உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
“நடைமுறையில் உள்ள ஒரு சமூக ஏற்பாடை நீக்கி மற்றுமோர் முறையைப் புகுத்த முயல்பவன் புரட்சியாளி எனப்படுவான் !. . . . பிரெஞ்ச் புரட்சியில் அதுவரை ஆண்டு வந்த அரசாங்க அதிகாரிகள் அகற்றப்பட்டு, வேறொரு விருப்புடைய, கருத்துடைய ஆட்சி முறை புகுத்தப்பட்டது. . . மெய்யான மதாதிபதி ஒவ்வொருவனும் சூனியக்காரன் என்பதால் அவனும் ஓர் புரட்சியாளியே. நடைமுறைச் சமூக ஏற்பாடு அறிவுகள் பெற்று, முப்பது வயதுக்குக் குறைந்த எந்த மனிதனும் புரட்சியாளி இல்லை. அவன் ஒரு தாழ்ந்த மனிதனே.”
“காரண கர்த்தா உலக நடப்பிற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். அகாரண மனிதன் உலகத்தைத் தன் விப்பத்திற்கு ஏற்ப மாற்ற முயல்வதில் தொடர்ந்து முற்படுகிறான். ஆதலால் எல்லா முன்னேற்றத்துக்கும் அகாரண மனிதனே பொறுப்பாகிறான் !”
“புரட்சிகள் கொடுங்கோல் ஆட்சிப் பாரத்தை ஒருபோதும் தளர்த்தியதில்லை ! அவை பாரத்தை ஒரு தோளிலிருந்து மற்றோர் தோளுக்குத்தான் இடம்மாற்றி வைக்கின்றன !”
பெர்னாட் ஷா (புரட்சியாளிக் பைநூல் களஞ்சிய முன்னுரை)
Fig. 1
12355
Roebuck Ramsden
உன்னத மனிதன் நாடகத்தைப் பற்றி:
1903 ஆம் ஆண்டில் ஜியார்ஜ் பெர்னாட் ஷா காதல் மன்னன் “தாஞ் சுவான்” ஆய்வுக்கருவை (Don Juan Theme) உட்கருவாக வைத்து “மனிதன் & உன்னத மனிதன்” என்னும் நான்கு அங்க நாடகமாக எழுதினார். அந்த நாடகத்தை ஓர் நடிப்பு நாடகம் என்று சொல்வதைவிடப் படிப்பு நாடகம் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. ஏனெனில் பெர்னாட் ஷா மரபான நாடக நடப்பை விட்டுவிட்டு தனது புரட்சிக் கருத்துக்களை ஓங்கி முரசடித்திருக்கிறார். அவரது கருத்துக்களை அவ்விதம் நாடக மூலம் பறைசாற்றுவது சிலருக்குப் பிடிப்பதில்லை. ஆயினும் அங்கே பெர்னாட் ஷாவை நாம் முழுமையாகக் காண முடிகிறது. உன்னத மனிதன் நாடகம் 1905 இல் லண்டன் ராயல் கோர்ட் நாடக அரங்கில் முதன்முதல் மூன்றாவது அங்கமின்றி அரங்கேறியது. காரணம் அந்தப் பகுதியில் பெர்னாட் ஷா தனது புரட்சிகரமான பொதுவுடைமைக் கருத்துக்களைக் கொட்டியிருக்கிறார். உன்னத மனிதன் முழுநாடகமும் 1915 இல்தான் அரங்கேறியதாக அறியப்படுகிறது.
உன்னத மனிதன் நாடகம் எளிய முறை நளினத்தில் இன்பியல் நாடகமாக மேடை ஏறினாலும் பெர்னாட் ஷா அந்த நாடகத்தின் ஆழக் கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்த ஓர் உரைநடை நாடகமாக ஆக்கியுள்ளார். “உன்னத மனிதன்” என்ற தலைப்பைப் பெர்னாட் ஷா ·பிரடெரிக் நியட்ஸேயின் (Friedrich Nietzsche’s
நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:
ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத் துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கியப் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராக உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சத்தைப் பிளக்கும் இல்லம் (Heartbreak House) போன்றவை.
