உதவி

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

தெலுங்கில் அவசரால ராமகிருஷ்ணா ராவ் தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்


ரிசெப்ஷனிஸ்ட் வசுந்தராவின் காலடிச் சத்தம் சீனியர் ஆபீஸர் சிவப்பிரசாதிற்கு அடையாளம் தெரியும்தான்.
நிமிர்ந்து பார்க்காமலேயே “சிட் டவுன்” என்றான்.
ஆனால் அவள் உட்காரவில்லை. ஆபீஸ் ரூல்ஸ்படி அப்படி உட்காரவும் கூடாது. அந்த விஷயத்தில் அவள் மட்டுமேயில்லை. அவனாலும் எதுவும் செய்ய முடியாது. ஆபீஸ் வேலைகளiல் எவ்வளவுதான் ஆழமாக மூழ்கிப்போயிருந்தாலும் அவள் முன்னிலையில் தம்மிருவருக்கும் நடுவில் உள்ள வித்தியாசத்தை நினைத்துப் பார்க்காமல் அவனால் இருக்கமுடியவில்லை.
தான் இப்படி உசத்தியான இருக்கையில் அமர்ந்திருப்பது, அவள் அப்படி நின்றுகொண்டிருப்து, இது சரியில்லை. வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொள்ளும் மனவலிமையைப் பொறுத்து ஹோதாவை முடிவு செய்வதாக இருந்தால் அவளை எங்கேயோ உயரத்தில் உட்கார வைத்து தன்னைக் கட்டாந்தரையில் உட்கார வைத்திருக்க வேண்டும் என்பது சிவப்பிரசாதின் உத்தேசம்.
வாழ்க்கையில் தனக்கென்ன குறை? ஆண்மகன். பெற்றோர்கள் இல்லாவிட்டால்தான் என்ன? குழந்தைகள் இல்லாத சித்தியும், சித்தப்பாவும் அன்புடன் வளர்த்து ஆளாக்கி, படிக்க வைத்தார்கள். கல்யாணம் செய்து வைத்தார்கள். சொந்தவீடு. பெரிய கம்பெனியில் நல்ல வேலை. காரும், பங்களாவும். எதற்கும் குறையில்லாத வாழ்க்கை.
தான் அப்ரன்டீஸாக அந்த கம்பெனியில் சேர்ந்த போது வசுந்தராவின் கணவன் சுவாமிநாதன் கெமிஸ்டாக அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இஞ்ஜினியரிங்கில் போஸ்ட் கிராட்யுயேஷன் முடித்திருந்ததால் வேலைக்குச் சேர்ந்த இரண்டு வருடங்களுக்குள்ளேயே தனக்கு பிரமோஷன் கிடைத்துவிட்டது. அந்த வருடம்தான் அந்த விபத்து நேர்ந்தது. கியாஸ் லீக் ஆனதில் இரண்டு சகஊழியர்களுடன் சுவாமிநாதனும் இறந்துபோனான்.
அப்பொழுது வசுந்தராவின் பெரிய மகனுக்கு நான்கு வயது, சின்னவனுக்கு இரண்டு, மடியில் மூன்று மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை. கம்பெனியின் விதிகளiன்படி நஷ்டஈடு தருவார்கள். வழங்கவும் செய்தார்கள். அந்தம்மாள் எட்டாவது வரையில்தான் படித்திருந்தாள். உயிரோடு இருந்த வரையில் சுவாமிநாதன் மனைவிக்கு வெளiஉலகம் தெரியாதவாறு எல்லாம் தானே பார்த்துக் கொண்டதால் வசுந்தராவுக்கு பொது அறிவு ரொம்பக் குறைவு. படிப்பும் அதிகம் இல்லை.
சுபாவத்திலேயே தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் சிவபிரசாத், எதிராளiயிடம் நறுக்கென்று இரண்டு வார்த்தைகள் பேசி பழக்கமில்லாத சிவப்பிரசாத் சுவாமிநாதனின் குடும்பத்திற்காக களத்தில் இறங்கினான். பெரியவீட்டைச் சேர்ந்த பெண் என்பதால் பியூன் வேலைக்கு வசுந்தரா ஒப்புக்கொள்ள மாட்டாளோ என்று முதலில் தயங்கினான். கிளாஸ் ஃபோராக இருப்பவர்களுக்கு அந்த நாளiல் குவார்டர்ஸ் வசதி கிடையாது. கம்பெனிக்காரர்கள் வெளiயே போகச் சொல்லிவிடுவார்களோ என்னவோ, மும்பை போன்ற மாநகரத்தில் இருக்க இடமில்லாமல் குழந்தைகளுடன் திண்டாடப் போகிறாளே என்று கவலைப்பட்டான். ஆனால் நேர்மைக்கும், திறமைக்கும் மறுபெயராக இருந்த அவனுடைய வேண்டுகோளை கம்பெனி ஏற்றுக் கொண்டது. என்றும் இல்லாத விதமாக நடுநிலைமையை வகித்து, விதியால் வஞ்சிக்கப்பட்ட அந்த தாயும் குழந்தைகளும் நடுத்தெருவுக்கு வந்து விடாமல் அவன் காப்பாற்றினான்.
