ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 1

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

முனைவர் கு.சிதம்பரம்,சீனா



அவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதறர்கள்.அவர்களின் பெயர்கள் இங்கு குறிப்பிட வேண்டாம் என எண்ணுகிறேன்.அவர்கள் இருவருமே எனக்கு நெருங்கிய மேல்நிலைப் பள்ளி நண்பர்கள். அதற்க்கு பிறகு பல வருடங்கள் அவர்களுடன் எனக்கு தொடர்பற்று போய்விட்டது. ஒரு சில நாட்களுக்குமுன் ஏதேச்சையாகக் கேள்விப்பட்டேன்@அவர்களில் ஒருவன் மிகவும் நோய்வாய்பட்டிருப்பதாக. எங்கள் கிராமத்து பூற்வீக வீட்டிற்க்குப் போகும் வழியில் அவர்களையும் பார்த்துவிட்டு வரலாமென்று அவர்கள் வீட்டிற்க்கு சென்றேன். அவர்களில் ஒருவனை மட்டுமே பார்க்க நேர்ந்தது.

“நெடுந்தொலைவு சிரமத்தையும் பொருட்படுத்தாமல் எங்களைப் பார்க்க வந்திருக்கிறாய.; எப்படி நன்றி தெறிவிப்பதென்றே எனக்கு தெறியவில்லை” என்றான்.மேலும் “ என் தம்பி நேய்வாய்பட்ட செய்தி உன் காதிற்க்கு எட்டியது ஆச்சரியமான விசயம்! அவன் இப்போது மிகவும் தேறிவிட்டான். அலுவல்பணி நிமித்தமாக எங்கி;யோ போயிருக்கின்றான்” என்று கூறினான். பிறகு சிறித்துக்கொண்டே “பள்ளி சிநேகிதன் என்ற முறையில் இதை உனக்கு காட்டுவதால் தவறொன்றுமில்லை”.அவன் தம்பியின் இறண்டு நாட்குறிப்பேடுகளை என்னிடம் கொடுத்து, “இதைப்பார்த்தால் அவன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்ன நிலையில் இருந்தான் என்பதை உன்னால் அறிந்துக்கௌ;ளமுடியும்” என்றான்.

அவ்விரு நாட்குறிப்பேடுகளையும் எடுத்துக்கெண்டு, விடைப்பெற்று திரும்பி வந்துவிட்டேன். அடுத்தநாள் மிகவும் கவனமாக அவ்விரு நாட்குறிப்பேடுகளையும் வாசித்தேன். அவற்றிலிருங்து அவன் மனநோயால் பாதிக்கப்பட்டவன் என்பதை உணர்ந்தேன். கையெழுத்து மிகவும் கிறுக்கலாகவும்;;; வாக்கியங்கள் கோற்வையற்றும் ஒன்றுக்கொன்று முரனாகவும் இருங்தன.மேலும் பத்திகள் ஒன்றோடொன்று தெடர்பற்று கிடந்தன.குறிப்பேட்டில் தியதி எதுவும் குறிப்பிடாமல் இருந்தான். சமூகத்தின் காட்டுமிராண்டிதனத்தை நிறைய இடங்களில் குறிப்பிட்டிருந்தான். எழுத்துமையின் நிறங்களை வைத்து அவை ஒரே நாளில் எழுதியவையல்ல என்;பதை அறியமுடிந்தது. அதிலிருந்து ஒருபகுதியை மட்டும் மருத்துவ ஆராட்சிக்காக எந்தவித மாற்றமும் திருத்தமும் செய்யாமல் எழுதி எடுத்துக்கொண்டேன். அதில் இடம்பெற்றிருந்த உலகமறியப்படாத மானிடர்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளேன். மேலும் அவன் மனநிலை தேறியப்பிறகு அந்நாட்குறிப்பேட்டிற்க்கு அவன் வைத்திருந்த தலைப்பையும் நான் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.

1

இன்றிரவு நிலவு ரொம்ப பிரகாசமாக ஒளிற்கிறது.

நான் கடந்த முப்பது வருசமாக நிலவைப் பார்க்கவில்லை. இன்று அதைப் பார்த்தபோது வழக்கத்துக்குமாறாக நான் பரவசமடைவதை என்னால் உணரமுடிந்தது.மேலும் கடந்த முப்பது வருசமாக இருளில் மூழ்கியிருந்திருக்கிறேன் என்பதை மெதுவாக உணரஆரம்பித்தேன். ஆனால் இனிமேல்தான் நான் மிகவும் எச்சறிக்கையாக இருக்கவேண்டும்.இல்லாவிட்டால் திருவாளர் Nஐhவின் நாய் என்னை இரண்டுமுறை முறைத்து முறைத்து பார்க்கவேண்டிய அவசியமென்ன?

என் பயத்திற்க்கு காரணம் இருக்கின்றது.

2

இன்றிரவு நிலவு இல்லவே இல்லை. இது கெட்ட சகுணமென்று எனக்கு தெறியும். இன்றுகாலை நான் ரொம்பவும் எச்சறிக்கையாக தெருவில் நடந்துப் போய்கொண்டிருந்தபோது திருவாளர் Nஐhவின் பார்வையில்
ஒரு மாற்றம் இருந்ததைக் கண்டேன்:எனனைப்பார்த்து அஞ்சுவதைப்போல@ எனனை கொலை செய்யவேண்டும் என்பதைப்போல. ஏழெட்டுபேர் என்னைப் பற்றி முனுமுனுத்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களைப் பார்பதைக் கண்டு அஞ்சினார்கள். அவர்கள் மட்டமல்ல நான் கடந்துச் சென்ற அனைவருமே. அவர்களிடம் ஒரு வெறித்தனம் இருந்தது. என்னைப் பார்த்து நரநரவென பல்லைக் கடித்தார்கள். அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை அறிந்தவுடன் உச்சி முதல் உள்ளங்கால் வரை எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது.

