சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -2

This entry is part of 28 in the series 20090702_Issue

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாFig. 1
Socrates Speaks

“நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது சொத்துக்கோ ஒப்பாகச் சிந்திக்காது, ஆத்மாவின் உன்னதச் செம்மைபாட்டுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்தி உங்கள் எல்லோரையும் இணங்க வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. நான் சொல்கிறேன் நேர்மை நெறி (Virtue) செல்வத்தால் வருவதில்லை ! ஆனால் செல்வம் நேர்மை வழியில் வர வேண்டும். அதுபோல் பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் அடுத்தடுத்து நல்லவரும் தோன்ற வேண்டும். இதுதான் என் உபதேசம். எனது இந்தக் கோட்பாடு (ஏதென்ஸ்) வாலிபரை எல்லாம் வசப்படுத்துகிறது என்றால் நான் ஒரு போக்கிரி மனிதனே.”

“எவன் ஒருவன் ஓடிப் போகாமல் தன்னிலையில் நின்று எதிரியை எதிர்த்துப் போர் புரிவானோ அவனே ஊக்கமுள்ள மனிதன்.”

சாக்ரடிஸ்

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -2

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க நீதி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், தீர்க்க தரிசி யூதி·பிரோ (Ethyphro)

அமைப்பு : சாக்ரடிஸ் அரச நீதி மன்றத்தின் அருகில் நடமாடுவதைக் கண்டு யூதி·பிரோ ஆச்சரியம் அடைகிறார். ஏனெனில் சாக்ரடிஸ் நீதி மன்றங்களில் வில்லங்கத்தைப் பற்றி விவாதிக்க வரும் நபரில்லை. மெலிடஸ் (Meletus) என்பவன் வாலிபர் மனதைச் சாக்ரடிஸ் கெடுத்தார் என்றும் ஏதென்ஸ் நம்பிடும் தெய்வத்தை சாக்ரடிஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்றும் ஒரு புகாரைத் தயாரித்து நீதி மன்ற விசாரணைக்கு மனு அனுப்பியுள்ளான்.


Fig. 2
Last Day of Socrates

சாக்ரடிஸ்: அட கடவுளே ! இது எப்படி நடந்தது ! உனது தந்தை யாரைக் கொலை செய்தார் ! சொந்தக்காரனையா ? அல்லது வழிப்போக்கனையா ? வழிப்போக்கன் ஒருவனாக இருந்தால் தகப்பனை நீ கைது செய்ய மாட்டாய் அல்லவா ?

யூதி·பிரோ: கேலிக் கூத்தாகப் போனது சாக்ரடிஸ் ! மடிந்தவன் யாராய் இருந்தால் என்ன ? சொந்தக்காரனோ, வழிப்போக்கனோ குற்றவாளி செய்தது நியாயமா அல்லது அநியாயமா என்பதை நான் அறிய விரும்புகிறேன். நியாயம் என்றால் அவனை விட்டுவிடலாம். அநியாயம் என்றால் அவனைக் கைது செய்யப்பட வேண்டும் ! ஒரே கூரைக்குக் கீழ் இருந்தாலும் சரி, ஒரே மேஜை மீது உணவு உண்டாலும் சரி, தந்தையோ, தமயனோ யாராயினும் விசாரணைக்கு நான் இழுத்து வருவேன்.,

சாக்ரடிஸ்: கொலை செய்யப்பட்டவன் யார் என்று முதலில் சொல்வாயா ?

