நீரலைகள் மோதி உடையும் படிக்கட்டுகள்

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

எஸ். அர்ஷியா


மழுங்கிய மேற்குவெயிலைப் பின்னந்தலையிலும், முதுகிலும் வாங்கியிருந்த புன்னை மரங்கள், பெருந்தன்மையுடன் துப்பியிருந்த நீள்நிழலைத் தேடிவந்துநின்றது, அந்தக்கார். தன் கதவுச் சிறகுகளை வி¡¢த்த அதிலிருந்து, நாலைந்து குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாகப் படபடத்து வெளிப்பட்டன. தரையில் கால்பாவியதும், புதிய உலகை ஆச்சா¢யமாகப் பார்த்த அவர்களின் கண்களில் பிரமிப்பு. ஒரு சிறுவன், ‘ஹோய்’ எனும்கூச்சலுடன் கூட்டத்திலிருந்துப் பி¡¢ந்து துள்ளித்துள்ளி ஓடுகிறான். அவனைக் காட்டிலும் சற்றே பொ¢ய பெண்குழந்தை ஒன்று, “தம்பி ஓடாதே!” என்று செல்லமாய் அதட்டுகிறது. அதனுடன் வேறு இரண்டு சிறுவர்களும், ஒரு சிறுமியும் பரவசமும் பரபரப்புமாக இருக்கிறார்கள். பி¡¢ந்து ஓடி, தார்ச்சாலையைக் குறுக்காகக் கடந்துவிட்ட அந்தச் சிறுவன், எதிர்முனையிலிருந்த குட்டைக் கற்சுவற்றருகே போய்நின்று, “இதுதான் தெப்பக்குளமா? எவ்வளவு பெருசு?” என்று கண்களையும் கைகளையும் எல்லை வரை அகட்டிக்காட்டி அதிசயிக்கிறான்.

கா¡¢லிருந்து இரண்டுபெண்களும், ஒருமூதாட்டியும் இறங்கியிருந்தார்கள். ஓட்டுநர் இருக்கை யிலிருந்து இறங்கிய இளைஞன், ஒரு மடக்குசக்கரநாற்காலியை கா¡¢ன் பின் பக்கத்திலிருந்து எடுத்துவந்து, திறந்திருந்த சிறகுக்கதவுக்கருகே அதனை வி¡¢க்கிறான். சிலநொடிகளில், அதை இயங்குவதற்கானத் தயார்நிலைக்கு மாற்றுகிறான். பின்பு, கா¡¢லிருந்து ஒருபொ¢யவரை மிகுந்த சிரமத்திற்கிடையில் லாவகமாகத் தூக்கி, அந்த சக்கரநாற்காலியில் இருத்துகிறான். எழுபது வயதைத் தொட்டவராகவோ.. தொடுபவராகவோ.. இருந்தார், அவர். இடுப்புக்குக் கீழே, உறுப்புகள் சீராக இருப்பதாகத் தொ¢யவில்லை.

கா¡¢லிருந்து இறங்கியப் பெண்களும், குழந்தைகள் நின்றிருந்த இடத்துக்குப் பக்கத்தில் போயிருந்தனர். முதலில் ஓடிவந்திருந்தச் சிறுவன், தன்னருகே வந்துவிட்ட அம்மாவிடம், “தெப்பக்குளத்துலத் தண்ணீயே இல்லே!”என்று, அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு விசனப்படுகிறான். அவனுக்குள் உருவாக்கப்பட்டிருந்த தெப்பக்குளத்துச் சித்திரம் சிதறிப் போன துயரத்தைப் பூசியிருந்த அவன் வார்த்தைகள் எல்லோருக்குமானக் கவலையாக இருக் கிறது.

“ஆமா, தண்ணி இல்லியே!” என்று பவிசாகச் சொன்ன அம்மா, “கவனமா வெளாடுங்க!” என்றபடி, தன்னுடன் இருந்தப்பெண்ணுடன் உரையாட ஆரம்பித்துவிட்டாள். அதே நொடியில் அந்தச் சிறுவன் மற்றகுழந்தைகளுடன், தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி விளையாடத் துவங்கியிருந்தான்.

வெயில் தாழ்கிறது.