இருந்தாலும் நான் பயப்படவில்லை. நான் தொடர்ந்;து போய்க்;கொண்டிருந்தேன்.அவர்களுக்கு முன்னிருந்த சிறுவர்களும் என்னைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தார்கள்.அவர்களின் பார்வையும் திருவாளர் Nஐhவின் பார்வையைப்போலவே இருந்தது.மேலும் அவர்களின் முகங்கள் குட்டிசாத்தான் முகம்போல இருந்தன. என்மேல் அவர்களுக்கு என்ன வெருப்பு. ஏன் இப்படி நடந்துக்கொள்கிறார்கள். எனக்கு எதுவும் விளங்கவில்லை;! நீங்களே சொல்லுங்கள்.ஆனால் அவர்கள் ஓடிவிட்டார்கள்.
என்மேல் திருவாளர் Nஐhவுக்கு என்ன வெறுப்பு. தெருவிலுள்ள அனைவருக்கும் என்மேல் என்ன வெருப்பு. எனக்கு எல்லாமே ஆச்சரியமாக இருக்கின்றது. இருபது வருடங்களுக்குமுன் நடந்தவைகள் மட்டுமே எனக்கு நேபகத்தில் உள்ளது. திரு கூ ஐ{யு யின் பழைய ஏட்டுசுவடை மிதித்து விட்டேன்.அதற்க்காக அவர் மிகவும் கோபப்பட்டாh.;; திருவாளர் Nஐhவுக்கு அவரைத் தெறியாவட்டாலும் அவருடைய ஏட்டு சுவடைப் பற்றி கேள்விப் பட்டிருப்பார்.அவரைப்பற்றி ஒரு மதிப்பீடு செயிதிருப்பார். இதற்க்காக எனக்கு எதிராக தெருவில் இருப்பவர்களுடன் சேர்ந்து சதிதிட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த சிறுவர்கள் ஏன்?
அவர்கள் அப்போது பிறக்கக்கூட இ;ல்லை. ஏன் இன்று அவர்கள் என்னை இப்படி வெறித்து வெறித்து பார்க்க வேண்டும:எனனைப்பார்த்து அஞ்சுவதைப்போல@ எனனை கொலை செய்யவேண்டும் என்பதைப்போல?
இது உண்மையிலே என்னை பயமூட்டுகிறது. இது எனக்கு குழப்பத்தையும் எறிச்சலையும் ஏற்படுத்துகிறது.
எனக்கு தெறியும் இதை அவர்களின் பெற்றோர்களிடமிருந்துதான் கற்றிருக்கவேண்டும்.

3

இவற்றையெல்லாம் புறிந்துக்கொள்ள தீவிரமாக யோசிக்கிறேன் ஆகையால் என்னால் இரவு நேரங்களில் உறங்க முடிவதில்லை.

அவர்கள் ஒருசிலரை கட்டபஞ்சாயத்தில் வைத்து அவமானப்படுத்தினார்கள். கட்டிவைத்து அடியடியென அடித்தார்கள். கடனைத் திருப்பி செலுத்தாதவர்களின் மனைவிமார்களை எடுத்துக்கொண்டார்கள். ஒருசிலர் அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலைச் செய்துக்கொடண்டார்கள்.

நேற்று தெருவில் ஒரு சிறுவனைப்போட்டு ஒருத்தி அடியடியென அடித்துக்கொண்டிருந்தாள.; “குட்டி பிசாசே என் கேபத்தைக்கிளப்பாதே உன்னைக் கடித்து கொதறிவிடுவேன்”.என்று கத்தினால் வினோதமானக. இருப்பினும் அவள் என்னையே முறைத்து பார்த்துக்கொண்டிருந்தால்.என்னுடைய எதிர்ப்பைக் காட்டினேன். என்னுடைய எதிற்ப்பு குணத்தை என்னால் காட்டாமல் இருக்க முடிவதில்லை. அதன்பிறகு என்னை வெறித்தனமாக அவர்கள் முறைத்துப் பார்த்தார்கள். அவர்களின் நீண்ட பற்களைக்காட்டி உறும தொடங்கினார்கள.; அதைப்பார்த்த பெரியவர் சென் என்னை வீட்டிற்க்குள் இழுத்துக்கொண்டு வந்து விட்டார்.

வீட்டிலுள்ளவர்களும் என்னை புறிந்துக்கௌ;ளாத மாதிரி நடித்தார்கள். இவர்களும் அவர்களைப்போலவே என்னை வெறித்தனமாக பார்க்கின்றார்கள.; என்னை கோழிக்குஞ்சியை அடைப்பதைப்போல
அடைத்துவைத்துவிட்டார்கள். இவர்களின் செயல் மேலும் என்னை பித்தனாக்கிவிட்டது.

ஒரு சில நாட்களுக்குமுன் குள்ளநரி கிராமத்திலிருந்து எங்கள் குத்தகைதாரர் ஒருவர் வீட்டிற்க்கு வந்திருந்தார்.இந்த வருடம் விவசாயம் பொய்த்துவிட்டதை கூறுவதர்க்காக. இதற்க்கெல்லாம் காரணமன ஒரு கெட்ட சத்தியை அக்கிராமத்தார்கள் அடித்துகொண்றுவிட்டதாக கூறினாh.; பிறகு சிலர் அவர்களின் தையரியத்தை அதிகப்படுத்துவதற்;க்காக அதனடைய இதயத்தையும் ஈறளையும் எண்ணையில் பொறித்து திண்றுவிட்டதாக கூறினார். நான் அப்பேது குறுக்கிட்டேன்.அவர்கள் இருவரும் என்னை முறைத்து பார்த்தார்கள். இவர்களின் பார்வையும் அவர்களின் பார்வையைப் போலவே இருப்பதை இன்றுதான் என்னால் சரியாக உணரமுடிந்தது. இவர்களும் நரமாமிசத்தை உண்ணுகிறார்கள்.

