வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

எஸ். அர்ஷியா


அப்பாவுக்கும் எனக்குமிடையில் பாசத்தைத்தாண்டி நட்பு துளிர்விட்டது, எனது எட்டாவது வயதில்தான்! அப்போது அவர், தனது நாற்பதின் துவக்கத்தில் இருந்தார். அரசு வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு, சொந்தமாகத் தொழில் துவங்கும் முயற்சி யில், ஓடியபடி இருந்தார். கொஞ்சம் இறுக்கமான தருணம், அது. என்றாலும், சா¢யாக எட்டரை மணிக்கு இரவு உணவுக்காக எங்கிருந்தாலும் வீட்டுக்கு வந்துவிடுவார். அதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார். அப்பா, அம்மா, செல்வி அக்கா, சுந்தர் அண்ணா, நான் ஒன்றாகத்தான் இரவு உணவை சாப்பிடுவோம். அந்த ஒருமணி நேரம், எங்களுக் கான நேரம். யார் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.

அப்பாவுக்கு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் நிறைய இருந்தது. இலக்கியவாதிகளு டனானத் தொடர்பை அவர் விரும்பி வைத்திருந்தார். அவர்களும் தங்களுடைய படைப் புகளை, அச்சுக்குத் தரும்முன்பே அப்பாவுக்கு அனுப்பி வைத்து, கருத்து, மதிப்பீடு, திருத்தம் எல்லாம் கேட்பார்கள். அதையெல்லாம் சிரமம் பாராமல் செய்து தருவார். தனது புத்தக அனுபவங்களை, எங்களுடனும் பகிர்ந்து கொள்வார். சுவாரஸ்யமாக இருக்கும். அம்மாவுக்கு, அப்பா மீது கொஞ்சம் சள்ளை இருந்தது. ஒரே ஒருமுறை மட்டும், எங்கள் முன்பாக ‘நாட் சூஸன் எ குட் லைப்’ என்று முணங்கியிருக்கிறார்.

அன்று பங்குச் சந்தைக் குறித்தச் செய்தி, தொலைக் காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. விவாதமும் அதன் மீது தான் இருந்தது. செல்வி அக்காவும், சுந்தர் அண்ணாவும் ‘காளையும்… கரடியுமாக…’ பேசிக் கொண்டார்கள். அவர்களின் பேச்சில் ஒரு கட்டுத் திட்டம் இருந்தது. அவரவர் போக்கே சா¢ என்பதுபோல், சூடாகிக் கொண்டார்கள். மீதி மூன்று பேருமே, அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தோம். உணவு உள்ளேயும் போய்க் கொண்டிருந்தது. பேச்சும் கூடிக் கொண்டிருந்தது. நான் சொன் னேன். “இதுல ¡¢ஜிட்டா இருந்தா, நஷ்டம்தானே! நேரத்துக்கு ஏத்தமாதி¡¢ நடந்துக் குறது தானே புத்திசாலித்தனம்?” என்று. அத்துடன் அந்தப் பேச்சு, நின்று போனது.

அன்றிலிருந்து சா¢யாக ஒருவாரம் போயிருக்கும். அப்பா, அன்று கொஞ்சம் சீக்கிரமே வந்து விட்டார். இரவு உணவை அம்மா தயா¡¢க்கத் தொடங்கு முன், “இன்னிக்கு நான் செய்றேன்” என்று, கிச்சனுக்குள் தன்னைத் திணித்துக் கொண்டார். அப்பாவுக்கு நன்றாக சமையல் வரும் என்று அத்தை சொல்லக் கேட்டிருக்கிறேன். “ஆனா ஆக்கித் தான் தரமாட்டான்!” என்று சொன்னதையும் கேட்டிருக்கிறேன். இன்று அவராகவே கிச்சனுக்குள் போனது, எங்களுக்கெல்லாம் ஆச்சா¢யமாக இருந்தது. ஏதோ ஸ்பெஷல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு காத்திருந்தோம்.

