ஒரு கவிதை:

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

சுப்ரபாரதிமணியன்


”பங்கரி’லிருந்து வந்த மனிதனை
வரவேற்றேன்.
தேநீரும் சாப்பாடும்வாங்கித்தந்தேன்
ஒரு குளியல் போட்டால் நன்றாக இருக்கும் என்றார்.
அலுவலக நேரத்தில்
அலுவலகக் கழிப்பறையில் (குளியலறை என்று தனியே இல்லை)
ஒரு மனிதனிக் குளிக்க வைப்பது
சாமான்யக் காரியமல்ல
( மெமொ-விளக்கம் தரவேண்டியிருக்கும்
அலுவலத்தண்ணீர்க் குழாயிலிருந்து
இரண்டு குடம் குடிநீர் கொண்டு போனதற்கான நடவடிக்கை
என்மேல் இன்னும் இருக்கிறது)
“பங்கரி”ல் கடவுளையும், சாத்தானையும்
சந்தித்ததாகச் சொன்னார்.
கடவுள் நீங்குகையில் சாத்தானும்
சாத்தான் நீங்குகையில் கடவுளும் வெளிப்படுவதாகக்
கற்பனை செய்து கேட்டேன்..
இருவரும் ஒரே நேரத்தில்
“ பங்கர்” குழிக்குள்
அருகருகே பதுங்கியிருந்தார்கள் என்றார்.
எனக்காவது தூக்கம் அவ்வப்போது வாய்த்திருந்த்து.
கடவுளும், சாத்தானும் “ பங்கரில் “ தூங்குவதில்லை என்பது
வருத்தமாக இருந்தது.
முடிகிறபோது வாருங்கள் என்றார்.
அவரின் அழைப்பு அபரிமிதமானதாகத் தோன்றியது.
ஆனாலும் தலையசைத்தேன்.
எனது அலுவலகப்பகுதியோ
எந்து வீடுள்ள பகுதியோ
நான் காலை நடை போகும் பகுதியோ
இன்னும் குண்டு வீச்சுக்கு ஆளாகவில்லை என்றேன்.
சீக்கிரம் ஆளாகலாம் என்று சொல்வது
வருத்தம் தருகிற விசயமாக இருந்தது.
கடவுளும், சாத்தானும்
என்னுடன் ஒரே குழியில் கிடக்கும் காட்சி
அவ்வப்போது வந்து போகிறது.

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்

ஒரு கவிதை

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

றஞ்சினி


யாரும் நினைத்திரா ராட்சத அலைகளால் இழந்து

நிற்கிறோம் எம் அன்பு உறவுகளை

குழந்தைகள் பெண்கள் முதியோர் ஆண்களென

பல்லாயிரக் கணக்கில் .

இந்து சமுத்திர திவுகளெங்கும்

மனித இறப்பின் அவலம் தொடர்கிறது

ஆபிரிக்காவையும் விட்டுவிடவில்லை

இது என்ன கொடுமை

இலங்கை இந்திய கரைகள் தோறும்

மிருகங்கள் போல மனித உடல்கள்

அநாதைகளாக பல்லாயிரக் கணக்கில்,

அள்ளி அடுத்து புதைக்கும் நிலமை

பார்த்து நிக்க இதயம் வலித்து கண்கள் நிறைகிறது

போரினால் இழந்தோம் பல்லாயிரக் கணக்கில்

அதையும் தாண்டி இயற்க்கையிடம் சிக்கி இறந்த உறவுகள் .

யாரை நோவது யாரிடம் உரைப்பது

இயற்க்கையே உனக்கு ஏன் இந்த சீற்றம்

மனிதர்கள் உன்னை அழிப்பதனாலா

மனிதர்கள் உன்னை வதைப்பதனாலா

உன்னை பரிசித்து வல்லரசுகள்

தம்மை பலம் செய்வதனாலா

ஏழை மக்களின் உயிரை ஏன் பதிலாக கொண்டாய்

இயற்கையை அன்னையின் சீற்றக்கணக்கில்

இன்னும் எத்தனை அழிவுகள் உழதோ

இனியாவது உன்னை

உனது சீற்றத்தை மனிதர்கள் புரிந்திடுவார்களா
—-

shanranjini@yahoo.com

Ranjini Frankfurt

Series Navigation

றஞ்சினி

றஞ்சினி

ஒரு கவிதை

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

பத்மா அரவிந்த்


கடவுளுக்கு கண்ணில்லை என்று சொல்லும் மானிடரே
கடன் வாங்கி செலவழித்துக் கல்யாணம் செய்திடவே
இடம் இல்லை என்று சொல்லிக் கூரை வேய்ந்து
சடங்குகளைத் தடையின்றி செய்திட நினைத்தீர்.

சட்டங்கள் வரைமுறைகள் மீறிச்சென்று உங்கள்
இட்டம் போல் செயல் செய்து விருந்தும் உண்டார்
பட்ட பொறி கூரை தன்னில் பெரு நெருப்பாய் மாறுமென்று
திட்டமிட மறந்தென்னை குறை இன்று கூறுகின்றீர்

இருமனமும் ஒருமனமாகும் திருமணத்தில் -இலவச
விருந்துண்னவென்று சேரும் கூட்டம் கதைகள் பேசும்
பெருமளவில் கூட்டம் சேர்த்து பொருள் விரயம் செய்யும்
திருமணங்கள் மாறிவிட்டால் பெண்ணின் துயர் தீரும்
—————————————————————-
(ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீவிபத்தின் மீதான செங்காளியின் கவிதை படித்தபின்)
padma.arvind@co.middlesex.nj.us

Series Navigation

பத்மா அரவிந்த்

பத்மா அரவிந்த்