என்னை சுற்றியுள்ள அணைவருமே நரமாமிசத்தை உண்ணுபவர்கள். என்னையும் ஒருநாள் திண்றுவிடுவார்கள். இதை நினைக்கும்போது உச்சி முதல் உள்ளங்கால் வரை எனக்கு நடுங்குகிறது.

தெருவில் அந்தப்பெண் ‘கடித்து கொதறிவிடுவேன’;.என்று கூறியது. அவர்களின் நீண்ட பற்கள் சிவந்த முகங்கள.; குத்தகை தாரர் கூறிய செய்தி;;;;;@ அவர்கள் பேச்சிலுள்ள விசமம்;;@ சிறிப்பிலுள்ள ஆபத்து எல்லாமே ரகசிய குறியீடுகள்தான் என்பதை என்னால் உணரமுடிகிறது. அவர்களின் நீண்ட வெள்ளைப் பற்கள் பலரை பதம்பார்த்திருக்கறது.

நான்கெட்டவன் இல்லை. இருப்பினும் திரு கூஐ{யு யின் பழைய ஏட்டுசுவடை மிதித்தது அவ்வப்பேது என் மனதிற்க்கு வந்து செல்கிறது. அவர்கள் எனக்கெதிராக சதிதிட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறாh.;ஆனால் என்னால் சரியாக ஊகிக்க முடியவில்லை. அவர்கள் யார்மீதாவது கடும் கோபம்கொண்டால் ‘கெட்ட சத்தி’ என்று அழைப்பார்கள.;என்னுடைய சகோதரர் எனக்கு கட்டுரை எழுத கற்றுக்கொடுக்கும்போது கூறியது இன்னும் நேபகத்தில் இருக்கின்றது. “ஒருவன் எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக வாக்குவாதம் செய்தால் ‘கெட்டசத்தி’ என்று தீர்மானித்துவிடுவார்கள். சதிகாரர்கள் மன்னித்து விட்டால் பிளைத்துபோ- உனக்கு நல்ல காலம்- என்று அர்த்தம்.இதுதான் அவர்களின் இயற்க்கை குணம்”.
இருந்தாலும் அவர்களின் சங்கேத குறியீட்டை எப்படி புறிந்துக்கௌ;வது – குறிப்பாக அவர்கள் மனித மாமிசத்தை கூறுபோட தயாராக இருக்கும்போது.

இவற்றையெல்லாம் புறிந்துக்கௌ;ள மிக தீவிரமாக யோசிக்கவேண்டி இருக்கிறது.புராணக் காலங்களில் நரமாமிசம் புசிக்ககூடிய கூட்டங்கள் உண்டு என்பதை அறிந்திருக்கிறேன். இது எனக்கு தெறிந்த ஒன்றுதான்.

என் வரலாறு தியதியின்றி இருக்கின்றது.அனைத்து பக்கங்களும் வார்த்தைகளால் நிறப்பப்பட்டிருக்கின்றது: ‘கண்பூசியஸின் நற்குணம் நற்பண்பு.’ ஆனால் அந்த ஏட்டுசுவடு முழுவதும் இரண்டே இரண்டு வார்த்தைகளால் நிறப்பப்பட்டுள்ளது:‘மனிதனை உண்ணு’. இவ்வார்த்தைகளில் புதைந்திருக்கும் ஆபத்தை அறிந்ததால் என்னால் இறவு முழுவதமே உறங்க முடிவதில்லை.

அந்த ஏட்டில் எழுதப்பட்டுருக்கும் வார்த்தைகளும், எங்கள் குத்தகைதாரர் கூறிய வார்த்தைகளும் சிலேடையாக என்னைப் பார்த்து புண்முறுவலிடுகிறது.

நானும் மனிதன்தான்.ஆகையால் என்னையும் அவர்கள் திண்ண பார்க்கிறர்hகள்!

Series Navigation

முனைவர் கு.சிதம்பரம்,சீனா

முனைவர் கு.சிதம்பரம்,சீனா

ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 2

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

முனைவர் கு.சிதம்பரம்,சீனா


4

காலை பொழுது சிறிது நேரம் அமைதியாக அமர்திருந்தேன்.

பெரியவர் சென் மதிய உணவு கொண்டுவந்தார். ஒரு பாத்திரத்தில் அவித்த காய்கறியும் மற்றொறு பாத்திரத்தில் அவித்த மீனும். மீன்களின் கண்கள் வெள்ளையாகவும் மிறுதுவாகவும் இருந்தன@வாய்கள் மனிதமாமிசத்தை உண்ணும் மனிதர்களின் வாய்கள்போல திறந்து கிடந்தன்.சில கவழங்களை விழுங்கிய பிறகு வழுக்கி விழுவது மீன்களின் கதுப்பா மனித மாமிசத்தின் கதுப்பா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.

“பெருசு..! எனக்கு முச்சு திணறுவதுபேல இருக்கிறது.வீட்டிற்க்கு வெளியே காற்றுவாங்க விரும்புகிறேன்”என்றேன். பெரியவர் சென்; வெளியே சென்று பார்த்துவிட்டு வந்து கதவை திறந்துவிட்டார்.நான் வெளியே போகவில்லை.ஆனால் இவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை உற்று கவனித்தேன். ஒண்று மட்டும் உறுதி இவர்கள் என்னை வெளியே விட விரும்பவில்லை.பிறகு என் சகோதரர் முதியவர் ஒருவரை அழைத்து வந்தார்.அந்த முதியவரின் பார்வையில் ஒரு குரூரதனம் இருந்தது.நான் பார்த்துவிடுவேன் என்ற பயத்தில் தலையை தொங்கப்போட்டு அவரின் கடைக்கண்ணின் திருட்டு பார்வையை மூக்கு கண்ணாடியின் வழியாக என்மீது செலுத்தினார்.

“இன்று நீ மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறாய்” என்றான் என் சகோதரன்.

“ஆம்” என்றேன்.

“உன் உடம்பை பரிசோதனை செய்வதற்க்காக திரு ஹோ வை அழைத்துவந்திருக்கிறேன்”.