எல்லாவற்றையும் தயா¡¢த்துக்கொண்டு சாப்பாட்டு மேஜைக்கு வந்தவர், எங்கள் எல்லோ ரையும் எழச் சொன்னார். “போன வாரம் நீங்க ரெண்டுபேரும் பங்குச் சந்தைய பத்தி சண்டை போட்டப்ப, “‘இதுல ¡¢ஜிட்டா இருந்தா, நஷ்டம்தானே! நேரத்துக்கு ஏத்த மாதி¡¢ நடந்துக்குறதுதானே புத்திசாலித்தனம்?’ன்னு சொன்னது சா¢யாப்போச்சு. நீங்க பேசிக்கிட்ட அந்த நிறுவனம், இன்னிக்கு திவால் நோட்டீஸ் குடுத்துருச்சு. புத்திசாலித் தனத்தோட நம்மைச் சுத்தி நடக்குறத கவனிச்சுப் பேசுன அர்ஷ¥க்கு இன்னிக்கி ட்¡£ட்!” என்றார். அவர் முதலில் கைதட்ட, மற்ற எல்லோரும் தொடர்ந்து தட்டினோம்.

இந்த அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக நான். அப்பா, எங்கள் மூன்று பேர் மீதும் பாசமானவர். வேறுபாடு நாங்கள் கண்டதில்லை. ஆனால் இந்தச் சம்பவம் எங்கள் இருவருக்கிடையில் புதிய பா¢மாணத்தைத் தந்திருந்தது. காலையில் வாக்கிங் போகும்போது அப்பாவுடன் ஒட்டிக்கொண்டேன். மாலையில் ஷட்டில் காக். அவ்வப்போது அவர் செல்லும் கூட்டங்களுக்கும் அவருடன் போய்வந்தேன். அப்பா வுக்கு என்மீது, பாசம் சற்று கூடுதலாகவே ஆகியிருந்தது. மூத்த இலக்கியவாதி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது, “மை யங்கர் டாட்டர். மை பெஸ்ட் பிரண்ட்! ” என்று அறிமுகம் செய்து வைத்தார்.
·

அம்மா இப்போது சந்தோஷமாக இருக்கிறார். ஒருநாள் இரவு அரட்டையின்போது, “கவர்மெண்ட் சர்விஸ்ல இருந்திருந்தா… இப்டியெல்லாம் சொபிஸ்டிகேட்டடா இருக்க முடிஞ்சுருக்குமா?”என்று, முன்பு பேசியதை மாற்றிச் சொன்னார். எல்லா வசதிகளும் வீட்டுக்கு வந்திருந்தது. நான் கல்லூ¡¢க்குப் போய் வர எனக்கென்று தனிக் கார் இருந் தது. செல்வி அக்கா லண்டனிலும், சுந்தர் அண்ணா ஆஸ்திரேலியாவிலும் இருந்தார் கள்.

அன்று எங்கள் வாக்கிங், ரத்தினசாமி சாலை வழியாகப் போய், ஜவஹர் ரோடு சந்திப் பில் திரும்பி, வல்லபாய் சாலையைக் கடந்து, புது நத்தம் ரோடு வழியாக வீடு திரும்பு வதாக இருந்தது. அதிகாலைக் குளிர் ஈரமாகவே இருந்தது. குளிரை ஈடுகட்டும் வெது வெதுப்பு, நடையின்போது உடம்பில் உண்டாகியிருந்தது. பத்தாவது முடித்தபோது, பிளஸ் ஒன்னில் என்ன பாடம் எடுப்பது என்று நானும் அப்பாவும் கலந்து பேசிவிட்டுத் தான் எடுத்தேன். பிளஸ் ஒன் முடித்தபோதும் அப்படித்தான். எனக்கு இக்கட்டாகப் பட்ட நேரங்கள், மன உலைச்சலுக்கு ஆளான தருணங்களில், அவருடன் கலந்து பேசி விடுவேன். தனது வாழ்வின் அனுபவங்களை, ‘சட்’டென்று பொருத்தமாகச் சம்பந்தப் படுத்திச் சொல்வார். அது அவருக்கு இயல்பாக வந்தது. பரந்துவி¡¢ந்த அனுபவங்கள் அவா¢டம் இருந்தது.

இருள்விலகி வெளிச்சம் வரத் துவங்கியிருந்தது. பறவைகள், தங்கள் பூபாளத்தைத் துவங்கி இசைத்தபடியிருந்தன. காகம் ஒன்று, அந்த அதிகாலை வேளையிலும் ஒற்றைப் பனையில் உட்காருவதும், எழுந்துப் பறப்பதுமாக இருந்தது. பிடிஆர் பங்களாவின் அடர்ந்த மரமொன்றிலிருந்து செம்போந்து ஒன்று இசைத்த கானம், அதிகாலைக் காற்றில் புது ராகத்தை பரப்பியது.