எந்த மனிதனுக்காக இருந்தாலும் எந்த நிலைமையிலும் இன்னொருத்தரின் உதவி என்பது ஒரு எல்லை வரையிலும்தான். சகமனிதனிடமிருந்து சாசுவதமாக உதவியை எதிர்பார்ப்பது, கண்ணுக்குத் தெரியாத கடவுளiடம் கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்திருப்பது மனிதனின் பலவீனத்தை எடுத்துக் காட்டும். வசுந்தராவிடம் இந்த இரண்டும் பெயருக்குக்கூட தென்படாது. அதனால்தான் சிவப்பிரசாதின் பார்வையில் அவளுக்கு மிக உயர்ந்த இடம்.
கணவன் இறந்துபோன சமயத்தில் புயலில் சிக்குண்ட இளம்கன்று போலிருந்த வசுந்தரா இந்த பதினான்கு வருடங்களiல் அடுத்தவர்களுக்கு நிழல்தரும் மரம் போல் தன் கண் முன்னாலேயே வளர்ந்திருப்பது சிவப்பிரசாதிற்கு வியப்பாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. தான் ஏதோ பெரிய உதவி செய்துவிட்டாற்போல் நினைப்பது முட்டாள்தனம். ஒரு தடவை சொந்த கால்களiல் ஊன்றிக் கொண்டபிறகு, இனி யாரிடமும் அந்தம்மாள் உதவிக்காக யாசிக்கவில்லை. மூன்று குழந்தைகளையும் பெருமைப்படும் விதமாக வளர்த்தாள். பெரிய குழந்தைகள் இருவரும் இண்டர் முதல் வகுப்பில் பாஸ் செய்தார்கள். அவர்கள் இருவரும் இப்பொழுது Aஹுதராபாத்தில் கோச்சிங்fக் சென்டரில் எம்.செட். பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இனி மூன்றாவதாகப் பிறந்த பேபியின் சுட்டித்தனத்தைப் பார்த்து ஈரக்கப்படாதவர்கள் இருக்க முடியாது. அவளுக்கு வராத மொழியில்லை. விளையாடாத விளையாட்டு இல்லை. வசுந்தரா பிரைவேட்டாக பட்டப்படிப்பை முடித்துவிட்டு, டைப்ரைட்டிங் Aஹுயர் பாஸ் செய்துவிட்டாள். ஹிந்தியில் விசாரதா முடித்துவிட்டாள். சீனியர் ரிசப்ஷனிஸ்டாக பதவி உயர்வு பெற்று கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாள். ஒருத்தரை ஒரு வாரத்தை சொல்ல மாட்டாள். அடுத்தர் ஒரு வார்த்தைச் சொன்னால் சகித்துக் கொள்ளவும் மாட்டாள். வேலைரீதியாய் எவ்வளவு டென்ஷன் ஏற்பட்டாலும் முகத்தில் அந்த முறுவலை மட்டும் இழக்கவும் மாட்டாள்.
தான் ஏதோ அவளை இந்த நிலைக்கு உயர்த்திவிட்டோம் என்று சிவப்பிரசாத் ஒருநாளும் நினைத்ததில்லை. ஆனால் சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் அவளுக்கு உதவி செய்யவேண்டும் என்ற பலவீனம் மட்டும் அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.
$இன்று இரவுக்கே ரிசர்வேஷன் கிடைத்துவிட்டது சார். நானும் பேபியும் இன்றே கிளம்பிப் போகிறோம். ஐந்து நாட்கள் லீவுக்கு அப்ளை செய்திருக்கிறேன். இந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து Aஹுதராபாத்தில் இருக்கப் போகிறேன். மறுபடியும் திங்கட்கிழமை ட்யூட்டிக்கு வந்து விடுவேன். ஃபைல்களை எல்லாம் மேரியிடம் ஒப்படைத்துவிட்டேன். பெண்டிங்கில் உள்ள டைப்பிங் மேட்டரை எல்லாம் அருணாவிடம் கொடுத்துவிட்டேன். இனி நான் போய் வரட்டுமா சார்.$
வசுந்தரா வாய்விட்டு கேட்காமலேயே தான் செய்யக்கூடிய உதவி அவன் மனதில் தோன்றியது.
வசுந்தராவில் இரண்டு மகன்களும் தாய்க்குத் தொலைவாக Aஹுதராபாத்தில் படித்து வருகிறார்கள். எவ்வளவு ஓழுக்கமாக வளர்க்கப்பட்ட குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களiடமிருந்து மாதா மாதம் பணம் கிடைத்துக் கொண்டிருந்தால் இந்தக் காலத்தின் ஈர்ப்புகளுக்குத் தாங்கிக் கொண்டு முன்னுக்கு வரவேண்டும் என்றால் எளiதாக நடக்கக் கூடிய காரியமா என்ன?