சக்கரநாற்காலியில் வாகாக உட்கார்ந்துகொண்ட பொ¢யவர், இளைஞனின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறார். பார்வையின் அர்த்தம் அவனுக்குக் கைவந்திருக்குமாகத் தொ¢கிறது. பு¡¢ந்துகொண்ட வனாக சக்கரநாற்காலியை மெதுவாகத் தள்ளத் துவங்குகிறான். முன்பெல்லாம், இந்தப்பகுதி யில் நடமாட்டம் என்பது அதிசயமான ஒன்று. இன்று ஆளில்லாத நாள்தான் அதிசயமாக இருக்கமுடியும். பெரும் பொழுதுபோக்குத் தளமாக அது ஆகியிருந்தது. தார்ச்சாலையைக் குறுக்காகக் கடந்து, தெப்பக்குளத்தின் குட்டைக் கற்சுவற்றருகே வந்ததும், மறுபடியும் அந்த இளைஞனை ஏறிட்டார். வண்டியைத் தள்ளுவதை அவன் நிறுத்துகிறான். கனிந்திருந்த அவர் முகத்தில் முறுவல் திரள்கிறது. அவனிடம் ‘போதும்’ என்பதுபோலத் தலையசைக்கிறார். அவரை அங்கேயே விட்டுவிட்ட அவன், விலகிச்சென்று அந்தப்பெண்களுடன் சேர்ந்துகொள்கிறான். குழந்தைகள் குதூகலத்துடன் குதித்து, ஓடி விளையாடிக் கொண்டிருக்கின்றன.

பொ¢யவா¢ன் சக்கரநாற்காலி நிறுத்தப்பட்ட இடத்துக்கு அருகில், யதேச்சையாக யாரும் இருக்க வில்லை. அத்தனைப்பொ¢ய இடத்தில் அவர் மட்டும் ஒற்றைமரம்போல தனியாக இருக்கிறார். அதுவாகவே உருவாகியிருந்த அந்தத்தனிமை அவர் விரும்பியதுபோலவே இருந்திருக்க வேண்டும். அந்தத் தனிமையை அவர் ரசிப்பதாக அவா¢ன் முகமலர்ச்சிக் காட்டுகிறது. மேற்குக் கரை படிக்கட்டின் வடக்குப்பக்கத்தில் படியத்துவங்கிய அவர் பார்வை, தேர்ச்சிப்பெற்ற நீச்சல் வீரனைப்போல நிதானமாக, அமைதியாகக் கிடந்தத் தெப்பக்குளத்துக்குள் குதித்து, முன்னகர் கிறது. இரண்டுகைகளின் விரல்களையும் அவர் ஒன்றுடன் ஒன்றாகப் பிணைத்துக்கொள்கிறார். உதடுகளின் ஓரத்தில் மெல்லியக் கீற்றாக இளநகை அரும்புகிறது. கைகளின் வீச்சுக்குப் பின்னேறும் நீராக நினைவுகள் நீந்தத் துவங்கியிருக்கவேண்டும். ஒன்றுடன் ஒன்றாகப் பிணைத்துக்கொண்ட கைகளால், மோவாயில் வலிக்காமல் குத்திக்கொள்கிறார். ஏதோ நினைவு வந்ததுபோல மெதுவாகத் தலையை மேலும்கீழுமாய் ஆட்டியும் கொள்கிறார். இப்போது மைய மண்டபத்தை அவர் பார்வை ஊடுருவுகிறது. நீண்டநாட்களாகத் தேடிய பொருள் கைக்குக் கிடைத்துவிட்டதை உணரும் ஒருகுழந்தையின் முகம்போல, அவர்முகம் மேலும் பிரகாசமடை கிறது.

தெப்பக்குளத்துக்கும் அவருக்கும் பந்தம் இருப்பதுபோன்ற பிணைப்பு, புதிதாய் அவா¢டம் தோன்றியிருந்தது. மனதுக்குச் சுகமான நேரங்களிலும் துக்கமான நேரங்களிலும் ஓடோடிவந்து தஞ்சம்கொள்ளும் தாய்மடிபோல, அந்த இடத்தில் அவர் உருகத் துவங்கியிருந்தார். உடல் முழுவதும் சலனம் பரவியது. மெல்லிய நடுக்கம் மின்னலாய் ஓடிமறைந்தது. பாதங்களில் அந்த மண்ணின் ஸ்பா¢சம் படவேண்டுமென்று மெனக்கெடுவதை உடலசைவு உறுதிப்படுத்துகிறது. இடுப்புக்குக் கீழேயான சீராக இல்லாத உறுப்புகள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றன.