அப்பா நேற்று அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்யங்களை சொல்லிக் கொண்டே வந்தார். இருவா¢ன் நடையிலும் வேகம் இருந்தது. எத்தனை சுவாரஸ்யம் என்றாலும், ஒரு கட்டத் தில் முடிந்து விடுமல்லவா? அப்பா முடித்துவிட்டு எதுவும் பேசாமல் நடந்து கொண்டி ருந்தார். என்னிடமிருந்து கிளம்பும் எந்த வகையான கேள்விக்கும், அப்பாவிடம் பதில் இருக்கும்.

நத்தம் ரோட்டைப் பிடிக்கும்போது, போலீஸ் கமிஷனா¢ன் கார், அவரது பங்களா விலிருந்து மெதுவாக வெளியே வந்து, சீறுவதற்கு யத்தனித்தது. பக்கவாட்டுக் கண்ணாடியை இறக்கிய கமிஷனர், வெளியே தலைநீட்டி, அப்பாவுக்கு வணக்கம் சொன்னார்.

இன்னும் கொஞ்சம் வெளிச்சம் வந்திருந்தது. நான் கேட்டேன். “அப்பா, காதலைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?”

கமிஷனருடனான தனது நட்பைச் சொல்ல அவர் நினைத்திருக்க வேண்டும். அதைத் தாண்டிய எனது கேள்வி, அப்பாவின் இயல்பைக் காணாமல் ஆக்கியிருந்தது. அவர் முகம் பார்த்தேன். சலனமற்றிருந்தது. கேட்கக் கூடாத கேள்வியில்லைதான். “மென்ஸஸ் எப்டி ஆகுது?” என்ற என் கேள்விக்கு, ஒரு ஆசி¡¢யரைவிட மிக அழகாக விளக்கிச் சொன்னவர் தான், அப்பா. காதலைப் பற்றிச் சொல்ல மாட்டாரா?

நடையில் ஒரு சுணக்கம் இருந்தது. “அப்பா?” என்றேன். அவா¢டம் பதிலில்லை. நடையின் வேகத்தைக் கூட்ட முனைந்தார்.
·

கெளதம் அலெக்ஸாண்டருடன் அப்பாவைப் பார்க்க வீட்டுக்குப் போனபோது, வாட்ச் மேன் எங்களை வழி மறித்தான். “நீங்க வந்தா உள்ளே விட வேணாம்ன்னு சொல்லிருக் காங்க!”

“அப்டி யாரு, அப்பாவா சொன்னாரு?”

அவன் அதற்குமேல் பேச விரும்பாதவன்போல அமைதி காத்தான்.

தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அப்பா, வாசலில் சத்தம் கேட்டுத் திரும்பினார்.

“அப்பா!” என்றேன்.

ஒரு இளக்காரப் புன்னகையுடன் முகம் திருப்பிக் கொண்டார்.

நாங்கள், வாசலில் நின்று கொண்டே இருந்தோம்.

என் தோளில் கைவைத்த கெளதம் அலெக்ஸாண்டர், “வா…போலாம்!” என்று அழைத்து வந்து விட்டான்.

அப்பா, அம்மாவைப் பி¡¢ந்து, செல்வி அக்கா, சுந்தர் அண்ணாவை இழந்து, ஆறு வருஷங்களாகிவிட்டன.

நான் வீட்டை விட்டு (ஓடி?) வந்துவிட்டதில், எல்லோருக்கும் வருத்தம் தான். சுந்தர் அண்ணா போனில் பிடித்துக் காய்ச்சினான். செல்வி அக்கா பேசவே இல்லை. அவர்கள் இருவரும் என்னுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டார்கள். அப்பா அமைதி யாகிப் போனார் என்றும், அம்மா என்னைப் பற்றி நினைப்பதே இல்லை என்றும், கொஞ்ச நாட்கள் தகவல்கள் வந்ததுண்டு. அதன்பின்பு, முற்றிலுமாக எந்தத் தகவலும் இல்லாமல், நான் மட்டும் அந்நியப்பட்டுப் போனேன்.

இன்னும் என் கேள்விக்கு, அப்பா ஏன் பதில் சொல்லவில்லை என்றும், எதற்காக இளக்காரமாகப் புன்னகைத்தார் என்றும் யோசிக்கவே செய்கிறேன். ¡¢ஷி, நித்தியைப் பெற்றபின்பும், அப்பா முகத்தில் விழிக்க எனக்கு மனசு வரவில்லை. இப்போது குற்றம் உறுத்துகிறது. அப்பாவிடம் “எனக்கு காதல் கல்யாணம் செய்து வைங்க!” என்று கேட் டிருக்கலாம். ஒருவேளை அவர் மறுத்திருந்தால், ‘சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வந்திருந்திருக்கலாம்!’ என்று அவ்வப்போது நினைத்துக் கொள்கிறேன். அந்தச் சூழலிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதாக உணர முடிகிறது.
·

இரண்டு நாட்களுக்கு முன்பு, என் பெயருக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. அப்பாதான் அனுப்பியிருந்தார். என் விலாசம் எங்கிருந்து கிடைத்ததென்று தொ¢யவில்லை. அப்பா வுக்கு என் நினைவு இருக்கிறதே எனும் நினைப்பே, எனக்கு ஆறுதலாகவும் சந்தோஷ மாகவும் இருந்தது. சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள, கெளதம் அலெக்ஸாண்டர் என் பக்கத்தில் இல்லை. டெல்லி போயிருக்கிறான். இரண்டு நாட்களாகும் அவன் திரும்பி வர!

பார்சலைப் பி¡¢த்தால்… என்னே ஆச்சா¢யம்? அதிலிருந்தது, ஒரு ¨டா¢!

அவசர அவசரமாகப் புரட்டுகிறேன். அப்பா, தன் இளமைப் பருவத்தை அதில் பதிவு செய்திருக்கிறார். தினம் தினம் நடந்த சங்கதிகளின் பதிவு, அது! நானோ, மற்றவர் களோ இதுவரை அறியாதது. அட… அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்திருக்கிறது. ஆழமான காதல். அன்பும் நேசமும் நிறைந்த காதல். ஆனால் அது கைக் கூடவில்லை என்று, அந்த ¨டா¢யின் கடைசிப் பக்கம் கதறியிருந்தது.

¨டா¢யை மூடும்போதுதான், அதன் உட்புற அட்டையைப் பார்த்தேன். அதில், அப்பா எனக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். மை பெஸ்ட் பிரண்ட் அர்ஷ¥வுக்கு, நீ “அப்பா, காதலைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டபோது, நான் பதில் சொல்லாதது, உன்னை பாதித்துவிட்டது, என்றே நினைக்கிறேன். பதிலேதும் சொல்லாத என்னைப் பற்றி நீ, ‘காதலைத் தொ¢யாத கழுதையாக இருக்கின்றானே’ என்று கூட நீ யோசித்திருப்பாய். காதல், ஒரு அனுபவம். அவரவர் மட்டுமே அதை அனுபவிக்க முடியும். உன் காதலை நான் ஆதா¢த்திருந்தால், உன் வாழ்க்கை நல்லதாக மட்டுமே இருந்திருக்கும். இந்தளவுக்கு சிறப்பாக இருந்திருக்குமா என்று என்னால் யோசிக்க முடியவில்லை. எனது அமைதி உனக்குள் ஏற்படுத்தியதே ஒரு வைராக்கியம், அதுதான் காதல். அந்த வைராக்கியம் காதலிப்பதில் பலருக்கு இருப்பதில்லை. உன் காதல் திருமணத்துக்குப் பின் நீ தேடி வந்திருந்தபோது, உன்னை நான் ‘வாம்மா’என்று உள்ளே அழைத்து ஆசிர்வதித்திருந்தாலும், உனக்கு இன்னொரு புறமும் ஆதரவு இருக்கிறது என்ற மெத்தனமே வந்திருக்கும். காதலை நீ உணர்ந்து வாழ்ந்திருக்க முடியாது. இந்த அனுபவங்களுக்காக நீ இழந்தது, பிறந்த குடும்பத்தின் ஆதரவை மட்டுந்தான். அந்த ஆதரவைக் காட்டிலும் உயா¢யது, இப்போது நீ வாழ்ந்து வரும் காதல் வாழ்க்கை. வாழ்த்துகள்!
·

கெளதம் அலெக்ஸாண்டர் டெல்லியிலிருந்து திரும்பிவந்ததும், அப்பாவைப் பார்க்க குழந்தைகளுடன் போனேன்.

எங்கள் வீடு, வெறிச்சோடிக் கிடந்தது.

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா