அடையாளம்

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

உஷாதீபன்,


அந்த நாற்காலியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரமணன்.
அதை அந்த இடத்தில் போட்டதும்தான் மனதிற்கு ஒரு திருப்தி வந்தது.
இத்தனை நாள் இது தொ¢யாமல் போயிற்றே இந்த மர மண்டைக்கு என்று இருந்தது.
இரண்டு கைப்பிடியிலும் கைகளைப் படுக்க வைத்த மேனிக்கு அமர்ந்து அப்பா பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் காட்சி.
சில வருடங்களுக்கு முன் குடியிருந்த பழைய வாடகை வீட்டில் அப்பா அங்குதான், அதில்தான் அமர்ந்திருப்பார்.

வெளி வேலைகளெல்லாம் முடித்து விட்டு வந்தால் வந்ததும் வராததுமாக அப்பா அதில்தான் அமருவார்.
சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டபிறகுதான் மற்ற வேலைகள்.
“இதென்ன வாயில் காப்போன் மாதி¡¢,,,”வழில நாற்காலியைப் போட்டுண்டு…ஓரமா உட்காரக் கூடாதா? ” “நான் இப்டி உட்கார்ந்தா அது உனக்குக் கஷ்டமாப் போயிடுதா…வேணும்னா இப்டிப் போட்டுக்கிறேன்.”..சட்டென்று எழ முனைவார்.
“ஏம்மா இப்டிச் சொல்றே…? எங்களுக்கு ஒண்ணும் இடைஞ்சல் இல்லே…அப்பாபாட்டுக்கு உட்காh;e;Jl;Lg; Nபாகட்டும்…நீங்க உட்காருங்கப்பா…”மூத்த தங்கை கோமளி எழுந்த அப்பாவை அமர்த்துவாள்.
அப்பா மீது எல்லோருக்கும் கா¢சனம்தான் வீட்டில்.
அம்மாவைத்தவிர.
அது வேறே மாதி¡¢ உ¡¢மை.
உ¡¢மையுடன் கூடிய உ¡¢மை.
அதை யாரும் விமர்சிப்பதற்கில்லை.
“பொண்கள் சிபா¡¢சு அதிகமாயிடுத்தாக்கும்…சி¡¢ச்சிf;fpNறள்…” “போச்சு, நா சி¡¢க்கிறதுகூட உனக்குப் பிடிக்காமப் போயிடுத்தாக்கும்…வேணும்னா அதையும் குறைச்சுக்கிறேன்…” “சி¡¢ங்கோளேன்…நன்னாச் சி¡¢ங்கோ…யார் வேண்டாம்னது…அது ஒண்ணுதானே ஆண்டவன் மனுஷாளுக்குக் கொடுத்திருக்கிற பொ¢ய சொத்து…காசா பணமா…நான் தடுக்கிறதுக்கு…” அப்பா அதற்கும் சி¡¢த்துக் கொள்வார்.
அவர்கள் இருவருக்குமிடையிலான சம்பாஷனை ஆதர்ச தம்பதிகளுக்கான தனித்துவம்.
அதை யாரும் அணை போட்டுத் தடுத்துவிட முடியாது.
பல சமயங்களில் இழுத்து வாயுவைப் பி¡¢ப்பா ர் அப்பா.
விட்டுவிட்டு ” அப்ப்ப்ப்பா…….என்ன சுகம்…என்ன சுகம்…” என்பார்.
வீடே எந்தச் சலனமும் இல்லாமல்தான் இருக்கும்.
ஆனால் அம்மா மட்டும்தான் கத்துவாள்.
“குழந்தேள்லாம் பொ¢சாயிட்டா…இன்னும் இதைச் செய்வேளா…கொஞ்சம் அடக்கி வாசிக்கப்படாதோ….” …………2………………….
– 2 – “அடக்கி வாசிக்க இதென்ன •பிடிலா…? எனக்கு உஷ்ண வாயுடீ….அதை அப்டித்தான் பி¡¢ச்சு வெளியேத்தணுமாக்கும்…நீ என்ன? இதுக்குக்கூடத் தடை போடறே…? எல்லாம் நா பெத்த குழந்தேள்தானே…பேசாம இரு…”.-
அம்மா அத்தோடு விட்டுவிடுவாள்.
அது அப்பாவுக்கு அந்த வீட்டில் கிடைத்த சுதந்திரம்.
இருவருக்கும் இடையிலான இப்படிப்பட்ட பல சம்பாஷனைகள் ரொம்ப ரொம்ப ஸ்வாரஸ்யமானவை.
அது எல்லாரும் ஒன்றாக இருந்த காலம்.
அம்மாவும் அப்பாவும் தங்கள் வாரிசுகளை, அவர்களின் இருப்பை, அந்த இயக்கத்தை அனுதினமும் கண்ணாரக் கண்டு களித்த காலம்.
பத்துப் பதினைந்து வருடங்களுக்குள்தான் எத்தனை மாற்றங்கள்? எதிரே தரையில் அமர்ந்து தினசரி படித்துக் கொண்டிருந்த ரமணன் அந்த நாற்காலியையே பார்த்தான்.
அப்பா இருந்திருந்தால் இந்நேரம் அதில்தான் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்.
யதாஸ்தானம் கரிஷ்யே….என்று சொல்லிக் கொண்டுதான் அமர்வார் அங்கே.
பேப்பர் வாசனை மூக்கில் ஏற ஏறச் செய்தி படிக்க வேண்டும் அப்பாவுக்கு.
உள்ளுர் நடப்பிலிருந்து, உலக நடப்புவரை அத்துப்படி.
“நம்பளச் சுத்தி என்ன நடக்கிறதுங்கிறது தெரியாத மனுஷன் என்ன மனுஷன்? என்பார்.
“மனுஷாளுக்கு நடுவே இவ்வளவு துவேஷம் எப்டி வளர்ந்ததுன்னே தெரில…வெறும் சுயநலம்தான் நிக்கிறது.
எங்க பார்த்தாலும் பணம்,பணம், பணம்…அதுதான் பிரதானமா இருக்கு.
தேசம் போற போக்கைப் பார்க்கிறபோது மனசு பதர்றது.
இந்த நாட்டு மேலே உண்மையான பற்று வச்சிருக்கிறவன் நிச்சயம் கவலைப் படாம இருக்க முடியாது…” – முகத்தில் தாங்கவொண்ணாத சோகத்தோடு சொல்வார் அப்பா.
உண்மையான தேசப் பற்றும், இறையாண்மையும் வெளிப்படும் அவர் வாக்கினில்.
எதிரே சந்தனம், விப+தி மணக்க மணக்க அப்பா அமர்ந்திருப்பதுபோல் தோன்றியது இவனுக்கு.
அப்படிச் சாவகாசமாய் அப்பா அமர்ந்திருந்தது கொஞ்ச நாள்தான்.
பாவி மனுஷன்…அனுபவிக்கக் கொடுத்து வைக்காதவர்…வாழ்க்கை ப+ராவும் உழைக்கத்தான் யோகம் அவருக்கு.
அவரை அப்படி அமர்த்தி வைத்துப் பார்த்து மகிழ்வது என்பதே பெரும் பாடாய்ப் போய்விட்டது.
கேட்டரிங் பார்த்துக் கொண்டிருந்தவர்தான் அப்பா.
அவர் அந்த இடத்தை அடைவதற்கு முன்பான கடுமையான அனுபவங்களை, சோகங்களை இங்கே பகிர்ந்து கொண்டுதான் ஆக வேண்டும்.
ஓழுங்காகப் படிக்க வைத்திருந்தால் நன்கு படித்து நல்ல உத்தியோகத்தை எட்டக்கூடிய திறமை படைத்தவர்தான்.
இதை மறுப்பதற்கில்லை.
இந்த எட்டாம் கிளாஸ் படித்திருந்த நாட்களிலும் அப்பா உறிந்து பத்திரிகையை வரி விடாமல் படிக்கும் திறன் படைத்தவராய் இருந்தார்.
அந்தக் காலத்துப் படிப்பு எவ்வளவு மகிமையுடையது என்பது இதன் மூலம் நமக்குப் புரியும்.
உறிந்துவில் வரும் க்ராஸ் வேர்டு பஸில்ஸ் போட்டிக்கு எழுதிப் பரிசு வாங்கியிருக்கிறார் அப்பா.
படிப்பின் மீது அத்தனை ஆர்வம்.
படிக்க வைக்கவில்லையே என்பதில் அத்தனை ஆதங்கம்.
எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டு, வேலைக்கு அனுப்பியாயிற்று.
அந்தக் காலத்தில் ஜவுளிக்கடை நடந்து கொண்டிருந்தது.
எப்படி இந்த வியாபாரத்திற்குள் புகுந்தார்;கள் என்பது இன்றுவரை புரியாத கதை.
அப்பா அங்கே துணி கிழிக்கப் போய்விட்டார்.
அப்படியே வேலை பழகட்டும், பையன் பெரிய வியாபாரியாகட்டும் என்பது தாத்தாவின் கனவாய் இருந்திருக்க வேண்டும்.
……..3……………….

– 3- சில வருடங்கள் அப்படி ஓடியிருக்கிறது.
பிறகுதான் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.
படிப்படியாக ஜவுளி வியாபாரமெல்லாம் படுத்துப் போக, Nஉறாட்டல் தொழில்தான் கை கொடுத்திருக்கிறது கடைசியில்.
அதிலும் எங்கும் போய் அடிமைப்பட்டு வேலை செய்ய மனம் ஒப்பாமல் வியாபார புத்தி ஒட்டிக் கொண்டிருக்கிறது.
அப்பா தமிழ்நாட்டில் கடை வைக்காத இடமில்லை.
ஊர் ஊராக Nஉறாட்டல் நடத்தி ஓய்ந்துதான் போனார்;.
கடை திறந்தேன், கொள்வார் இல்லை என்பதைப் போல.
திறந்த கொஞ்ச நாளைக்கு ஓNஉறா என்றுதான் நடக்கும்.
வியாபாரம் பிய்த்துக் கொண்டுதான் போகும்.
சரி, ஒரு வழியாகக் கால் ஊன்றியாயிற்று என்று நினைக்கும்போது மாற்றம் ஏற்பட்டுவிடும்.
அது எந்தப் பைசாசம் வேலை செய்யுமோ தெரியாது, கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ஞ்சு மாய்ஞ்சு தேவட்டையாய்ப் போய்விடும்.
“சாமி, என்னாச்சு ஒரு வாரமாக் கடையே திறக்கல…? என்று விசாரித்துக் கொண்டு வந்து நிற்பார்கள் சிலர்.
அவர்களெல்லாம் வழக்கமாய் அப்பா கடையில் போஜனம் கொள்பவர்கள்.
எத்தனை நாளைக்கு அந்தச் சிலருக்காக இழுத்துச் செல்ல முடியும்? “வரவுக்கும் செலவுக்கும் இப்டி ஒதைச்சுதுன்னா எப்படி நீட்டிண்டே போறது…” சில மனக் கணக்குகள் உண்டு அப்பாவிடம்.
அவை பிசகும்போது சட்டென்று புரிந்து நிதானப் பட்டு விடுவார்.
அதுதான் அவரைக் காப்பாற்றியிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.
கொஞ்ச நாள் பேசாமல் இருப்பார்.
பிறகு எங்கேயாவது கடனை உடனை வாங்கிக் கொண்டு திரும்பவும் கடை வைக்கக் கிளம்பி விடுவார்.
மூடின கடையை முழுசாகத் திறக்க முழு முதல் வேண்டுமே? அம்மாவும் பேசாமல்தான் இருப்பாள்.
அவளுக்கும் எங்கேயாவது ஒரு இடம் நிலைத்து விடாதா என்ற சபலம் இருந்தது.
அப்பாவின் கடன்களுக்கு அவளும் உடன்பட்டாள்.
அ+னால் கடைசியில் மிஞ்;சியது அதுதான்.
குறைந்தது முப்பது ஆண்டு காலம் இந்தப் போராட்டம் நீடித்திருக்கும் என்று சொல்லலாம்.
கடுமையான அனுபவத்திற்குப் பிறகுதான் அப்பா ஃபீல்டையே மாற்றினார்.
அதுதான் கேட்டரிங்.
சமையல் கலை.
நள பாகம்!! முதலில் சாதாரணமாகத்தான் ஆரம்பித்தார்.
அவர் கடை வைத்த காலத்தில் அவரோடு கிடந்து லோல் பட்டவர்கள் ஒருவரைக் கூட மறக்க வில்லை அப்பா.
எல்லோரையும் இழுத்துக் கொண்டுதான் அலைந்தார்.
அந்தந்த வீட்டு சின்னச் சின்ன விசேடங்களில் அப்பாவின் கைப்பாகத்தைப் பார்த்துவிட்டு, அவர்கள் சொல்லிச் சொல்லி அப்படியே அழைக்க ஆரம்பித்தார்கள்.
பந்தல் போடுவோர், நாதஸ்வரக்காரர், மைக் செட்காரர், மின் விளக்கு அலங்கரிப்போர், என எல்லோருமே…நம்ப சாம்பசிவ ஐயரைக் கூப்பிட வேண்டிதானே…எல்லாத்தையும் அவர் பார்த்துப்பார்…
என்று ஒட்டு மொத்தமாகக் கையைக் காண்பிக்க ஆரம்பித்தார்கள்.
அப்படியே வளர்ந்ததுதான்.
நாளடைவில் ஒரு கோஷ்டியே பெருகிவிட்டது.
கல்யாணம், சீமந்தம், வளைகாப்பு, காது குத்து, ப+ப்புனித நீராட்டு விழா, புது மனைப் புகுவிழா என்று அத்தனைக்கும்தான் போய்வந்தார் அப்பா.
ஆஃபர் கட்டு மீறிப் போக ஆரம்பிக்க, தரம் குறைந்து விடக் கூடாதே என்று பயப்பட ஆரம்பித்தார்.
தன் இரு தம்பிகளைத் தலைமையாய் வைத்து வௌ;வேறு இடங்களுக்கு என்று அனுப்பினார்.
மெனு அப்பாதான்.
அதில் மட்டும் மாற்றமில்லை.
சாஸ்த்ரோத்தமாய் இருக்க வேண்டும் என்றே பலரும் விருப்பம் தெரிவிக்க, அதை பால்ய காலங்களில் நன்றாகக் கற்றுணர்ந்த அப்பாவே மொத்த விசேடங்களுக்குமான மெனுவை அவரவர் வசதி வாய்ப்புக்கேற்றவாறு பட்டியலிட்டார்.
…….4…………….
– 4- சாதி சம்ப்ரதாயங்கள் என்று அத்தனையும் அத்துபடி அப்பாவுக்கு.
இம்மி பிசகாமல் செய்து முடித்து விடுவார்.
எல்லாவற்றுக்கும் அவரது தன்னடக்கமும், பணிவும், பொறுப்புணர்ச்சியும், சிக்கனமும், நேர்மையும், உண்மையுமே அவருக்குத் துணை நின்றன எனலாம்.
மாப்பிள்ளை அழைப்பு, ரிசப்ஷன், முகூர்த்தச் சாப்பாடு, டின்னர், மறுநாள் கட்டுச் சாதக் கூடை என்று ஒவ்வொன்றுக்குமாக தனித் தனிக் குழுக்களை நியமித்து, மாற்றி மாற்றி இயங்கவிட்டு, ஜமாய்த்தார் அப்பா.
வாயிலில் கோலம் போடுவதிலிருந்து, சாந்தி முகூர்த்தம் வரை அலங்காரங்கள் எல்லாமும் அப்பாதான்.
அவரின் ஆலோசனைகள் என்றுமே எவராலும் மறுக்கப்பட்டதில்லை.
“நீங்க சொன்னாச் சரிண்ணா…அதுக்கேது மறு பேச்சு…” “சிவகாமி கேட்டரிங்” என்ற பேனரை பத்துக்கு எட்டு என்ற அளவில் பெரியதாகத் தொங்க விட்ட ஒரு நாளில் அப்பா மனதில் ஏற்பட்ட திருப்திக்கு அளவேயில்லை.
அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பதாக அப்பா யாரிடமும் சொல்லவேயில்லை.
ஓல்டு மாடல் பேரு என்று யாரேனும் சொல்லி விடுவார்களோ என்ற பயமோ என்னவோ? அம்மா பெயரை வைத்தே ஆக வேண்டும் என்பதில் அத்தனை உறுதியிருந்தது அவரி;டம்.
அது அப்பாவின் அன்பின் அடையாளம்.
உள்ளுர் திருமணங்கள் பிறகு வெளிய+ர் என்று திரிந்து கொண்டிருந்தவருக்கு அமைச்சரின் அழைப்பு வரும் என்று நினகை;கவேயில்லை.
அசந்து போனார் அப்பா.
“சாமி, உங்களத்தான் எல்லாரும் சொல்றாக…தலைவருக்குக் ;கூடத் தெரிஞ்சிருக்கும் போலிருக்கு.
சென்னைல பொதுக் குழு நடக்கப் போவுது சாமி…அதுக்கு எங்கூட வர்றீக நீங்க…தலைவர்ட்ட அறிமுகப்படுத்தி விடுறேன்…அப்டியே பிக்அப் பண்ணிக்குங்க…ரெண்டு நாளும் முழு சைவம்தான்னுட்டாரு தலைவரே…பெறவு நான் என்னத்தப் பேச…ஜமாய்ச்சுடணும் சாமியோவ்…நா உங்களத்தான் நம்பியிருக்கேன்.
ஏமாத்திர மாட்டீகளே…?” “என்ன இப்டிக் கேட்கறேள்…நீங்க சொல்லி நா மறுப்பேனா…என் உயிரப் பணயம் வச்சாவது கொண்டாடிடமாட்டேனா…” அந்த நிகழ்வுக்குப் பிறகுதான் அப்பா தமிழ்நாடு ப+ராவும் பிரபலமானார்.
கவர்னர் மாளிகை வரை போய் வந்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
நாலு குழுவாக இருந்தது இப்போது ஆறாகியிருந்தது.
இரண்டிரண்டாகப் பிரித்து, தான் இரண்டிற்குத் தலைமை தாங்கினார்.
உள்ளுர் அக்ரஉறாரத்தில் ஆட்கள் இல்லை.
எல்லாம் வெளி மாநிலம், வெளி நாடு என்று இடம் பெயர்ந்திருந்தன.
பக்கத்து ஊர்களில் அலசலானார் அப்பா.
அங்கங்கே அவரது போக்குக்கு ஒத்து வரும் ஆட்களைத் தேர்வு செய்தார்.
எதிர்பாராத சம்பளத்தைத் தந்து இழுத்து வந்தார்.
“சுத்தம் சோறு போடும்.
ஒழுக்கம் உயர்வைத் தரும்.
உண்மை நிமிர வைக்கும்” சிவகாமி கேட்டரிங்கின் தாரக மந்திரம் இதுதான்.
உச்சாணிக் கொம்பில் இருந்த ஒரு கால கட்டத்தில்தான் அவரை அந்தப் பக்கவாதம் தாக்கியது.
………….5…………….
– 5- அப்பா பிரமித்தார்.
எப்படித் தேர் இழுக்கப் போகிறோம் என்று பயந்தார்.
அண்ணா கை கொடுத்தான் அப்போது.
“ நான் போறேம்ப்பா…நீங்க கவலைப் படாதீங்கோ…” கேட்டரிங் மானேஜ்மென்ட் படித்திருந்தான் அவன்.
நிறைய நட்சத்திர ஓட்டல்களுக்குப் பயிற்சிக்குப் போய்வந்த அனுபவமிருந்தது அவனிடம்.
தன் உழைப்பை, தன் முனைப்பை, இன்னொருவனுக்குத் தத்தம் செய்வதற்குப் பதிலாக, நம் உயர்வுக்கே பயன்படுத்தினால் என்ன என்ற ஊக்கமிருந்தது அவனிடம்.
சம்மதித்தார் அப்பா.
தமிழ்நாடு முழுக்க சிவகாமி கேட்டரிங் பவனி வந்து கொண்டிருந்த போதுதான் அப்பாவின் தவிர்க்க முடியாத மரணம் சம்பவித்தது.
எழுபத்திரெண்டு வயசு ஒரு வயசில்லைதான்.
ரத்த அழுத்தம் அதிகமாகி உடம்பில் சர்க்கரையும் சேர்ந்து கொண்டது கவனிக்கப்படாமலேயே காலம் கடந்திருந்தது.
அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த ஒரு இரவில் அப்படியே தன் கதையை முடித்துக் கொண்டார் அப்பா.
உள்ளுர் அமைச்சரே நேரடியாக வந்து இரங்கல் தெரிவித்ததும், கண்ணீர் பெருக நின்றதும் மறக்க முடியாத காட்சிகள்.
அப்பா போன பின்னால் அத்தனை மதிப்பில்லாமல் போனது தம்பிகளுக்கு.
அப்பொழுதுதான் புரிந்தது அவர்களுக்கும்.
அவரை வைத்துத்தான் தாங்கள் என்று.
சுவரை வைத்துத்தான் சித்திரம்.
அவர்தான் தாங்கும் சுவர்.
ஆனாலும் தொழில் சுத்தம் தர வேண்டாம் என்று யார் தடுத்தது? அடிப்படையான வீரியமிக்க விஷயங்களுக்கு என்று மாற்றம் வந்தது? தரம் நிரந்தரம்.
அப்பா தவறாமல் சொல்லுவார் இதை.
அதைத் தம்பிகள் பின்பற்றியிருக்க வேண்டாமா? இந்தத் தொழிலில் உள்ள எடுபிடித் தன்மைகள் அண்ணாவுக்கும் மசியாமல் போயிற்று.
மசியாமல் என்று சொல்வதுகூடத் தவறுதான்.
பிடிக்காமல் போயிற்று.
அதுதான் சரி.
அவன் தன் திறமை பலமாய்ப் போற்றப்படும்,முன்னிறுத்தப்படும் இடம் தேடிப் போய்க் கொண்டான்.
ஒரு வேளை அப்பா இருந்திருந்தால் இது நடந்திருக்காதோ என்னவோ? அல்லது அவரே கூட ‘உனக்கு இது சரிப்படாதுடா…’ என்று சொல்லியிருக்கலாம்.
எல்லாருக்கும் எல்லாமுமா ஒத்து வருகிறது.
அத்தனை வருடங்கள் அப்பாவோடு சேர்ந்திருந்து கப்பல் ஓட்டிய தம்பிமார்களுக்கே அது முடியாமல் போனதே! அந்த மூத்த தலைமுறையே நழுவிக் கொண்டதே…இவன் எம்மாத்திரம்? அப்பாவின் தம்பிகள் இருவரும் இன்று வெளிய+ரில்.
ஊரைவிட்டு அவர்களே விலகிக் கொண்டார்கள்.
ஊர் போகச் சொல்லவில்லை.
தனி மனிதர்களின் குணக்கேடும், மெத்தனமும், வக்கிரங்களும் எல்லாமும் சேர்ந்து ஒரு பெரிய குழுவையே பாதித்து விடுகிறதல்லவா? தான் நிற்க வேண்டிய இடத்தில் நின்று, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி, செய்ய வேண்டியதைச் செய்தால் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் என்றும் குறைவில்லை என்பதை எத்தனை துல்லியமாக உணர்ந்து வைத்திருந்தார் அப்பா.
ஒரு பெரும் படையையே கட்டிக் காக்கும் திறன் அவருக்கு மட்டுமே வாய்த்த பெரும் பேறு.
எல்லாமும் பழைய நினைவுகளாய்ப் போயின இன்று.
ஆனாலும் அவை அழியாத, அழிக்க முடியாத ஆதர்ச நினைவுகள்.
“அப்பாவோட திவசம் நெருங்கிட்டிருக்கு…ஞாபகமிருக்கில்லியா…” கேட்டுக் கொண்டே வந்து நிற்கிறாள் தேவகி.
………..6…………………
– 6 – “என்ன சொன்னே?” “என்ன நீங்க? எந்த லோகத்துல இருக்கேள்? ஐப்பசி மாசம் வளர்பிறைல அப்பாவோட திதி வருதுன்னு சொன்னேன்…” “சரி…” – அவனது ஒற்றை வார்த்தை பதில் கண்டு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் அவனையே பார்த்திருந்துவிட்டு தன் வேலையைக் கவனிக்கப் போனாள் அவள்.
ரமணன் அந்த நாற்காலியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
வலது புறம் பட்டையாய் பலகை பொருத்திய அதில்தான் தன் டைரியை வைத்து எழுதிக் கொண்டிருப்பார் அப்பா.
சுற்றிவரத் தம்பிகளும் முதன்மைப் பணியாளர்களும் அமர்ந்து அவர் சொல்லச் சொல்லத் தேவையான பணிகளைக் கவனமாய்க் குறித்துக் கொள்வார்கள்.
டைரியில் உள்ள குறிப்புகளும் அவர்கள் எழுதியதும் சரியாய் இருக்கிறதா என்று அவர்களை ஒருதரம் படிக்கச் சொல்லிச் சரி பார்ப்பார் அப்பா.
இத அதுல சேர்த்துக்கோ…அதை எடுத்துரு…நன்னா தெரியறமாதிரி அண்டர் லைன் பண்ணிக்கோ…இல்லன்னா மறந்துருவ…எதுலயுமே ப்ரீ ப்ளானிங்தான் ரொம்ப முக்கியம்.
சரியாத் திட்டமிட்டுட்டா கரெக்டா நிறைவேத்திடலாம்…ரைட்…கிளம்புங்கோ எல்லாரும்…
அப்பாவின் கம்பீரமான குரல் இவன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த நாற்காலி கூட இன்னும் அவர் நினைவுகளிலிருந்து மீளவில்லையோ என்று தோன்றியது.
அதில் உட்கார்ந்தால் அப்பாவின் வாசனை இன்றும் அதில் மிளிரத்தான் செய்கிறது.
அது அந்த மணத்தைத் தனக்குள் உள் வாங்கிக்கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறதோ? எத்தனையோ இடங்களில் எவ்வளவோ தியாகிகளின் நினைவுகளை அவர்கள் பயன்படுத்திய பொருட்கள்தானே இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
அவர்கள் செய்த தியாகத்தின் அடையாளமாகத்தானே அந்தச் சின்னங்கள் விளங்குகின்றன.
உண்மைக்கும், உழைப்புக்கும அடையாளமான அந்த அமர்வுச் சின்னம் அந்த வருட நினைவு நாளன்று முதல், ப+ஜையறையில் போய் கம்பீரமாய் வீற்று தன் ஆளுமையைப் பிரகடனப் படுத்திக் கொண்டது!!
ushaadeepan@gmail.com

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்

அடையாளம்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

தமிழ்மணவாளன்


————————
உங்களில் பலபேரை எனக்குத் தெரியும்
எத்தனையோ சந்தர்ப்பங்களில்
சந்தித்திருக்கிறோம்.
அறிமுகங்கள் நிகழ்ந்திருக்கின்றன
ஒன்றாகத் தேனீர் அருந்தியிருக்கிறோம்
பேசியிருக்கிறோம்
சில சமயங்களில் முகவரிகளைக் கூட
பரிமாறிக்கொண்டிருக்கிறோம்
உங்களின் அடையாளம் சிலவற்றை
நினைவில் வைத்திருக்கிறேன்
ஆயினும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
யாரேனும் அறிமுகப்படுத்த
அப்போது தான் முதல் சந்திப்பாய்
‘அப்படியா ? ‘ வென
கை கொடுக்கிறீர்கள்.
அதையொரு கெளரவமாய் நினைக்கும்
உங்களுக்கு
ஒன்று புரியவில்லை நீங்களும்கூட
புதிதாய் அறிமுகமாகிறீர்கள் தேவையின்றி.
அப்போது
உங்களின் அடையாளம்
மெல்லக் கரைகிறது என்னுள்.
—-
tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்