தன்னுடைய சித்தியும், சித்தப்பாவும் சமீபத்தில்தான் சொந்த வீட்டுக்கு வந்து விட்டதாக தெரியப்படுத்தியிருந்தார்கள். சித்தப்பா ரிடையராகி பத்தாண்டுகள் கழிந்துவிட்டாலும் ரொம்ப சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்போலும். இல்லாவிட்டால் தன் வீட்டிலேயே வந்ததும் வராததுமாய் மேத்ஸ் கோச்சிங் செண்டரை தொடங்கியிருப்பாரா? அதுமட்டுமே இல்லை. அவர்கள் வீட்டில் முன் போர்ஷனில் இருந்தவர்கள் காலி செய்துவிட்டதாக சித்தி எழுதியிருந்தாள். வசுந்தராவின் மகன்கள் எப்படியும் ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து வேறு எங்கேயோ குடியிருப்பதாக அவளே சொல்லியிருக்கிறாள். அவர்களை சித்தியின் முன் போர்ஷனில் குடியிருக்கச்செய்து சித்தப்பாவின் மேற்பார்வையில் அவர்களை தங்க வைத்தால் என்ன? ஆண் குழந்தைகள் வளர்ந்து ஆளாகிவிட்டால் இனி மகளுடைய பொறுப்பு மட்டும்தான் அவளுக்கு பாக்கியிருக்கும்.
ஒருத்தருடைய உதவி இல்லாமலேயே வசுந்தரா தன் வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டுவிட்டாள். இதையெல்லாம் விளக்கமாகச் சொல்லி தன் வீட்டாரின் உதவியைப் பெற்றுக்கொள்ளச் சொன்னால் எப்படியும் அவள் சம்மதிக்கமாட்டாள். எல்லாவற்றையும் விவரமாக எழுதி வசுந்தராவின் கையில் கொடுத்து சிவப்பிரசாத் சொன்ன வார்த்தைகள் இவை.
$என்னை வளர்த்து ஆளாக்கிய பெரியவர்கள் Aஹுதராபாத்தில் இருக்கிறார்கள். இதுதான் முகவரி. எங்களுடைய நலனை தெரிவித்துவிட்டு, சித்தப்பாவிடம் இந்தக் கடிதத்தைச் சேர்பித்துவிடுங்கள்.$
சிவப்பிரசாத் கொடுத்த முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து, Aஹுதராபாத் சென்ற மூன்றாவது நாள் வசுந்தரா அவர்களைச் சந்தித்தாள். அவன் கொடுத்த கடிதத்தை அவர்களiடம் சேர்ப்பித்தாள்.
அந்தக் கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்ட நபர் அவ்வளவு சுறுசுறுப்பாக, பளiச்சென்று இருப்பதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியாமல் போய் விட்டிருக்க வேண்டும். அவர்களுடைய மகன் கீழே வேலை பார்க்கும் ஊழியராகத் தவிர வேறு விதமாக பார்ப்பதற்கு அவர்களுக்கு மனம் வரவில்லை போலும். உள்ளே போய் இரண்டு வரிகளை எழுதிவிட்டு கவரில் வைத்து ஒட்டிக் கொடுத்தார் சித்தப்பா.
$இதோ பாரும்மா….அரிசி அரை மூட்டை எங்கள் பையனுக்காக கட்டித் தயாராக வைத்திருக்கிறோம். புதிதாக நாடாக் கட்டில் கூட பேக் செய்து வைத்திருக்கிறோம். நீ ஊருக்குப் போகும் போது இங்கே வந்து எடுத்துக் கொண்டுபோய் பையனிடம் சேர்ப்பித்துவிடு.$ நைச்சியமாக பேசிக் கொண்டே பாரத்தை அவள் மீது சுமத்தினார்கள்.
எங்கே எப்போ நிற்குமோ தெரியாத ரயில்பயணத்தில், அதிலும் இவ்வளவு தொலைவு தனியாக ஒரு பெண் இவ்வளவு பாரத்தைச் சுமப்பது சாத்தியம் இல்லை என்று வசுந்தரா அந்த நிமிடமே முடிவு செய்துவிட்டாள்.
எதையும் எடுத்துக் கொள்ளாமலேயே மும்பாய்க்கு வந்துவிட்டாள்.
$என்னால் எப்படி முடியும் சார்?$ என்று தௌiவாகவே சிவப்பிராதிடம் சொல்லிவிட்டாள்.
அந்தக் கடிதத்தில் சித்தப்பா என்ன எழதியிருந்தார் என்று சிவப்பிரசாத் ஒருத்தனுக்குத்தான் தெரியும்.
$எப்பவோ ஆம்படயான் செத்துப் போய், நாற்பது வயது கடந்த பொம்மனாட்டி இப்படித்தான் அன்று மலர்ந்த பூவாக இருப்பாளா? இவளுக்கா நாம் உபகாரம் செய்ய வேண்டும்? அவளுடைய மயக்கத்தில் வீழ்ந்துவிட்டாய்போல் தெரிகிறது. உன் குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக்கொள்.$
சிவப்பிரசாதால் தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. வசுந்தரா போன்றவர்களுக்கு தன்னைப் போன்றவன் எந்த உதவியும் செய்யாமல் இருப்பதுதான் எல்லாவற்றையும் விட பெரிய உதவி.

தெலுங்கில் அவசரால ராமகிருஷ்ணா ராவ்
தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்

உதவி

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

அஜய் சுந்தர்


நெய்வேலியில்தான் அந்த இலக்கிய சந்திப்பு. .அவனை யாரேனும் அதிசயமாய்தான் கூட்டத்திற்கு அழைப்பார்க்ள. அதற்கு நேரம் கிடைத்து போய் வருவது பெரிய விமூயம் . கூட்டத்திற்கு அவனை ஏன் அழைக்கிறார்க்ள. ஏன் அழைப்பது இல்லை என்கிற ஆராய்ச்சிக்குள்ளே எல்லாம் அவன் சென்று வந்ததில்லை. ஏதோ சில நாவல்கள் எழுதியிருக்கிறான் அவன், அப்படியொன்றும் கொடிக்கட்டிக்கொண்டு பறக்கவும் இல்லை. தமிழைவிட ஆங்கில இலக்கியங்களின் பரிச்சியம் அவனுக்கு மெருகு சேர்ப்பதாக சுற்றியுள்ளோர் எண்ணிக்கொண்டார்கள் அவனுக்கு அவ்வளவு தெரிகிறது என்பதும் விமூயமே இல்லை. கூப்பிட வந்தவர்களுக்கு ஆங்கில இலக்கியத்தில் பரிச்சயம் அனேகமாய் இருப்பது இல்லை. கூட்டம் ஏற்பாடு செய்பவர்களுக்கும் , மராமத்து வேலைகள் அத்துப்படி. ஆகின்ற அளவுக்கு இலக்கிய சமாசாரங்க்ள எட்டுவதில்லை. எட்டிவிட்டால் பிறகு அந்தக் காரியத்தைச் செய்ய ஆட்க்ள அம்போ ஆகிவிடும். ஈசுவரகிருபையால் இந்த ஏற்பாடுகள் இருக்கலாம். இவை போல் இன்னும் எத்தனையோ இந்த ரகத்தில் இருக்கவு[ம் கூடும்.

பஸ ஸ்டாண்டு சென்று பஸ் பிடித்திருக்கலாம் . அதற்கு இன்னும் அரைமணி நேரம் பிடிக்கும் இரண்டு ரூபாய் சின்னசெலவு வேறு. . வீட்டுக்குதெரியாமல் எத்தனை தரம் நாக்கைபிடிங்கிக்கொள்ள டிகிறது. அரை ஒன்று என்று மிச்சம் வைத்தால் கோணலமாணலாய் புத்தகம் வா ங்கலாம. ஆனால் நம்தலையில் கட்டப்படும் புத்தகங்களுக்கு காசு கொடுதது அழவேண்டும். தரமில்லாதவைகளே தலையில் கட்ட அணிவகுக்கும் நல்லதுகள் அடுப்பங்கரையைத்தாண்டுவது இல்லை. அசுரம்பலம்.

பொதுமருத்துவமனை நிறுத்தத்திலேயே பஸ்பிடித்தான். பதினேழு என்று எழுதி நகரப்பேருந்து வந்தது. பஸ்ஸில் கூட்டம் . நிற்பதுதான் சாத்தியம். அனேகமாய் வாடிக்கையும் கூட .டவுன்பஸ்ஸில் அமர்ந்து பயணிப்பதற்கென்றே சிலர் பிறந்திருப்பார்களென்று தான் தோன்றுகிறது. . சிலருக்குத்தான் அப்படி சித்திக்கும். அப்படியே ஒரு இருக்கை காலியாகி இருந்தததென்றால் கிட்டே போனால் வாந்தி ஈமூpக்கொண்டு சகிக்காது பண்ருட்டி என்று ஒரு டிக்கெட்டை வாங்கினான் பண்ருட்டிக்குச் சென்று நெய்வேலிக்கு பஸ் வேறொன்று பிடித்தாகவேண்டும் நெடுக்கு வாட்டில் கம்பியை பிடித்துக்கொண்டு நின்றான். இடைஇடையே நெய்வேலியில் என்ன பேசுவது என்று யோசித்தான் வயர் கூடைக்குள்ளாய் அமர்ந்திருந்து சதி செய்யும் சில புத்தகங்களை பர்ர்த்துக்கொண்டான். கீட்சும் பாரதியும் பற்றி பேசத்தான் அவனை நெய்வேலியில் அழைத்திருந்தார்கள். அழகான பொருள் எபபோதும் ஆனந்தம் வழங்குவது. மெய்யே அழகு, அழகென்பது மெய் என்றல்லாம் மனதில் எண்ணிப்பார்த்துக்கொணடே பயணித்தான். நெல்லிக்குப்பம் வந்தது. கருவாடு பையை எடுத்துக்கொண்டு ஒரு பயணி நெல்லிக்குப்பத்தில் பேருந்துக்குள் ஏறவே . இது என்னடா தலைவலியாய்ப போனது என்று முன்பக்க வாயிலுக்குச்சென்று நின்று கொண்டான். கருவாடு வாசனையா அல்லது நாற்றமா அவரவர் பாடு. .அவனுக்கு கடுப்பாக இருந்தது. இந்த மீன்கள் குளத்தில் இருக்கின்றவரை அழகாய் இருக்கின்றதுதான் கரைவந்து தாண்டிக் கூடைக்குள் வந்துவிட்டால் துர்நாற்றம் தாங்கவே சாத்தியம் இல்லை. என்ன செய்வது. கொல்கத்தாவில் பிராமணர்கள் கூட மீன் சாப்பிடுவதாகவும் . திருமணத்திற்கு மீன் சமையல் அவசியம் என்றும் கேள்வித்தான் பட்டிருக்கிறான் இந்தப்பகுதியில் பருப்பு இல்லாம கல்யாணமா என்பார்கள் அதேபோல் வங்காளிகள் மீன் சமைக்காத திருமணமா என்று சொல்லிக்கொள்வார்களாம் தேசாரம்

யோவ் யாருய்யா நீ , நடுத்தரவயது பெண்ணின்குரல் திரும்பிப்பார்த்தான். மனம் கீட்சுன் கவிதைகளில் லயித்துக் கொண்டிருந்தது.

தன்னை இல்லை. வேறு யாரையோ என்று எண்ணினான். யோவ் உன்னைத்தான், வெளஸ்தையே கெடயாதாடூ மீண்டும் அதே பெண்ணின் குரல்தான் . இந்தமுறை தன்னைத்தான் அவள் பேசுகிறான் என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. பஸ்ஸில் இருந்தவர்கள் எல்லோரும் அவனையே பார்த்தார்கள் . என்னம்மா யாரு என்ன பேசுற,. வெக்கமே கெடயாதா டூ உங்களுக்கு எல்லாம் பேந்த பேந்த விழித்தான் இது என்ன விபரிதம் என்று எண்ணினான்

என்னய்யா பாக்குறா ஆஸ்பத்திரி ஸ்டாப்புல ஏறும்போதே இடிச்சிடுனு ஏறுன.

சரி போவுதுன்று உட்டன். நெல்லிக்குப்பம். வந்தப்புறம் உள் இடி கூடாதுன்னுதான் டிரைவர் பக்கம் வந்து நின்னன். இப்ப நீயும் இங்குவ்நது கிட்ட நிக்குற. இடிக்குற, இளிக்குற, என்ன.ய்யா நெளpச்சிட்டு இருக்குற. சுதிமதி இல்லாத ஆம்பளையா நீ. அக்கா தங்கச்சி யோட பொறக்கல குடும்பம் அதுஇதுன்னு எதுவும் இல்லாத தருதலயா, எருமமாடு எருமமாடு . அவனுக்குத் தலைசுற்ற ஆரம்பித்தது. இதிலிருந்து எல்லாம் எப்படி வெளிவருவது . இது எனன சோதனை. கீட்சும் பாரதியும சிரித்துக்கொண்ட மாதிரி உணர்ந்தான். கண்கள் குளமாகி இருந்தது

அம்மா.

என்ன அம்மா அமர்ந்திருந்த ஒரு பயணி ஆரம்பித்தான் பண்ருட்டி போவுற வரைக்கும் வால சுருட்டி வச்சக்க தெரிதா. ஆளா பாத்தா படிச்சமாதிரி தெரிது. நடப்பு எல்லாம் நாகரிகமா இல்லையே. கம்முனுவா, இன்னும் செத்த நேரம் . இல்லன்னு வையி, ஸ்டேஷனுல கெடக்க வேண்டியதுதான் அப்புறம் கேசுகீசுனு ரொள்ளுல மாட்டிக்கு வ.

அந்த நடுத்தர வயது பெண் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டாள் .அவள் முகம் நரகலை மிதித்த மாதிரி தெரிந்தது. அவனுக்குஅழவேண்டும் போல் இருந்தது. அழுகையை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

பேருந்தின் கண்டக்டர் அவனருகே வந்தான். இன்னும் ரவ நேரம் தாயாபுள்ளயா போவுலாம். அந்த ராகு கேது வுட்டாதானே, ஷனங்க என்னா செய்யுறது என்று நியாயம் சொன்னான்.

எதிரே இருந்த இருக்கையில் ஒரு இளம் பெண். அமர்ந்திருந்தாள். வங்கியிலோ அல்லது ஏதேனும் லொள்ளு அதிகம் இல்லாத அலுவலகம் ஒன்றிலோ பணியாற்றுபவளாய் இருக்கலாம் . டக்கென்று தன் உறாண்ட் பேக்கை திறந்து நோட்டாசு ஒன்றினைக்கையில் எடுத்துக் நேரமும் இடமும் பார்த்துக் கொண்டான்.

ஆகா, என்றுஅவனுக்கு நினைப்பு வந்து முட்டியது. அவன் பெயர் அச்சிட்ட நோட்டாசுதான் கீட்சும் பாரதியும் என்கிற தலைப்பும் தெரிந்தது. அவள் அந்த நோட்டாசை மீண்டும் பத்திரப்படுத்தினாள் அவன் போகின்ற அதே கூட்டத்திற்குத்தான் அவளும் போகின்றாள். என்பது உறுதியாகிவிட்டது. இது ஏது விபரிதம் என்றுஅவனுக்கு ரணமாகிப்போனது மனது.

பண்ருட்டி பேருந்து நிலையம் வ்நதது. அந்த நடுத்தர வயது பெண் வண்டியை விட்டு கீழிறங்கினான். அவனிடம் நேராய் வந்தாள்

புத்திய பொடறில வச்சிகாதே. யாபகம் இருக்கட்டும் இதோடு போவுட்டும். பொழச்சிபோ எச்சிக்கழுதை சொல்லி விறுவிறு என்று நடந்து போனாள். அவன் கீட்சையும் பாரதிiயுயம் தொலைத்துவிட்டு நெய்வேலி பேருந்துக்காய் நின்று கொண்டிருந்தான். கையில் நோட்டாசு வைத்திருந்த அந்த இளம் பெண் ?ம் நெய்வேலி பஸ்பிடிக்க காத்திருக்கிறாள். ஆமாம் அவளும் இலக்கிய கூட்டத் திற்கு வருகிறாள் என்பது தெரிந்து விட்டது. இத்தனை அசிங்கமும் அமர்க்களமும் அவளுக்கு தெரிந்திருககலாம் . நாம் யார் என்பது அவளுக்குத் தெரியாதிருந்ததில் பிழைத்தோம் என எண்ணினான். .

கீட்சும் பாரதியையும் நினைத்து நினைத்து பார்த்தான். எதுவுமே ஞாபகத்துக்கு வராமல் இம்சித்தது. அவமானப்பட வேண்டிய நேரம் என்று எண்ணி வருத்தப்ப்டடான் நெய்வேலி நகரம் என்று எழுதி க்கொண்டு முன்னும் பின்னும் ஒரு பேருந்து உறுமிக்கொண்டது. அந்த நோட்டாஸ் வைத்திருந்த பெண் ஏராத வண்டியாய்ப்பார்த்து ஏறி ஆகவேண்டும் என்று எண்ணினான். அவளும் அந்த வண்டியில் ஏறாமல் நின்று கொண்டிருந்தாள் நாம் ஏறிவிடுவோம் கூட்டத்திற்கு நேரமாகி பிரச்சனையாகிவிடும் . மானமே போயிற்றுதான்

என்எறன்னி நெய்வேலி பேருந்து நோக்கி அவன் நடந்தான் அந்தப்பெண் ஒன்றும் அசைவதாய் க்காணோம் அவனே பேருந்துக்குள் ஏறிக்கொண்டான். ஒரு இருக்கை காலியாக இருந்தது. நல்ல வேளையாக அமர்ந்து கொண்டான் இனி நிம்மதி என்று எண்ணினான். பஸ் கிளம்பத்தயாரானது. கொய்யாபழம் விற்பவர்களும் பலாப்பழம் பாலிதீன்பையில் அடுக்கி விற்போரும் வண்டிக்கு விடுதலை அளித்தார்கள். ஆகா போயிற்று . எனமீண்டும்எண்ணினான். அந்தப்பெண்ணே பேருந்து அருகில் வந்தாள். பஸ் உள் ஏறிக்கொண்டாள் சுற்றும் முற்றும்பார்த்து நேராக அவனிடம் வந்து நின்று கொண்டாள் .

இதுலேடிஸ் சீட் முறைத்தாள்

இங் க எல்லாமா லேடாஸ் ஷென்ஸ்ன்னு சீட்டு ஆமாம் சார் மேலே பாருங்க

அவன் மேலே பார்த்தான். பெண்கள் என்றெழதி ஒரு பெண் படத்தைகூட பஸரின் உட்புறச் சுவர் காட்டியது. எழுந்து நின்று கொண்டான். அந்தப் பெண் பட்டென்று அவன் அமர்ந்திருந்த இடத்தில் இப்போது அமர்ந்து கொண்டாள் . கம்பீரம் அவளுக்குப் பார்வையில் கூடித்தெரிந்தது. அவனுக்கு வண்டியை விட்டு இறங்கி விட்டால் தேவலை என்றிருந்தது. அவள் மீண்டும் ஒரு முறை தன் பையைத்திற்நது அந்த நோட்டாசை எடுத்துப் பார்த்தாள். அவனுக்கு மீண்டும் அச்சம் வந்தது. நிச்சயம் அவள் அங்கேதான் செல்கிறாள் என்று மனம் பட்டென்று அடித்துக் கொண்டது. சிலைபோல் நின்று அவன் பஸ்ஸில் பயணம் செய்தான். வண்டி நெய்வேலி நகரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. கீட்சும் பாரதியும் கூட்டத்திற்கு நிச்சயம் அந்தப் பெண் வருவாள் . அவளையே கேட்டுவிட்டால் நல்லது என்று அவன் நினைத்தான்

ஆனால் பண்ருட்டி பேருந்தில் நிகழ்ந்தவைகள் அவன் மனதை உலுக்கிவைத்திருந்தன. எப்படிக்கேட்பது .

நெய்வேலி பேருந்து நிறுத்தத்தில் அவன் இற்ங்கி க் கொண்டான். அவளும் இறங்கினாள் தன் சட்டைப்பையில்

உறங்கிக்கொண்டிருந்த நிகழச்சி நோட்டாஸினை எடுத்து ஏதோ பள்ளி ஆயிற்றே என்று பார்த்துக்கொண்டான். அந்தப்பெண் அவன் நோட்டாஸ் வைத்திருந்ததைப் பார்த்து விட்டாள். அவனுக்கு அவமானமாக இருந்தது. வேறுபக்கம் திரும்பினான். சார் நீங்க அரவிந்தர்பள்ளிககுத்தான் போறீங்களா,

ஆமாம், பவ்யமாய் பதில்தந்தான்.

ஒரு ஒத்தாசை செய்யுனும் சார் கூட்டம் நடத்துகிற இடம் ஒரு ஆடிட்டோரியம். அந்த சாவி இது. எங்க ஸகூல்பிரின்ஸி பால் வந்திருபபாரு. அவரு ருமில்தான் எல்லாம் அசெம்பிள் ஆகி இருப்பாங்க. இந்த சாவுpயை அவரு கிட்ட கொடுத்துடனும். நான் கூட்டத்துக்கு வரல, வருத்தமாக ச் சொன்னாள்.

அடிக்கொரு தரம் நோட்டாசை பாத்தீங்கபோல் வீரத்தை வரழைத்துக் கொண்டு கேட்டு விட்டான்.

ஆமாம் சார் எத்தினி மணிக்கு கூட்டம்னு பாத்து கிட்டு இருந்தேன், சாவி போயி சேருனுமே. நான் யாருன்னு தெரியுமாடூ

நல்லாத்தெரியும் சார். நீங்க எனக்கு சீட்டைக் காலிசெய்து எழுந்திரிச்ச்ப்பயே எனக்கு ஐயம் இவ்வளவு லேசுல ஆம்பிளைங்க நவுந்துடுவாங்களான்னு உங்க கூட இருக்கிற கூடையில தான் பாரதி புத்தகமும் கீட்சுக்கவிதை நுhலும் பார்த்தேன். ஆனாலும் குழப்பமாய் இருந்திச்சி. கையில நோட்டாசை பார்த்தவுடனே பிரச்சனை தீர்ந்து போயிடிச்சி. நீங்கதானே எஸ்ஸhர்சி ங்கறது .

வணக்கம்சார்

ஆமாம் , சாவியை வாங்கிக்கொண்டான். மனதிற்கு நிம்மதியாகக்கூட இருந்தது.

நீங்கக் கூட்டத்திற்கு வரலயா, பரிதாபமாகக் கேட்டான்.

ரேமூன் கடையில புதுக்கார்டுக்கு அப்ளிகேமூன் வாங்கி யர்கனும்சார்.

இன்னைககுவிட்டா அப்புறம் அவ்வளவு தான.

சரிதான் நீங்க சொல்லுறது ரேமூன் கடைக்குபோறதவிட முக்கியம் வேறு என்ன இருக்கு. நான் சாவிய குடுத்துடறேன். நல்ல நேரத்துக்கு உதவினீங்க.

நீங்க செய்யறதுதான் பெரிய உதவி, என்று சொல்லிவிட வாயெடுத்து சமாளித்துக்கொண்டான்.

எல்லாரும் காத்துகிட்டு இருப்பாங்க. நீங்க கெளம்புங்கசார். , என்றாள்.

பெண்களின் மன ஆழம் கடலைவிட பெரிதென எண்ணினான்.

ஸ்கூல் பக்கம்தான். எதிர்ரோடுல கொஞ்சம் நடந்தா வந்துடும் தோ. தோ. தெரியுது. பாருங்க காம்பவுண்டு சுவர்கூட என்று எதைஎதையோ காட்டினாள் அவள்.

பெரிய உதவி, கைகளை கூப்பினான்.

கீட்சும் பாரதியும் மனத்திரைக்குள் ஆன்லைனில் பளிச்சிட்டார்கள். நெஞ்சை நிமிர்த்தி நடந்தான். இண்ணைக்கு ஒரு கலக்கு கலக்கிடனும் என்று சொல்லிக்b காண்டான் . இந்தப் பெண் நிகழச்சிக்கு வந்து அந்த பண்ருட்டி வம்புதும்பு அவிழ்த்து விட்டிருந்தால் மானமே போயிருக்கு ம் . ஏதோ பெரிய ஒத்தாசை செய்தான் எனநினைத்தான் ரேமூன் கடைகளை பார்த்தாலே எரிச்சலாய் வந்ததுண்டு . அதற்கெல்லாம் காரணங்கள் சொல்லிவிடமுடியாது. இருந்தாலும் இப்போது ரேமூன் கடை மனதிற்குள். ரம்மியமாக ஓடிக்கொண்டிருந்தது. பாரதி கண்ட. உள்ளத்தில் உண்மை ஒளி . உண்மை ஒளி உண்டாவது பற்றியும் அது வாக்கில் எப்படி வரும் . என்பது பற்றியும், அந்த கீட்சின் மெய்யழகு பற்றியும் நினைவு படுத்திக்கொண்டான். விமூயம் காய்ந்து வெடித்துவிட ரெடி என்று எண்ணி நமுட்டுச்சிப்போடு நிகழ்ச்சியிடம் நோக்கி கம்பீரமாய் நடக்க ஆரம்பித்தான். அவனுக்கு நடை அழகுதான்.

ajoysundar@yahoo.co.in

Series Navigation

அஜய் சுந்தர்

அஜய் சுந்தர்