“ரொம்ப நல்லது” என்றேன் பதிலுக்கு.

அந்த முதியவர் பசுதோல் போர்த்திய புலி என்பது எனக்கு நன்றாக தெரியும.;என்னுடைய இரத்த ஓட்டத்தை அறிவதன் முலம் என் உடம்பில் எவ்வளவு கொழுப்பு தேறும் என்பதை எளிதில் அறிந்து என் சதையை கூறுபோட்டுவிடலாம் இல்லையா. இருந்தாலும் நான் பயப்படவில்லை;.என் தையரியத்தை அதிகரிப்பதற்காக மனித மாமிசத்தை உண்ண மாட்டேன்.என்னுடைய தையரியம் அவர்களின் தையரியத்தைவிட பலமடங்கு அதிகம்.என்னுடைய இருகரங்களையும் நீட்டி காட்டினேன் பார்க்கலாம் என்ன செய்கிறார் என்பதை அறிய.அந்த முதியவர் என் அருகில அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு என் நாடியை பிடித்துக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.பிறகு அவருடைய பூணைக்கண்ணை திறந்து என்னைப்பார்த்து சொன்னார். “உன்னுடைய கர்பனையை பறக்கவிடாதே.கொஞ்சநாள் ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்றார்.

உன்னுடைய கர்பனையை பறக்கவிடாதே! கொஞ்சநாள் ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்! அப்பெழுதுதானே அவர்களுக்கு அதிக கொழுப்பு கிடைக்கும். கொழுப்பு அதிகரிப்பதால் எனக்கு எந்த விதத்தில் நன்மைப் பயக்கும்? அப்பெழுதுதானே அவர்கள் என்னை பார்த்து ஏலனமாக சிரித்து சிரித்தே என்னை கொல்லமுடியும்.என் கொழுப்பை அதிகரித்து அவர்களுக்கு உதவமுடியாது.என்னுடைய தையரியமும், வலிமையும் எனக்கு தெரியும். ஆகையால் நான்மிகவும் குதூகளித்தேன்.இதை பார்த்த அந்த முதியவரின் முகமும் என் சகோதரனின் முகமும் பயத்தில் வெளிரிபோய்விட்டன.

ஆனால் என்னுடைய தையரியம் அவர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது.என் இதயத்தை திண்;று அவர்களின் தையரியத்தை அதிகரிப்பதர்க்காக@என்னுடைய தையரியத்தை அவர்கள் பெறுவதர்க்காக. அந்த பெரியவர் “ஒருமுறை சாப்பிட்டா போதும்” என்று சொல்லிவிட்டு கிழம்பிவட்டார்.அதர்க்கு என் சகோதரனும் தலையை ஆட்டினான். நீயும் அவர்களுடன் கூட்டணியா! என்னைக்கூறுபோடுவதர்க்கு என் சகோதரனும் அவர்கள் கூட்டணியில் உள்ளான் என்பது நான் எதிற்பார்த்ததைக்காட்டிலும் ஆச்சரியத்திற்க்குறியது அல்ல. இருந்தாலும் என் குழையை நடுங்கவைக்கிறது.

என் சகோதரனும் மனிதமாமிசத்தை உண்ணுபவன்!

நான் மனிதமாமிசத்தை உண்ணுபவனின் தம்பி!

நான் அடுத்தவர்களுக்கு இறையாகப்போகின்ற மனிதமாமிசத்தை உண்ணுபவனின் தம்பி!

5
நான்கு ஐந்து நாட்களாக நான் அந்த முதியவரைப் பற்றிதான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். உண்மையிலே அவர் பசுதோல் போர்த்திய புலி இல்லை மருத்துவர் என்றாலும் அவர் மனிதமாமிசத்தை உண்ணுபவர்தான்.அவரின் மூதாதையர் லீசீசென் எழுதிய நாட்டுபுற மருத்துவம் புத்தகத்தில் வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கு ‘மனிதமாமிசத்தை நன்றாக வேகவைத்து சாப்பிடவும’; என்று.பிறகு அவர் எப்படி மறுக்கமுடியும் மனிதமாமிசத்தை உண்ணுவதில்லை என்று?

என்சகோதரனை நான் சந்தேகப்படுவதர்க்கு காரணமில்லாமல் இல்லை. எனக்கு கற்பித்துகொண்டிருக்கும்போது செல்லியிருக்கின்றான். “பெற்ற பச்சிளங்குழந்தைகளை உண்ணுவதர்க்காக ஒருவருக்கெருவர் கைமாற்றிக்கொள்கிறார்கள்” என்று. மேலும் ஒரு அயோக்கியனைப் பற்றி பேசும்போது “அவன் அடுத்தவர்களுக்க இறையாவதர்க்கென்றே பிறந்தவன்@நான் அவன் மாமிசத்தை ருசித்திருக்கவேண்டும் என்றான் வாய்தவரி” நான் அப்போது சிறுவனாக இருந்தேன்.சிறிதுநேரம் எனது இதயம் படபடத்துவிட்டது. குள்ளநரி கிராமத்திலிருந்து வந்திருந்த எங்கள் குத்தகைதாரார் மனித இதயத்தையும் ஈறலையும் சாப்பிட்டதைப் பற்றி கூறியபோது சாதாரனமாகக் தலையை ஆட்டிக்கொண்டிருந்தான் அலட்டிக்கௌ;ளாமல்.என் சகோதரன் கொடுரக்காரன்தான் இப்பொதும் சரி அப்போதும் சரி. என் சகோதரன் “பெற்ற பச்சிளங்குழந்தைகளை உண்ணுவதர்க்காக ஒருவருக்கெருவர் கைமாற்றிக்கொள்கிறார்கள.; எதைவேண்டுமென்றாலும் கைமாற்றிக்கொள்ளலாம் யாரை வேண்டுமென்றாலும் கூறுபோடலாம்” என்று என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போது நான் வெருமனே கேட்டுக்கொண்டுதான் இருந்தேன் இப்போதுதான் உணருகிறேன் அவன் உதட்டில் அப்போதே மனித கொழுப்பு ஒட்டிக்கொண்டியிருந்ததை.அவன் இதயம்முழுவதமே அடுத்தவர்களின் இதயத்தை உண்டதால் உருவானது.