****************
Fig. 2
123
John Tanner
உன்னத மனிதன்
(பெர்னாட் ஷா)
அங்கம் : 1 பாகம் : 2
நடிகர்கள்:
1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் ராம்ஸ்டன் (Miss Ramsden) – ரோபக்கின் புதல்வி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker)
6. ஹெக்டர் மலோன் (Hector Malone)
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)
**************
(அங்கம் : 1 பாகம் : 2)
கதா பாத்திரங்கள்: ரோபக் ராம்ஸ்டன், அக்டேவியஸ் ராபின்ஸன்.
காலம்: காலை வேளை
இடம்: மேயர் ரோபக் ராம்ஸ்டன் மாளிகை.
(காட்சி அமைப்பு : கோட்டு, சூட்டு அணிந்து ரோபக் ராம்ஸ்டன் தனது நூலக அறையில் படித்துக் கொண்டிருக்கிறார். நகரில் பேரும் புகழும் பெற்ற செல்வந்தர் அவர். மாளிகையில் மூன்று வேலைக்காரிகள் உள்ளார். அறையின் சுவர்களில் அழகிய ஓவியங்கள் தொங்குகின்றன. அறை பளிச்செனத் தூய்மையாக உள்ளது. நூல்கள் நேராகச் சீராக அடுக்கப்பட்டு நூலகம் காட்சி தருகிறது. நூலகத்தில் ராம்ஸ்டனும், அக்டேவியசும் உரையாடி வரும்போது, வேலைக்காரி மேரி ஜான் டான்னர், ஆன்னி வொயிட்·பீல்டு ஆகியோர் வந்திருப்பதை அறிவிக்கிறாள்.
ரோபக் ராம்ஸ்டன்: ஆனால் அக்டேவியஸ் ! உன்னிடம் ஒரு குறை உள்ளது ! அதை இப்போது நான் உனக்குச் சொல்வது நல்லது.
அக்டேவியஸ்: என்னிடம் குறை உள்ளதா மிஸ்டர் ராம்ஸ்டன் ? எனக்கு இருக்கும் குறைகளில் எந்தக் குறையைச் சொல்கிறீர் ? குறை யில்லாத மனிதர் உண்டா ?
ரோபக் ராம்ஸ்டன்: சொல்கிறேன் கேள் [மேஜை டிராயரைத் திறந்து சிவப்பு அட்டையுள்ள ஒரு நூலை வெளியே எடுக்கிறார்] இந்த நூல் என்ன தெரியுமா ? இதைக் கையால் தொடக் கூடாது ! கண்ணால் காணக் கூடாது ! யாரும் படிக்கக் கூடாது ! காட்டுவதற்காகத் தொடுகிறேன் ! கீழ்த்தரமான, மூடத்தனமான, அவமதிக்கத் தக்க நூல் இது ! குறும்புத்தனமான, குதர்க்கமான, குப்பை நூல் இது ! தூக்குப் போடுவோன் கையால் எரிக்கப் படவேண்டிய நூல் இது ! நான் இன்னும் படிக்க வில்லை. மேலோட்டமாகப் பார்த்தேன் ! பகீரென்று நெஞ்சில் தீப்பற்றியது. புரட்சிக் கனல் உள்ளதல்லவா ? ஈனத் தரமான இந்த நூலை நான் வாசிக்கப் போவதில்லை ! மற்ற பத்திரிக்கைகள் விமரிசனம் செய்ததைப் படித்தேன் ! நூலின் பெயர் என்ன தெரியுமா ? “புரட்சிக்காரரின் பைநூல் களஞ்சியம்.” கோணப் புத்தி உடைய ஜான் டான்னர்தான் இந்த நூலின் புரட்சி ஆசிரியர். அடி முதல் முடி வரை புரட்சித் தீப்பொறிகள் !
அக்டேவியஸ்: நல்ல செய்தி அல்லவா இது ? என் நண்பர் ஜான் டான்னர் எழுதிய நூலா இது ? சிவப்பு அட்டை ! நான் படித்துப் பார்க்க வேண்டுமே ! நானதைப் படிக்கலாமா ?
ரோபக் ராம்ஸ்டன்: இரவில் தூக்கம் வராவிட்டால் இந்த நூலைப் படி ! எவர் மீதும் கோபம் வந்தால் இந்த நூலை அவர் மீது எறி ! விழுந்தவர் பிறகு எழ மாட்டார் ! (நூலைத் தூக்கித் வீசித் தரையில் எறிகிறார்) ஆனால் இது எனது நூல். நீ அவசியம் திருப்பித் தர வேண்டும். படித்துப் பார் ! படித்த பின் புரட்சி செய்ய அவர் பின்னால் மட்டும் செல்லாதே ! எனக்குத் தெரியும், இந்த ஜான் டான்னர் உன் பள்ளித் தோழன் என்பது ! வாலிபத் தோழமை உங்களுக்குள் உள்ளது ! ஜான் டான்னரை நான் அறவே வெறுக்கிறேன். அவனோடு நீ ஒட்டி இருப்பது உனக்குக் கெடுதி விளைவிக்கும் ! அவனைப் போல் நீயும் ஒரு புரட்சிக்காரன் என்று சமூகம், உனக்கும் சிவப்பு நிறத்தை அப்பிவிடும் !
அக்டேவியஸ்: அந்த புரட்சி நூலைக் கண்ணால் இப்போதுதான் பார்க்கிறேன். சிவப்பு நிறம் என்றால் என்ன ? எனக்கு வெள்ளை நிறந்தான் பிடிக்கும் ! புரட்சிக்கும் செந்நிறத்துக்கும் என்ன தொடர்பு ?
ரோபக் ராம்ஸ்டன்: வெள்ளைக்கும் சிவப்புக்கும் உள்ள தொடர்பை நீயே கண்டு கொள்வாய் ! முதலில் புரட்சி நூலைப் படித்து உன் வயிற்றில் ஜீரணிக்க முடிகிறதா வென்று பார் ! உனக்குப் புரியா விட்டால் நூலைத் திருப்பிக் கொடு என்னிடம் !
Fig. 3
1234
Annie & Octavius
அக்டேவியஸ்: (கீழே கிடக்கும் நூலை எடுத்து) நான் படிக்க விரும்புகிறேன். நூலை இல்லத்துக்கு எடுத்துச் செல்லலாமா ?
ரோபக் ராம்ஸ்டன்: எடுத்துச் செல். மறக்காமல் நூலைத் திருப்பித் தரவேண்டும். புத்தகத்தில் தூசி படாமல் வைத்திரு. நூலின் காதுகள் மடியாமல் பார்த்துக் கொள் ! பழைய புத்தகக் கடையில் மறந்து போய் விற்று விடாதே ! அது போகட்டும். மறுபடியும் டான்னர் கதைக்கு வருவோம். டான்னர் ஒரு வாலிபன் ! ஆன்னி வொயிட்·பீல்டு ஓரிளங்குமரி ! இப்போது ஆன்னிக்கு டான்னர் மீது காதல் ஏற்பட்டுள்ளது ! என்ன செய்யப் போகிறாய் நீ ? உன் பள்ளித் தோழன் ஒரு பகலில் ஆன்னியை உன்னிடமிருந்து அபகரித்துச் செல்வான் ! எப்படித் தடுக்கப் போகிறாய் நீ ? ஆன்னியின் தந்தை வில்லில் என்னை ஆன்னிக்குப் பாதுகாப்பாளியாய் இருக்க எழுதி வைத்துப் போய்விட்டார். ஆன்னிக்குக் கணவனாய் வர நீ தான் தகுதியானவன் ! அந்த புரட்சிவாதி டான்னர் நிரந்தரப் பிரமச்சாரி ! திருமணம் என்றால் அவன் குடல் ஆடும் !
அக்டேவியஸ்: ஆன்னியை நான் நேசிக்கிறேன் ! ஆன்னி டான்னரை நேசிக்கிறாள் ! டான்னருக்கு யார்மீது விருப்பம் என்று தீர்மானமாய்த் தெரிய வேண்டும் !
ரோபக் ராம்ஸ்டன்: டான்னருக்குப் புரட்சி மீது ஆசை ! ஆன்னி ஒரு தலையாட்டிப் பொம்மை ! ஆட்டி விட்டால் ஆடுவாள் ! அல்லாவிட்டால் அசையாமல் நிற்பாள் ! யார் அவளை ஏற்றுக் கொள்வானோ ? அவளுக்கு நல்ல மண்மகன் அமைவது என் பொறுப்பாகி விட்டது ! எனக்கு விடுதலைக் காதலில் விருப்பம் கிடையாது. ஆன்னி ஒருவனைக் காதலித்து மணப்பதையே நான் விரும்புகிறேன். ஆனாலும் ஆன்னி ஜான் டான்னரை விரட்டிச் செல்லக் கூடாது. நான் பொறுப்பாளியாக இருப்பதால் ஆன்னி என் சொற்படி நடக்க வேண்டும். ஜான் டான்னரை ஆன்னி காணக் கூடாது ! அக்டேவியஸ் ! நீயும் டான்னரை விட்டு விலக வேண்டும் !
வேலைக்காரி மேரி: (குறுக்கிட்டு) பிரபு ! மிஸ்டர் டான்னர் உங்களைக் காண வேண்டும் என்று சொல்லி வாசலில் நிற்கிறார். அவருடன் கூட . . . . !
ரோபக் ராம்ஸ்டன்: (கோபத்துடன், இடைமறித்து) யார் ? ஜான் டான்னரா ? என்ன தைரியம் என்னைக் காண வருவதற்கு ? நான் வரவேற்க வில்லை என்று சொல் ! போ !
அக்டேவியஸ்: என்ன மிஸ்டர் ராம்ஸ்டன் ? வாசலில் நிற்கும் என்னுயிர்த் தோழன் டான்னரை வராதே என்று விரட்டுகிறீர் ? எனக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறது !
மேரி: (வெளியே நடந்து எட்டிப் பார்த்து) (அமைதியாக) மிஸ்டர் டான்னர் வாசலில் இல்லை ! மேல்மாடி வரவேற்பு அறையில் மிஸ் ராம்ஸ்டன் கூட இருக்கிறார். அவருடன் மிஸ் ஆன்னியும் மிஸிஸ் வொயிட்·பீல்டும், மிஸ் ராபின்ஸனும் கூட வந்திருக்கிறார்கள்.
ரோபக் ராம்ஸ்டன்: (ஆவெனக் கத்தமிட்டு ஆங்காரமாக) இந்த படைகளை யார் அழைத்தது ? முன்னறிவிப்பின்றி இத்தனை பேர் வந்து, வயதான எனக்கு மயக்கம் அளிப்பது எதற்காக ? ஜான் டான்னர் முகத்தில் விழிக்கக் கூடாது என்று சபதமிட்டேன் ! வீட்டுக்குள் நுழைந்து கொண்டு உள்ளே வரலாமா என்று கேட்பது அடாத செயல் ! நான் வரவேற்க மாட்டேன் என்று டான்னருக்குத் தெரியும் அல்லவா ? எதற்காக இங்கு வந்திருக்கிறார் ? காலஞ் சென்ற மிஸ்டர் வொயிட்·பீல்டு வில்லில் பொறுப்பாளியாக நான் இருப்பதலா ? அல்லது ஆன்னியைத் தான் மணமுடித்துக் கொள்ளவா ? நானதை அனுமதிக்கப் போவதில்லை !
(தொடரும்)
*********
தகவல்
Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)
1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan January 9, 2008)]
- பனிக்கரடி முழுக்கு
- ஒரு ராஜா ஒரு ராணி
- எழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை!
- நம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
- ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்
- காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்
- உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
- ராட்டடூயி
- தைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.
- மாத்தா- ஹரி அத்தியாயம் -44
- மூடு மணல்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2
- சம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்
- மலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை
- யார் இவர்கள்?
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு!
- நிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”
- வேட்டை நாய்
- எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன…
- வருவதுதான் வாழ்க்கை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் !
- கிளைதாவி வரும் மின்னல்
- கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ !
- பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்
- இலங்கையில் வழங்கும் தாலாட்டுப்பாடல்கள்
- கவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது
- பெண்புத்தி, பின்புத்தி!
- 2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு
- தோழர் பரா நினைவில்
- Last Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்
- மூக்கு
- துரும்படியில் யானை படுத்திருந்தது
- புதுச்சேரியில் துளிப்பா வளர்ச்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ? (கட்டுரை: 11)
- பெண்ணெனும் இரண்டாமினம்
- கத்தி குத்திய இடம்…
- அன்புள்ள கிரிதரன்
- ‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….
- நாங்கள் பூக்களாக இருக்கிறோம்
- உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை
- 27வது பெண்கள் சந்திப்பு
- கவிதைகள்
- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்
- கடிதம்
- நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்
- கவிதைகள்
- நண்பன்
- வல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு!
- ஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்
- “மலர்கொடி”
- திரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்
- மலர்மன்னனின் கட்டுரைக்கு நன்றி
- “அலமாரி”