எத்தனையோ முறை உச்சிவெயிலிலும் கொட்டும் மழையிலும் அதைச் சுற்றிச்சுற்றி வந்திருப் பவர்போலவும் கற்சுவற்றில், படிக்கட்டில், மைய மண்டபத்தில், குளத்தில் நீரற்ற காலங்களில் அதன் வெடிப்புவிழுந்தத் தரையில் என்று எங்கெல்லாமோ இளைப்பாறியிருப்பவர் போலவும் புளகாங்கிதமடைந்து போகிறார்.

வெளிச்சம் மறைந்து அரும்பிய மெல்லிய இருளின் ஆதிக்கத்துக்குள் தெப்பக்குளம் தன்னை நுழைத்துக் கொள்கிறது. இத்தனைப் பொ¢ய தெப்பக்குளத்தை எத்தனைபேர் சேர்ந்து தோண்டி யிருப்பார்கள்? எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? தோண்டிய மண்ணை என்ன செய்திருப் பார்கள்? கோவில் கட்டத்தான் மண் போனதா? மன்னருக்கு அரண்மணைக் கட்டவும் போயி ருக்குமோ? எத்தனைபோ¢ன் மனித உழைப்பாக அது இருக்கும்? எத்தனைக் குடும்பங்கள் அந்த உழைப்பால் பயன் அடைந்திருக்கும்? தோண்டும்போது மண்சா¢ந்து, யாராவது இறந்து போயிருப்பார்களோ? அந்தக்குடும்பம் என்னவாகியிருக்கும்? கல் தச்சர்கள் எத்தனை பேர் பணியாற்றியிருப்பார்கள்? கற்களை எத்தனை காளைகளும், யானைகளும் இழுத்து வந்திருக் கும்? காளைகளை சாட்டையால் அடிப்பதுபோல, யானைகளைச் சாட்டையால் அடிக்க முடியமா? இரவுப் பணி நடந்திருக்குமா? அவர்கள் எங்கே தங்கியிருந்திருப்பார்கள்? எதைப் பற்றியும் துல்லியத் தகவலைக் காட்டாது, கள்ளத்துடன் இருட்டுக்குள் வரலாற்றை ஒளித்து வைத்துவிட்டதைப்போல, உடைபடாத அடர்ந்த இருளுக்குள் இப்போது கள்ளமாய் தெப்பக் குளமும் புதைந்துக் கொள்கிறது.

மையமண்டபம் ஒருகறுப்பு ராட்சசனைப்போலவும், அங்கிருக்கும் நாகலிங்கப் பூ மரங்கள் அதன் பா¢வாரங்கள்போலவும் இருளில் குந்தியிருக்கின்றன. நிலா இல்லாத வானத்தின் இருண்ட பகுதியிலிருந்து நினைவுகளின் பக்கங்கள் இயல்பாகப் புரளத் துவங்குகின்றன.

நாகலிங்கப் பூ மரத்தின் அடியில் அவன் காத்திருக்கிறான். நீண்டநேரமாகிவிட்டது. இன்னும் அவள் வரவில்லை. “வீட்டுக்குத் தொ¢ஞ்சுப் போச்சுப்பா. அந்த சாதி கெட்டப் பயலோட சுத்துறியாமேன்னு அப்பா மெரட்டுனாரு. எப்ப என்ன நடக்கும்ன்னு தொ¢யலே!” என்று நேற்று சொல்லியிருந்தாள்.

அந்தத்தகவல், அந்தநொடியிலேயே அவனைக் களைப்படையச் செய்திருந்தது. இரவுமுழுவதும் அவன் தூங்கியிருக்கவில்லை. அவளிடம் முதல்முதலாக மனதைத் திறந்தபோது, கையிலிருந்த நாகலிங்கப் பூவை அவளாகவே வாங்கிக் கொண்டாள். தயக்கத்தைத் திசைமாற்றுவதற்கான பொருளாகத்தான் அவன் அதைக் கையில் வைத்துத் திருகிக்கொண்டிருந்தான். அந்தப் பூ தான் அச்சாரமாக ஆனது. ஏழாண்டுகள். எப்படிப் போயின என்று தொ¢யவில்லை. உயிருடன் கலந்த காதல்.

