்லை வேணுமானால் என் பேனா எடுத்துக்கோ
என என் பேனா வை கொடுத்தேன்.

அதற்குள் என் மனைவி , கோபத்துடன்.
எங்கையாவது போடவேண்டியது அப்புறம் என்னை தொல்லை பண்ண வேண்டியது…என்
பொண்ணை பார்த்து கடித்து விட்டு ,

நீங்கள் சோம்பேறியனாதது பத்தமால் பெண்ணையும் சோம்பேறியாக்கிறங்களா ? என
ஒரு குப்பாடு போட்டு, விட்டு , எங்கிறந்தோ அந்த பேனா வை கொண்டு வந்து
கொடுத்தாள்.

என் சிந்தனை , அந்த சோம்பேறி வசனம் ரொம்பவே சுட்டது.
அவளுக்கு நான் யார்ருந் காட்டணும்.

மனம் துடித்தது.

ஆபிஸில் ஒரு ப்ரொகிராமர் என்னை கிண்டல் பண்ணதும் நினைவு வந்தது. அதுவும்
சுந்தர தமிழ் சொல் கலாய்ப்பு,
“ சார், வெறும் வாய் சொல்லில் வீரர் தான் “.

நான் துணிந்து விட்டேன். ஒரு கதை எழுதி எப்படி யாவது , இண்டர் நெட்டில்
வரவழைத்து, அவனுக்கு காட்டணும்..

காட்டுவேன்…

பேப்பர், பேனா ரெடி…
ஆபீஸ் வேலையில் தான் எவ்வளவு , ப்ரெஜக்ட் ரிப்போர்ட் , காண்டராக்ட்
டாக்குமெண்டுதான் எழுதி யிருக்கிறேனே!!

தலைப்பு : பாமரனின் வேதனை, கண்ணில்லாதவனின் வாணவில் காட்சி,

சே … என்ன ஒரே நெக்டிவ் வாவே வருது,,,,

சரி ,, சினிமா பற்றி .. யோசிக்கலாமா ??

அரிதாரத்தில் ஒரு அடையாள சிக்கல் ,
சங்கடத்தில் சகலகலா வல்லவன்,

சரி , சரி .. தலைப்பு பின்பு பார்க்கலாம்…

பஞ்ச் டைலாக்கை முடிப்போம்…

சிந்திக்க ஆரம்பித்தேன்…. பிறகு கதையை ரொப்பிக்கலாம்.. என் எழுத ஆரம்பிக்கிறேன்.

கட், காபி ,பேஸ்ட் அது எங்கள் பிறப்புரிமை
அதை அடைந்தேன் திருவோம்..
(ஆக்டர். எம்.ஜி.ஆரிலிருந்து, நேற்று முளைத்த சிம்பு வரைக்கும்)
(டைராக்டர்..சங்கர் ( பழையவர், முதல் புதியவர் வரை) முருகதாஸ், கே.ஸ்.ரவிக்குமார்,
( மியூசிக் டைராக்டர்..எம்.எஸ்,வி இருந்து ஹாரிஸ் ஜெயா ராஜ் வரை) …

ஆனா நாங்க தான் அக்மார்க்கு முத்திரையோடு படத்தை வியாபாரம் செய்றோரமின்
சொல்லுவார்கள்..

எல்லாம் நடிப்பு சுதேசிகள் ( ஒ…. பாரதியின் எனே தனி தமிழ் சொல்லடல்…
என்ன கோபம் அவனின் பார்வையில்) …

எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்…

கவனம் , பாரதியின் மேல் திரும்பு கிறது..

என்னயிது ,,,, பாரதி எழுதாதைய நான் எழுதி விடப் போகிறேன்??…

மனம் பின் வாங்குகிறது… கைகள் துவழ்கிறது.

ஒளவையார் முதல் ஒஷொ வரை
திருமுலர் முதல் திரு வள்ளுவர் வரை
கம்பர் முதல் கண்ணதாசன் வரை
சுப்ரமணிய பாரதி முதல் சுஜாதா வரை

எல்லொரும், எல்லாவற்றை பற்றியும் எழுதியாகி விட்டாச்சு ,
நான் என்னத்தை பெரிசா எழுதிவிட போகிறேன்.

போச்சு , போச்சு, ஐயா அப்பிட் ( ப்ரோகிராமரின் கேலியும், கிண்டலும் ,
WIFI திரை ஆன்லைன் ஸ்ட் ரிம்ங்கில் ஒடுக்கிறது…

சே சே
தோத்து போய்விட்டோமே…. !!!!

சமையல் அறையிலிருந்து மனைவியின் ( சவுதியில் அவர்கள்தான் முடிசுடா
ராணிகள் தான்) அசரீரீ குரல்

8:15 சாலா ( தொழுகை ) முடிந்து விட்டது. அல் கத்தீரிக்கு போய் கூப்புஸ்
( சவுதி சப்பாத்தி , ) லாபன் ( மோர்) , குட்டிப் பையனுக்கு ஸ்னக்கியும்…
ஸ்டே ஃவீரீ யும் வித் விங்ஸ் வாங்கி வாங்க… கிளம்புங்க…..

ச…
என்னடா வாழ்க்கை ,
உருப்படியா ஒரூ கதை கூட எழுத முடியால… என நினைக்க

அசரீரீ குரல்…

எங்க பெரிசையும்.. கூட்டிப்போங்க… இங்க சிண்ணத்தை படுத்தி எடுக்குது…

முணு முணுத்தப் படி… ( நான் இருப்பது, என்ன சம்சார சஹாரவா ????)

Series Navigation

ரவிசந்திரன்

ரவிசந்திரன்