6
லேசான இருட்டு.இரவா பகலா என்று எனக்கு தெரியவில்லை. திருவாளர் Nஐhவின் நாய் குறைத்துக்கொண்டிருந்தது மீண்டும்.

சிங்கத்தின் கர்ஐனை.முயலின் பயம.; நரியின் தந்திரம்…

7

அவர்களின் தந்திரம் எனக்குதெரியும.; என்னை நேரடியாக கொல்லமாட்டார்கள் பின்விளைவிற்க்கு பயந்து.அவர்களுக்கு அந்த அளவுக்கு தையரிமும் கிடையாது.மறைமுகமாக குழிபறிப்பார்கள்.என்னை தற்கொலைக்கு தூண்டுவார்கள்.கடந்த சில தினங்களுக்கமுன் தெருவிலிருந்தவர்களின் நடவடிக்கையும்
சில தினங்களாக என் சகோதரனின் நடவடிக்கையும் எனக்கு தெளிவாக தெறிகிறது.அவர்களின் எண்ணம் என்னவென்றால் ஒருவன் அவனாகவே கழுத்தில் கயிற்றை மாற்றி தொங்கிகொள்ளவேண்டும்.அப்பொழுததான் அவனின் இதயத்தை நன்றாக சுவைக்க முடியும். அவர்களும் கொலை பழியிலிருந்து தப்பித்துக்கொள்ளமுடியும்.இதில் அவர்களுக்கு இரட்டை சந்தேசம்.மேலும் ஒருவன் அவமானத்திற்க்கும் சாவுக்கும் அஞ்சி அஞ்சி உடல் இழைத்து நாட்களை என்னிக்கொணடிருக்கும்போது, இதுதான் சரியான தருணமென்று சப்பைக் கொட்டுவது அவர்களின் இயர்க்கை குணம்.

அவர்கள் பிணந்திண்ணிகள்! கழுதைபுலி செத்த பிணத்தை திண்ணுமென்றும் பெரிய பெரிய மனித எழும்புகளைக்புகூட கடித்து நொறுக்கி விழுங்கவிடுமென்றும் எங்கோ படித்திருக்கிறேன்.இதை நினைக்கும்போது மயிர்கால்கள் குத்தலிடுகின்றன. கழுதைபுலி ஓணாய் இனத்தை சேர்ந்தது.ஓணாய் ஊணுண்ணி குடும்பத்தைச் சார்ந்தது.அடுத்தநாள் திருவாளர் Nஐhவின் நாய் பலமுறை என்னை பார்த்தது அவர்களின் சதிதிட்டத்திற்க்கு இதுவும் உடந்தை.ஒரு கிழுடு என்னை பார்த்துக்கொண்டிருந்தது.இருந்தாலும் அவர் பார்வை என்னை மயக்கவில்லை.

மிகவும் மன்னிக்க முடியாத நபர் என் சகோதரன்.அவனும் ஒரு மனிதன்தான். அவர்களுடன் சேர்ந்துக்கொண்டு துளியளவும் பயமில்லாமல் ஏன் என்னை கூறுபோட சதிதிட்டம் தீட்டுகிறான்? இத்தகைய பழக்கம் மனிதனை நல்லது கெட்டது எதுவென்றுகூட உணராத அடிமைகுறுடர்களாக்குகிறதா? அல்லது தெறிந்தே குற்றமிலைக்கின்ற இதயமற்றவனா? மனித உண்ணிகளை சபிக்கநேரிட்டால் என் சகோதரனைத்தான் முதலில் சபிப்பேன்.திறுத்த நேரிட்டாலும் முதலில் அவனைத்தான் திறுத்துவேன்.

8

அத்தகைய வாக்குவாதம் அவர்களை சமாதனப் படுத்திறுக்கவேண்டும் ரொம்ப நேரத்திற்க்கு முன்பே….

திடீரென்று ஒருத்தன் உள்ளே வந்தான்.அவனுக்கு இருபது வயது இருக்கும்.அவனுடைய உருவத்தை சரிவர நான் கவனிக்கவில்லை.அவனுடைய முகத்தில் புண்ணகை பூத்திருந்தது.ஆனால் அவன் புண்ணகையில் திருட்டுதனம் இருந்தது.அவனைப் பார்த்து கேட்டேன்: “மனித மாமிசத்தை உண்ணுவது சரிதானா?”

“கடுமையான உணவுப் பஞ்சம் வந்தாழொழிய மனித மாமிசத்தை உண்ணமாட்டார்கள்.”பல்லை இழித்தபடியை பதில் வந்தது அவனிடமிருந்து.

எனக்கு எற்கனவே தெறியும் இவனும் அவர்களில் ஒருவன்.இருந்தாலும் என் தையரியத்தை வரவைத்து மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன்.

“இது சரியா?”
“எதனால இப்படி கேக்க தோனுது? என்ன… கேளிகீளி… பண்றியா…? நல்ல நாலும் அதுவுமா.”

“நல்ல நாலுதான.; நிலவுகூட பாரு பிரகாசமாக ஒளிற்கிறது.இருந்தாலும் எனக்கு உன்னிடம் இதை கேட்க வேண்டும்;;. இது சரியா?”

அவன் குழம்பிப்போய் மண்டையை பிய்த்துக்கொண்டான.; “அய்யோ…சாமி…?”

அப்புறம் ஏன் அவர்கள் இத்தகைய இழிவை செய்கிறார்கள்”?

“எதைப் பற்றி உளருக்கிறாய்?”

“உளருகிறேனா?அவர்கள் மனித மாமிசத்தை உணணுகிறார்கள்.சமீபத்தில்கூட பாரு குள்ளநரி கிராமத்தில். இதைப் பற்றி எல்லா புத்தகத்திலும் குறி;ப்புகள் காணக்கிடக்கு. மைகூட இன்னும் ஈரமாகவே உள்ளது.

அவனுடைய முகம் வாடிவட்டது. வெளவெளத்து போய்விட்டான். “ஒருவேள அப்படி இருக்கலாம்”.என்றான் என்னை முறைத்தவாரே. “ஒருவேள மட்டுமில்லை எல்லா வேளையும் அவர்கள் அப்படிதான்”.

“இது சரிண்ணு படுதா?”

“நான் இதைப்பற்றிபேச விரும்பவில்லை.அப்படியே இருந்தாலும் நீ இதைப்பற்றி பேசக்கூடாது.இதைப்பற்றி வாய்திறப்பதே தவறு”

கோபத்தில் என் கண்கள் சிவந்தவிட்டன.அதற்க்குள் அவன் ஓடிவிட்டான்.எனக்கு வேர்த்து கொட்டிவிட்டது.அவன் என் சகோதரனைக்காட்டிலும் இளையவன்.இருந்தாலும் அவன் அவர்களில் ஒருவன். அவன் அவனுடைய பெற்றோர்களிடமிருந்து கற்றிருக்கவெண்டும்.மேலும் அவன் அவனுடைய குழந்தைகளுக்கும் ஏற்கனவே கற்றுகொடுத்து விட்டிருப்பான். அந்த சிறுவர்கள்கூட ஏன் அப்படி என்னை பார்த்தார்கள் என்று இப்ப காரணம் எண்ணன்னு தெளிவா தெறியுது.

9

எப்போதும் திறந்த வாயை மூடாமலே இருக்கிறார்கள் மாமிசத்திற்க்காக.அதேசமயம் அவர்கள் தம்மை யாராவது பதம்பார்த்துவிடுவார்களா என்ற பயத்தில் உள்ளார்கள்.அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தேக கண்ணோட்டத்தோடே பார்க்கிண்றனர்.

இத்தகைய பழக்கவழக்கங்களை விட்டொழித்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையானதாக இருக்கும். எந்த பயமுமில்லாமல் நன்றாக உறங்கலாம்@ மெல்நடை போகலாம@; நல்ல உணவை உண்ணலாம்.இதை தவிற அவர்களுக்கு மீளுவதர்க்க வேறுவழியில்லை.இருப்பினும் அப்பா-மகன்,கணவன்-மனைவி, அண்ணன்-தம்பி, ஆசிரியர்-மாணவன்,நண்பர்கள்,எதிரிகள்,அறிமுகமற்றவர்கள்; என எல்லாரும் அச்சதிதிட்ட குழுமத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர்கள். மீளவிடாமல் ஒருவரை ஒருவர் தடுப்பவர்கள.;

10
விடியர்காலை என் சகோதரன் எங்கிருக்கறான் என்று சுற்றுமுற்றும் பார்த்தேன.;வீட்டிற்குவெளியை நின்றுக்கொண்டிருந்தான் வானத்தை பார்த்தவாறே. வாசற்படியை தாண்டி அவனுக்கு பின்புறம் நின்றுக்கொண்டு அண்ணே என்று மிகுந்த மரியாதையுடன் அழைத்தேன்.

“அண்ணே, உன்னிடம் ஒருசில விசயங்கள் சொல்ல வேண்டும்”.

வெடுக்கென்று பின்புறம் திரும்பி,”என்ன சொல்லு” என்றான் தலையை ஆட்டிக்கொண்டே.

“இது பெரிய விசயம் ஒண்ணுமில்லண்ணே ஆனா சொல்ல கொஞ்சம் தயக்கமாக உள்ளது. அண்ணே…, எல்லா காட்டுவாசிகளும் முதலில் ஒரு சிறு மனித மாமிசத்துண்டை திண்றுதான் ஆரம்பித்திருப்பார்கள்.பிறகு படிப்படியாக அவர்கள் சிந்தனை மாறமாற ஒருசிலர் மனிதமாமிசத்தை உண்ணுவதை நிறுத்திவிட்டார்கள். அதற்கப்புறம் பண்பட்ட மனிதர்களாக மாறிவிட்டார்கள்.ஆனால் ஒருசிலர் இன்னும் மனிதர்களை உண்ணகிறார்கள்-முதலையைப்போன்று. சிலர் பறப்பன,ஊர்வன,தாவுவனவற்றை கடித்து-ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடசியில் மனிதனை கடிக்க தொடங்கிவிட்டார்கள்.

“முன்னொரு காலத்தில் ஈயா என்பவர் ஐP என்பவருக்காக அவருடைய மகனை சமைத்து போட்டிருக்கார்.அது பழைய கதை. உன்மையிலே சொர்க்கம் மற்றும் நரகத்தை பாண்கூ என்பவர் உருவாக்கிய காலம் தொட்டே ஒருவரை ஒருவர் திண்ணுக்கொண்டிருக்கிண்றார்கள்.ஈயாவின் மகன் காலம் தொட்டு திரு சூசிலின் காலம் வரை மற்றும் திரு சூசிலின் காலம் தொடங்கி குள்ளநரி கிராமத்தில் சமீபத்தில் ஒருவனை கொண்றுதிண்றது வரை.சென்ற வருடம்கூட அவர்கள் ஒரு குற்றவாளியை நகர்புறத்தின் மையத்தில் வைத்து கொண்று அவன் இரத்தத்தில் ரொட்டித்துண்டை நனைத்து நனைத்து சுவைத்திருக்கிறார்கள்.

அவர்கள் என்னையும் திண்ண பார்க்கின்றார்கள்.இதை உண்ணால் கண்டிப்பாக எதுவும் செய்ய முடியாது.ஆனால் ஏன் அவர்களுடன் இணைந்துக்கொண்டாய்? அவர்கள் பிணந்தி;ண்ணிகள் அவர்களால் எதையும் செய்ய முடியும்.என்னை திண்ணுபவர்களால் உண்ணை திண்ண முடியாமல் போய்விடுமா? ஒருவரை ஒருவர் திண்ணும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.உண்ணால் முடிந்தால் உண் வழியை மாற்றிக்கொள்@இப்போதே மாற்றிக்கொள்.அப்பொழுதுதான் எல்லொரும் அமைதியாக வாழமுடியும்.இது காலங்காலமாக நடந்துக்கொண்டிருப்பினும் நாம்; இதை மாற்ற முயற்ச்சியெடுக்க வேண்டும்.இதை செய்ய முடியாதென்று சொல்கிறாயா? எனக்கு தெறியும் அண்ணே நீ அப்படிதான் சொல்வாய்.அன்றொருநாள் நம்முடைய குத்தகைதாரர் குத்தகையை குறைத்துககொள்ளும்படி கேட்டபோது முடியாதென்றுதான் சொன்னாய்”;.

வழக்கம்போல அவன் முதலில் தந்திறமாக சிரித்தான்.பிறகு கொலைக்கார பார்வை அவன் கண்களில் தெறிந்தது.அவர்களின சதிதிட்டத்தை நான் வெளிப்படுத்தியபோது அவன் முகம் வெளுத்துப்போய் விட்டது.வீட்டின் மதில் சுவற்றிர்க்கு வெளியே ஒரு கூட்டம் கூடியிருந்தது.அக்கூட்டத்தில் திருவாளர் Nஐh மற்றும் அவரது நாயும் இருந்தது.எல்லோருமே எட்டி எட்டி உள்ளே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அவர்களின் அனைவரின் முகங்களையும் என்னால் பார்க்கமுடியவில்லை.ஒருசிலர் முகத்தை மறைத்துக்கொண்டிருந்தனர். மற்றும் சிலர் வயதானவர்கள். நீண்ட பற்களையும் சிவந்த முகத்தையும் கொண்டிருந்தனர்.எனக்கு தெறியும் அவர்கள் எல்லோரும் மனித மாமிசத்தை திண்ணக்கூடிய கூட்டணியில் உள்ளவர்கள்.மேலும் அவர்கள் அணைவரும் ஒரே மாதிரி எண்ணம் கொண்டவர்களில்லை எந்தவகையிலும்.சிலர் எண்ணுகிறார்கள் இது காலம் காலமாக பழக்கத்திலுள்ள ஒண்றுதான் என்;றும்.மனித மாமிசம் உடலுக்கு நல்லதென்றும்.வேறு சிலரோ மனித மாமிசத்தை திண்ணக்குடாதென்று நினைக்கின்றார்கள் ஆனால் அவர்களால் விட முடியவில்லை.மேலும் அவர்களின் ரகசியம் வெளியே தெறிந்துவிடுமென்றும் அஞ்சுகின்றனர்.நான் சொல்லியது அவர்களின் கோபத்தை அதிகப்படுத்தியதென்றாலும் தந்திரமாக நமட்டு சிரிப்பு சிரித்தார்கள்.

உடனே என் எகோதரனின் முகம் வாடிவிட்டது.

“; இங்கு என்ன கூட்டம் கூடிட்டு!”என்று சத்தம் போட்டான்.இந்த பைத்தியக்காரனை வேடிக்கை பார்பதனால் ஏதாவது பிறயோசனமுண்டா?

அதன்பிறகு அவர்களின் தந்திரத்தின் ஒரு பகுதியை என்னால் உணரமுடிந்தது.அவர்கள் ஒருபோதும் அவர்களின் நிலையிருந்து மாறப்போவதில்லை. அவர்களின் திட்டம் ஏற்கனவே தீட்டப்பட்டு விட்டது.எனக்கு பைத்தியக்காரன் என்ற முத்திரை குத்திவிட்டார்கள். எதிர்காலத்தில் அவர்கள் என்னை சாப்பட்டபிறகு,அவர்களுக்கு எந்த தொல்லையும் இருக்கப்போவதில்லை.மேலும் மக்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.எங்கள் குத்தகைதாரர், கிராமத்துமக்கள் ‘கெட்டசத்தி’யை கொண்று திண்றதைப் பற்றி கூறியதும் ஓருவகையான தந்திரம்தான் -அவர்களின் பழைய தந்திரம்.

முதியவர் சென் மிகுந்த கோபத்தோடு உள்ளே வந்தார்.ஆனால் அவர்களால் என் வாயை மூடமுடியவில்லை. நான் அவர்களை கடுமையாக எச்சரிக்க வேண்டும்:

நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். உங்களுடைய அடிமனதிலிருந்து மாற்றம் வரவேண்டும்.எதிர்காலத்தில் மனிதமாமிசத்தை உண்ணுபவர்களுக்கு இப்பூமியில் இடமில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும்.

நீங்கள் மாறாவிட்டால் ஒருவரை ஒருவர் திண்றுவிடுவீர்கள். எஞ்சியிருப்பவர்களையும் உண்மையான மனிதர்கள் துவைத்து எடுக்கபோகிறார்கள்.குள்ளநரிகளை வேடவன் வேட்டையாடுவதுபோல- எலிகளை வேட்டையாடுவதைபோல!

முதியவர் சென் எல்லோரையும் போகும்படி துறத்திவிட்டார்.என்னுடைய சகோதரனும் மாயமாக மறைந்துவிட்டான்.முதியவர் சென் என் அறைக்கு போகும்படி என்னை வழியிறுத்தினார்.சூரியன் மறையும் நேரம்.அவர்கள் வீசும் துக்குக்கயிறு என் தலைககுமேலே ஆடிக்கொண்டிருந்தது.பிறகு கொஞ்ச கொஞ்சமாக நீண்டு எ;ன்னை இறுக்கிகொண்டது.