அவன் இடது கைவிரல்களும், அவள் வலது கைவிரல்களும் ஊஞ்சல் சங்கிலிகளாய்க் கோர்த்துக்கொண்டு தெப்பக்குளக்கற் சுவற்றின் உட்புறத்தில் கல் பாவியத் தரையில் சந்தோஷமாக, இளமான்களாக வலம்வந்த நெருக்க உரசல் கதகதப்பாயிருக்கிறது.

இப்போது அவர், சுற்றும் முற்றும் பார்த்துக் கொள்கிறார்.

அங்கும் இங்குமாய் தம்பதிகள். காதலர்கள். நண்பர்கள். திருட்டுச் சுகம் காண வந்தவர்கள். காற்று வாங்க, பொழுது போக்க, பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க, மனச்சுமையை யாருக்கும் தொ¢யாமல் இறக்கி வைக்க, ‘அக்கடா’வென்று ஆசுவாசமாய் உட்கார்ந்திருக்க… அந்தப் பகுதி கொஞ்சம் கசகசத்திருந்தது.

குழந்தைகளின் ஆரவாரக் கூச்சல் காற்றில் அலைகிறது. பழங்களை மிக்சராக்கித் தருபவனுக்கு அருகில் நாலைந்து இளைஞர்கள் நின்றிருக்கின்றனர். அவர்களின் கைகளில் பழத்துண்டுகள் நிறைந்த தட்டுகளும், அதைக் குத்தியெடுத்துத் தின்ன குச்சிகளும் இருக்கின்றன. அதற்குப் பக்கத்தில் சுடச்சுட இடியாப்பமும் குழாய்ப் புட்டும் அவியும் வாசம் மணக்கிறது. பருத்திப் பால் விற்பவன் குரல் ராகமாய் இசைகிறது. தலைச்சுமையாய் ஒருவன் சிமிண்டுத் தொட்டி விற்றுக் கொண்டே போகிறான்.

குழந்தைகளின் கைகளில் ஐஸ்குச்சிகள் முளைத்திருக்கின்றன. ஒருசிறுவன் தனக்கு பந்து ஐஸ்தான் வேண்டுமென்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறான்.

பகல் முழுவதும் கொளுத்திய வெயிலில் ஓடியோடி கி¡¢க்கெட் விளையாடிய சிறுவர்கள், இளைஞர்கள் இருள் கவிழ்ந்துவிட்ட வருத்தத்துடன் மேலேறி வருகின்றனர். அவர்களுக்கிடை யில் வயிறு நிறைய எருமைப் புல்லை மேய்ந்திருந்த பசுமாடு ஒன்றும் தாவித்தாவி மேலேறி வருகிறது.

தெப்பக்குளத்தைச் சுற்றி, எம்எல்ஏ நிதியில் நடப்பட்டுள்ள அழகிய வண்ணக் குண்டு விளக்கு கள் மென்னொளியாய் வெளிச்சத்தைக் கசியத் துவங்கியிருந்தன. இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் சப்தத்தைத் தாண்டி “போளியல், முறுக்கு” விற்கும் குரல் கேட்கிறது. அனுப்பானடி செல்லும் வண்ண வண்ண நகரப் பேருந்துகள் காற்று ஒலிப்பான்களை பிளிற விட்டுச் செல்கின்றன. கரையைச் சுற்றிப் பூசியிருக்கும் நடைமேடையில், மாலைநேர நடைப் பயிற்சிக்கு வந்தவர்கள் சிரத்தையாய் உடம்பைத் தூக்கிக் கொண்டு நடக்கின்றனர்.

தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்திக் கொள்கிறார்.

பக்கங்கள் மறுபடியும் புரளத் துவங்குகின்றன.

காத்திருந்த நேரத்தில், அவள் கையில் கொடுப்பதற்காக உட்கார்ந்த இடத்திலிருந்தே, அவன் ஏழெட்டு நாகலிங்கப் பூக்களைப் பொறுக்கி வைத்திருக்கிறான். பார்வை முழுவதும் படகுத்துறையில் கழுகின் கூர்மையோடு பதிந்துக் கிடக்கிறது. படகில் ஏறி மைய மண்டபம் வருவதற்காக அங்கே அவள் காத்திருப்பது தொ¢கிறது. அவனுக்கு உயிர் வருகிறது. கோவில் நிர்வாகம் மீதும் படகுக்காரன் மீதும் அவனுக்குக் கோபமும் வருகிறது. என்ன சட்டதிட்டம். ஆள் இருந்தால் ஏற்றிக்கொண்டு வரவேண்டியது தானே? ஆள்சேர்ந்தால்தான் படகு கிளம்புமோ? உயிர்த்துடிப்பில் தவிக்கிறான்.