யூதி·பிரோ: அவன் எனக்கு முன்பு ஊழியம் செய்தவன். எங்கள் வயலில் வேலை செய்தவன். அவன் குடித்துச் சினமடைந்து என் அடிமைகளில் ஒருவனைக் கொன்று விட்டான். கோபங் கொண்ட என் தந்தை குடிகாரனைக் கட்டிப் போட்டு ஒரு குழியில் தள்ளி விட்டார். அதற்குப் பிறகு மதக் குருவிடம் ஆள் அனுப்பி குற்றவாளியை என்ன செய்வதென்று ஆலோசனை கேட்டார். அதுவரைக் குழியில் கிடப்பவன் என்ன ஆனான் என்று அறியும் ஆர்வமின்றி என் தந்தை சும்மா இருந்து விட்டார். தூதுவன் வந்து பார்த்த போது குழியில் இருந்தவன் பசியாலும், பிணியாலும் இன்னல்பட்டுச் செத்துக் கிடந்தான். நான் அதனால் என் தந்தையாரைக் கைது செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் அது கொஞ்சமும் என் உறவினருக்குப் பிடிக்க வில்லை ! மகன் தந்தையைக் கைது செய்வது தெய்வ அநீதி என்று என்னை இகழ்கிறார் ! அவர் குறிப்பிடும் தெய்வ நீதியும் தெய்வ அநீதியும் எனக்குப் புரியவில்லை சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: கடவுள் நீதிக்குப் பணியும் நீ ஆத்ம சுத்தமாக நடந்து கொள்கிறாய் ! தெய்வ நீதி, தெய்வ அநீதி இரண்டையும் அறிந்தவன் நீ ! உன் தந்தையை நீ கைது செய்த போது உனக்குச் சிறிதும் அச்சமில்லை ! உன் கைகள் நடுங்க வில்லை அல்லவா ?

யூதி·பிரோ: ஆம் சாக்ரடிஸ் ! ஆனாலும் நான் சாதாரண மனிதன்தான். ஆயினும் எது நீதி எது அநீதி என்பதைச் செம்மையாக அறியாதவன் இல்லை நான் !

சாக்ரடிஸ்: நான் உனது மாணவனாகப் பயிற்சி அடைந்திருக்க வேண்டும். அப்போது நான் மெலிடஸ் போன்ற மூர்க்கரை நீதி மன்றத்தில் எதிர்த்து வாதாட முடியும் ! என்னைத் தெய்வத் துரோகி என்றும் மெலிடஸ் பழிசுமத்தியுள்ளார் ! உன்னைத் தெய்வத் துரோகி என்று யாராவது பழிசுமத்தி வழக்கில் மாட்டி விட்டால் நீ என்ன செய்திருப்பாய் ?

யூதி·பிரோ: என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். நீங்களும் உங்கள் மீது சுமத்தியுள்ள பழிக் குற்றத்தை எதிர்த்துப் போராட வேண்டும். சிறைக்குள் இருந்து மறைந்து கிடப்பதை விட சுதந்திரப் பறவையாய்த் திரிவது மேலானது ! நீங்கள் உலகுக்குச் செய்ய வேண்டிய சாதனைகள் இன்னும் பல உள்ளன. அவற்றைத் தொடர வேண்டும் நீங்கள்.

சாக்ரடிஸ்: அது நல்ல அறிவுரைதான். ஆனால் நாம் நினைப்ப தெல்லாம் நடப்பதில்லையே !

யூதி·பிரோ: ஒரு குறிக்கோளை மனதில் கொண்டு அதை நிறைவேற்றத் துணிவதுதான் என் கோட்பாடு !

சாக்ரடிஸ்: ஒன்று உன்னைக் கேட்கிறேன். எனக்கு இந்த வேறுபாடுகளைச் சற்று விளக்குவாயா ? எது நீதி ? எது அநீதி ? எது தெய்வ பற்று ? எது தெய்வத் துரோகம் ?

யூதி·பிரோ: நானொரு காவல்துறைப் பணியாளி. என் தொழில்விதி குற்றவாளியைக் கண்டுபிடிப்பது ! அவரைத் தண்டிப்பது ! அது எனது நீதி ! தந்தையானாலும் சரி தாயானாலும் சரி அல்லது மேறு யாராயினும் சரி, குற்றம் இழைப்பாராயின் நீதிதேவன் முன்பு அவர் தண்டிக்கப் பட வேண்டும். அவரைக் காப்பாற்றித் தப்ப வைப்பது அநீதி ! கடவுளுக்கு அஞ்சாமல் பிறருக்குக் குற்றம் இழைப்பவர் தெய்வத் துரோகிகள் ! கடவு?ளை வழிபட்டு மனித நேயம் கொள்பவர் தெய்வப் பற்றுள்ளவர். இவையே என் கருத்து. என் தந்தையைக் கைது செய்யக் கூடாது என்று சொல்வோர் தெய்வத் துரோகிகள் சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: மிகத் தெளிவான விளக்கங்கள் யூதி·பிரோ !

யூதி·பிரோ: இவைதான் கல்மேல் பொறித்த வாசங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். இவை என் தனிப்பட்ட கருத்துக்கள்.

சாக்ரடிஸ்: உன் கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். பரிவுக் கடவுளைப் பணியும் நீவீர் இவற்றை எல்லாம் நம்புகிறீரா ? நான் ஒன்று கேட்கிறேன் : கவிஞர்கள் சொல்வது போல் தெய்வங்களுக் குள்ளே சண்டை, சச்சரவு உண்டா ? அவருக்குள் பயங்கரப் பகைமை உண்டா ? நூல்களும், பூர்வீகக் கதைகளும் கூறுவது போல் “அக்ரோபொலிஸ்” *(Acropolis of Athens ) மாளிகைக்குத் தேவதைகளின் அங்கிகள் எடுத்துச் செல்லப்பட்டுப் புனிதமாக்கப் படுகின்றனவா ? இவை யெல்லாம் உண்மை என்று நாம் நம்ப முடியுமா ?

யூதி·பிரோ: இவை எல்லாம் உண்மை இல்லை சாக்ரடிஸ் ! கடவுளைப் பற்றிக் கூறப்படும் பல கருத்துக்கள் மெய்யானவை அல்ல ! அவற்றை நான் கூறினால் நீங்கள் ஆச்சரியப்படுவீர் !

சாக்ரடிஸ்: இவற்றை எல்லாம் நான் தெரிந்து கொள்ள விழைகிறேன். அவற்றை அடுத்ததொரு சந்திப்பில் உரையாடுவோம். நானின்று அறிந்து கொள்ள விரும்புவது: வேறென்ன உதாரணங்கள் சொல்ல முடியும் உம்மால் தெய்வப் பற்றுக்கும், தெய்வத் துரோகத்துக்கும் ?

யூதி·பிரோ: சொல்கிறேன் : கடவுள் நெறிக்கு உகந்தது தெய்வப் பற்றுள்ளது. கடவுள் நெறிக்கு அப்பால் பட்டது தெய்வத் துரோகமானது !

சாக்ரடிஸ்: அந்தக் கருத்து சரிதான் ! ஆனாலும் அவற்றுக்குச் சில உதாரணங்கள் கூற முடியுமா ? நாம் இப்போது உரையாடுவதைச் சற்று ஆழ்ந்து உளவுவோம். கடவுளுக்குப் பிடித்த ஒரு வினை அல்லது மனிதன் தெய்வப் பற்றில் சேர்க்கப்படும். கடவுளுக்குப் பிடிக்காத ஒரு வினை அல்லது மனிதன் தெய்வத் துரோகத்தில் இணைக்கப்படும் என்று கூறுவீரா ? மேலும் நாம் கதைகள் கூறி வருகிறோம் : தெய்வங்கள் முரணான கொள்கை உடையவை, ஒன்றை ஒன்று எதிர்த்துப் போரிடுபவை, அவை பகையாளிகள் என்ப தெல்லாம் பரவி உள்ளன அல்லவா ?

யூதி·பிரோ: ஆம் அவை எல்லாம் உண்மைதான்.

சாக்ரடிஸ்: நான் கேட்கிறேன் தெய்வங்களுக்குள் ஏனிந்த வேறுபாடுகள், கோபப்பாடுகள், பகைமைகள், போர்கள் ? அவற்றுக்குக் காரணங்கள் என்ன ? உயர்ந்தது என்றும் தணிந்தது என்றும் தெய்வங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள், பிரிவுகள் ஏற்படாலாமா ? அப்படி மாறுபாடுகள் நேர்ந்தாலும் சண்டை செய்யாமல் சமாதான முறையில் பகைமைத் தவிர்க்கலாமே !

++++++++++++
* The Acropolis of Athens is the best known Acropolis (Greek) in the world. Although there are many other Acropolises in Greece, the significance of the Acropolis of Athens is such that it is commonly known as The Acropolis without qualification. The Acropolis was formally proclaimed as the pre-eminent monument on the European Cultural Herita. The Acropolis is a flat-topped rock which rises 150 m (490 ft) above sea level in the city of Athens, with a surface area of about 3 hectares.
++++++++++++

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள் :

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)

10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)

12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

13. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((July 1, 2009)]

Series Navigation