அதிர்ஷ்டம்
விஜி மெய்யப்பன்
தன்னுடைய நீண்ட நாள் கனவாகிய மோட்டார்பைக்கை வாங்க அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று எண்ணியபடியே வீட்டிற்குள் நுழைந்தான் கதிர். டிவி பார்த்துக்கொண்டிருந்தவரிடம் தைரியத்தைத் திரட்டி ஒருவாறாக விஷயத்தைக் கூறி முடித்தான். அவன் பிராயத்துப் பிள்ளைகள் பைக்கை வைத்துக்கொண்டு செய்யும் சாகசங்களையும் அதனால் விளையும் ஆபத்துகளையும் எடுத்துரைத்தாலும் இறுதியில் மனமிறங்கி ஒப்புக் கொள்ளத்தான் செய்தார்.
அன்று மாலையே பைக்கை வாங்கியும் ஆகிவிட்டது. உடனே அதை ஓட்டிச் சென்று நண்பர்களிடம் காண்பித்து அவர்களின் பொறாமைக்கும் ஆளானான். பைக்கை வைத்துக்கொண்டு என்னென்ன வித்தைகள் செய்ய முடியுமோ அவ்வளவையும் குறுகிய காலகட்டத்திற்குள் கற்றுக்கொண்டான். சென்னை மாநகரில் பைக் ஒட்டுவதே ஒரு வித்தைதானே! எங்கும் வேகமாகச் சென்றடையத் துடிக்கும் இளமை, பொறுமையின்மை. அம்மா அப்பாவின் அறிவுரைகள் அவ்வப்போது ஞாபகத்திற்கு வந்தாலும் அவர்கள் அருகிலில்லாத சுதந்திரம்.
ஒரு நாள் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மைல் தூரத்திற்கு வாகனங்களின் தேக்கம். நண்பனின் பதிவுத் திருமணத்திற்கு சாட்சியாகச் செல்ல வேண்டிய அவசரம். வண்டியை வளைத்தும் நெளித்தும் லாவகமாக ஓட்டிச் சென்று எப்படியோ முன் வரிசையை அடைந்துவிட்டான். மேலும் நிற்கப் பொறுமையின்றி மற்ற வாகனங்கள் எதற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்பதை அறியவே முற்படாமல் நாற்சந்தியை விருட்டெனக் கடந்தான். அப்பொழுதுதான் குறுக்கே வேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தைக் கவனிக்க நேரிட்டது. மயிரிழையில் உயிர் தப்பியதை எண்ணி கடவுளுக்கு நன்றியுரைத்தபடியே பறந்து சென்றான்.
இரவு வீட்டில் அம்மாவிடம் தனிமையில் நடந்ததைக் கூறியபோது, “கடவுள் புண்ணியத்துல உனக்கு ஒன்னும் ஆகலை. ஆயுள் ஹோமம் ஒன்னு செஞ்சுடலாம்”, என்றாள். ஆயினும் எதையோ யோசித்தவாறாகவே இருந்தவளை, “எனக்குதான் ஒன்னும் ஆகலையே, அப்புறம் ஏன் முகத்தில் இவ்வளவு கவலை?”, என்று கேட்டான். “இல்ல, உன்னோட அதிர்ஷ்டத்துல கொஞ்சமாவது ஆண்டவன் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கக் கூடாதான்னு தோனுச்சு”, என்றாள். என்ன என்று மேற்கொண்டு விசாரித்ததில், “அன்று விபத்துக்குள்ளாகியிருந்த பள்ளிப் பேருந்திலிருந்து அடிபட்ட குழந்தைகள் சிலரை வேனில் ஏற்றி, எதிர்சாரி வாகனங்கள் அனைத்தையும் மக்கள் உதவியுடன் நிறுத்தி வைத்து, மருத்துவமனைக்கு விரைந்துகொண்டிருந்தபோது, திடீரென குறுக்கே பாய்ந்த மோட்டார்பைக்கால் தடம் மாறி அருகிலிருந்த மரத்தில் மோதி வேனில் சென்ற அனைவரும் பலி”, என்ற செய்தியைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றான் கதிர்.
iviji@yahoo.com
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- நினைவுகளின் தடத்தில் – (34)
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- அதிர்ஷ்டம்
- மழை
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- கார்காலம்
- www.மனிதம்.com
- குப்பைப் பூக்கள்..!
- போதிமரங்கள்
- ஊழிக் காலம்
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நட்சத்திரவாசி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8