“ஏம்ப்பா லேட்?” என்று கேட்பதற்காக, மையமண்டபத்திற்குவரும் ஆட்களை படகு இறக்கிவிடும் படிக்கட்டுகளில் தண்ணீரை அலசிக் கொண்டிருக்கும் கீழ் படியில் எதிர் சேவைக்குத் தயாராக நின்றுகொண்டான். குளத்தின் தெற்குப்பக்க தியாகராஜர் உயர் நிலைப் பள்ளியில் வகுப்புகள் துவங்கிவிட்டன. அந்தப்பகுதியில் மாணவர்களின் நடமாட்டம் அடங்கிவிட்டது. கிழக்கே மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் பள்ளியிலும் அமைதி. முக்தீஸ்வரர் ஆலயத்து பூசா¡¢ வெளியே புறப்பட்டுப்போவது தொ¢கிறது.

குளத்தின் உட்புற கிழக்குப் பக்கத்தில், மூலைக்கு ஒன்றாக இருந்த கற்சிங்கங்களின் வாயிலிருந்து தண்ணீர்க் கொட்டும் சத்தம் ‘தொப..தொப’வென்கிறது. இரண்டு முக்குளிப்பான்கள் ஜோடிபோட்டு நீந்திக் கொண்டிருக்கின்றன. வடக்குப் பக்கக் கரையில் சிலைமான் செல்லும் வெள்ளைப் பேருந்து நகா¢லிருந்து சோம்பலாய் வெளியே செல்லும் மாட்டுவண்டியைக் கடந்து, ஊர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.

தியாகராஜர் கல்லூ¡¢யில் முதல்வகுப்பு முடிந்ததற்கான மின்சார மணி கடூரமாய் ஒலிக்கிறது.

மேலெழும்பிவிட்ட சூ¡¢யக்கதிர்கள் நீரலையில் மின்ன படகு மிதந்துவந்தது. அதுபோல வாழ்க்கையும் கரைசேர வேண்டுமென்று அவன் மனம் பிரார்த்தித்துக் கொள்கிறது. இறங்குவதற்குத் தோதாக, படகுக்காரன் படகை படியோரம் ஒதுக்கி நிறுத்துவதற்கு முன்பே, அவன் கைகளை நீட்டுகிறான்.

இறங்கிவந்தவளின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் ஏதுமில்லை. அவனறிந்த மலர்ந்த முகமும் அது இல்லை. நாகலிங்கப் பூ மரமும் அவளின் வருகையை ஆமோதிப்பதாகத் தலையாட்டி வரவேற்கவில்லை. காற்று வீச மறந்த மரங்களாக அவை அங்கே வீணே நின்றிருந்தன.

மெளனம் விவா¢க்கும் விஷயங்களாக அங்கே அமைதி குவிகிறது. இருவருக்கு மிடையில் மெளனம் உருவாக்கும் தொடர்வெற்றிடத்தை அந்த அமைதி நிரவுகிறது. அதை ஒருவருக்கொருவர் யூகித்து, அதிலிருந்து மீளும் முயற்சிகள் நீர்க்குமிழிகளாய் உடைபடுகின்றன. குமிழிகள் உடைதலில், பாசாங்கற்ற அவர்களின் அமைதி, மேலும் மேலுமாய் ஒருகடல்போலப் பெருகுகிறது. இதுவரை அருகருகே இருந்தநேரத்தில் சுழல் வதாய்த் தோன்றாத பூமி, இப்போது அசுர வேகத்தில் இயங்குவதாகப்படுகிறது.

அவள் கையில் கொடுப்பதற்காக உட்கார்ந்த இடத்திலிருந்தே பொறுக்கிவைத்த நாகலிங்கப் பூக்கள், வாடிக்கிடக்கின்றன. பள்ளிக்கூடத்துக்கு ‘டிமிக்கி’க் கொடுத்து விட்டு மையமண்டபத்தில் பொழுதைக்கழித்த காக்கி – வெள்ளைச் சட்டை மாணவர்கள் இரண்டுபேர், படகின் வருகைக்காக கீழ் படிக்கட்டுக்குப் போகிறார்கள்.

நேரம்கரைந்து, தெப்பக்குளத்துக்குள் நீராக ஓடிக்கலக்கிறது. அவள் போயாக வேண்டும். இருவருக்குமிடையில் நிலவிய அமைதியை முறித்தபடி, ‘சட்’டென்று உடை கிறாள். “நீ எனக்குக் கெடைக்காட்டி செத்துருவேன்ப்பா!”. விரகனூர் காவல்காரன் பெண் குலுங்கிக் குமுறுகிறாள்.

இப்படியெல்லாம் நடக்கும் என்று அவன் எதிர்பார்த்துதான்.

குமுறலினூடே, “என்னப்பா செய்யலாம்?” என்று அவள்தான் கேட்கிறாள்.

ஊரைப் பகைத்து விடலாம் என்று அவனுக்குள் ஏற்கனவே முடிவாகியிருந்தது.

படகுக்காரன் மையமண்டபத்துக்கு வந்து, நேரமாகிவிட்டதை மற்றவர்களிடம் சொன்னதுபோல அவர்களிடமும் சொல்லிவிட்டுப் போகிறான்.
அவள்கேள்விக்கு அவன் பதில்சொல்லாத நிலையில், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் எழுந்து நடக்கின்றனர்.

கரைசேர்ந்து, வடமேற்கு மூலையிலிருக்கும் மண்டபத்தை நோக்கி நடக்கும்போது, வழிமீது விழிவைத்துக் காத்திருந்த அவர்கள், அவளைத் தனியே பி¡¢த்துவிட்டு, அவனை அடித்த அடியில், அவள் மயங்கிப்போகிறாள்.

அவர் கால்களைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறார். சில்லிட்டுக் கிடக்கின்றன.

விளையாடும் குழந்தைகளை ஒருபெண் அதட்டுகிறாள்.

“ப்ளீஸ்ம்மா… இன்னிக்குத்தானே மொதத் தடவையா வந்துருக்கோம். இன்னுங் கொஞ்சநேரம் வெளாடிக்கிறோம்!”. அவளது பதிலை எதிர்பார்க்காமல், அவை மீண்டும் குதியாட்டத்தில் ஈடுபடுகின்றன. மூதாட்டி உட்கார்ந்த இடத்திலிருந்து தெப்பக்குளத்தை விழுங்கிவிடுபவளாக பார்க்கிறாள்.

அவளை சக்கரநாற்காலியில் உட்கார்ந்தபடியே ரசனையுடன் நோக்கிவிட்டு, அவர் மீண்டும் தன் நினைவுப் பக்கங்களில் பயணத்தைத் தொடருகிறார்.

ஆள்நடமாட்டமில்லாத அந்தப்பகுதியில், அடிபட்ட அவன் ரத்தம் கசிந்துக் கிடக்கி றான். நீண்டநேரமாக யாரும் அவனைப் பார்க்கவில்லை. உணர்வு இருந்தாலும், அசையமுடியாமல் கிடக்கும் அவனும் யாரையும் ஈர்க்கவில்லை.

தெப்பக்குளத்தைக் கடந்துபோன யாரோ, எதுவோ கிடக்கிறதே என்று மனிதத்துடன் உற்றுப்பார்க்க, நான்கு நாட்களுக்குப்பின் மருத்துவமனையில் கண் திறந்தான். இடுப்பெலும்பு முறிக்கப்பட்டு, தொடை எலும்புகள் நொறுக்கப்பட்டு, ஒன்றுக்கும் ஆகாத மனிதனாக அவன் ஆகிப் போயிருந்தான். மற்ற நோயாளிகளைப் பார்க்கவரும் உறவினர்களுக்கும் அவன் பொதுக் காட்சியாகிப் போனான்.

‘தெப்பக்குளத்துக்கிட்ட அடிபட்டவன்’ என்றதும் வந்தவர்கள், அவன் காதுபடவே வேறுவேறு கதைகளைச் சொல்லிவிட்டுப் போகின்றவர்களாக இருக்கிறார்கள். குடும்பத் தகராறு காரணமாக, தெப்பக்குளத்துத் தண்ணீ¡¢ல் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட பெண், கடன் தொல்லையால் அவதிப்பட்டு மருந்துகுடித்து மையமண்டபத் தில் மாண்டுபோன நெசவுத் தொழிலாளி, காதல் தோல்வியால் மிதந்த ஜோடி என்று, பலகதைகள் அங்கே கட்டவிழ்க்கப்பட்டன.