அதன் இறுக்கம் மிகவும் பழமாக இருந்தது.என்னால் நகரக்கூட முடியவில்லை.அவர்கள் நான் சாகவேண்டுமென்று நினைக்கின்றார்கள். கயிறு என்னை இறுக்கியது கற்பனை என்பதை அறிந்தும் உதும்பு உதும்பு என்று உதும்பினேன்.வியர்வையில் நனைந்து விட்டேன்.இருந்தாலும் நான் அவர்களை எச்சரிக்க வேண்டும்:

“நீங்கள் என்றாவது ஒருநாள் உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். உங்களுடைய அடிமனதிலிருந்து மாற்றம் வரவேண்டும்.எதிர்காலத்தில் மனிதமாமிசத்தை உண்ணுபவர்களுக்கு இப்பூமியில் இடமில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும….”

11

சூரியன் ஒளிர்வதை முற்றிலும் நிறுத்திக்கொண்டது.என் அறையின் கதவு அதற்க்கு பிறகு திறக்க படவேயில்லை.தினமும் இரண்டுவேலை சாப்பாடு தவறாமல் எனக்கு கிடைத்தது.

சாப்பாட்டுகுச்சியை கையில் பிடித்துக்கொண்டு என் சகோதரனைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
என்னுடைய குட்டி தங்கை எப்படி இறந்துபோனால் என்பது எனக்கு தெறியும்:அவன்தான் அதற்க்கு காரணம்.என் தங்கைக்கு அப்போது அய்ந்து வயதுதான் இருக்கும்.அவள் எவ்வளவு அழகாக இருந்தாள் பாவம் என் தங்கை. இன்னும் அவள் உருவம் என் கண்ணில் அப்படியை இருக்கு.என் அம்மா அன்று தொடங்கி அழுதுக்தொண்டேதான் இருந்தாள். அம்மாவின் அழுகை அவனுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும்.ஆகையால் அவன் அழாதே என்று அம்மாவை சமாதானப்படுத்தினான்.அநேகமாக அவன்தான் தங்கையையும் திண்ணிருக்கவேண்டும்.

என் சகோதரன்தான் என் தங்கையையும் திண்ணிருக்கான்.ஆனால் என் அம்மாவிற்க்கு தெறியுமா தெறியாதா என்பது எனக்கு தெறியவில்லை.

அம்மாவிற்க்கு தெறிந்திருக்குமென்றுதான் நினைக்கின்றேன்.அம்மா அழுதுதான்கொண்டிருந்தாள்.ஆனால் வாய்திறந்து எதுவும் பேசவில்லை.அனேகமாக அவள் இதில் தவறொன்றுமில்லை என்று நினைத்திருக்கவேண்டும்.எனக்கு இன்னும் நேபகத்தலிருக்கு எனக்கு அப்போது வயது நான்கு அல்லது அய்ந்துதான் இருக்கும்.என் அம்மாவிடம் என் சகோதரன் சொன்னான்: பெற்றோர்கள் தீறாத நோய்க்கு ஆட்பட்டிருக்கும்போது யார் ஒருவன் தன் சதையை அறுத்து வேகவைத்து தான் பெற்றோர்களுக்கு கொடுக்கின்றானோ அவன்தான் உண்மையான புதல்வன்.அம்மா அதற்க்கு எதிறாக ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.மனித சதையின் ஒரு சிறிய கதுப்பை திண்ண முடிந்தால் பிறகு முழுவதும் திண்ணுவதற்க்கு கடினமொன்றுமிருக்காது இல்லையா?

சும்மா ஒப்புக்கு அழுவதை நினைத்தால் என் இதயமே வெடித்துவிடும்போல இருக்கு@மிகவும் வினோதமாகவும் இருக்கு!

12

இதை நினைக்கும்போது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.இது எப்போதும் என் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கு.நான்காயிரம் ஆண்டுகளாக மனித மாமிசத்தை உண்ணும் சமுகத்தில் நான் வாழ்ந்துக்கொண்டீருக்கிறேன்.என் தங்கை இறந்தபோதுதான் குடும்ப பொறுப்பை என் சகோதரன் ஏற்றுக்கொண்டான்.என் தங்கையின் சதையை நாங்கள் உண்ட உணவில் என் சகோதரன் எங்களுக்கு தெறியாமலே கலந்து எங்களை உண்ண செய்திருப்பான்.

என் தங்கையின் சதையை நானும் அறியாமல் உண்டிருக்கலாம். என் மனசாட்சியை கேட்கிறேன்….

என்னைப்போன்ற ஒரு மனிதன் – நான்காயிரம் ஆண்டுகள் மனித மாமிசத்தை உண்ணும் வரலாற்றைக் கொண்ட – அதுவும் அதைப் பற்றி தெரிந்தபிறகு – எப்படி உண்மையான மனிதர்களின் முகத்தில் விழிப்பேன்.

13
மனிதமாமிசத்தின் ருசி அறியாத குழந்தைகள் இன்னும் இருக்கின்றார்கள்!

அக்குழந்தைகளை காப்பாற்றுங்கள்….

ஆசிரியர் குறிப்பு:

லு சூன்(1881-1936)தற்கால சீன இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர்.சீனாவின் சென்ஐpயாங் மாகாணத்தல் பிறந்தவர்.மூடநம்பிக்கையில் ஊரிய பாட்டியால் வளர்க்கப்பட்ட சிந்தனைவாதி. சப்பானில் மருத்துவம் பயின்று, படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு சீனா திரும்பி புரச்சிகர எழுத்தாளராகவும் சிந்தனையாளராகவும் திகழ்ந்தவர்.பத்திரிக்கை ஆசிரியராகவும், பல்கலைக்கழகத்தில் சீன இலக்கிய பேராசிரியராகவும் சிலகாலம் பணியாற்றியவர். கண்பூசியஸின் வாழ்வியல் கோட்பாட்டை கடுமையாக விமர்சித்தவர்.கவிதை,சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என அணைத்து தளங்களிலும் இயங்கியவர்.இவருடைய எழுத்து பன்னிரண்டு தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளன.மேலும் இவரின் படைப்புகள் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது.

Series Navigation

முனைவர் கு.சிதம்பரம்,சீனா

முனைவர் கு.சிதம்பரம்,சீனா