அடிபட்டதைப் பார்த்த மாத்திரத்திலேயே, பேதலித்துப் போனவளாக அவள் ஆகியிருந் தாள். நன்றாக நடமாடிக் கொண்டிருக்கும்போதே, “அடிக்காதீங்க, மாமாவை அடிக்கா தீங்க. மாமா ஓடிப் போயிருங்க!” என்று திடீரென்று பா¢தவிப்பளாக இருந்தாள்,அவள்.

‘பொண்ணு எப்டிருந்தாலும் பரவால்ல… காசு இருந்தால் போதும்’ என்று வந்தவர்கள், “நீ எங்க மாமா இல்ல. அவரைக் கூட்டியாறீயா?” என்று அவள் பிசகலாய்க் கெஞ்சிக் கேட்கும்போது, ஓட்டம் எடுப்பவர்களாக ஆகிப்போனார்கள்.

ஆண்டுகள் போயும் அவள் அவளாகவில்லை.

ஒருநாள் பகல் முடியும்போது, அவள் காணாமல் போயிருந்தாள். ஊரெங்கும் தேடி விட்டு வீடுதிரும்பியபோது, யாரோ சொன்னார்கள். “அந்தப்பய வீட்டுப்பக்கம் போச்சே!” என்று.

“அங்கனயா?” ஊர்க்காவல்காரனும் அவனது ஆட்களும் திகைத்துப் போகிறார்கள். அங்காளிப் பங்காளிகள் ஒருவர் முகத்தையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். அவர் களுக்குள் மாறிமாறிப் பேசிக்கொள்கிறார்கள். அவர்களின் பேச்சு ஓய்ந்தபோது, கீழ்வானத்தில் செங்கருக்கல் பூக்கத் துவங்கியிருந்தது.

விடிந்ததும், அவளைத் தேடிவருவதுபோல, அடித்தவர்களே அவனைத் தேடி வந்தார் கள்.

தெப்பக்குளத்தைச் சுற்றியிருந்தக் கூட்டம் கரைந்து போயிருந்தது. வண்டிக்கடைகளில் மின்கல விளக்குகள் வெப்பத்துடன் எ¡¢ந்து கொண்டிருந்தன. குழந்தைகளும், பெண்களும், மூதாட்டியும் இளைஞனிடம் திரும்புவது குறித்துப் பேசுபவர்களாக இருந்தார்கள்.

அவர் மையமண்டபத்தின் கம்பீரத்தை அலட்சியப் புன்னகையுடன் கூர்ந்தார். புன்னகையில், நான்கு பக்கத்து மாடக் கூண்டுகளும், நாகலிங்க பூ மரங்களும் கோபுரச் சிலைகளும் ‘மடமட’வென்று சா¢ந்து, சிதைந்து உருக்குலைந்து மண்ணுக்குள் புதைவதுபோல அவருக்குள் பேரோசைக் கேட்கிறது. ஓசையை ஆழ ரசித்தார், அவர்.

“அப்பா, கெளம்பலாமா?” அவரது தோளை, அந்த இளைஞன் தொட்டான்.

குழந்தைகள் ஓடிவந்து அவரைச் சூழ்ந்துகொண்டு,” தாத்தா, தெப்பக்குளம் சூப்பர் தாத்தா!” என்று கொண்டாடுகிறார்கள்.

அவரருகே வந்துவிட்ட பெண்களில் மூதாட்டி, “எப்பவோ பாத்தது மாதி¡¢யே இருக்கு! நாம இதுக்கு முன்னாடி இங்கே வந்துருக்கோமா, மாமா?” என்று அவா¢டம் கேட்கிறாள்.

“ஞாபகம் இல்லியா?” என்று கேட்கும் அவர் முகத்தில், குறும்புக் கொப்பளிக்கிறது.

குழந்தைகள் ஓடிச்சென்று கா¡¢ல் ஏறிக்கொள்கின்றன. அடுத்து பெண்கள். அப்புறமாய் மூதாட்டி.

புறப்படும் முன் தெப்பக்குளத்தைப் பார்க்கும் அவர், உலகிலேயே சந்தோஷமான மனிதனாகத் தன்னை உணர்வதை, அங்கு வீசிய இளந்தென்றல் எடுத்துச்செல்கிறது.

அவரை லாவகமாகத் தூக்கி உள்ளே வைத்துவிட்டு, அந்த இளைஞன் காரை உசுப்புகிறான்.

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா